திறக்காத கதவு

தீவிர பெண்ணியம் பேசும் போது கற்பப்பை பெண்களுக்கு தேவையற்றது, பெண்களின் கற்பை அளக்கும் கருவியாக, பெண்களை அடக்க ஆண்களின் ஆயுதமாக இருப்பதும் இந்த கற்பப்பையே எனவே அதை நீக்கவேண்டும் என்று வாதாடியவர் தந்தை பெரியார். அப்படியிருக்க, பனிக்குடம் என்பதை பெண்ணுக்கான குறியீடாக "பனிக்குடம்" இதழ் வருகிறது. ஏற்கனவே இது குறித்து அம்பையின் கருத்தையும் பொடிச்சி எழுதியுருந்தார் ( லிங்க் தெரியவில்லை பொடிச்சியே பின்னூட்டத்தில் வந்து தருவார் என்று எதிர்பார்க்கிறேன் ). இதில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், குழந்தை பேறு இல்லாத பெண்கள், அல்லது கர்ப்பப்பையில் நோய்யுள்ள பெண்கள் குழந்தை பேறு பெறுவதில் இருக்கும் சிக்கல் ஒருபுறம் இருக்கட்டும்.


திருநங்கைகளுக்கு குழந்தைப் பேறு இயல்பாக கிடையாது என்ற வகையில் இதற்காக மனம் வருந்தி பல திருநங்கைகள் புலம்பவும், குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதும் நடந்து வருகிறது. ஆனால், இது குறித்து எனக்கு ஒருபோதும் கவலை இருந்ததில்லை, கேள்வி கேட்கும் அன்பர்களிடமும் " நாங்கள்ளாம் பெரியார் முன்னிறித்தும் (இயல்பாகவே வாய்க்கப்பட்ட) கலகக்காரிகளாக்கும்"னு சமாளித்து வருகிறேன்.


இந்த மொத்தப் பிண்ணனியில் எழுதிய கவிதை ஒன்றுதான் பின்வருவது (என்ன லக்கி, இதுக்கு மேலயும் அர்த்தம் புரியல்லன்னு பின்னூட்டம் போடமாட்டிங்களே!). இதில் மேலும் சிறப்பு இக்கவிதை அதே "பனிக்குடம்" இதழில் வெளியானதுதான்!!




மயானம்

தனித்தன்மையது

அகால அமைதியினாலும்

அதன் தத்துவ இயல்பினாலும்


வன்மம் தாங்கும் கோயில்களின்

கதவுகள் திறப்பதும்

பிறப்பதும் இல்லை


ஒரு மயானத்தின்

தேவை

என் கதவிற்கு


என்றென்றைக்கும் இல்லை

12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நாமக்கல் சிபி said...

//ஒரு மயானத்தின்

தேவை

என் கதவிற்கு


என்றென்றைக்கும் இல்லை
//

நச் வரிகள் வித்யா!

குமரன் said...

இந்த கவிதை எனக்குப் புரியவில்லை.

குமரன் said...

கவிதைக்கு சிறு கோனார் உரை மாதிரி கொடுத்திருக்கிறீர்கள்.

அதைப் படித்தப்பின்பும், எனக்குப் புரியவில்லை.

புரியாத கவிதையை, புரிந்தமாதிரி பின்னூட்டம் போடும் கலை எனக்குத் தெரியாது!

குமரன் said...

இந்த கவிதை தான் உங்களுக்கு வாய்ப்பு.

இனிமேலும் தொடர்ந்தால், என் ஹிட் லிஸ்ட்டில் உங்களை சேர்த்துவிட வேண்டியது தான்!

ஹிட் லிஸ்ட் தொடர்பாக
பார்க்க : எனது பிளாக்

அசுரன் said...

அவ்வ்வ்வ்வ்வ் எனக்கும் பிரியல......

இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

வன்மம் தாங்கும் கோயில்களின் கதவு என்பது இங்கு கருவுற வாய்ப்பில்லாத பனிக் குடங்களின் இயல்பைக் குறிக்கிறதா?

கருவுறும் பனிக் குடங்களோ தனித் தன்மையானது, அதனது ஆழ்ந்த அமைதியினாலும், அதன் தத்துவ இயல்பினாலும். அல்லது ஏதோ ஒரு புனிதமான உய்ர்வான அது குறித்த் பொதுக் கருத்தினால் அது தனித் தன்மையானது.

ஆக, வன்மம் தாங்கும் தங்களது கோயிலின் கதவுக்கு இந்த புண்ணாக்கு தனித் தன்மை தேவையில்லை என்கிறீர்கள் அப்ப்டித்தானே?

அசுரன்

அன்பேசிவம் said...

Arumaiyana Athesamayam Aalamana Kavithai. Really Superb. Keep it up vidhya.

அன்பேசிவம் said...

Arumaiyana Athesamayam Aalamana Kavithai. Really Superb. Keep it up vidhya.

cdk said...

சமூகத்தில் உருப்படியான காரியங்கள் செய்பவர்கள் மிகவும் சிலர்!! அவர்களுள் நீங்களும் ஒருவர்!!

உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear vidhya,
i understand your grief.but it's far far better not to have something than to have had it and lose it.i gave birth to a wonderful son.after losing him i live in hell.if i had not had him and if i had not tasted his love and affection ,i would have lived in my own world.now it is as if i have tasted a 100 cups of ice cream in one gulp and feeling thirsty.it is said that ignorance is bliss.sometimes not getting something is also a blessing,.better to be born blind than to be blinded all of a sudden.having seen the beauty of the world when u lose your vision, it is horrible.compare my agony and your grief will be nothing.
karthik amma

KARMA said...

Dear karthik Amma,

I can understand the pain u go thru. The relationship between mom & kid can never be expressed in words. U just feel it inside of you.

Don't think that I am speeking vedanta. Simply the TRUTH is, your son did not go anywhere....he can NOT go anywhere.

Physical body means only as much as you attach to it. We don't know each other, Let me give you a hug....we don't have to have reason for it.

பாண்டித்துரை said...

கவிதைகள் எல்லாம் தங்களுடையதா தொடர்ந்து எழுதுங்கள். கவிதைவழி அதிதமான உங்களின் உணர்வுகளை பதிவு செய்வது எனது பார்வையில் இயல்பான அல்லது எளிமையாக எடுத்து செல்லும். புத்தக வடிவில் கொண்டுவர முயற்சிக்கவும்

தோழமையுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்.
pandiidurai@gmail.com
www.pandiidurai.wordpress.com

priyamudanprabu said...

ஒரு மயானத்தின்

தேவை

என் கதவிற்கு


என்றென்றைக்கும் இல்லை
////

நல்லாயிருக்கும்