புத்தாண்டு - புன்னகை பார்வையில்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்ந்த்துக்கள். இவ்வருடம் தாங்கள் வேண்டிய காரியங்கள், திட்டங்கள் அனைத்தும் வெற்றி காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த 2008 திருநங்கைகளுக்கு மிகவும் சாதகமானதாகவே அமைந்த்து. கல்லூரியில் திருநங்கைகள் சேர்க்கை, திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் கணக்கெடுப்பு, வாக்காளர் /அடையாள அட்டை என பல நல்ல மாற்றங்கள் அரசு தரப்பில் ஏற்பட்டுள்ளன.


திருநங்கைகளிடமும் பல நல்ல மாறுதல்களைக்காண முடிந்தது. திருநங்கை சகோதரி ரம்யா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் அரசியல் கட்சியில் இணைந்து கட்சிப்பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் தொடர்ந்து அதிகாரத்திற்கு வரவேண்டும் திருநங்கைகளுக்கான பிரதிநிதியாக பல அரசியல் மாற்றங்களை கொண்டுவர வாழ்த்துவோம். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது வீட்டிற்கும் வெள்ளிதோறும் விஜயம் செய்து வெற்றி பெற்றுவருகிறார் திருநங்கை ரோஸ். திருநங்கை என்ற அங்கீகாரத்துடன் சென்னைப் பலகலைக்கழகத்தில் முதுகலை பத்திரிக்கையியல் பயின்று வருகிறார் கிளாடி என்னும் இளைய தலைமுறை திருநங்கை. இப்படி இன்னும் பல வெற்றி சான்றுகளை 2008 தமிழகத்திற்கு தந்து தன் கடமையை செவ்வனே செய்து முடித்துள்ளது.****


இனி 2009 செய்யவேண்டியதெல்லாம்,


அரசு, திருநங்கைகளுக்கு எது சரியான தேவை என்பதை முழுதாக உணர்ந்து வேலைவாய்ப்பு, முழு கல்வி வாய்ப்பு, பெற்றோர் உதவியின்றி படிக்கும் திருநங்கைகளுக்கு உள்ள பொருளாதார, தங்குமிட சிக்கல்கள் தீரும் வண்ணம் பகுதி நேர வேலைவாய்ப்பு,தங்குமிட வசதி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், இவை அனைத்திலும் மிக முக்கியமாக குடும்ப மற்றும் சமூக அங்கீகாரம் பெற்றுத்தருதல் ஆகியவற்றில் சிந்தனை செலுத்தவேண்டும்.


தற்போது வருகின்ற திரைப்படங்களில் திருநங்கைகளை நல்லவிதமாக காட்டவேண்டும் என்ற பிரக்ஞை இருக்கின்ற அளவில் சரியான புரிதல் இல்லை உதாரணமாக தெனாவெட்டு. (இன்னும், சிலம்பாட்டம் போன்ற சில்லறை படங்களில் திருநங்கைகளை அசிங்கப்படுத்தும் ஈனச்செயலையும் நிறுத்தவில்லை-வெறுத்துப் போயிட்டேன், ஒன்னும் சொல்றதுக்கில்லை)அவ்வாரில்லாமல் சரியான புரிதலோடு, மிகையில்லாத கதாப்பாத்திரங்களாக திருநங்கைகள் திரையில் வலம்வர இப்புத்தாண்டு உதவ வேண்டும்.


இன்றும் சில திருநங்கைகள், தங்களது உரிமை / தேவைகளாக இலவச வீடு, அடையாள அட்டை, திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடம் என மொக்கையான வேண்டுகோள் வைப்பதை விட்டுவிட்டு, தெளிவாக கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம், குடும்ப அங்கீகாரம் அதற்கான விழிப்புணர்வு இவற்றை முன்மொழிய வேண்டும் என்பது எனது புத்தாண்டு வேண்டுகோள்.


****


சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் ஜெமினி சர்க்கஸ் காட்சியை பார்த்தேன். சிறுவயது முதல் பார்த்தவை என்றாலும் இப்போதும் பார்ப்பதற்கு பரவசமாக இருந்த்து. சில ரிஸ்கான சாகஸத்தின் போது பார்க்க பயமாக சீக்கீரம் முடிந்திடாதா என்றும் தோன்றியது. சிலச்சில தவிர்க்கமுடியாத குறைகளைத் தாண்டி பெரும்பாலான சாகஸங்கள் ரசிக்கும்படியாக சிறப்பாகவே இருந்தது. எனது மனவருத்தமெல்லாம் ஒவ்வொரு சாகசம் முடிந்தபின்னும் அக்கலைஞசர்கள் பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களை பெருமித்துடன் எதிர்பார்க்க அங்கங்கு ஒருசிலரே கைத்தட்டுவதை காணமுடிந்த்து. பார்வையாளர்களில் பலர் மெய்மறந்து ரசிக்கவில்லை அதனால், அவர்களது கலையை அங்கீகரிக்கவும் இல்லை. ஏதோ ஒரு விடுமுறையை, சில மணித்துளையை செலவு செய்யத்தான் இப்படிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ற எண்ணம் நம்மில் பெரும்பான்மையோரிடம் உள்ளது.


கலையை கொண்டாடுங்க, அங்கீகரிங்க இல்லைன்னா இருக்கவே இருக்க உங்க வீட்டு முட்டாள் பொட்டி. வானத்தில் பொய்யாய் பறந்து, ஒரு குச்சி பல குண்டாந்தடியை அநாஸ்யமாய் தாக்கும் காமிடியையே பார்த்து பொழுத போக்குங்க..


எதோ புத்தாண்டுக்கு என்னால முடிஞ்ச கருத்து....


***


நண்பர்களே திருநங்கைகள் குறித்த தங்களது சந்தேகங்கள் அல்லது அவர்கள் மீதான தங்களது விமர்சனங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு சந்தேகம் / விமர்சனம் என தலைப்பிட்டு பின்னூட்டமிடவும். அவற்றை தொகுத்து, பயன்படும் கேள்விகளுக்கு என் பதிலை தனிப்பதிவாக தருகிறேன். நன்றி!!

21 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

A N A N T H E N said...

புத்தாண்டு வாழ்த்து

கலை - இராகலை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

Happy New Year Madam... :)

அபி அப்பா said...

நான் ஃபஷ்ட்டிக்கிறேன்! வாழ்த்துக்கள் வித்யா!

நிமல்-NiMaL said...

உங்களுக்கும் இனிய புதுதாண்டு வாழ்த்துக்கள்...!!!

Sri Rangan said...

தங்கள் அத்தனை கருத்துக்களும் நியாயமானதென்று சொல்வதைவிட இவற்றைப் பெறுவதற்காக உங்களோடு இணைந்து குரல் கொடுக்கிறேன் தோழகை!வாழ்த்து உங்களுக்கும் உரித்தாகட்டும்!!

தமிழன்-கறுப்பி... said...

இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யாக்கா

கார்த்திக் said...

// எனது மனவருத்தமெல்லாம் ஒவ்வொரு சாகசம் முடிந்தபின்னும் அக்கலைஞசர்கள் பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களை பெருமித்துடன் எதிர்பார்க்க அங்கங்கு ஒருசிலரே கைத்தட்டுவதை காணமுடிந்த்து.//

சர்க்கஸ்ன்னு இல்லைங்க பொதுவா எல்லா நிகழ்ச்சிகல்லையும் இப்படித்தான்.நிகழ்ச்சிய ரசிச்சாக்கூட யாரும் கைதட்டி உர்ச்சாக்படுத்தறது இல்லை.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வித்யா.

பாலராஜன்கீதா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வால்பையன் said...

happy new year தோழி!

கொஞ்சம் நேரம் ஒதுக்கி அடிக்கடி எழுதுங்கள்

Namakkal Shibi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!

ஆண்ட்ரு சுபாசு said...

எனது மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழியே..

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் வித்யா - நினைத்தவை நடக்கவும் - விரும்பியவை கிடைக்கவும் நல்வாழ்த்துகள் - எழுதுக தொடர்ந்து

தருமி said...

வளர வாழ்த்துக்கள்

King... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யா! நிறைய நாட்களுக்கு பிறகு எழுதியிருக்கிறீர்கள், நானும் பல நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறேன் உங்களுடைய பக்கம்...

இன்னும் எழுதலாமே...

ILA said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யா !

தவநெறிச்செல்வன் said...

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது வலையில் தங்களின் வலைப்பூ பற்றி கண்டு வந்தேன், மிக பெருமையாக இருக்கிறது, மனித மனம் மேன்மை அடைந்து கொண்டிருக்கிறது.

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுந்தரராஜன் said...

:)

SurveySan said...

//கலையை கொண்டாடுங்க, அங்கீகரிங்க இல்லைன்னா இருக்கவே இருக்க உங்க வீட்டு முட்டாள் பொட்டி. வானத்தில் பொய்யாய் பறந்து, ஒரு குச்சி பல குண்டாந்தடியை அநாஸ்யமாய் தாக்கும் காமிடியையே பார்த்து பொழுத போக்குங்க..//

;)

முரளிகண்ணன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

குமுதம் பத்திரிக்கையில் டாப் டென் பிளாக்கர்ஸ்ல் வந்ததற்க்கும் வாழ்த்துக்கள்

senthil sabari said...

already i have some respect on the transgenders.after read ur autobiography i can feel how much pain u people have.i feel ashame to be a part of this useless society and i wish to do some help for u people.at the same time i dont know what help to do.please suggest.