அரவாணிகள் வாழ்வியலும் கூத்தாண்டவர் திருவிழாவும்

கடந்த சனிக்கிழமை (11/11/2006) சென்னை லயோலா கல்லூரியில் பேரா.கு. சின்னப்பன் அவர்களின் நான்கு புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன். இவ்விழாவிற்கு நான் சென்றதற்கு முக்கிய காரணம், அவர் வெளியிட்ட நான்கு புத்தகங்களில் ஒன்று " அரவாணிகள் வாழ்வியலும், கூத்தண்டவர் திருவிழாவும் " என்ற திருநங்கைகள் குறித்தான ஆய்வு நூலாகும்..


நிகழ்ச்சியில் நூல் குறித்த அறிமுகம் செய்தவர் : பேராசிரியை. முனைவர். பத்மாவதி விவேகானந்தன், மீனாட்சி மகளிர் கல்லூரி, சென்னை.

வெளியிட்டவர் : மாண்புமிகு. தயாநிதி மாறன், மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

நூலைப் பெற்றவர் : மாண்புமிகு. பரிதி இளம்வழுதி, மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்.

சமீபத்தில் "அரவான்" என்னும் தனி மனித நாடகம் ஒன்றை சிறப்பாக நடத்தி, நாடகத்துறை வல்லுநர்கள் பலரின் தனி கவனம் பெற்ற, சிறந்த அரங்கவியல் நண்பரான, திரு. கே.எஸ். கருணா பிரசாத் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

இத்துடன் புத்தகத்தை மேடையில் பெற திருநங்கைத் தோழிகள் திருமதி. ப்ரியா பாபு, திருமதி. நூரி அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நூல் வெளியிட்டவர்களும், பெற்றவர்களும் அரசு சார்பில் திருநங்கைகளுக்கா பல நல்ல திட்டங்கள் ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். நூல் அறிமுகம் அளித்த பேரா. பத்மாவதி அவர்கள் Subalter Studies குறித்த சிறிய முன்னுரையோடு நூலின் உள்ளடக்கத்தை அளித்தார்.


திருநங்கைகள் குறித்து இன்று பலரும் பேச துவங்கியுள்ளது மிக மிக ஆரோக்கியமான சூழல் உருவாகிவருவதையே காட்டுகிறது. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்பது எதிர்காலத்தில் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றே நம்பலாம்.....


இப்போதைக்கு இதை ஒரு நிகழ்வாக பதிவு செய்கிறேன். இந்நிகழ்ச்சி குறித்து சில விமர்சனங்கள் எனக்கு உள்ளது. அவற்றை புத்தகம் முழுதும் படித்த பிறகு ஒரு முழு விமர்சனமாக விரைவில் தரவுள்ளேன்..

6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

மதுமிதா said...

நல்லதொரு வரவேற்கப் படவேண்டிய நிகழ்வு. நம்பிக்கை ஏற்படுத்துகிறது. முழுவதும் நூலை வாசித்து விட்டு பதிவிடுங்கள் ஸ்மைல் வித்யா.

சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். ஒரு தகவல் தெரியவில்லையே. ஏனோ சந்திக்கும் வாய்ப்பு தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.

ஆழியூரான். said...

நல்லது நடந்தால் யாவர்க்கும் மகிழ்ச்சியே..

துளசி கோபால் said...

புது நம்பிக்கைகள் வந்துருக்கறது மகிழ்ச்சியான விஷயம்தான்.

வரவேற்கின்றோம்.

|||Romeo Boy||| said...

Now only i know about this Book Publish . Please mention me where can i buy the Book. I really want to know about the whts really said on the Book ..

RAANA MONAA said...

Dear Friend Vidya,

Please log on following Site.You have a nice interesting topic.


http://vethathiri.org/forum/index.php/topic,1039.msg4372/topicseen.html#msg4372

Vazgha Valamudan
Be Blessed By Divine

வெளிகண்ட நாதர் said...

சற்றே இங்கு வருகை தருக!