ஏன் லிவிங் ஸ்மைல்

என் பேர் என்னன்னு தெரியுமா

லிவிங் ஸ்மைல் வித்யா,

வித்யா ஓ.கே., அதென்ன லிவிங் ஸ்மைல்...? இது ஒரு பேரா...? என்ன அர்த்தம்....? அர்த்தத்த விடு, அதென்ன தமிழ் பேரா...?


இப்பிடி ஒரு கேள்வி உள்ளுக்குள் தோணுது தானே... தெரியுங்க

அதாவது, நான் யார்....? நான் என்ன...? ( என்னுடைய சுயம் அதாவது self என்பதை விடுங்க ) எனது பால் அடையாளம் என்ன...? ஆமாம், நீங்கள் அறிந்த வண்ணமே ஒரு திருநங்கை (அரவாணி)யே தான். ஆக, என்னை போன்ற ஒரு திருநங்கைக்கு இந்திய,.... இந்தியா-வ விடுங்க.., தமிழ் சமூகத்தில் வாழ்வாதாரம் என்ற தளத்தில் என்ன இடம் இருக்கு...? நாங்கள் வாழ்வதென்பது என்னவாக, எப்படியாக இருக்கிறது....? நீங்களே அறிந்திருக்கலாம்... குறைந்த பட்சம், மிக மிக கடினமானது என்று தட்டையாகவாவது எனது சுய புராணம் எதும் தேவைப்படாமலே தெரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

ஆக, இவற்றிலிருந்து விதிவிலக்காக, ( கவனம் : இவற்றோடு ஒப்ப நோக்கையில் மட்டும் ) நான், கொஞ்சம் இயல்பு வாழ்க்கை, ( இது கூட உங்களுக்கு வாய்த்த உலக பொது வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் ஒன்றிரெண்டு சதவீதம் தான் ) கைவர பெற்றேன்.....

அதையும் விட எனது இயல்பு என்பதே வாழ்தலின் மீது தீராத காதல் கொண்டது.... எனது இளமையை நான் வாழாதது அதற்கு காரணமாய் இருக்கலாம்... நல்லதோ., கெட்டதோ..., கஷ்டமோ., நஷ்டமோ......., இப்ப எனக்கு ஒரு விதத்தில் ( தண்ணி தெளிச்சு விட்டாச்சுன்னு சொல்லுவாங்கள்ள... அந்த மாதிரி ) சுதந்திரம்... வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு


வாழ்றது மட்டும் போதுமா....? அதை விட முக்கியம்.., சந்தோஷம்..., வாழ்வதும் சந்தோஷமாக வாழணும்..., இதை முன்னிருத்திதான் என் பெயரையும்.. லிவிங் ஸ்மைல் ன்னு வச்சுகிட்டேன்..., ( தெரியுமா...... கெஸெட்-ல மாத்துறதுக்கும் அப்ளை பண்ணிருக்கேன்... )


சரி., ஓ.கே., ஆனா அதையே தமிழ்-ல வைக்க வேண்டியது தானேன்னு நீங்க கேக்குறதும் எனக்கு புரியுது... விசயம் என்னன்னா எனக்கு இனம், மொழி, பாசம், பற்றுங்குற பம்மாத்தெல்லாம் ஆகவே ஆகாது, ரெண்டாவது, என் ( எங்கள் ) பிரச்சனையோ இது எல்லாத்தையும் கடந்தது.., so, இனம், மதம், வர்த்தமானம் கடந்ததா என் பெயர் இருக்கட்டும்னு தான் லிவிங் ஸ்மைல் ......


இனம், மதம், குறிப்பா வர்த்தமானம் கடந்ததுனா இது ஏன் ஆங்கிலம் கலந்த பெயர்-னு கேப்பிங்களே... தெரியும் அதாவதுங்க, நாம் ஏற்றாலும், மறுத்தாலும் ஆங்கிலம்-பொது புழக்கத்துல இருக்கிறது... அதோட தமிழ் தாண்டி எனக்கு பரிச்சியம் பெற்ற மொழின்னா அது ஆங்கிலம் தான்..... அதனால இது ஆங்கிலத்துக்கு கிடைச்ச ஒரு கிஃப்ட் இதுதான், இப்போதைக்கு என் தன்னிலை விளக்கம்.

சரி தொடர்ந்து சந்திப்போம் நண்பர்களே.....

இப்போதைக்கு விடைபெறுகிறேன்

புன்னகையுடன்


லிவிங் ஸ்மைல்........

57 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

பத்ம ப்ரியா said...

ஹாய் வித்யா... மன்னிக்கவும்.. ஹாய் லிவிங் ஸ்மைல்..

உங்க பதிவு நல்லா இருந்தது.. உங்களது முதல் பதிவின் முதல் பின்னூட்டம் பதிந்தவள் என்பதில் கொஞ்சம் சந்தோஷம். கதை கவிதை ஏதாவது எழுதுங்களேன்.

வாழ்க்கையில் நீங்கள் எதிர் கொண்ட ப்ரச்சனைகள், அதற்க்கு நீங்கள் தீர்வு கண்ட விதம் ஆகியவற்றைக்கூட எழுதலாம்.

வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவது
பத்மப்ரியா

லிவிங் ஸ்மைல் said...

நன்றி பத்மா,

இதோ இப்பவே ரெண்டு கவிதையை போட்டு விடுகிறேன்... என்னிடம் PC தனியாக இல்லை.. Office-ல் free time கிடைத்தால் மட்டுமே blog-க்க முடியும்....

இருந்தாலும் நீங்க சொன்னதுக்கப்புறமும் போடாம இருக்கலாமா, இதோ போட்டுற்றேன்...

நன்மனம் said...

லிவிங் ஸ்மைல் அவர்களே,

இனைய தமிழ் உலகுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துக்கள்.

ramachandranusha(உஷா) said...

வாழ்த்துக்கள் புன்னகையரசி. வித்தியாசமான வலைப்பதிவாளராய் நுழைந்திருக்கிறீர்கள். எழுதுங்க, படிக்க காத்திருக்கிறோம்.

வவ்வால் said...

வணக்கம் லிவிங் ஸ்மைல்!

வாழ்த்துகள் தொடர்ந்து எழுதி கலக்குங்கள். வாழ்கை வாழ்வதற்கே!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வித்யா அவர்களுக்கு

அரவாணி என்பதில் தங்களுடைய தனிப்பட்ட குறைகளோ அல்லது அறிவுக்குறைபாடோ அல்ல..அது இயற்கையின் படைப்பு..இதனால் தாங்கள் வருந்த வேண்டியதில்லை..

ஆனால் சமூகத்தில் கிடைக்கின்ற சில அடிப்படை மரியாதைகள் கூட உங்களுக்கு மறுக்கப்படுகின்றது என்பதுதான் வேதனையான உண்மை..

கவலை வேண்டாம். இது புதிய உலகம் . உங்களுடைய பால் உணர்வு கண்டு யாரும் பழகுவதில்லை. தங்களது எண்ணங்களை தைரியமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் நண்பர்களாய் என்றுமே ஆதரிப்போம்.

உங்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கப்போகின்றது என்பதை இங்கு வரப்போகின்ற தங்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்ற விமர்சனங்கள் உணர்த்தும்.

நாங்கள் உங்களின் சுயமரியாதையை காப்பாற்றும் நண்பர்களாக மாறுகின்றோம்

Pavals said...

வாங்க..

//வாழ்றது மட்டும் போதுமா....? அதை விட முக்கியம்.., சந்தோஷம்..., வாழ்வதும் சந்தோஷமாக வாழணும்...//
ரொம்ப சரி..
இதையத்தாங்க நிறையா பேரு ஒரு மணி நேரத்துக்கு ஐயாயிரம் ரூபா கட்டி போயி கத்துக்கறாங்க.. ஆனா கத்துகிட்டது வழக்கம் போல மறந்துடராங்க..

நம்மாள முடிஞ்ச வரைக்கும் 'ஸ்மைலுவோம்', அவுங்களுக்கு சேர்த்து.. :)

G.Ragavan said...

வாங்க லிவிங் ஸ்மைல். உங்களை வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து சிறந்து நல்ல தரமான படைப்புகளைத் தரவும். அனைவரோடும் சகஜமாகப் பழகிச் சேர வாழ்த்துகிறேன். ஆங்காங்கு பிரச்சனைகள் எழுந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு வலைப்பதிவுகளில் பீடுநடை போட வாழ்த்துகள்.

முகமூடி said...

வருக வருக என்று வரவேற்கிறேன்... உங்கள் பார்வைகளும் அனுபவங்களும் இதுவரை அனுமானங்களில் அடிப்படையில் அமைந்த கட்டுமானத்தை மாற்றியமைக்கும் என்று நம்புகிறேன். நிறைய எழுதுங்கள்.

Bharaniru_balraj said...

வித்யா,

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Bharaniru_balraj said...

வித்யா,

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

முத்துகுமரன் said...

வணக்கம் லிவிங் ஸ்மைல்.

தோழமையான வரவேற்புகள்.
உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ச்சியாக இயங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமூகத்தின் மீதான உங்கள் பார்வைகள், அனுபவங்கள் எழுத்துகளாக பதியப்பட வேண்டும்.

நன்றி.

உங்கள் வலைத்தளத்தை அறிமுகம் செய்த ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கு என் நன்றி

Anonymous said...

வாழும் புன்னகை வித்யா,

வலைப்பதிவர் உலகிற்கு வருக!
உங்கள் உலகம் பற்றிய பெரிய பதிவுகள் என்று ஏதுமில்லாத நிலையில் நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகளுடன்
சாத்தான்குளத்தான்

மஞ்சூர் ராசா said...

அன்பு உயிர்ப்பு புன்னகையே உங்களை இணைய உலகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி.

உங்களின் ஆக்கங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

இணைய உலகில் நீங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

முத்தமிழ் குழுமம் உங்களை தங்களுடன் இணைத்துக்கொள்வதில் பெருமையடைகிறது.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

நெல்லை சிவா said...

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்-னு வள்ளுவர் சொல்லியிருக்கார். இந்தத் தமிழ் உலகம் உங்களை வளமையோடு எதிர்கொள்ளும். 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருக் காண்பதறிவு' வட்டம் தாண்டி வந்திருக்கீறீர்கள் உங்கள் முயற்சிக்கும், நல்லாதரவிற்கும் வாழ்த்துக்கள்!

டிபிஆர்.ஜோசப் said...

விசயம் என்னன்னா எனக்கு இனம், மொழி, பாசம், பற்றுங்குற பம்மாத்தெல்லாம் ஆகவே ஆகாது, ரெண்டாவது, என் ( எங்கள் ) பிரச்சனையோ இது எல்லாத்தையும் கடந்தது.., //

ரொம்ப நல்லாருக்குங்க உங்க விளக்கம்.

நம்ம நாட்ல அரவாணிங்கன்னாலே சாதாரண மக்கள் விலகி ஓடுவது இத்தகையோரில் சி்லருடைய (சிலர் என்ன பலரும்) விரும்பத்தகாத செயல்கள்தான்..

ஆனால் உங்களுடைய எண்ணங்களும் அதை நீங்கள் எழுத்தில் வடித்திருக்கும் நேர்த்தியும் மிகவும் அருமை..

உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல மற்றும் கசப்பான அனுபவங்களை தாராளமாகப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி மலர வாழ்த்துக்கள்..

அன்புடன்,

லிவிங் ஸ்மைல் said...

நன் மனம், உஷாராமசந்திரன், முகமூடி, ஆசிப் மீரான், உமாநாத் அனைவருக்கும் என் நன்றி நண்பர்களே... காலங்காலமாக நாங்கள் ஒடுக்கப்பட்டதை எத்தனை ஆதங்கத்துடன் நான் பார்க்கிறேனோ... அதே ஆதங்கம்....

நாங்களும் (அரவாணிகளும்) பொது தளத்தில் புழங்க வேண்டும், முன்வர வேண்டும், எழுத்தில், இணையத்தில் வரவேண்டும் என்பதான உங்கள் ஆதங்கத்தை உணர்கிறேன்... மதிக்கிறேன்...

கிடைக்கக்கூடிய ஓய்வுகளை சரியாக பயன்படுத்த முயல்கிறேன்..

நன்றி நண்பர்களே.....

மதுமிதா said...

லிவிங் ஸ்மைல் வித்யா
வாங்க
சந்தோஷமா பேசலாம்
சந்தோஷமா வாழலாம்
தொடர்ந்து எழுதுங்க

புன்னகையுடன் தொடர்ந்து சந்திப்போம்

லிவிங் ஸ்மைல் said...

// அரவாணி என்பதில் தங்களுடைய தனிப்பட்ட குறைகளோ அல்லது அறிவுக்குறைபாடோ அல்ல..அது இயற்கையின் படைப்பு..இதனால் தாங்கள் வருந்த வேண்டியதில்லை.. //


எந்த காலத்திலும் இதற்காக நான் வருந்தியதில்லை.. என் வருத்தமெல்லாம்.. நீங்கள் கூறுவதைப் போல எனது அடிப்படை உரிமைகளுக்கே போராட வேண்டிய அவலம் குறித்து தான்...

// உங்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கப்போகின்றது என்பதை இங்கு வரப்போகின்ற தங்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்ற விமர்சனங்கள் உணர்த்தும். //

உணர்கிறேன் தோழரே நன்றி...

FunScribbler said...

ஹாய் லிவிங் ஸ்மைல்..உங்கள் முதல் பதிவே ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்குள் எழுத்து திறமை இருக்கிறது. அதனை என்னால் உணர முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்!! குறைகளை நிறைகளாக மாற்றிகொள்பவன் தான் மனிதன். ஆகவே, கவலை வேண்டாம். எங்களை போன்றவர்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்! உங்களுடைய அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும்

தமிழ்மாங்கனி

பரஞ்சோதி said...

உங்களை வலைப்பதிவுலகத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்க நம்பிக்கை எல்லோருக்கும் வழி காட்டும்.

- பரஞ்சோதி

துளசி கோபால் said...

வாங்க வித்யா.

உங்களை ஏற்கெனவே நம்ம பாலபாரதி பதிவின் பின்னூட்டத்தில் பார்த்திருக்கிறேன்.

வந்து இந்த ஜோதியிலே கலந்துட்டீங்கல்லே, இனி எல்லாம் சுபமே!

நல்லா இருங்க.

துபாய் ராஜா said...

புன்னகை இளவரசிக்கு,இத்யம் கனிந்த
வரவேற்பும் வாழ்த்துக்களும்.

இப்பரந்த உலகிலும்,படைப்புலகிலும் தங்களது ஆக்கபூர்வமான பணிகளுக்கு
என்றென்றும் தோள்கொடுக்கும் தோழராய் நாங்கள் யாவருமிருப்போம்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

ROSAVASANTH said...

வருக! நீங்கள் வலைப்பூ தொடங்கியதும், எழுதுவதும் நம் சூழல் பற்றிய நம்பிக்கையை உருவாக்குகிறது. தொடர்ந்து உங்களுக்கான தனித்துவத்துடன் எழுதுங்கள்.

மற்ற பதிவுகளையும் படித்து எழுதுகிறேன்.

- யெஸ்.பாலபாரதி said...

எங்கேயோ முன்னமே பார்த்த நினைவு..
மேற்கொண்டு ஏதாவது எழுதட்டும் என்ரு காத்திருந்தேன்..
அதற்குள் திடீரென கலக்கி விட்டீர்கள்.
//
ஆக, இவற்றிலிருந்து விதிவிலக்காக, ( கவனம் : இவற்றோடு ஒப்ப நோக்கையில் மட்டும் ) நான், கொஞ்சம் இயல்பு வாழ்க்கை, ( இது கூட உங்களுக்கு வாய்த்த உலக பொது வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் ஒன்றிரெண்டு சதவீதம் தான் ) கைவர பெற்றேன்.....//
இதை வரம் என்றுதான் சொல்ல வேண்டும்..
//வாழ்றது மட்டும் போதுமா....? அதை விட முக்கியம்.., சந்தோஷம்..., வாழ்வதும் சந்தோஷமாக வாழணும்..., இதை முன்னிருத்திதான் என் பெயரையும்.. லிவிங் ஸ்மைல் ( வாழும் புன்னகை)னு வச்சுகிட்டேன்..., ( தெரியுமா...... கெஸெட்-ல மாத்துறதுக்கும் அப்ளை பண்ணிருக்கேன்... )//
நல்லது என்றுமே மகிழ்ச்சி நிலைத்து இருக்க என் ஆசைகளும், வாழ்த்துக்களும் உடன் வரும்..

நவீன் ப்ரகாஷ் said...

வாருங்கள் லிவிங் ஸ்மைல் வித்யா !

வாருங்கள்
வாழ்த்துக்கள் !

குமரன் (Kumaran) said...

வருக வருக வாழும் புன்னகை வித்யா!

ப்ரியன் said...

வலைப்பூ உலகிற்கு வாங்க "லிவிங் ஸ்மைல்" ...

முதல் இரண்டு கவிதைகளும் நச் ரகம் தொடருங்கள்...

அன்புடன்
விக்கி

சரவணன் said...

வாருங்கல் லிவிங் ஸ்மைல் வித்யா, உங்களின் எண்ணங்களை பதியுங்கள். தொடர்ந்து ஆதரவு உண்டு. வாழ்த்துக்கள். நன்றி...

நட்புடன்,
மாயுரம் சரவணன்

வல்லிசிம்ஹன் said...

வாருங்கள் லிவிங் ஸ்மைல். எப்போதும் புன்னகை மட்டும் தான் உங்கள் வாழ்வில் இருக்க வேண்டும். ரொம்ப நல்ல எழுத்து.
கம்பீரமாக நடை.அஞ்சாத முகம்.
புதுமையான வரவு.வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

வருக வருக.

தோழமையான வரவேற்புகள்.

உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. தெளிவானதொரு எழுத்து வளமையையும் இந்த பதிவில் காண முடிகிறது. சமூகத்தின் மீதான உங்கள் பார்வைகள், எண்ணங்களை, நீங்கள் சந்திக்கும் அவலங்களை, அதிலிருந்து மீண்ட அனுபவங்களை என உங்கள் சிந்தனைகள் பதியப்பட வேண்டும். தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இளங்கோ-டிசே said...

வலைப்பதிவு உலகத்துக்கு உங்கள் வரவும் நல்வரவாகட்டும்.

குழலி / Kuzhali said...

வணக்கம் லிவிங் ஸ்மைல்,
வாழ்த்துகள்

நன்றி
குழலி

aathirai said...

உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வருக! வருக!

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் வித்யா. உங்க கவிதைகளை இன்னும் படிக்கலை..

வாழும் புன்னகைன்னு உங்க பெயரே நல்லா இருக்கு.. கவிதைகளை படிச்சிட்டு என் கருத்துகளைச் சொல்றேன் :).. மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்

கஸ்தூரிப்பெண் said...

உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது எமது பாலபாடம்.
உமது புன்னகையுடன் உலாவர யாவரும் காத்திருப்போம்.
வளர்க உமது எழுத்துச்சேவை.

Muthu said...

இனிதே வரவேற்கிறோம்

கானா பிரபா said...

வணக்கம் வித்யா

வலைப்பதிவுலகில் அன்புடன் வரவேற்கின்றேன்.

Thangamani said...

//நண்பர்கள் நீங்களாக குறிப்பிட்ட எந்த உறவுப் புலமும் அற்றவள்.., //

நண்பர்கள் நீங்கலாக என்று குறிப்பிட விரும்பினீர்களோ!

மிதக்கும்வெளி said...

வரவேற்கிறேன் தோழர்.தொடர்ந்து எழுதுங்கள்.உங்கள் மொழி,இனம் குறித்த பதிவு நன்று.

ப்ரியன் said...

இரண்டு நாள் ஆகியும் என் பின்னூட்டம் வெளியாகவே இல்லே :(...பரவாயில்லை மீண்டும் ஒருமுறை...

வாங்க "லிவிங் ஸ்மைல்"

முதல் இரு கவிதைகளும் நச் ரகம் தொடர்ந்து உங்கள் படைப்புகளைத் தாருங்கள்

சினேகிதி said...

வலைப்பதிவு உலகத்துக்கு உங்களைவரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் :-)

மணியன் said...

நான் உங்கள் வலைப் பதிவை இன்றுதான் பார்க்க முடிந்தது. உங்கள் ஆதங்கங்களையும் ஆசைகளையும் வெளியுலகிற்கு கொணர்ந்திட இது நல்ல ஊடகமே. உங்கள் மொழிவன்மையும் நல்ல ஆக்கங்கள் வரவிருக்கின்றன என்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. உங்கள் வலைப்பதிவு உலக வருகைக்கு வாழ்த்துக்கள்.

ஒரு பொடிச்சி said...

welcome living smile viththiya!! looking fwd to enter/know ur world through ur writings.. thank you.

நாகை சிவா said...

வாங்க வித்யா,
வேலை பளு காரணமாக இன்று தான் உங்கள் பதிவை காணும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குள் நம்ம மக்கள் எல்லாம் வருகை புரிந்து அவர்களின் ஆதரவை தெரிவித்து விட்டார்கள். அவர்களுடன் மேலும் ஒருவனாக சொல்கின்றேன், எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. வாழ்த்தி வரவேற்கின்றோம். தொடர்ந்து எழுதுங்கள்.

ச.சங்கர் said...

வலைப்பூ உலகிற்கு வருக லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களே....யோசித்துப் பார்த்தால் வலைப்பூ உலகில் ஆண் பெண் அரவாணி என்கிற பேதமெல்லாம் கிடையாது....இங்கு தோழமையெல்லாம் எழுத்தினால்தான்...நல்ல ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துக்கள்....தோழமையுடன்...ச.சங்கர்

சேதுக்கரசி said...

வலைப்பூ துவங்கியதற்கு வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா.

Pot"tea" kadai said...

my best wishes ...keep writing...

நாமக்கல் சிபி said...

தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு வரவேற்கிறேன்.

நிறைய நல்ல பதிவுகளை கொடுங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்.

Unknown said...

லிவிங் ஸ்மைல்,

உங்கள் பதிவுகளைத் தாமதமாகத்தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்...

மற்ற நண்பர்களைப் போல எனக்கும் தங்களை வலைப்பதிவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி...

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

sooryakumar said...

வித்யா உங்கள் பதிவுகள் அருமை.

Anonymous said...

அழகான பெயர் ஸ்மைல் :) may god bless you

jeyamohan said...
This comment has been removed by a blog administrator.
jeyamohan said...

at inaimathi tsc ii font
dear living smile

not for publishing. just a letter
jeyamohan



«ýÒûÇ Ä¢Å¢í Š¨Áø Å¢ò¡ «Å÷¸ÙìÌ,

¯í¸û þ¨½Â ¾Äò¨¾Ôõ ±¾¢Ã£Î¸¨ÇÔõ ¦¾¡¼÷óÐ ¸ÅÉ¢òÐ ÅÕ¸¢§Èý. ¯í¸û ¾Á¢ú ¿¨¼Ôõ ¦º¡ø§¾÷׸Ùõ Ü÷¨Á¡¸ ¯ûÇÉ. ¯í¸û Å¡¾í¸Ç¢ø À¡¾¢ì¸ôÀð¼Å÷¸Ç¢ý §Å¸Óõ º¢ÉÓõ ¦¾Ã¢¸¢ÈÐ.

¯í¸û ±ØòÐ츨ÇôÀüÈ¢ º¢Ä ¦º¡ü¸¨Çî ¦º¡øÄ Å¢Æ¢¸¢§Èý, «Åü¨È ¿£í¸û ÍÓ¸ ÁÉ¿¢¨Ä¢ø ±ÎòÐì ¦¸¡ñÎ º¢ó¾¢ôÀ£÷¸û ±ýÚ ¿¢¨É츢§Èý.

¿¡õ þô§À¡Ð Å¡úóÐÅÕõ ¯Ä¸õ ±ýÀÐ À¾¢É¡È¡õ áüÈ¡ñÎ ³§Ã¡ôÀ¢Â ÀñÀ¡ðÎôÒÃðº¢Â¢É¡Öõ À¢ÈÌ Åó¾ º¢ó¾¨É «¨Ä¸Ç¡Öõ ¯ÕÅ¡ì¸ôÀð¼ ´ýÚ. þ¨¾ 'º¸Å¡úÅ¢ý' ¯Ä¸õ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. þ¾üÌ Óý þÕó¾ ¯Ä¨¸ '¦¾Ã¢×'¸Ç¢ý ¯Ä¸õ, ±ýÚ ¦º¡øÄÄ¡õ. þÐ Á¢¸×õ §¾¡Ã¡ÂÁ¡É ´Õ ÀÌôÒ¾¡ý ±ýÈ¡Öõ º¢Ä Å¢„Âí¸¨Çô ÒâóЦ¸¡ûÇ Á¢¸×õ ¯¾ÅìÜÊÂÐ.

¦ºýÈ ¸¡Ä¸ð¼ò¾¢ø ÅýÓ¨ÈÔõ ¦ÅýÚ Å¡ú¾Ö§Á ÓýÉ¢ýÈÉ. ¦Åøžü¸¡É ¯¼üÀ¡íÌ, ÁÉ¿¢¨Ä ¬¸¢Â¨Å Ó츢ÂÁ¡Â¢É. ¦ÅýÈÅ÷¸û о¢ì¸ôÀð¼É÷. ¦Åøžü¸¡É ¾Ì¾¢§Â - «È¢Å¡÷ó¾Ðõ ¬Ô¾õ º¡÷ó¾ÐÁ¡É- ¯Â¢÷¸Ç¢ý ¾Ì¾¢ ¬¸¢ÂÐ. «ò¾Ì¾¢ ¦¸¡ñ¼Å÷¸û Ó¾ý¨ÁôÀÎò¾ôÀð¼¡÷¸û. «Å÷¸û ¯îº¢Â¢ø þÕì¸ ¸£ú ¸£Æ¡¸ «Îì¸ôÀÎõ Áì¸Ç¢É¡ø ¬É ´Õ À¢ÃÁ¢Î ±øÄ¡ ºã¸í¸Ç¢Öõ þÕó¾Ð.

º¸Å¡ú쨸¨Â ÓýÉ¢ÚòÐõ ´Õ Å¡ú쨸 §¿¡ìÌ Ì¨Èó¾Ð ¿¡áÚÅÕ¼í¸Ç¸ ÀÄáÚ «È¢×ò¾Çí¸Ç¢ø Àøġ¢Ãõ º¢ó¾¨É¡Ç÷¸Ç¡ø Ü𼡸 ¯ÕÅ¡ì¸ôÀð¼ ´ýÈ¡Ìõ. ¸§¾Ôõ ¾øŠ§¾¡Ôõ Á¡÷ì…¤õ ³ýŠËÛõ ¸¡ó¾¢Ôõ ±øÄ¡õ «¾¢ø ÀíÌ Å¸¢ì¸¢È¡÷¸û. §¿ü¨È ¿¨¼Ó¨È¸û þýÚ «¿£¾¢¸Ç¡¸ Á¡È¢É. þýÛõ ÓÊ×ìÌ Åá¾ ´Õ ¦ÀÕõ ¦ºÂøÀ¡ðÎô§À¡ìÌ þÐ.

¦ºýȸ¡Äí¸Ç¢ø ¯îº¢Â¢ø ¿¢ýÈ º¢Ä÷ ¾Å¢Ã ¦ÀÕõÀ¡Ä¡Éù÷¸û ²§¾Ûõ Å¢¾ò¾¢ø §¾¡ü¸Êì¸Àôð¼Å¸Ç¡¸×õ ´Îì¸Àôð¼Å÷¸Ç¡¸×õ ¾¡ý þÕó¾¢Õ츢ȡ÷¸û. ´ðΦÁ¡ò¾Á¡¸ ¦Àñ¸û ´Îì¸ÀôðÊÕó¾¡÷¸û. ±ØÀò¨¾óÐ ÅÕ¼õ ÓýÀò¾¢Â ¾Á¢ú þ¾ú¸¨Ç ±ÎòÐô À¡÷ò¾¡ø þô§À¡Ð ¿£í¸û ¾¢Õ¿í¨¸¸Ù측¸ ÌÃø¦¸¡ÎìÌõ «§¾ §Å¸òмý ¦Àñ¸Ùì¸¡É ÌÃø¸û ±Øó¾¢ÕôÀ¨¾ì ¸¡½Ä¡õ.

«§¾§À¡Ä ÀÄ áüÈ¡ñθǡ¸ «Ê¨Á¸û þɚ⡸ ´Îì¸ÀôðÊÕó¾É÷. ¯¨ÆôÀ¡Ç¢¸û º¡¾¢ šâ¡¸ ´Îì¸ÀôðÊÕó¾É÷. «Å÷¸Ùì¸¡É ÌÃø þÄ츢Âò¾¢Öõ «È¢×òШÈ¢Öõ ±ØóÐ ¦ÅÚõ þÕÀò¨¾óÐ ÅÕ¼í¸û¾¡ý ¬¸¢ýÈÉ. ¦ºýÈ À¾¢¨ÉóÐ ÅÕ¼í¸Ç¡¸§Å ¿õ ÝÆÄ¢ø °ÉÓüÈÅ÷¸Ç¢ý ¯Ã¢¨Á¸Ùì¸¡É Å¢Æ¢ôÒ½÷ ¯ÕÅ¡¸¢ ÅÕ¸¢ÈÐ. ¿¡§¼¡Ê Á¸ìÙì¸¡É ÌÃø þýÛõ ´Ä¢ì¸§Å ¬ÃõÀ¢ì¸Å¢ø¨Ä.

þÐ Á¢¸×õ º¢ì¸Ä¡É ´ýÚ. º¸Å¡ú×ì¸¡É þý¨È º¢ó¾¨É¸¨Ä ¯Õš츢 ¸§¾Ôõ ¾øŠ¦¾¡Ôõ ƒ¢ô…¢¸¨Ç ÁÉ¢¾÷¸Ç¡¸ ±ñ½Å¢ø¨Ä. ²ý ¾øò Óý§É¡Ê «§Â¡ò¾¢ ¾¡º÷ Á¨ÄÁ¸ì¨Ä µ½¡ý ¾¢ýÀÅ÷¸û ±ýÚ ¦º¡ø¸¢¬÷. ¦ºýÈ ¸¡Ä Á¾¢ôÀ£Î¸û ¿õ «¨ÉÅÕìÌû ¯¨ÈóÐûÇÉ. ¦¾¡¼÷îº¢Â¡É ¿£Êò¾ º¢ó¾¨É¸û ãħÁ ¿¡õ ¿õÁ¢ø ¯¨ÈÔõ ¦ºýȸ¡Ä ÀÊÁí¸¨Ç ¾¡ñ¼ ÓÊÔõ.

þÐ ÀÊôÀÊ¡¸ ¦ÁøÄ ¿¼ìÌõ ´Õ ŢƢôÒ½÷× §À¡ìÌ. º¸Å¡úì¨¸ì¸¡É ÌÃø ±øÄ¡ ¾¢¨º¸Ç¢ø þÕóÐõ ¯ÕÅ¡¸¢ÅÕõ ¿¢¸ú× þÐ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. ´Õ Å¡úì¨¸Ó¨È ¯ÕÅ¡¸¢Â¢Õ츢ÈÐ ±ýÈ¡ø «¾üÌâ ÁÉ¿¢¨Ä¸Ùõ «¾ü§¸üÀ ¬ÆÁ¡¸ ¯ÕÅ¡¸¢ ÀñÀ¡ðÊø °ÎÕÅ¢ þÕìÌõ. «ó¾ Å¡ú쨸 Ó¨È Á¨ÈóÐõ ÀÄ ¸¡Äõ «õÁÉ¿¢¨Ä¸û ¿£ÊìÌõ. «õÁÉ¿¢¨Ä¸ÙìÌ ±¾¢Ã¡É ºÁ÷ ±ýÀÐ ¬§ÅºÓõ §¸¡ÀÓõ ¦¸¡ñÎ ¦ºöÂÀôÀ¼§ÅñÊ ´ýÈøÄ. ¿£Êò¾ ¦À¡Ú¨ÁÂ¡É ¦¾¡¼÷ ¦ºÂøÀ¡¼¡¸ «Ð þÕ¸ì§ÅñÎõ. «ô§À¡Ð¾¡ý ºã¸ò¾¢ý ¦À¡Ðì ¸Õò¾¢ÂÄ¢Öõ ¬úÁÉ¿¢¨Ä¸Ç¢Öõ ¯ÕÅ¡¸¢ÔûÇ ÀÊÁí¸¨Ç Á¡üÈ¢ «¨Áì¸ ÓÊÔõ.

þÐŨà ¿¼ó¾ Á¡üÈí¸û ±øÄ¡õ «ÀôÊò¾¡ý ¿¼ó¾É. ¦ºýÈ ¸¡Äí¸Ç¢ø þí§¸ ¦Àñ¸øŢ측¸×õ ºÁ ¯Ã¢¨Á측¸×õ ¿¼ó¾ §À¡÷¸û «ôÀÊò¾¡ý ¦ÁøÄ ¦ÁøÄ ÀÄý ¾ó¾É. ¦ÁøÄ ±ýÚ ¦º¡øÄÄ¡§Á ´Æ¢Â «Ð ¦ÁÄø «øÄ. ¬Â¢Ãõ ÅÕ¼í¸Ç¡¸ ¿õ ºã¸ Áɾ¢ø ¯ÕÅ¡É ÀÄ ¯ÕŸí¸û þó¾ ³õÀÐ ÅÕ¼í¸Ç¢ø Á¡È¢Â¢ÕôÀ¨¾ þ¾ú¸¨Çô ÀÊò¾¡ø ¸¡½Ä¡õ. þÐ ´Õ ÒÃ𺢧 ¬Ìõ.

¿õ ¦º¡ó¾ «ÛÀÅí¸¨Ç ¨ÅòÐô À¡÷ìÌõ§À¡Ð ±Øõ §Å¸Óõ §¸¡ÀÓõ þÂøÀ¡É§¾. ¬É¡ø «Åü¨È ¿£Êò¾ ¯Ú¾¢Â¡É ¸ÕòÐî ¦ºÂøÀ¡Î¸Ç¡¸ Á¡üÈ¢ì ¦¸¡ûǧÅñÎõ. «Ð§Å ÀÄý ¾Õõ ¯¨ÆôÀ¡Ìõ.

¿õ ÝÆÄ¢ø ¾¢Õ¿í¨¸¸Ç¢ý ¯Ã¢¨Á¸¨ÇÔõ ¯½÷׸¨ÇÔõ °¼¸í¸Ç¢ø ±ÎòÐô§Àº «Å÷¸Ç¢¼Á¢ÕóÐ ¯ÕÅ¡¸¢ Åó¾ ±ÅÕõ þø¨Ä. «į̀Ȩ ¯í¸Ç¡ø §À¡¸ þÂÖõ. ¯í¸û ±Øò¾¢ø ¯ûÇ §Å¸Óõ ¦¾Ç¢×õ «¾üÌ ¯¾Åì ÜÎõ.¯í¸û «ÛÀÅí¸¨ÇÔõ ¸Õòиì¨ÇÔõ «¨ÉòÐô ¦À¡ÐÅ¡º¸÷¸¨ÇÔõ ²ü¸¨ÅìÌÁÇ×ìÌ ¿¢¾¡ÉòмÛõ ¾÷ì¸ â÷ÅÁ¡¸×õ ¿£í¸û ±Ø¾Ä¡õ.

¬É¡ø «¾üÌ þ¨½Âõ ¿õÀ¸Á¡É °¼¸õ «øÄ. þ¨½Âõ ´Õ §À¡Ä¢ °¼¸õ-- ÌÈ¢ôÀ¡¸ ¾Á¢Æ¢ø. þí§¸ ¦Å̺¢Ä÷ ÁðΧÁ ¾í¸û ±ñ½í¸¨Ç §¿÷¨Á¡¸ ¦ÅÇ¢ôÀÎòи¢È¡÷¸û. §ÁÖõ Á¢¸îº¢Ä§Ã þ¨¾ ¯ñ¨Á¢ø ÀÊ츢ȡ÷¸û. ¬¸§Å ¿£í¸û «îÍ °¼¸í¸¨Ç§Â ¿¡¼§ÅñÎõ.

¾¢ÉÁ½¢ ¿ÎôÀì¸õ ¾Á¢Æ¢ø Á¢¸ «¾¢¸Á¡¸ ÀÊì¸ôÀÎõ ´Õ þ¼õ. ¯Â¢÷¨Á, ¸¡ÄîÍÅÎ , ¾£Ã¡¿¾¢ §À¡ýÈ þ¾ú¸û «Îò¾ÀÊ¡¸. þí§¸ ¿£í¸û ¯í¸û ¸ÕòÐì¸¨Ç ±Ø¾Ä¡õ.

þí§¸ ±Ø¾ôÀÎõ ¸ÕòÐì¸û §Áø §ÁÖõ «¾¢¸ Å¡º¸÷¸¨Ç ®÷ì¸ ¿£í¸û Å¢¸¼ý ÌÓ¾õ §À¡ýÈ þ¾ú¸¨Ç ÀÂýÀÎò¾Ä¡õ --«ÅüÈ¢ø ¯ñ¨Á¡¸ ±ØÐÅÐ þý¨È ÝÆÄ¢ø º¡ò¾¢ÂÁøÄ.

Á£ñÎõ ¿¡ý ¦º¡øŨ¾ ÅÄ¢ÔÚòи¢§Èý. ¸ÕòÐî ÝÆÄ¢ø ´Õ Á¡üÈõ ±ýÀÐ ¦À¡Ú¨ÁÂ¡É ¿£ñ¼¿¡û «È¢×î ¦ºÂøÀ¡Î ãħÁ ¿¢¸úž¡Ìõ. «¾üÌâ Ţ¨Ç׸û ¸ñÊôÀ¡¸ ¯ñÎ. «¨¾ ¿£í¸û ¦ºö§ÅñΦÁÉ Å¢¨Æ¸¢§Èý

¯í¸û þ¨½Â Ó¸Åâ ÌÈ¢òÐ ¿ñÀ÷ †Á£Ð [ÁÛ‰ÂÒò¾¢Ãý, ¯Â¢÷¨Á] Å¢¼õ §Àº¢§Éý. «Å÷ ¯í¸¨Ç ¦¾¡¼÷Ò ¦¸¡ûÅ¡÷. ¯Â¢÷¨Á¢ø ¿£í¸û ;ó¾¢ÃÁ¡¸ ±Ø¾Ä¡õ ±É ±ñϸ¢§Èý.

þÕÀÐÅÕ¼í¸ÙìÌ Óý ¿¡§¼¡Ê¡¸ «¨Äó¾ ¿¡ð¸Ç¢ø º¢Ä ¾¢Õ¿í¨¸¸Ù¼ý ±ÉìÌ ¿øÄ ÀÆì¸Óõ þɢ ¿ðÒõ þÕó¾Ð. [´ýÈ¢ÃñÎ ¸ºôÀ¡É «ÛÀÅí¸Ùõ. «Ð þÂøÒ¾¡§É] ¯í¸û ±Øò¾¢ø ¯ûÇ ¾¡÷Á¢¸Á¡É §Å¸õ ±ý¨É ¸ÅÃ×õ «Ð§Å ¸¡Ã½õ

Å¡úòÐì¸û.

¦ƒÂ§Á¡¸ý
¿¡¸÷§¸¡Â¢ø

jeyamoohannn@rediffmail.com

alex paranthaman said...

வாழும் புன்னகையே,,

வாழும் போது ஆணாக வாழ்கிறோமா, பெண்ணாக வாழ்கிறோமா என்று பார்க்காமல் மனிதாபிமானம் மிக்க மனிதனாக வாழ்கிறோமா என்று பார்க்கும் போது தான் உலகமே உய்யும்.

மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

லிவிங் ஸ்மைல் வித்யா, உங்கள் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது! வாருங்கள்.. மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்..

மாறும் இந்த உலகம் ஒரு நாள்!

balu said...

wish you all the best