கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி

திருச்சியில் வசித்து வரும் தோழரும், "நாளை விடியும்" இதழாசிரியருமான திரு.அரசெழிலன் அனுப்பிய கவிதை மற்றும் கட்டுரை போட்டி குறித்த அறிவிப்பு.


தலைப்பு : கடவுளுக்குப் பெண் தீட்டா?


கடைசி நாள் : 30.09.2007

கவிதை : 24 வரிகளுக்கு மிகாமல் எந்தப் பா இனத்திலும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்


கட்டுரை : தட்டச்சிலோ, கணினி அச்சிலோ A4 அளவில் 4 பக்கங்களுக்கு மிகாமல்.



முதல் பரிசு : உருவா 250/-க்கான நூல்கள்
இரண்டாம் பரிசு : உருவா 150/-க்கான நூல்கள்
மூன்றாம் பரிசு : உருவா 100/-க்கான நூல்கள்


(இரு போட்டிகளுக்கும் தனித்தனியே மூன்று பரிசுகள்)



தொடர்புக்கு : நாளை விடியும், தமிழ்ச்சுடர் இல்லம், 7ஆ எறும்பீசுவரர் நகர், (காவேரி சிற்றங்காடி எதிரில்), மலைக்கோயில் தெற்கு, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி 620 013. பேசி : 94433 80139.

* * * * *
ஏன் இந்தப் போட்டி ?


பெண்ணை இழிவானவளாக மதங்கள் போதிக்கின்றன. சபரிமலையில் பெண்கள் உள்ளே வரக்கூடாது என்ற அடாவடித்தனமும், இந்து அறநிலையத்துறை அலுவலராகப் பெண்கள் வரக் கூடாது என்ற கூக்குரலும் காலந்தோறும் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பார்ப்பனியம் சூத்திரனை இழிவாகக் கேவலப்படுத்தினாலும் சூத்திரனுக்கு மான உணர்ச்சி வந்து பார்ப்பனியக் கருத்தியல்களுக்கு எதிரான கோபாவேசம் கொள்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போன்றே இந்துமதப் பார்ப்பனியக் கருத்தியல் பெண்களைக் கேவலப் படுத்துகிறது; கொச்சைப்படுத்துகிறது; ஒடுக்குகிறது என்ற உண்மை தெரியாமல் பெண்கள் முடங்கி போய்க்கிடக்கிறார்கள். பெண்ணை இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துகள் நம் சமகால நிகழ்வுகளாய் இருக்கையில் இது தொடர்பான கவிதை கட்டுரைப் போட்டி நடத்தும் எண்ணத்தில் தான் இந்த அறிவிப்பு.

0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்: