சிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்தைகள்

செப்டம்பர் 5, 2007 சென்னை வந்து சேர்ந்த சில தினங்களுக்கு வேலை, தங்குமிடம், பாதுகாப்பு என அல்லலுற்ற நான் நண்பர் செந்திலின் வழிகாட்டுதலின் படி சேர்ந்த இடம் சுயம். சுயம் எனக்கு வேலைவாய்ப்பும், தங்குமிடமும் தந்துதவிய வழக்கமான தொண்டு நிறுவனம் என்றெல்லாம் சொல்லி சிறுமைப்படுத்தி விடமுடியாது. ஆம், நிச்சயமாக முடியாது. தொண்டு நிறுவனம் என்ற பெயரில் வியாபாரம் செய்து கொழிக்கும் அற்ப எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் தாயுள்ளத்தோடு உதவும் ஒரு குடும்பம். இன்னார் என்றில்லாம் அடைக்கலம் வேண்டி கதவைத் தட்டும் அனைவருக்கும் யோசனையின்றி உதவும் மாய உலகம்.


இக்குடும்பத்தின் பெற்றோர்களான திரு. முத்துராமன் திருமதி. உமா தம்பதியினர் பாரம்பரிய ஆட்சாரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். குடும்பத்தின் ஆச்சாரங்களை கடந்து தங்கள் இளம்வயதிலியே பிறருக்கு உதவும் உள்ளத்தோடு வளர்ந்தவர்கள். கல்லூரி காலத்திலேயே (2002) தங்களால் முடிந்த வரை ஒரு சில ஆதரவற்ற சிறார்கள் நல்ல கல்வி பெற உதவி வந்தனர். படிப்படியாக தங்கள் பணியின் மூலம் கிடைக்கப்பெற்ற தொகை மற்றும் மற்ற சமூகஆர்வலர்களின் உதவியுடன் மிகச் சிறிய அளவில் தரமான முற்றிலும் இலவசமான ஆரம்பக்கல்வி தரும் நோக்கத்தில் சிறு பள்ளி ஒன்றினை ஆரம்பித்தனர்.


வறுமை, ஆதரவின்மை மற்றும் குடும்ப வற்புருத்தலால் பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட சிறார்களை கல்வியின் பால் திசை திருப்ப செய்துவரும் இப்பள்ளியின் பெயர் சிறகு மாண்டசொரி பள்ளி. இப்பள்ளி சென்னை, ஆவடியை கடந்த புறநகர் பகுதியான பாழவேடுபேட்டையில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 260 குழந்தைகள் இப்பள்ளியால் பயனைடைந்து வருகின்றனர். அவர்களுள் குடும்ப ஆதரவற்று அங்கேயே தங்கி படிக்கும் 50 மாணவமணிகளும் அடங்குவர். அன்பு, சுதந்திரம், விளையாட்டு மூலம் கற்றல்/கேட்டல் திறன் வளர்க்கும் ஆக்கப்பூர்வமான முறையில் இப்பள்ளியின் பாடத்திட்டம் அமைந்துள்ளது.


(பள்ளிக் குழந்தையொன்றின் கைவண்ணம்)


சுனாமி பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை கிராமத்தில் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கேற்ப முதன்முதலாக டிஜிட்டல் நூலகம் ஒன்றினை வெகுசமீபமாக அமைத்துள்ளனர்.


மட்டுமன்றி சென்னை மற்றும் நாகப்பட்டினம் சுற்றியுள்ள பகுதியில் 10, 12 ஆம் வகுப்பு படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ஊக்கமமளித்து, அவர்களது கல்விக்கான மொத்த செலவேற்று படிக்க வைத்து வருகின்றனர். இவை அத்தனையும், வெற்றிகரமாக சாத்தியப்படுவது நண்பர்கள் மற்றும் சமூக சிந்தனை கொண்ட ஆர்வலர்களின் உதவியால் மட்டுமே.


மேலதிக தகவலுக்கு பின்வரும் முகவரிகளை பார்வையிடவும்.

http://suyam.org
http://siragu.org
http://siragukides.blogspot.com
http://suyamprojects.blogspot.com

உண்மையோடும், நேர்மையோடும் பணியாற்றி வரும் இவர்களுக்கு நமது வலையுலக நண்பர்கள் நிச்சயம் உதவ வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தங்களின் விருப்பம், வாய்ப்பிற்கேற்ப எந்த வகையிலும் உதவலாம். அதற்கு suyam.awake07@gmail.com என்ற முகவரிக்கு மெயில் தட்டவும்.


இப்பள்ளியில் பணிபுரியும் வாய்ப்பினை பெற்றுத்தந்த நண்பர் செந்திலுக்கு என் மனமார்ந்த நன்றி. இங்கு பயிலும் பிள்ளைகள் அனைவரும் தான் ஸ்மைலியின் பிள்ளைகள். அவர்களின் வாழ்வு வளம் பெற உங்களோடு சேர்ந்து நான் வாழ்த்துகிறேன்.


நேரமின்மையால் பட்டும் படாமல் எழுதியுள்ளேன் விரைவில் தொடர்ந்து எழுதுவேன். நண்பர்களின் அன்பிற்கும், தொடருதவிக்கும் நன்றிகள் பல....


என்றும் அன்புடன்


லிவிங் ஸ்மைல் வித்யா

20 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லக்கிலுக் said...

உங்களுக்கும், உங்களின் 260 குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

குண்டலகேசியையும், பழனியம்மாளையும் சந்திக்க வருவீர்கள் தானே?

kiddy ppl said...

தோழர் வாழ்த்துக்கள்.

பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள்.
பதிவு படித்த போது சந்தோஷமாக இருந்தது.

கோவி.கண்ணன் said...

சாகோதரி ஸ்மைல்,

மகிழ்வாக இருக்கிறது. உங்களை அடையாளப்படுத்தும் இடத்திற்குத் தான் சென்று சேர்ந்திருக்கிறீர்கள்.

மனதுக்குப் பிடிக்கும் போது வாழ்கை பொருள் நிறைந்தது.

Sundararajan P said...

சென்னைக்கு நல்வரவு

மாயா said...

அனைவரினதும் வாழ்வு வளம் பெற உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

Muthu said...

உதவிய நண்பருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். சென்னைக்கு நல்வரவு.

thiru said...

வாழ்த்துக்கள் வாழும் புன்னகை!

உங்கள் பணிகள் தொடரட்டும்.

siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்துக்கள் வாழும்புன்னகை!

செந்தில் என்று நீங்கள் குறிப்பிடுவது,
குட்ட்புஷ்கி வரவனையாரைத் தானே?

ரவி said...

வந்தாச்சா சென்னைக்கு...

சூப்பர்...தோழர் செந்திலுக்கும் என் நன்றி...!!

வாழ்த்துக்கள் ஸ்மைல்...

விரிவாக பிறகு எழுதுகிறேன்...!!!!

Unknown said...

சகோதரி, படிக்கும் போதே நிறைவாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சுயம் பற்றி முன்னர் அறிந்ததில்லை. இனி சென்னை வரும்போது என்னாலியன்றது செய்ய விருப்பம்.

மீண்டும்: வாழ்த்துக்கள்!

மிதக்கும்வெளி said...

எப்ப வந்தீங்க சென்னைக்கு? சொல்லவேயில்லை!

இம்சை said...

வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் தொடரட்டும்

தருமி said...

சுயமும், உங்கள் சுயமும் வளர வாழ்த்துக்கள்

லிவிங் ஸ்மைல் said...

நண்பர்கள் அனைவரது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி!!


வாழ்த்துக்களை பகிர்வதோடு மட்டுமன்றி, நல்ல விசயத்திற்காக சிறப்பாக பணியாற்றும் சுயம் அறக்கட்டளைக்கு தங்களால் இயன்ற சிறு உதவிகளாவது நிச்சயம் செய்ய வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


அன்பிற்கும், புரிதலுக்கும் நன்றிகள் பல.....

மங்கை said...

vaalthukkal Vidhya....

வே.மதிமாறன் said...

தோழர் வாழ்த்துக்கள்.....

Please visit

www.mathimaran.wordpress.com

mathi

பாண்டித்துரை said...

valthukkal vidya

http://keetru.com/unnatham/jan06/priya_babu.php

i feel are u read the above link

முத்துகுமரன் said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல்! தலைநகர் வாழ்க்கை உங்களுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் அமைந்ததற்கு மகிழ்ச்சி. உங்கள் 260 குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

உங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் அம்மணி.. தங்களுடைய சேவை சென்னையிலும் தொடரட்டும்..