கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக ஒரு வார இதழ் பட்டியலிட்டிருந்தது. கவனம் நன்றாக விற்பனையானது என்று தான், சிறந்த புத்தகம் என்றல்ல(அதான் எனக்கே தெரியுமேன்னு சொல்றிங்களா!).
இதுவரைக்கும் எனது புத்தகம் குறித்து நான் எப்போதும் பேசிக்கொள்ளாததற்கு காரணம் தன்னடக்கம்னு தப்பா நெனச்சிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. உண்மையான காரணம், ஒரு முழு பெண்ணா ஸ்மைலியாகவே என்னைப் பார்த்து பழகிவிட்ட என் தோழமைகளிடம் என் கடந்த காலத்தின் இருளை காண்பித்துக் கொள்ள இருந்த மனத்தடை. அப்புறம் எதுக்கு புத்தகம்? இணையம் அல்லாது பொது வாசகர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதிலும், கிழக்கு எனது சொந்த வாழ்க்கைக் கதையையே அத்தியாமாகச் சொன்னால் நம்பகமான சாட்சியமாக இருக்குமே என்று கேட்டுக்கொண்டதன் விளைவு தான் இந்த புத்தகம். இதில் எனது சந்தோசம் ஓரளவு விற்பனை இனிவரும் மாதங்களில் வரும் பொருளாதார பிரச்சனைக்கு துணையாக உதவும் என்பதே.
* * *
புத்தக வாசிப்பின் அதீத எல்லையை சற்றேறக்குறைய அடைந்தவர் எனது வணக்கத்திற்குரிய ஆசான் திரு. மிஷ்கின். சமீபத்தில் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் சினிமாவிற்கு முன்பு கண்டிப்பாக படிக்க வேண்டிய 11 புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். குறிப்பாக எனக்கு, வடிவேல் மற்றும் ஈஸ்வரிக்கு எந்த தமிழ்புத்தகத்தையும் (பட்டியலிலுள்ள இரண்டினைத் தவிர) தற்காலிகமாக தொடக்கூடாது என்றும் கூறிவிட்டார். தமிழ்துரோகியெல்லாம் கிடையாது அதற்கான காரண காரியம் வேறு. இதுபோக, Richard Bachன் Jonathan Livingston Seagull என்ற புத்தகத்தையும் தனிப்பட்ட முறையில் எனக்கே எனக்கென வாசிக்கத் தந்துள்ளார்.
அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் தனிப்பட்ட முறையிலும், சினிமா ஆர்வமுள்ள இளையவர்களுக்கும் உதவுமென்றே கருதுகிறேன்.
1. SIDDARTHA - Herman Hesse, Penguin publishers
2. DOLL'S HOUSE - Ibson
3. THE SOUND OF WAVES - Yukio Mishima, Vintage books USA (ISBN:9780 6797 52684)
4. பஞ்சதந்திரக் கதைகள் (தமிழில்)
5. ஒரு வடக்கன் வீர கதை Script (தமிழில்) - சுரா, காவ்யா பதிப்பகம்
6. GRIMM'S FAIRY TALE - Jacob Ludwig Carl Grimm, Pantheon Books (ISBN:9780 3947 09307)
* Rose But
* The Queen Bee
* The Frog Prince போன்ற குறிப்பிட்ட சில கதைகள் மட்டும்
7. ON DIRECTING FILM - David Mamet, Penguin, (ISBN:9780 1401 27226)
8. CRONICALS OF DEATH FORETOLD - Gabrial Garcia Marquez
9. OUTSIDER - Albert Camus, Penguin, (ISBN:9780 1411 82506, 9780 1402 74172)
10. LONE WOLF AND CUB, VOL(1) - Kazuo Koike
11. METAMORPHOSIS - Franz Kafka, Penguin, (ISBN:9780 1431 05244, 9780 1402 83365)
எண் (7) டேவிட் மேமத் எழுதிய ON DIRECTING FILM தவிர மற்ற புத்தகங்கள் சினிமாவிற்கு நேரடி தொடர்பில்லாதவை போல தோன்றலாம். ஆனால் ஒரு திரைக்கலைஞருக்கு தீவிர இலக்கிய பிண்னணி கட்டாயம் வேண்டும் என்பது அவரது அறிவுரை. மேலும் அயல் இலக்கியங்களை கூடுமானவரை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிப்பதையே அவர் பரிந்துரைக்கிறார்.
மேற்குறிப்பிட்ட புத்தகங்களில் எண் வரிசை 3, 4, 6, 7, 10, 11 புத்தகங்கள் எனது முயற்சிகள் எதிலும் கிடைக்கவில்லை. நண்பர்கள் முன்வந்து இப்புத்தகங்களை எனக்கு பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.
* * *
நான் மோகிக்கும் நாடக வல்லரசு ச.முருகபூபதி. இந்த ஆண்டிற்கான தேசிய நாடக பள்ளி நடத்தும் நாடக விழாவிற்கான பயணத்திற்கு வழியனுப்பிவிட்ட சென்னை சென்ட்ரலில் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்தேன். நாடகம் மீதான, கலை இலக்கியத்தின் மீதான என் இரசனையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது அறிமுகம் கிடைத்த நாள் முதல் அவருடைய நாடகங்களில் பங்கேற்க முயன்று பல காரணங்களால் கூடாமல் போனது. இப்போது நாடகத்திற்கான அத்தனை செட் ப்ராப்பர்ட்டீசுடன், நடிக நண்பர்கள் செல்ல நான் மட்டும் வழியனுப்பிவிட ரணமாக இருந்தது.
பயணநேரத்தின் அவசரகதியில் இருந்தவர்களை ஏக்கமாக வேடிக்கை பார்த்தபடி மனதைத் தேற்றிக்கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக, அவரது "செம்மூதாய்" நாடக நூல் தொகுப்பினை பையிலிருந்து நீட்டினார். புது புத்தகத்தின் வாசத்தை நுகர்ந்துகொண்டிருக்கும் போது, "இப்பத்தான் கைக்கே புக்கு வந்துச்சு, முத பிரதிய உனக்கு தான் தரேன்" என்று ஆனந்த அதிர்ச்சியூட்டினார். இவ்வருடத்தின் மிக முக்கிய பரிசு இப்புத்தகம்.
இத்தொகுப்பில், செம்மூதாய் உட்பட ஆறு நாடகங்கள், யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதி, பாண்டி முனி, ஆகியோரின் விமர்சனங்கள் இவற்றுடன் அவரது நீண்ட தெளிவான நேர்காணல் ஆகியவை உள்ளது. முருகபூபதியின் நாடகங்களை பார்ப்பதற்கு/படிப்பதற்கு முன் இந்நேர்காணல் படிப்பது அவ்வனுபவத்தை முழுமையாக்க உதவும். நேர்காணலையும், விமசர்னங்களையும் மட்டும் படித்தாச்சு. நாடகங்களை இனிதான் படிக்க வேண்டும். அழகான அச்சாக ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இப்புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக, குமரன் தாஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பான "தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும்" வாங்கினேன். படித்தேன். நூறு சதவீதம் என் கருத்துகளோடு ஒன்றிப்போன கருத்துகள். அனைத்தும் நான் எழுத நினைத்து, எழுதாமல் விட்டவை. மனநெருக்கத்தை ஏற்படுத்திய இப்புத்தகம் தோழமை பதிப்பகத்தின் சிறந்த வெளியீடு. இளம் சினிமா உதவி இயக்குநர்கள் படித்து தங்களை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியமான புத்தகம்.
சந்தியா பதிப்பகம் வெளியுட்ட திருநங்கை ப்ரியா பாவுவின், "மூன்றாம் பாலின முகம்" என்ற நாவலை எனது ஆவணக் காப்பகத்திற்காக வாங்கிக் கொண்டேன். கூடவே சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, எனது அபிமான எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்" நூலையும் வாங்கிக் கொண்டேன். மேலே குறிப்பிட்ட 11 புத்தகங்களையும் வரிக்குவரி டிக்சனரி வைத்து படிக்கவே இந்த ஆண்டு பத்துமான்னு தெரியாது.
* * *
இதுவரை வலைப்பூவில் ஓரளவு தேறும் விதமான சில கட்டுரைகளையும், மற்ற இதழ்களில் வந்த கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக போட முயற்சித்தேன். பட வேலைகளில் அது முடியவில்லை. பிப்ரவரிக்கு பின்பு அதற்கான பணியில் இறங்குவேன்.
2009 - புத்தகக் கணக்கு
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் அனுபவம், இலக்கியம், திரைப்படம், புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
anbulla vidhya, I'm searching for the other books for you in Bangalore. but i think you can get "THE SOUND OF WAVES" may be because of the spello you might have missed it.
அட! நீ தொட போகும் தூரம் இன்னும் இருக்குப்பா!
நானும் பார்த்தேன்...
நல்ல புத்தகங்கள்தானே அதிகம் விற்பனையாகும்...
அடிக்கடி எழுதுங்க...
/// தோழி said...
anbulla vidhya, I'm searching for the other books for you in Bangalore. ///
தங்களின் முயற்சிக்கு நன்றி. இம்மாதம் 19ஆம் தேதி பெங்களூருவிற்கு எனது புத்தகம் கன்னட மொழிபெயர்ப்பு விழாவிற்கு வருகிறேன். தங்களிடம் ஏதேனும் மேற்குறிப்பிட்ட புத்தகங்கள் கிடைத்தாலும் நேரிலும் பெற்றுக் கொள்கிறேன்.
/// but i think you can get "THE SOUND OF WAVES" may be because of the spello you might have missed it. ///
நாங்கள் (அனைத்து உதவி இயக்குநர்களும்) தேடிய விதத்தில் இப்புத்தகம் கிடைக்கவில்லை.
hello Vidhya, I'm in Chennai on 17th and 18th for the Chennai book Fair. what a co-incidence. Anyways I'm back on 19th. Send me your contact number to my email id. I'll contact you on Monday. Or i'll contact you when i'm in Chennai this saturday and sunday. Take care.
anuradan@gmail.com
\\கவனம் நன்றாக விற்பனையானது என்று தான், சிறந்த புத்தகம் என்றல்ல\\
தன்னடக்கம் ...
வாழ்த்துக்கள் வித்யா ...
Hello Vidhya,
I got to know from one of the book seller in Bangalore that we can order for those books by paying some advance. They will order for it and get it for us. Since these are fast moving not most of the book shops have that books. Let me know if you want me to do that.
Regards
Anu
மிகப்பயனுள்ள வரிசை!
வாங்கிப்படிக்க வேண்டும்.!
கிடைத்தால் சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் வித்யா!
வாழ்த்துக்கள் வித்யா.
உலக சினிமா பற்றிய எனது வலைப்பூ பார்க்கவும்.
நிறை / குறை பகிரவும்.
நன்றி.
//
கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக
//
வாழ்த்துகள் சகோதரி :)
நல்ல முயற்ச்சி.
எமது வலைத் தளத்துக்காக உங்களை நேர்கான எண்ணியுள்ளோம்.
உங்கள் பதிலை எதிர்பார்த்து.
சினேகமுடன் றியாஸ் குரானா.
www.maatrupirathi.blogspot.com
Post a Comment