தீராநதி மே இதழில் எதார்த்த இயக்குநர், அமீர் அவர்களின் பேட்டி(நன்றி : மோகன்தாஸ்) வெளிவந்துள்ளது. அதில் கவிஞர் கடற்கரய் கேட்ட கேள்விகளும், இயக்குநர் தந்த பதில்களும்...
////தீராநதி: விளிம்பு நிலை மக்களான அரவாணிகளை ஒரு இசைக் கலைஞர்களாகவே காட்டி இருக்கிறீர்கள். அது வரைக்கும் அது பெருமிதம் கொள்ளத் தக்கது. ஆனால் நீங்களும் அதில் சில இடங்களில் 'சின்னத் தனமான' வார்த்தைகளை எழுதி இருக்கிறீர்களே ஏன்?
இங்கே கடற்கரய்யின் கேள்வியே அடிப்படையில்ல் தவறு. காட்சிப்படி அதில் வரும் திருநங்கைகள் யாரும் இசைக்கலைஞசர்கள் கிடையாது. பொதுவாக, இசைக்கலைஞசர் என்று யாரைக் குறிப்பிடுவோம் என்றால் குரலிசைப்பவர்களையோ, வாத்திய கருவி வாசிப்பவர்களையோ கூறலாம். ஆனால், காட்சிப்படி வயதான கிராமிய பாடகி ஒருவர் பாட அய்ந்தாறு கரகாட்டக்கலைஞசர்கள் (ஒரு ஓரத்தில் கண்ணியமாக)ஆட, கூட சேர்ந்து, டப்பாங்குத்து ஆடுபவர்களே இப்படத்தில் வரும் திருநங்கைகள். அதாவது இவர்கள் தொழில்முறை (professional) பாடகர்களோ, வாத்தியக் கருவி வாசிப்பவர்களோ கிடையாது. அப்படி இருக்க, இதில் திருநங்கைகளை இசைக்கலைஞசர்களாக காட்டப்படுகிறார்கள் என்பது "கேப்பவன் கேனைன்ன எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டு" ங்கற கதையால்ல இருக்கு!!
இதே மதுரையில் ப்ரொபசனல் கரகாட்டக் கலைஞசர் மதனம்மா என்னும் திருநங்கையும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை முறையாக பயன்படுத்தியிருந்து, அவர்களை கலைஞசர்கள் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு ரெக்கார்ட் டான்ஸர்களூம் கலைஞசர்களாகவே தெரிவதால் நாமும் அதனை ஏற்றுக் கொள்வோம்.
/////அமீர்: அது மாதிரி ஏன் வைத்தேன் என்றால், அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அதனால் அதை வைத்தேன். அதை வைத்து காசு பண்ண வேண்டும் என்பதற்காக அதை நான் செய்திருந்தால் அது தவறு. நான் அப்படிச் செய்யவில்லை. ////
அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அப்படியா அமீர், அப்படியென்றால் நிஜத்தில் மதுரை மண்ணின் மக்கள் (நீங்கள், உங்கள் நாயகன், நாயகனின் வழித்தோன்றல்கள் உட்பட) திருநங்கைகள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை இவையெல்லாம் நிஜம் இல்லையா? அல்லது தங்களது புனிதக்காமாளை கண்களுக்கு இதுகாறும் இந்த நிஜங்கள் எதுவும் புலப்படவில்லலயா? மகா சண்டியனா நாயகன் திருநங்கைகள் மீது இத்தகைய வன்முறை செய்பவனாக காட்டவேண்டியது தானே? அதுவும் தானே நிஜம், அதில் காட்ட வேண்டியது தானே உங்கள் நிஜத்தை!!
ஒருவேளை, திருநங்கைகள் மேல் பொதுமக்கள் செலுத்தும் சொல் வன்முறை பாலியல் வன்முறை, இவற்றையெல்லாம் தாங்கள் கண்டிருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டீர்கள். வேண்டுமென்றால், நான் கடந்து செல்லும் பாதையில் பத்து வயது வாண்டுகள் கூட உங்களது எதார்த்த கிராமிய இசையை ரசித்து பாடி என் முகத்தில் சிறுநீர் கழிப்பதைக் பார்த்து விட்டாவது தங்களின் எதார்த்தத அறிவை வளர்த்துக் கொள்ளுங்களேன். ஆனால், எங்களுக்கோ இத்தகைய பாடல்களும், ரசிகர்களின் கலைவெறி கூத்தும் புதியதில்லை. இன்னும் மூனு மாசம் போனா வேறொரு படம், வேறொரு பாட்டு, வேறொரு அனுபவம், உங்களுக்கும் வேறொரு வெற்றி, வேறொரு பேட்டி, கேள்வி, பதில் etc.,
சரி அப்படி நிஜத்தைத்தான் எதார்த்தமாக காட்டுவேன் என்ற பிடிவாதம் இருந்தால், உங்கள் துறை சார்ந்தே எத்தனை எத்தனை அசிங்கள் இருக்கின்றன!! அதை படங்களில் காட்டவேண்டியது தானே? அங்கே நிருப்பிக்கவேண்டியது தானே உங்கள் எதார்த்தம் மீதான காதலை?! இளைத்தவர்கள் (அலிகள்)தான் உங்கள் எதார்த்ததின் கைத்தடியா?
இங்கே, எதார்த்தம் என்னும் போது இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது, எதார்த்ததின் மீது இத்தனை காதல் கொண்ட தாங்கள் பாடல் காட்சியில் நான்கு (மேற்படி சின்னத்தனமான வசனம் பேசுபவர் உட்பட)ஆண்களுக்கு அலிவேடம் போட்டு ஆடவைக்க வேண்டிய தேவையென்ன? எதார்த்தம் மீதான தங்களின் அக்கறை அப்போது எதை மேய சென்றுவிட்டது?
குடும்பம், சமூகம், அங்கீகாரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு என எல்லா கதவும் சாத்தப்பட்டு, புறக்கணிப்பின் எல்லையில் நின்று வாழ்க்கையை ஓட்டும் திருநங்கைகளின் நிர்வானத்தின் மீது தங்களின் ஆதிக்க/நாகரீக மதிப்பீட்டின் மலஜலத்தை மறைமுக களித்துவிட்டு, அவர்களின் அம்மணத்தில் மீதேறி ஆனந்த நர்த்தனமாடி கலையை வளர்க்கிறார்கள் இக்கலையுலக சேவகர்கள். அன்றைய "கோடான கோழி கூவுற வேலை', முதல் இன்றைய "தலைப்பு செய்தி வாசிப்பது கிரிஜாக்கா, கோமளம்" வரை திருநங்கைகள் மீதான இந்த திரை கற்பழிப்புகளுக்கும் முன்வைக்கப்படும் ஒரே சப்பைக் கட்டு இந்த "எதார்த்தவாதம்" மட்டுமே. அதையே இந்த மரபுமீறியும் வழிமொழிகிறார். வாழ்க எதார்த்தம்!
/////// தீராநதி: சரி, நிஜத்தில் இருக்கிறதைச் சொல்லி இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் பொதுவாக நிஜத்தில் அப்படி இருந்தாலும் பொதுத் தளத்திற்கு அது வரும் போது 'எடிட்' பண்ணித்தான் சொல்ல வேண்டும் என்ற ஒரு மனோபாவம் இங்கு இருக்கிறது. அப்போது நிஜத்தில் இருப்பதை 'எடிட்' செய்யாமல் அப்படியே காட்டலாம் என்கிறீர்களா?
அமீர்: நீங்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி. சமூகத்தில் அப்படி இருக்கிறது என்பதற்காக பட்டவர்த்தனமாக ஒரு விஷயத்தை அப்படியே சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. ஒரு படைப்பாளியின் முக்கியமான பொறுப்பு அது. படைப்பாளி என்பவன் பொது மக்களின் பிரதிநிதியாகி விடுகிறான். அப்படி பிரதிநிதியாகிவிடும்போது, அவன் மக்களுக்குச் சொல்லக் கூடிய விஷயம் நல்ல விஷயமாகத்தான் இருக்க வேண்டும். நான் பட்டவர்த்தனமாகச் சொல்லவே இல்லை. நான் அப்படி பட்டவர்த்தனமாகச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் நான் அதில் கொஞ்சம் 'எடிட்' செய்துதான் சொல்லி இருக்கிறேன். //////
பொன்வண்ணன் ஆரம்ப பாடலில் திருநங்கைகளைப் பற்றி கூறும் போது "என்னையா இது கோமாளிங்கலாட்டம்", மேற்படி பணம் பண்ணும் நோக்கமின்றி எதார்த்தமாக எடுக்கப்பட்ட பாடலில் வரும் "நைட்டெல்லாம் மைக் புடிச்சிட்டு இருந்தேன்", "என்ன நாயனக்காரரே! வாயுல வச்சு ஊதவேண்டியதுதானே, நீங்க ஊதுறிங்களா, இல்ல நான் ஊதவா?" என ஏற்ற இறக்கத்துடன் பேசி வசனங்களும் பலநிலை எடிட்டுகளை கடந்து வந்ததுவா!!
ஆத்தே!! எடிட் செய்ததே இப்பிடியா? அப்ப நான்தான் அவசரப்பட்டு வார்த்தைய அள்ளி வீசிட்டனா? அய்யய்யோ உங்க உத்தம மனசு தெரியாம பேசிபுட்டேன் மன்னிசிடுங்கப்பு.
"அலிகளின் மானம் காத்த எங்கள் எதார்த்த வீரன், சூரன், திரைக்கடவுளுக்கு, அலிகளின் மானம் காத்தமைக்கு நன்றிக்கடனாக, நிர்வானத்தின் போது சிந்தும் எங்களின் ரத்தத்தை காணிக்கையாக்குகிறோம்!!
*நிர்வானம் : பால்மாற்று அறுவை சிகிச்சையின் மரபு வடிவம்.
இலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ஜலம்.
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் கண்டனம், திருநங்கைகள், திரைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
ஆத்தா....உங்க பதிவ படிக்க வரும்போதே பயந்துகிட்டுத்தான் வரவேண்டியிருக்கு...
யாரை எப்ப கிழிச்சி தொங்கவிடுவீங்கன்னே தெரியல...அம்புட்டு கோவமா பதிவெழுதறீக....
ஆனாலும் நீங்க சொல்ற அம்புட்டும் உண்மைதான்....போற போக்குல இந்த பயபுள்ளைக புரிஞ்சுக்குவாய்ங்கன்னு நம்புறேன்...
சூட்ட கொறச்சிறாதீக....சூடு கொறஞ்சிட்டா அது சாம்பல்...
புரியுதா தாயே
//// பங்காளி... said...
ஆத்தா....உங்க பதிவ படிக்க வரும்போதே பயந்துகிட்டுத்தான் வரவேண்டியிருக்கு...
யாரை எப்ப கிழிச்சி தொங்கவிடுவீங்கன்னே தெரியல...அம்புட்டு கோவமா பதிவெழுதறீக.... ////
எனக்கே இப்பிடி கண்டனமா எழுதி தீக்குறதே வேலய போச்சேன்னு வருத்தம் தான்!! ஆனா, வேறவழியில்ல என்ன செய்ய?
/// ஆனாலும் நீங்க சொல்ற அம்புட்டும் உண்மைதான்....போற போக்குல இந்த பயபுள்ளைக புரிஞ்சுக்குவாய்ங்கன்னு நம்புறேன்...//
இது இது இதுதான் எனக்கும் வேணும்
/// சூட்ட கொறச்சிறாதீக....சூடு கொறஞ்சிட்டா அது சாம்பல்...///
உண்மையச் சொல்லப்போன சூடு கொறஞசு/சூடே இல்லாம ரொம்ப கூலா, வாழ்க்கையை கொண்டாடத்தான் எனக்கும் ஆசை..
அந்தோ, மூனாந்தர தெருபொருக்கியில இருந்து, பொம்பளக, 10+ சிறுவர்கள், ஊடகங்கள், இலக்கியவா(பே)திகள், சினிமா பொறுக்கிகள் என ஒவ்வொருவராலும் ஒவ்வொரு நாளும் பலவித மோசமான அனுபவத்துக்குள்ளாகும் எனக்கு இவற்றை கூலா எடுத்துக்கொள்ளும் பக்குவம் இல்லை
அப்படி சொரணக்கொட்டு வாழுவும் என்னமும் எனக்கில்லை!!
//// புரியுதா தாயே ///
புரிந்தது மகனே!!
//சூட்ட கொறச்சிறாதீக....சூடு கொறஞ்சிட்டா அது சாம்பல்...//
பங்காளி, நீங்க இப்படிச் சொல்லுறதப் பார்க்க ஆச்சரியமாவும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், ஏன் நிம்மதியாகவும் இருக்கு..
ஸ்மைலி,
//ஆத்தே!! எடிட் செய்ததே இப்பிடியா? //
அடப் பாவமே!! அந்த வரிகளைப் படிச்சதும் எனக்கும் இதே தான் தோன்றியது..
தோழி லிஸ்,
நான் சொல்ல நினைத்ததை திரு.பங்காளி அழகாக சுருக்கமாக சொல்லிவிட்டார்.
"அமீர்: அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அதனால் அதை வைத்தேன்..."
சொல் வன்முறைக்கு நல்ல எடுத்துக்காட்டு.
பக்கத்து வீட்டில் திரு.அமீர் அவர்கள் அனுமதித்த இந்த "கவிதை" வரிகள்("என்ன நாயனக்காரரே! வாயுல வச்சு ஊதவேண்டியதுதானே, நீங்க ஊதுறிங்களா, இல்ல நான் ஊதவா?") தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம், "சே! சரியான கேள்வி இல்ல?", என்று எனக்குக் கேட்குமளவுக்கு ரசித்து உரத்து கூறினார்.
திருநங்கைகளை அவமானப்படுத்துவோர் பட்டியலில்(மூனாந்தர தெருபொருக்கியில இருந்து, பொம்பளக, 10+ சிறுவர்கள், ஊடகங்கள், இலக்கியவா(பே)திகள், சினிமா பொறுக்கிகள்...)பெண்களையும் நீங்கள் சேர்த்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
வெட்டி அரட்டை அடிப்பதில் பொழுதைப் போக்கும் பல வலைப்பதிவாளர்கள் மத்தியில் வலைப்பூவை சமுதாய மாற்றத்திற்காக பயன்படுத்த முயலும் மிகச்சில வலைப்பதிவாளர்களில் நீங்களும் ஒருவராய் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வடிவேல்
இதற்கு முந்தைய பதிவும் மனதை மிகவும் பாதித்தது.தொடர்ந்து எழுதுங்கள்.பலருக்கும் தெரியாத பல உண்மைகள் உங்கள் மூலம் தெரிய வரட்டும்.எனக்கே இந்த உண்மைகள் இப்போதுதான் தெரிய வருகிறது.என்றும் உதவும் உள்ளத்தோடு,
கார்த்திக் அம்மா
தொடர்ந்து பல தகவலகளை அறியத் தரும் வடிவேல் அவர்களுக்கும், அத்திப்பூத்தாற் போல் வருகை தரும், பங்காளி, பொன்ஸ், பொன்னியன் செல்வன் அனைவருக்கும் என் நன்றிகள்!!
Dear Vidya,
THRO' THE LINK OF PORKODI & GEETHA SAMBASIVAM I AM READING YOUR POST FOR THE 1ST TIME TODAY ONLY.NAAN TAMIZHAN DHAN ANA TAMIZH FONT ILLADHADHALEY, I AM WRITING IN ENGLISH.THE 1ST TIME I SAW THIS IN TV ITSELF I SAID ALL THESE SAME THING TO MY SON. I FULLY ENDORSE UR VIEW. THESE SO CALLED YADHARTHAVADHI'S THINK TOO MUCH OF THEMSELVES. THE SAME ATTACK IS MADE OFTEN ON BRAHMINS(I being one) ALSO TO WHICH THEY HAVE BECOME NUMB NOW A DAYS.
DONT KNOW WHETHER U SAW OR HEARD A RECENT SONG BY THAT PERVERT S.J.SURYA - SOME KOSHUKADI, NASHUKKUDI..... LIKE THAT.....
WILL READ ALL YOUR OLD POSTS SOON & SEND MY COMMENTS. KEEP WRITING IN THESE FIRY STYLE. ALL THE BEST.
சகோதரி, உங்கள் வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.... சில நடைமுறை உண்மைகளை சொல்ல விரும்பிகிறேன்...
1.சென்ற மாதம் டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்தேன். சில திரு நங்கைகள் திடீரென உள்ளே வந்து கிண்டலாக ஏதோ சொன்னார்கள்.. நான் கழட்டி வைத்து இருந்த ஷ் ஊ வை ஒருவர் எடுத்துகொண்டு நடக்க தொடங்கி விட்டார்...எனக்கு ஒன்றும் புரியவில்லை...பக்கதில் இருந்தவர்கள், அவருக்கு சிறிது பணம் கொடுக்குமாறு கூறினார்கள். கொடுத்ததும் தான் என் ஷ் ஓ திரும்ப கிடைத்தது...
2.ஒரு முறை கடையில் அமர்ந்து இருந்தேன்.... ஒரு அரவாணி பிச்சை எடுத்து வந்தார்... காசு கொடுக்கவில்லை என்றால் பாவடையை தூக்கி காட்டு வதாக மிரட்டினார்....
3 நான் பார்த்தவரை , அவர்கள் தங்களுக்குள் மிக அசிங்மாக பேசி கொள்கிறார்கள்
என்னை போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு , அவர்களை பார்த்தால் ஒரு வித பயம்தான் தோன்றுகிறது..உங்களை போன்ற ஒரு இயல்பான திரு நங்கையையோ, அல்லது அன்பாக வேண்டாம், அட்லீஸ்ட் இயல்பாக பேசும் திரு நங்கையை என் வாழ் நாளில் நான் பார்த்தது கிடையாது...
உங்களை போன்ற பலர் உருவாகும்போது தான், ஊடகங்களில் திரு நங்கைகள் பற்றி நேர்மறை விஷயங்கள் இடம் பெறும்.... பாவம் அமீர், அவர் பார்த்ததை பதிவு செய்து இருக்கிறார்.... his intention is not to hurt u..... he has recoreded what he saw...
உங்கள் தரப்பு உணர்வுகள் இப்போதுதான் வெளியே தெரிய வருகின்றன.... மேலும் புரிதல் ஏற்படும்போது , புண்படுத்துதல் நின்று விடும்....
என் தாழ்மையான வேண்டுகோள், உணர்வுகளை கண்ணியமாக வெளிபடுத்துங்கள்...
நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மை.
எதார்த்தம் என்ற பெயரில் திருநங்கைகள் இப்படித்தான் இருக்கிறார்கள்...இருக்கவேண்டும் சொல்ல வருகிறார்கள் போல தெரிகிறது
:(
///எதார்த்தம் என்ற பெயரில் திருநங்கைகள் இப்படித்தான் இருக்கிறார்கள்...இருக்கவேண்டும் சொல்ல வருகிறார்கள் போல தெரிகிறது////
அப்படி அல்ல... ஒரு சராசரி மனிதன் பார்க்கும் அரவாணிகள் சற்று மோசமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்...மோசமாக திட்டுகிறார்கள்( சமுதாயம்தான் அவர்களை, அப்படி செய்ய தூண்டுகிறது என்பது நடைமுறை உண்மை)... ஆனால் அவர்கள் அப்படியே இருக்க கூடாது.......பொருளாதார, சமூக முன்னேற்றம் பெற வேண்டும்.....
எல்லோரும் இணைந்து வாழ வேண்டும்,,,,,..... சமூகத்தின் தவறு ஒரு புறம்.....அரவாணிகள் தவறும் இதில் உள்ளது....
நாம் அனைவரும் மனிதர்கள்தான்.... சில harmongal மாறி இருக்கலாம்...அவவளவுதான்.....இத்ற்காக, அவர்கள் தங்களை தனி பிறவி என்று கருதி கொள்வது, வேண்டும் என்றே இழுத்து இழுத்து பேசுவது, தங்களுக்கென்று தனி கடவுள் படைத்து அதை வணங்குவது, தனி கொண்டாட்டஙகள் நடத்துவது(கூவாகம்) ..எல்லாம் தவறு....
சமூகத்தின் பார்வையும் மாறவேண்டும்....அரவாணிகள் பார்வையும் மாற வேண்டும்..அதுதான் நிரந்தர தீர்வு...
\\உங்கள் தரப்பு உணர்வுகள் இப்போதுதான் வெளியே தெரிய வருகின்றன.... மேலும் புரிதல் ஏற்படும்போது , புண்படுத்துதல் நின்று விடும்....\\
வாழ்த்துக்கள் தோழிஇ
உங்களின் சங்கடமான சமயத்தில் சந்திக்கிறேன். எப்போழுது எனது கடிதம் தங்களின் பார்வைக்கு வருமோ. விரைவில் வரும் நம்பிக்கை தான் காரணம். மேலே குறிப்பிட்ட படி வாருங்கள் எல்லோரும் அப்பொழுதான் உண்மை புலப்படும். அரவாணி ஒருவர் எழுதிய ஒரு தமிழ் பதிப்பு (அது தான் முதல் பதிப்பாக இருக்க வேண்டும்) உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவியது (மன்னிக்க புத்தக பெயர் ஞாபகம் இல்லை) 2003 - 2006 காலகட்டத்தில் நான் பெங்களுரில் வேலை பார்த்தேன். தங்கள் அறிந்திருக்க கூடும் . பெரும்பாலன அரவாணிகளின் வாழ்விடம். அங்கு நான் இரு வேறு பரிமாணத்தை கண்டேன். ஒன்று நான் பணிபுரிந்த ராஜஸ்தான் முதலாளியின் நிருவனத்திற்கு வெள்ளி அன்று ஒரு அரவாணி வருவார் பார்க்க அம்மன் போல எனக்கு காட்சி தருவார். நாங்கள் எல்லோரும் அவரை அம்மா என்று எழைப்Nபுhம் . அவரிடம் ஆசிர்வாதம் எல்லாம் வாங்கியுள்ளேன். எனக்கு மன நிறைவை தந்த தருணங்கள். ஆனால் அதற்கு நேர் எதிராக பல அரவாணிகள் மே குறிப்பிட்ட விசய்களை செய்துள்ளனர். எனக்கு புரிகிறது உங்களின் பணப் Nபுhராட்டம் ஆண்களின் அக்கினிப்பார்வை ஆனால் சிறுபான்மை சமுகமான உங்ளில் பெரும்பான்மையேர் எத்தகைய செயல்களை செய்கின்றனர். அதுவே உங்களின் சமுகத்தை பிரதிபலிக்கும். உங்களை போன்றும் அரவாணிபற்றி புத்தகத்தை எழுதிய அரவாணி போலும் இன்னும் சிலராவது வரவேண்டும்
தவறாக எதுவும் எழுதியிருந்தால் தோழமையுடன் மன்னிக்கவும்
என் எழுத்தின மீதான புரிதல் இருப்பின்
கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்.
தோழமையுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
www.pandiidurai.wordpress.com
pandiidurai@gmail.com
hsnlife@yahoo.com
அன்புள்ள தோழிக்கு..
உங்களின் "நான் வித்யா" நாவல் மூலமாக திருநங்கைகள் குறித்தான எனது கேள்விகள் யாவற்றிற்கும் பதில் கிடைத்தது.என் வயது 22, சென்னையில் பணிபுரிந்து வருகிறேன்..வாசிப்பை வாழ்விற்கான தேடல் என கொண்டு தமிழ் இலக்கிய வாசிப்பை விடாது தொடர்கிறேன்..நான் படித்த நாவல்களில் என்னை மிகவும் பாதித்தது "நான் வித்யா"..தங்களின் தொடக்கம் முதல் இப்போதுவரையிலான வாழ்வின் நிகழ்வுகளை நேரடி உரையாடல் போல வாசகனுக்கு சொல்லிய விதம் அருமை.மதுரை என் சொந்த ஊர்,மதுரை உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இடம் நிச்சயமாய் இருக்கும்.நண்பர்கள் மூலம் எங்கள் ஊரில் வேலைக்கும்/தாங்கும் இடத்திற்கும் பட்ட கஷ்டங்களை படித்ததும் யாருக்கும் அந்நிலை வர கூடாது என எண்ணினேன். பட்ட கஷ்டங்கள் யாவும் நீங்கி,இப்போது ஒரு வேலையில் அமர்ந்து இருப்பது ஒரு சிறந்த தொடக்கமே..இதே போல திருநங்கைகள் யாவரும் சமூகத்தில் சிறந்த நிலை பெற வேண்டும்.
சராசரி பெண்டிர்க்கு எந்த விதத்திலும் குறை வில்லாமல் அறிவிலும்,சிந்தனையிலும்,செயலிலும் நேர்த்தியாய் வாழ்வை கொண்டு செலுத்தும் உங்களுக்கு பெயர் மற்றும் பிற உரிமைகளுக்கு அரசின் அங்கீகாரம் விரைவில் கிட்டும்,தற்போதைய அரசு திருனங்கையற்கு ஆவன செய்து வருவது வரவேற்க்கபடவேண்டிய ஒன்று. உங்களது வலைத்தளம் தீவிரமான கருத்துக்களை கண்டிப்புடன் வலியுறுத்துவது சிறப்பு..தொடரட்டும் உங்கள் சிறப்பு பணி
எனது வலைதள முகவரி : http://yalisai.blogspot.com/2008/05/blog-post.html
அன்புள்ள தோழிக்கு..
உங்களின் "நான் வித்யா" நாவல் மூலமாக திருநங்கைகள் குறித்தான எனது பயம்,கேள்விகள் என யாவற்றிற்கும் பதில் கிடைத்தது.என் வயது 22, சென்னையில் பணிபுரிந்து வருகிறேன்..வாசிப்பை வாழ்விற்கான தேடல் என கொண்டு தமிழ் இலக்கிய வாசிப்பை விடாது தொடர்கிறேன்..நான் படித்த நாவல்களில் என்னை மிகவும் பாதித்தது "நான் வித்யா"..தங்களின் தொடக்கம் முதல் இப்போதுவரையிலான வாழ்வின் நிகழ்வுகளை நேரடி உரையாடல் போல வாசகனுக்கு சொல்லிய விதம் அருமை.மதுரை என் சொந்த ஊர்,மதுரை உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இடம் நிச்சயமாய் இருக்கும்.நண்பர்கள் மூலம் எங்கள் ஊரில் வேலைக்கும்/தாங்கும் இடத்திற்கும் பட்ட கஷ்டங்களை படித்ததும் யாருக்கும் அந்நிலை வர கூடாது என எண்ணினேன். பட்ட கஷ்டங்கள் யாவும் நீங்கி,இப்போது ஒரு வேலையில் அமர்ந்து இருப்பது ஒரு சிறந்த தொடக்கமே..இதே போல திருநங்கைகள் யாவரும் சமூகத்தில் சிறந்த நிலை பெற வேண்டும்.
சராசரி பெண்டிர்க்கு எந்த விதத்திலும் குறை வில்லாமல் அறிவிலும்,சிந்தனையிலும்,செயலிலும் நேர்த்தியாய் வாழ்வை கொண்டு செலுத்தும் உங்களுக்கு பெயர் மற்றும் பிற உரிமைகளுக்கு அரசின் அங்கீகாரம் விரைவில் கிட்டும்,தற்போதைய அரசு திருனங்கையற்கு ஆவன செய்து வருவது வரவேற்க்கபடவேண்டிய ஒன்று. உங்களது வலைத்தளம் தீவிரமான கருத்துக்களை கண்டிப்புடன் வலியுறுத்துவது சிறப்பு..தொடரட்டும் உங்கள் சிறப்பு பணி
எனது வலைதள முகவரி : http://yalisai.blogspot.com/2008/05/blog-post.html
அன்பு சகோதரி,
உங்கள் கோபம் புரியுது. நான் சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்தவன். சீனர்கள் நிறைந்த நாடு. வகுப்பில நான் மட்டுமே தமிழ் மாணவனாக நிறைய தடவைப் படித்திருக்கிறேன். அப்போ சக சீன மாணவர்கள் என் (சற்றே) கருத்த நிறத்தை நிறைய கேலிச் செய்திருக்கிறார்கள். அப்போ எனக்கு பயங்கரமான கோபம் வரும். பிறப்பில் தமிழனாக பிறந்தது குற்றமானு அடிக்கடி நினைத்துப்பேன். "பிறப்பும் இறப்பும் நம்ம கையில இல்லை"னு வசனம் மட்டும் எழுதுறாங்க. ஆனா, பிறப்பின் வித்தியாசத்தைக் கேலி்ச் செய்து படம் எடுக்கிறாங்க. அறிவிலிகள். வாழ்க்கையின் எதார்த்தம் என்று நிறைய இருக்கு அதை விட்டுட்டு இதை மட்டும் ஏன் கிண்டலாய் காட்டனும்? நம் தமிழ் சினிமாக்களின் சாபம் இதுனு நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.
சினிமா மட்டுமின்றி எல்லா ஊடகங்களுமே திருநங்கைகளை அவமானச் சின்னமாகவே அடையாளம் காட்டுது. ஹரிஜனங்களை பாதுக்காக்க சட்டம் கொண்டு வந்தது போல ஏன் திருமங்கைகளை பாதுக்காக்கவும் சட்டம் இயற்ற கூடாது? அவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது, எழுதுவது, படைப்பது சட்டப்படி குற்றமாக்கனும் அப்போத் தான் இப்படிப் பட்ட வேற்றுமை பாரட்டுதல் குறையும்.
Post a Comment