அலி, அரவானி, திருநங்கை

பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள் அலி/ பேடி என்ற சொல்லால் அறியப்பட்டு வந்தனர்.


கால மாற்றம் ஏற்படுத்திய சமூக மாற்றம், அலிகளை கேவலப்படுத்தி மகிழத்தக்க இழி பிறிவிகளாக கருதச் செய்தது. அதற்கேற்ப அலி/பேடி என்ற சொற் பயன்பாடும் ஒரு கேலிப் பொருளானது. இந்த சிறிய அறிமுகத்தோடு திருநங்கை என்ற பதத்திற்கான அவசியத்தை காண்போம்.


சமூகத்தில் அலிகளுக்கான விடுதலை எழத்துவங்கிய காலத்தில் அலி/பேடி என்ற சொல்லிற்கு இணையான, கண்ணியமான சொல் தேவைப்பட்டது. அதேகட்டத்தில், மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான அரவான் கோயில் (கூத்தாண்டவர்) திருவிழா அலிகள் நிமித்தம் கடந்த 20
வருடங்களாக பிரபலமடைய துவங்கியது. அதனடிப்படையில், அலிகள் அரவானின் ஒரு நாள் மனைவியாக - கிருஷணாவதாரமாக (மோகினி) கருதப்பட்டு அரவானி என்றழைக்கலாம் என்ற கருத்து முன்னிருத்தப்பட்டதையொட்டி அரவானிகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.


இங்கு நாம் அரவான் கதையை விரிவாக, கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அரவான் என்பவன் யார்...? அர்ஜுனனின் மகன். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு நாகர் குலப் பெண்ணுக்கும், அர்ஜுனனுக்கும் பிறந்த மூத்த வாரிசு. ஆனால், உயர்ந்த ஜாதிப் பெண்ணுக்கு பிறந்த மகனான அபிமன்யுவைப் போலன்றி, தந்தை(அர்ஜூனன்) னின் அரவணைப்பின்றி சமூக அங்கீகாரமும் மறுக்கப்பட்டு வளர்ந்தவன். இந்த ஒடுக்கப்படுதலுக்காக அர்ஜூனன் மீதான கோபத்தோடு வளர்ந்தவன்.

பின்னாளில் கௌரவ-பாண்டவர்களின், வெற்றி/தோல்வியை நிர்மாணிக்கக் கூடியனாக - களப்பலியாகக் கூடிய தகுதி உடையவனாகிய, அரவானே இருந்தான். அப்போதுதான், யுத்த தந்திரம் என்ற பெயரில் கிருஷ்ணன் என்னும் மாயாவி சூது வார்த்தையால் அரவானை களப்பலிக்கு சம்மத்திக்க வைத்தான். களப்பலியாவதற்கு முன்பாக தனக்கொரு மனைவியும், மனைவி மூலம் ஒரு வாரிசும் வேண்டிய அரவானை மணக்க யாரும் முன்வராத நிலையில், கிருஷ்ணனே பெண்ணாகவும் உருவெடுத்து அரவானை மணந்தான் அதாவது, வெற்றி ஒன்றே இலக்கு என்ற நிலையில் பெண் வேடமணிந்து சூது புரிந்தான்.

இன்று சமூக விடுதலை, சம அங்கீகாரம், சம உரிமை எனப் போரிடத் துவங்கியுள்ள அலிகள் ஒடுக்கப்படுவதலின் குறியீடாக, மேட்டுக்குடிகளின் சுயநலத்திற்காக பலிகடா ஆக்கப்பட்ட கதாப்பாத்திரம் மூலம் அறியப்படுவது (அரவானின் மனைவியாக) எத்தகைய நகைமுரணாகிறது!?.

------------------

மேலும், அதே மகாபாரதத்தில் அரவானின் தந்தையான அர்ஜூனனும் தான் பெற்ற சாபம் காரணமாக, அலியாக(பிரகன்நளை) சில காலம் வாழ்ந்த கதையுண்டு. இது, அரவான் - மோகினி கதையாடலுக்கு முன்பாகவே மகாபாரதத்தில் வரும் நிகழ்வு. மற்றொரு இதிகாசமான இராமாயணத்தில், ராமன் வனவாசம் செல்கையில் நாட்டு மக்கள் அனைவரும் அவர் பின் சென்றனர். அவர்கள் திரும்பிச் செல்லும் பொருட்டு ராமர் "ஆண், பெண் இருவரும் திரும்பி நாட்டுக்குச் செல்லுங்கள்" என்றார். ஆண், பெண் இருவரை மட்டும் தானே திரும்பிச் செல்லுமாறு சொன்னார் எனவே, நாம் செல்ல வேண்டியதில்லை என்று அலிகள் அனைவருமே ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் வரை அவருக்காக பதினாங்காண்டுகள் காத்திருந்த கதையும் உண்டு.

ஆக, அரவான் கதையாடலுக்கும் முன்பே அலிகள் வாழ்ந்த வரலாறு ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அரவானி என்ற சொல் வரலாற்றடிப்படையிலும் பொருத்தமற்றதாகிறது.

-------------

கிறுஸ்தவ மதத்தின் வேத நூலான பைபிளில் அன்னகர் என்ற சொல், தமிழ் மொழியில் பைபிள் அச்சான நாளிலிருந்தே கண்ணியமாக பயன்படுத்தபட்டு வருகிறது.

ஆண்/பெண் என்ற சொல் மதம்/இனம் அல்லாமல் பாலியலை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அலிகளோ சராசரி ஆண்/பெண் போலன்றி மதம், இனம், மொழி கடந்து ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் குறிப்பட்டதொரு மதம் சார்ந்து அழைக்கப்படுதல் ஜனநாயக அடிப்படையிலும், மொழியியலடிப்படையிலும் பொருந்தாது.

---------------

இனி திருநங்கை என்ற சொல்லைப் பார்ப்போம்,

திரு + நங்கை = திருநங்கை, பெண்பாலைக் குறிக்கக் கூடிய பலசொற்களில் ஒன்றான இது ஆண்பாலினத்திற்கு மட்டும் மரியாதை நிமித்தம் சேர்க்கப்படும் "திரு" என்ற முன்னொட்டு(prefix)டன் வருகிறது.

சீவக சிந்தாமணியின் 2558 வரியில் பயன்படுத்தப்படும் இது அழகிய பழந்தமிழ் சொல்லாக உள்ளது. மேலும், அலி என்னும் சொல்லிற்கிணையான பொருள் பொதிந்து, குறிப்பாக மதம், இன அடையாளம் கடந்த பொதுப் பெயராக ஏற்புடையதாகிறது.


********* **************** *************

22 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

ஒரு பொடிச்சி said...

நல்ல கட்டுரை லிவிங் ஸ்மைல் வித்யா. இதுவும் முந்தைய பதிவும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. நேரமிருக்கும்போது திரும்பவும் பிரசுரியுங்களேன்.

சரண் said...

திருநங்கைகளின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட உமது எழுத்துக்கள் அருமை..தொடரட்டும் உமது பணி..வாழ்த்துக்கள்!

aparnaa said...

நல்ல கட்டுரை. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். i have read a novel by samuthram "vadamalli".i would never forget it. it gave me a totaly different view of a life and problems of this people.Thanks for sharing the information.i read all ur previous post.Hats off vidhya!! we are proud of u.

VSK said...

நல்ல ஆய்வுக் கட்டுரை!

அலி, பேடி, அரவாணி, திருநங்கை எனச் சொல்லப்படுபவர்கள் எந்த ஒரு பாலையும் கொள்ளலாம், பொதுவாக இவர்கள் பெண் தோற்றத்தை விரும்பினாலும்.

ஆண் அலிகளும் இருக்கிறார்கள்.

அப்படிப் பார்க்கையில், பேடன், பேடி என்னும் சொல்லே இவர்கள் வெளி, உள் தோற்றங்களைக் குறிக்கும் பொருத்தமான சொல்லாக எண்ணுகிறேன்.

திருநங்கையும் ஏற்புடையதே.
இருந்தாலும் அது ஒரே சொல்லாகப் போவதினால், சில ஆண் அலிகள் இதனைப் பயன்படுத்தத் தயங்கக்கூடும்.

ஆண், பெண்பால் ஏதுமில்லாவிடினும், ஆண் தோற்றத்தை விரும்புவரைப் பேடன் எனவும், பெண் தோற்றத்தை கொள்வோரை பேடி எனவும் சொல்லலாம் என J.P. Fabricus' Tamil-English Dictionary அகராதியில் போட்டிருக்கிறது.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D&display=simple&table=fabricius

இப்போது இவை ஒரு அவமானச் சொல்லாக கருதப்படுவதால், தயக்கம் வரலாம்.

ஆங்கிலத்தில் GAY எனும் சொல் முன்பு மகிழ்ச்சியைக் குறித்தது. ஆனால் அதனை தற்போது உபயோகித்தால் ஓரினச் சேர்க்கையாளர் என்னும் பொருள் படுவது போல.

Unknown said...

nalla oru vishayatha pathi potreekeenga... great!

Raji said...

Karthik sollura maadhiri nalla oru vishyathai pottu rukkeenga..
VAzhthukkal nga..
My first visit to ur blog:)

Sree's Views said...

Hello Vidya,
When I put a post about 'thirunangai' , Ravi had commented that there is a blogger here..so I was searching and waiting to meet you here.
I am so glad that I came to ur page.
Hey Vidya..Ali nnu koopita enna...Aravani nnu koopita ennanga..neenga ungala epadee ninaikareengalo adhaan neenga..who can say anything about it..sollunga..
As far as one is not hurting another person ur choice and taste is your own...
I cant say how proud I am of you!
:)

balar said...

அருமையான கட்டுரை..தங்கள் கட்டுரை மூலமாக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
தங்கள் முயறசிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

அரவிந்தன் நீலகண்டன் said...

மடத்தனமான கட்டுரை. நாகர் குலத்தவர் கீழ் சாதியினர் என மகாபாரதத்தில் எங்காவது வருகிறதா? அர்ஜுனனே சிலகாலம் அரவாணியாக ஒரு சாபத்தால் கழித்தானே நாட்களை அப்போது அவன் கீழ்மகனாக நடத்தப்பட்டனா அல்லது அரசருக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்தானா? அரச அந்தப்புரத்தில் நுண் கலைகள் கற்பிப்பவனாக இருக்கிறான் அவன். எவ்வித பாலியல் பலாத்காரமும் அவன் மீது பிரயோகிக்கப்படவில்லை. மேலும் சிகண்டி பெண் தன்மையுடன் இருந்தான் என்பதாகவே காண்கிறோம். சிகண்டியை அலியாகவே கூறும் மரபும் நாட்டார் மகாபாரத வழக்குகளில் இருந்து வருகிறது. ஆனால் இவை எதுவுமே சிகண்டி ஒரு அரச தலைவனாக இறுதியில் போர்படைத்தலைவனாக வருவதை தடை செய்யவில்லை. சரி நீங்கள் கூறும் அரவானின் அன்னை உலூபி ஆவாள். அவள் நாகர் அரசரின் மகள் ஆவாள். அவளது மற்றொரு தோழி சித்ராங்கதா ஆவாள். அவளும் அர்ஜுனரின் மனைவியே ஆவாள். நாகர்களின் தாய்வழி சமுதாய முறையின் காரணமாக நாகர் இளவரசரை அர்ஜுனனுடன் அனுப்ப முடியாது என கேட்பது சித்ராங்கதாவின் தகப்பனாரே ஆகும். எனவே கீழ்சாதி எனவே அர்ஜுனரின் அரவணைப்பில்லாமல் வாழ்ந்தான் என்பதெல்லாம் வெறும் ஜல்லி. அப்படி பார்த்தால் அபிமன்யு கூட கீழ்சாதி ஏனென்றால் யாதவ குலத்தில் வந்தவன் எனவேதான் அவனை தருமர் அர்ஜுனன் இல்லாத போது பார்த்து திட்டம் போட்டு கொன்றுவிட்டார்கள் என்றும் கூட ஜல்லிஅடிக்கலாம். ஜனமேஜெயன் வெறி பிடித்து நாகர்களை பழி வாங்கியபோது அதனை தடுத்தவன் அஸ்திகன் எனும் அந்தணனே ஆவான், ஆனால் லிவிங் ஸ்மைலை சொல்லி குற்றமில்லை. தங்கியிருக்கிற இறையியல் கல்லூரி அப்படி பேச வைக்கிறது. செஞ்சோற்றுக்கடனா லிவிங் ஸ்மைல் :)

அசுரன் said...

லிவிங் ஸ்மைல் அக்கா,

அரவிந்த நீலகண்டன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு அயர்ச்சி அடைய வேண்டாம். இப்படித்தான் எதையும் நியாயப்படுத்தும் வகையில் ஒரே விசயத்துக்கு ஆயிரத்தெட்டு விளக்கம் எழுதி பெரும் இதிகாச புரட்டு குப்ந மேடுகளையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பார்ப்பனிய பன்றிகள்.

இதைச் சொன்னால் அதைச் சொல்வார்கள், அதைச் சொன்னால் இதைச் சொல்வார்கள்.

இந்த கோஸ்டிகள் நாம் இதுவரை எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதை இங்கும் வலியுறுத்துகிறேன்.

சம்ஸ்கிருதம் பற்றி சமீபத்தில் ஒரு டூபாக்கூர் ஜல்லியடித்துள்ள அன்பு நீலகண்டன். அந்த மக்கள் மொழி அழிந்த மர்மம் குறித்தும் தனது வேதந்த கண் கொண்டு உற்று நோக்கி பதில் பக்ர்ந்தால் நன்றாக இருக்கும்.

உடைப்பு என்பவரின் தளத்தில் வெகு விறாப்பாக பேசிச் சென்ற நீலகண்டன அங்கு அவருக்கு நான் விரித்த வலையை உணர்ந்து கொண்டு இன்று வரை அந்த பக்கமே வரவில்லை. வந்தால் நல்ல பன்றிக் கறி ரெடி செய்து லிவிங் ஸ்மைல் அக்காவிற்க்கும் தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மாறாக வர்ணாஸ்ரமம் பற்றியும், இந்து முஸ்லிம் ஜல்லிகள் குறித்தும் சரியானதொரு பதிலை அறிவு ஜீவ் அரவிந்தன் நீலகண்டன் அளித்தால் அற்பன அசுரன் தனது அகங்கார சித்தாந்த மாயைகளிலிருந்து விடுதலைப் பெற்று கழுவிலேறுவான் என்று உறுதியளிக்கிறான். அது இல்லாத பட்சத்தில் நாஞ்சில் நாட்டின் நடு ஊரில் கழுவிலேற அரவிந்தன் என்ற (போலி) சுயமரியாதைக்காரர் (போலி)தேச பக்தர், ஒரிசினல் துவேச பக்தர் தயாரா?

அப்புறம் லிவிங்ஸ்மைல் வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... வரவேற்கிறேன்.

அசுரன்

அசுரன் said...

இந்து சமூக அடக்குமுறை மனித விரோத அமைப்பை விமர்சிப்பவரை எல்லாம் வேற்று நாட்டினன், தேச்த் துரோகி, கிருத்துவ நாய், இஸ்லாமிய பன்றி, கம்யுனிஸ்டு கழுதை என்று இவர்(அரவிந்த நீலகண்டன்) பார்ப்பாராம் ஆனால் நாம் மட்டும் உண்மையிலேயே ஆதிக்கம் செலுத்தும் பார்ப்ப்னியம் குறித்து பேசக் கூடாதாம், சாதியம் குறித்து பேசக் கூடாதாம்.

இவர்களின் சித்தாந்தமான வர்ண்ஸ்ரம அமைப்பை கேள்வி கேட்க்கக்கூடாதாம்?

என்னய்யா உங்க ராமர் பேண்ட(excreting) இடமான அயோத்தி போல இதுவும் உங்க நம்பிக்கையா? அப்போ போய் கழுவி விடுங்கள் பு(தி)ண்ணியம் கிடைக்கும்.(சிறிது பிரசாதமாகவும் எடுத்துக் (உட்)கொள்ளுங்கள்).

அசுரன்

அசுரன் said...

அராஜகமாக இந்த பதிவில் அரவிந்தனை வம்பிழுப்பதற்க்கு என்னை மன்னிக்க வேண்டும் லிவிங் ஸ்மைல். இது போன்ற சமூக விரோதிகளுக்கு எல்லா இடத்திலும் ஆப்பு போட்டு வைத்தால்தான் எங்காவது வசமாக மாட்டி அசிங்கப் படுவார்கள்.

பாருங்க.. எத்தனை அவமானப்படுத்தினாலும் வடிவேலு மாதிரி வரவேமாட்டாய்ங்க... அப்படியே கமுக்காம அடிவாங்காத மாதிரியே போய்க்கிட்டு இருப்பாய்ங்க

அசுரன்

அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த மூன்று பதிவுகளில் நான் கூறிய விசயங்களை அசுரன் எங்கே எதிர்திருக்கிறார், சும்மா வசையாடுவதற்கு என்ன பதில் வேண்டி கிடக்கிறது? அரவான் அல்லது அவனது அன்னை கீழ்சாதி என மகாபாரதத்தில் எங்கே வருகிறது?

சீனு said...

//அப்புறம் லிவிங்ஸ்மைல் வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... வரவேற்கிறேன்.//

ம்ம்...

அப்புறம் வித்யா, உங்க வலையின் backgroung நிறம் கருப்பாக இருப்பதால், படித்து முடித்தவுடன் கண்கள் ஒருவாறு அயர்ச்சி அடைகிறது. நீங்கள் வேண்டுமென்றே தான் கருப்பு நிறத்தில் வைத்திருப்பீர்கள். இருந்தாலும், முடிந்தால் கலரை மாற்றுங்கள்.

vaasu said...

Hi, I read ur post.
But my question s, What is the need for new name for ur people? (like Ali, Aravani, Thirunangai...)
They have feeling feminine charectors inside. correct?
I think u have name already that "Female". then why should change name, and why should be alone with this society.?
If u start like this. u should change for every relation (eg. how ur younger brother ll call? akka or any new name? how ur elder brother ll call. thangachi or new name?
I think, u would like to being as a femile. be that itself. no need change name. if u start to change u should change ur life long.
If anything spoken mistakenly. please forgive me. bye
-Vaasu

குழலி / Kuzhali said...

அரவாணன் மகாபாரதத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்,
அரச வாழ்க்கை எதுவும் அனுபவிக்காமல், அரச குலத்தோனாக கூட அறியப்படாமல் இருந்து பின் களப்பலி கொடுப்பதற்காகவே கண்டெடுக்கப்பட்டவன்...

"அரவாணனின் அரற்றல்" என்ற இந்த கவிதைதான் என் வலைப்பதிவின் முதல் பதிவு

http://kuzhali.blogspot.com/2005/03/blog-post.html

நிறைய தகவல்கள் சொல்லியுள்ளீர், நன்றி

அரவிந்தன் நீலகண்டன் என்னமோ எழுதியிருக்காரேயென்று நினைக்காதீர்கள் பாவம் அவரை லூஸ்ல விடுங்க...

Unknown said...

nalla errukuthu unkal kattrai vallthukkal leaving smile vidya thodarattum unkal pani.

Unknown said...

hello vidya,
your letter is good any letter is support and against is there.
you can sent all your exp letter also welcome.

webalfee said...

நல்ல ஆய்வுக் கட்டுரை!

Unknown said...

i just now visited your blog. please no arguments. with all the arguments you never do anything for the community, please thing progressive to do something VIDHYA. WE ARE HERE TO DO SOMETHING FOR THIRU NANGAIYAR IN MADURAI.
CAN YOU JOIN HANDS TOGETHER WITH US? IF YES ANY BODY WITH LIKEMIND CAN CONTACT codemadurai@gmail.com

venkat said...

நல்ல கட்டுரை. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்
நல்ல ஆய்வுக் கட்டுரை!
thodarbuku venkat_ns82@yahoo.com

CorTexT (Old) said...

நன்று. என்னுடைய இந்த பதிவிற்காக சில விசயங்களை தேடியதில், உங்கள் பதிவை காண நேர்ந்தது. சற்றே தொடர்புடைய என் பதிவு:

http://icortext.blogspot.com/2010/11/blog-post.html