பிச்சை கேட்பவர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டவர்கள் திருநங்கைள். சக மனிதர்களைப் போல பல்வேறு கலைகளை தன்னகத்தே கொண்ட அவர்களின் திறன் பலரும் உணர்வதில்லை. அவர்களிடம் சுயமாக பாடல் புனைந்து பாடும் திறனும்; கரகம், தப்பாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைத் திறனும்; இன்னும், பரதம், ஓவியம், சிற்பம், கவிதை, எழுத்து, நடிப்பு என பல கலைத்திறனும் கொண்டவர்கள் திருநங்கைகள்..
பெண்ணிய சிந்தனையாளரும், அரங்க கலைஞருமான அ.மங்கை அவர்களின் முயற்சியில் உருவான கண்ணாடிக் கலைக்குழு மூலம் உறையாத நினைவுகள், மனசில் அழைப்பு என இரு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. முழுக்க முழுக்க திருநங்கைகளால், திருநங்கைகளின் குடும்ப, இருப்பு சார்ந்த நாடகங்களை பேசும் நாடகமாக வரலாறு பதித்தது. அதன் தொடர்சியாக சக அரங்க ஆளுமையான கே.ஏ.குணசேகரன் அவர்களின் இயக்கத்தில் மாற்றம், அரங்க கலைஞர் பேரா.மு.ராமசாமி அவர்களின் இயக்கத்தில் வலியறுப்பு என பல நாடகங்கள் சிறப்பாக திருநங்கைகளின் அரசியல் தேவையை தொடர்ந்து அரங்கில் மக்கள் முன் வலியுறித்தின..
இவற்றோடு ஸ்ரீஜித் சுந்தரத்தின் முயற்சியில் சில நிகழ்த்து கவிதை வாசிப்புகளும், சில விழிப்புணர்வு குறுநாடகங்களும் நிகழ்த்தப்பட்டது.. இவரது கட்டியக்காரி கலைக்குழுவிலும் சில திருநங்கைகள் நிரந்தரமாக உள்ளனர். மேலும், இவரது சமீப நாடகம் மொளகாப்பொடியில் இரண்டு முக்கிய பெண் கதாப்பாத்திரத்தில் திருநங்கைகளே நடித்திருக்கிறார்கள். மேலும் இரண்டு திருநங்கைகள் காலனி பெண்களாக வருவார்கள். இவ்வாறு திருநங்கைகளை இயல்பான பெண்களாக அரங்கத்தில் நிறுத்தியவர்கள் அ.மங்கை, ஸ்ரீஜித் சுந்தரம், ச.முருகபூபதி
திருநங்கைகளின் பல்வேறு கலை திறன்களை ஒருமித்து பொது மக்களின் முன் தம் அரசியல் கோரிக்கையோடு முன்வைக்கும் விழாவாக வரும் ஏப்ரல் 15 திருநங்கைகள் தின கொண்டாட்டம் இருக்கும். அதன் ஒரு அங்கமாக வானவில் கலைக்குழு வழங்கும் எதிரொலிக்கும் கரவொலிகள் நாடகம் நிகழ்த்த உள்ளது. நிகழ்த்துக்கலையில் ஆர்வமுள்ள திருநங்கைகளின் முயற்சியால் துவங்கப்பட்ட இக்குழுவின் இந்த நாடகத்தை நெறியாளுகை செய்பவர் ஸ்ரீஜித் சுந்தரம்.
நாளை (ஏப்ரல் 13) இந்நாடகத்தின் இறுதி ஒத்திகை பத்திரிக்கையாளர்களுக்காகவும், அரங்க கலைஞர்களுக்காகவும் நிகழ்த்தப்பட உள்ளது. தரமணி SRP Tools பேருந்து நிலையம் அருகில் உள்ள CPI(M) அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு மறக்காமல் கலந்து கொள்ளவும். நிகழ்விற்குப் பின்னுள்ள உரையாடலிலும் கலந்து கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 15 திருநங்கைகள் தினத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வையும் சிறப்பிக்க வேண்டுகிறேன். நன்றி!!
எதிரொலிக்கும் கரவொலிகள்
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் அழைப்பிதழ், நாடகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
Post a Comment