நடையாய் நட....

வாகனம் வாய்க்காத ப்ரயாணமா

இயல்பை தொலைக்கணும்

கதறி கதறி சொல்லணும்

நான் அந்த மாதிரி இல்லையென்பதை

நிரூபனம் செய்யணும்

சக பிறவியென்பதை

அதோடு, நடந்தேயாகணும்

எப்படியாச்சும்

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நிலவு நண்பன் said...

//நான் அந்த மாதிரி இல்லையென்பதை
நிரூபனம் செய்யணும்//


நிருபணம் செய்யத்தேவையில்லை

இந்த கவிதை காட்டிக் கொடுத்து விடுகிறது தங்களது மனநிலையை

நாகு said...

மக்கள் முதலில் அரவாணிகள் மீதான தவறான எண்ணங்களைக் கைவிட்டு, அவர்களும் ந ம்மில் ஒருவர் தான் என்கிற உணர்வினைக் கொள்ளவேண்டும். படிப்பில் வேலைவாய்பில் அவர்களுக்க உரிமை அளிக்கப்படல் வேண்டும். (எந்த தனியார் நிறுவனத்தினாராவது அரவாணிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்கின்றனரா?) இந்த விசயத்தில் அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றி அவர்களுக்கு நன்மை செய்திட வேண்டும்.

மஞ்சூர் ராசா said...

நாகு சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.
ரசிகவ் சொல்வது போல நிரூபணம் செய்ய தேவையில்லை.
வெற்றி நிச்சயம்.

tbr.joseph said...

நான் அந்த மாதிரி இல்லையென்பதை

நிரூபனம் செய்யணும்//

யாருக்கு? எதுக்காக?

தேவையே இல்லீங்க!

நீங்க நீங்களாத்தான் இருக்கணும்..

யாருக்கும் உங்களுடைய நியாயப்படுத்தவோ, விவரிக்கவோ, தேவையே இல்லீங்க..

லிவிங் ஸ்மைல் said...
This comment has been removed by a blog administrator.
(துபாய்) ராஜா said...

//நடந்தேயாகணும் எப்படியாச்சும்//

உங்கள் பயணமெல்லாம் நண்பர்கள் நாங்களும் உடன்வருவோம் வித்யா!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//நான் அந்த மாதிரி இல்லையென்பதை

நிரூபனம் செய்யணும்//

கற்ற கல்வி கை கொடுக்கும்.. நீங்க மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்க.. போதும்..

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//நான் அந்த மாதிரி இல்லையென்பதை

நிரூபனம் செய்யணும்//

கற்ற கல்வி கை கொடுக்கும்.. நீங்க மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்க.. போதும்..

Dharumi said...

நண்பர் அமுதன் - டாக்குமெண்ட்ரி அமுதன்தானே?

லிவிங் ஸ்மைல் said...

// நண்பர் அமுதன் - டாக்குமெண்ட்ரி அமுதன்தானே? //

அவரே தான்...

லிவிங் ஸ்மைல் said...

நண்பர் நாகு வின் ஆதங்கம் புரிகிறது...

// (எந்த தனியார் நிறுவனத்தினாராவது அரவாணிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை அளிக்கின்றனரா?) //

ஏன் இல்லை, நான் பணிபுரிவதும் ஒரு தனியார் நிறுவனம் தான் நண்பரே...

Indian Association for Savings and Credit (IASC) எனும் ஒரு நூண்ணூட்ட நிதி நிறுவனத்தில் (Micro Finance Insitution) தான் Electronic Data Processing Assistant (EDP, Asst.,) ஆக பணிபுரிந்து வருகிறேன்...

இது போல், ஒரு பொது தளத்தில் பணிபுரிவதே என் விருப்பமாக இருந்தது. அதற்கு ஆதரவாகவக இருந்து ஊக்குவித்த நண்பர்கள் அமுதன், அசோக், ஆனந்த், உதய் சங்கர் அனைவருக்கும் இங்கே என் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்..

வலைபதிவில் நான் பதிய முக்கிய காரணமாக ஊக்கமும், உதவியும் தரும் நண்பர் பால பாரதிக்கும் முக்கியமாக நன்றி தெரிவிக்கிறேன்..

// இந்த விசயத்தில் அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றி அவர்களுக்கு நன்மை செய்திட வேண்டும். //

இதை என் சார்பாக நீங்கள் கூறுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்....

நாகு said...

தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனம் குறித்து எழுதியுள்ளீர்கள். அந்த நிறுவனத்திற்குப் பாராட்டுக்கள். அதனை ஏன் நான் குறிப்பிட்டேன் என்றால், நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில், நேர்முகத்தேர்வின்போது ஒரு நபரின் குரல் சற்று பெண்ணின் சாயலில் இருந்த ஒரு காரணத்தி னாலே அவரை வேண்டாம் என்று ஒதுக்கி னார்கள்.

லிவிங் ஸ்மைல் said...

// நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில், நேர்முகத்தேர்வின்போது ஒரு நபரின் குரல் சற்று பெண்ணின் சாயலில் இருந்த ஒரு காரணத்தி னாலே அவரை வேண்டாம் என்று ஒதுக்கி னார்கள். //

இந்த ஒடுக்குமுறை தான் - திறமையிருந்தும் - பல அரவாணிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமைக்கு காரணமாகும்...

காலம் மாறிக்கொண்டே வருகிறது.., மெல்ல மெல்ல அது தன் வேலையை செய்யும்....

நாமும் செய்வோம்.....

தகவலுக்கு நன்றி நாகு...