முரண்நகையாய்

குறுகுறு பார்வையாலும்,

வேசை சொற்களாலும்


அரூப வன்மத்தில் கூசி நின்றவளின்

நிர்வாணம்


ஆற்றாமையின் விளிம்பில்,

ஓர் அதிர்ச்சியூட்டும் நேரடி காட்சிப்படுத்தலால்


கூசச் செய்கிறது.


அதே வன்முறையையும்,

அதன் உப வக்கிரங்களையும்



எதார்த்தத்தின் எளிய முரண்நகையாய்

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

மிதக்கும்வெளி said...

இந்தக் கவிதை பனிக்குடத்தில் வந்ததா? நல்லாயிருக்கு.

சென்ஷி said...

:))

நல்ல உவமான சொற்பிரயோகங்கள்..

சென்ஷி

பங்காளி... said...

அநியாயத்துக்கு யோசிச்சு

நல்லாவே எழுதறீங்க...

G.Ragavan said...

ம்ம்ம்ம். புரிகிறது.

குருத்து said...

மிதக்கும் வெளி போன்ற ஆள்களுக்காக கவிதை எழுதுகிறீர்கள். எனக்கு பல வார்த்தை புரியலீங்க! என்னை மாதிரிதான் பல பேர் இருக்காங்கன்றத புரிஞ்சுக்குங்க!

இராம்/Raam said...

bob marley பாட்டு போட்டுருக்கீங்க.... எனக்கும் ரொம்ப பிடிக்கும்ங்க....

அதே பாட்டை இந்த வெர்சனிலே கேட்டு பாருங்க.

சீனு said...

//எனக்கு பல வார்த்தை புரியலீங்க! என்னை மாதிரிதான் பல பேர் இருக்காங்கன்றத புரிஞ்சுக்குங்க!//

Me 2...Me 2...:)

லிவிங் ஸ்மைல் said...

/// மிதக்கும் வெளி said...

இந்தக் கவிதை பனிக்குடத்தில் வந்ததா? நல்லாயிருக்கு.///


என்னய வச்சி காமிடி, கீமிடி பண்ணலயே!!

Arvinth said...

Last week thaan unga blog-a paathaen. U r doing a grt job, Thirunangai( infact after reading ur blog only I came to know abt this term) pathi oru awareness kondu vareenga.

Unga padhivu ellam last weekend padichaen...anga anga sila koba vaarthaigal irundhaalum, u r bringing an awareness...

wish u the best for ur efforts....unga blog helped me to know about Jana(the boy who lost his organs becoz of electric shock)... Indha maadhiri aakapoorvamaana blogs unga kitta irundhu expect pannuraen...

Note: I'm a software engineer working in USA now, enoda native is nearer to Arachallur in Erode District.... (the same place u mentioned in the blog about Jana)

-Arvinth

குட்டிபிசாசு said...

கவிதை அற்புதம்...
பாராட்டுக்கள்...
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

நளாயினி said...

என்ன நீங்கள் வலிகள் யாருக்குத்தானில்லை. எல்:லோருமே ஏதோ ஒரு வலியை சுமந்தபடி தான் வாழ்கிறார்கள். யாராவது இல்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம். சந்தோசமா சில கவிதைகளை எழுதுங்களன். பிளீஸ்.

லிவிங் ஸ்மைல் said...

///நளாயினி said...

என்ன நீங்கள் வலிகள் யாருக்குத்தானில்லை. எல்:லோருமே ஏதோ ஒரு வலியை சுமந்தபடி தான் வாழ்கிறார்கள். யாராவது இல்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம். சந்தோசமா சில கவிதைகளை எழுதுங்களன். பிளீஸ். ///

உங்களுக்கு வலிகளைப் பகிர்ந்து கொள்ள உறவுகள் உண்டு. எனக்கு உள்ள ஒரே தளம் இது தான்.


இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் எழுத முயல்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கும் போது!!

இராவணன் said...

//அதே வன்முறையையும்,
அதன் உப வக்கிரங்களையும்
எதார்த்தத்தின் எளிய முரண்நகையாய//

மிக வலி மிகுந்த பதிவு.