மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010

ல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. சாதியத்தை எதிர்ப்பவர்கள், விரும்புபவர்கள் உட்பட பலரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்க, அரசோ திட்டமிட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. சாதிக்கென தனிக் கணக்கெடுப்பு எடுக்கப்படுவதாக ஒரு சமாளிப்புக் கதையையும் சொல்கிறது. எதுக்கு இப்ப ஒரு கணக்கெடுப்பு ஒரு வருஷம் கழிச்சு இன்னொரு கணக்கெடுப்போ? (தண்டச்செலவு) புரியல.


இது குறித்து விவாதிக்கவும், போராடவும் பல தோழர்கள் உண்டு. இதில் வேறொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.


திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் உதவுதல் போன்ற விஷயங்களில் தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இத்தகைய உதவிகளை குறித்து யோசித்து பார்த்தால் இது திருநங்கைகளின் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறமுடியாது. தெளிவாக சொல்வதென்றால் இத்தகைய முயற்சிகள் திருநங்கைகள் வெறும் சலுகைகளை எதிர்பார்த்து பிச்சை பாத்திரம் ஏந்துபவர்களாக வைத்திருக்க மட்டுமே இவை உதவுக்கூடும்.


குடும்ப ஆதரவு இன்றி வாழும் திருநங்கைகள் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ அவர்கள் சுயசார்புடையவர்களாக இருப்பது மட்டுமே அவசியம். பிச்சையும், பாலியல் தொழிலும், தொண்டு நிறுவன மூலம் எய்ட்ஸ் நிதி பெறுவது எல்லாம் இன்றைய தலைமுறை நங்கைகளுக்கு போதுமானதாக இருக்கலாம்.


ஆனால் இளையதலைமுறை திருநங்கைகளோ தன்னிறைவோடும், அதே சமயம் கண்ணியமாக எல்லா துறையிலும் தடம்பதித்து வாழவே ஆர்வமாய் உள்ளனர். அதற்கு வெறும் சலுகைப் பாத்திரங்கள் போதுமானதாக இருக்காது.


மருத்துவரீதியாகவும், உளவியல்ரீதியாகவும், மனித உரிமை சார்ந்தும் திருநங்கைகள் குறித்து புரிதலும், பரிவும் தமிழ் சமூகத்தில், இந்தியாவிலும் ஓரளவு வளர்ந்துள்ளது. இம்மாற்றம் திருநங்கைகளின் நிதர்சன வாழ்வை மெய்யாகவே மாற்ற திருநங்கைகள் கணக்கெடுப்பு அவசியம். எண்ணிக்கை அடிப்படையில் ஆண்டாண்டாய் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெற மிக அவசியமான ஆயுதம் இக்கணக்கெடுப்பு.


சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பில் திருநங்கைகளை others என்ற பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பளிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. சகமனிதர்களான திருநங்கைகளை விலங்கினத்தைப் போல குறிப்பிடும் இவ்வநாகரீகத்தை கண்டித்து பல திருநங்கைகள் பல்வேறு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.


இப்போது அதுவுமின்றி, கணெக்கெடுப்பு படிவத்தில் ஆண்/பெண் இருபாலினம் மட்டுமே உள்ளது. மேலும், திருநங்கைகளை ஆண்கள் பட்டியலில் சேர்க்கச் சொல்லியும் ஏற்பாடாகியுள்ளது. இத்தனை போராட்டங்கள், விழிப்புணர்வுகள், முயற்சிகளுக்குப் பிறகும் அரசின் இச்செயல் மிகவும் ஆபத்தானது.

தமிழக முதல்வர் கணக்கெடுப்பில் திருநங்கைகளையும் கணக்கிலெடுக்கக் கூறி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அர்த்தம் பொருள் திருநங்களை அவர்களுக்குரிய பாலின அடையாளத்தோடா அல்லது வெறும் பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கைக்கு மட்டும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதா என்று புரியவில்லை. ஆனால் இது மத்திய அரசின் முடிவு என்று சொல்லிவிட முடியாது.


காரணம் சமீபத்தில் நடந்த திருநங்கைகளின் கலந்துரையாடலில் திருநங்கைகள் நலவாரிய பிரதிநிதிகள் ஜீவா, ப்ரியா பாபு இருவரும், மற்ற திருநங்கைகளிடம் இக்கணக்கெடுப்பில் ஆண்கள் என்ற கணக்கில் திருநங்கைகள் பதிவு செய்யலாம் என்றும். திருநங்கைகளுக்கென வெறொரு கணக்கெடுப்பு அடுத்த 2011ல் நடைபெறும் என்றும் இப்போது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும் அறியுறுத்தியுள்ளார்கள்.


இப்படியிருக்க, எனது நண்பரும், பாலியல் சிறுபாண்மையினர் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக போராளி ஸ்ரீஜித் தனது சொந்த முயற்சியில் கணக்கெடுப்பு சார்ந்த அதிகாரியிடம் புகார் கொடுத்தப் பொழுது ”எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணை திருநங்கைகளை ஆண் என்று சேர்ப்பது என்பது தான். மேலும் இது குறித்து எந்த திருநங்கைகளும் இது குறித்து எந்த திருநங்கைகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை” என்று பதிலளித்துள்ளார்.


கேரளா வசம் இருக்கும் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இஙக இருந்தா மட்டும் blog செய்வதை விட வேறென்ன செய்துவிட முடியும்.

எனது கேள்வி திருநங்கைகளுக்கு சலுகைகள் செய்ய தயாராய் இருக்கும் அரசு அவர்களின் வேலைவாய்ப்பிற்கு மட்டும் எந்த வாய்ப்பும் தராததேன்? அல்லது அதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தாததேன்? ப்ரியா பாபு போன்ற முன்னோடி திருநங்கை போராளிகள் எதற்காக திருநங்கைகள் நலனுக்கு போராடுவதை கைவிட்டு அரசுக்கு கைகட்டி நிற்க வேண்டாம். இத்தனை நாள் உங்களை நாங்கள் முன்னோடியாக ஏற்று நலவாரியத்தில் திருநங்கைகள் நலனுக்காக பங்காற்றுவீர்கள் என்ற நம்பிக்கைக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்?

6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

shiyamala said...

anbulla vidya,
enakku siruvayadhil irundhe thirunangaigalidam oru alavu kadandha mariyadhai..yen theriyuma thannambikaiyin motha uruvam avargal...avargalai pirar keli seivadho.. kindal panuvadho adhu avargalukku aindharivu than ulladhu enbadhaiye kaatukiradhu...i am very happy to meet u here...

thiru said...

dear vidya,

I am thiruvalluvan arasu from coimbatore. Mr. sudesamithiran cousine. Your blog is very good.

Thank you

ashokbaskar said...

dear Vidhya,
I am Ashok from Madurai I am delighted to read ur articles , u have a good writing style, I've read ur book long back, y dont u publish ur articles which would reach most of the trans genders who have no knowledge abt net, bye.

யோவ் said...

தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

கும்மி said...

சிறப்பான இடுகைக்கும், தமிழ்மணம் விருது வென்றமைக்கும் வாழ்த்துகள்.