சாலையோர வீட்டிலிருந்து

பயணங்கள் முழுவதிலும்
சாலையோர வீடுகளைக் கண்டுள்ளேன்

ஆனால்,

உறவினர்களோ, நான் சந்திக்கப் போகும் நபர்களோ
எவரும் சாலையோர வீட்டில் குடியிருக்கவில்லை.


அடையாளம் காண சுலபமாய்;
குறுகிய நடையில் போய்வர எளிதாய்;


உறவினர்களோ, சந்திக்கப் போகும் நபர்களோ
எவருமே இத்தகைய சாலையோர வீட்டில் குடியிருக்கவில்லை.


இரைச்சல் உலைச்சலைத் தருமா..?
துறுதுறு குழந்தைகள் பாதுகாப்பாய் இருக்ககிறதா..?
வீதிமீது நின்று தேநீர் பருகியபடி விசாரிக்க வாய்ப்பாய்


என் உறவினர்களோ, சந்திக்கப் போகும் நபர்களோ
எவருமே இத்தகைய சாலையோர வீட்டில் குடியிருக்கவில்லை.


அப்படி ஒரு வீட்டில் வாடகை புகுந்தாவது
என்னை வரவேற்பீர்களா..?!


என் இனிய நண்பர்களே!!

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

G.Ragavan said...

எல்லா வீட்டிற்கும் சாலையுண்டு
சிறிதோ பெரிதோ சாலை சாலைதான்
ஆனாலும் பெரிய சாலைகள் அழகுதான்
வேகம் போகும் வண்டிகள் இடிக்காதவரை
பிள்ளைகள் பாதுகாப்பாய் ஆடலாம்
தூசியும் தும்பும் வீட்டுக்குள் நுழையாத வரை
ஆரோக்கியமும் உடன் இருக்கலாம்
ஒன்னுக்கு ரெண்டாய் அள்ளிக் கொடுக்க
கோடிப் பணம் இருந்தால் போதும்
சாலையோர வீடுகள் நமது ஓரம் வரும்!

மெளலி (மதுரையம்பதி) said...

கடினம்.....நீங்கள் சொல்வது எங்கோ ஒரு வனாந்திரத்திற்க்கு போகும் சாலை என்றால் நன்று.

ஆனால் நீங்கள் வசிக்கும் மதுரையின் சாலை ஓரத்தில் உள்ள வீட்டிலும், இருப்பு பாதை அருகில் உள்ள வீட்டிலும் நான் பல வருடங்கள் வாழ்ந்து இருக்கிறேன்.....நாங்கள், மற்றும், எங்கள் இல்லம் வருபவர்கள் எவ்வளவு கடினமாக அதனை அனுபவித்தோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்....

நீங்கள் விருந்தினராக வருவதற்காக உங்களை சேர்ந்த குடும்பம் ஒன்று அந்த கொடுமை அனுபவிக்க வேண்டுமா?.....இது துரத்து பச்சை கதையாகத்தான் எனக்கு தெரிகிறது.

ராசுக்குட்டி said...

பொதுவாக மண்ணின் மேல் செடிகள் இருக்கும்.
நகரங்களில்... பெரிய சாலையோர வீடுகளில், செடிகளின் மேல் மண் இருக்கும்.

நீங்கள் சொல்வது கிராமம் அல்லது சிறு நகரமென்று நினைக்கிறேன், அங்கு அது அழகுதான் நான் அது போன்ற வீட்டில் இருந்திருக்கிறேன், இப்போதில்லை :-(

மற்றபடி கவிதைக்கு உள்ளர்த்தம் ஏதாவது இருந்தால் விளக்கிச் சொல்லவும், எனக்குப் புரியவில்லை

லிவிங் ஸ்மைல் said...

// ராசுக்குட்டி said...

நீங்கள் சொல்வது கிராமம் அல்லது சிறு நகரமென்று நினைக்கிறேன்,//

ஆம்,

// அங்கு அது அழகுதான் நான் அது போன்ற வீட்டில் இருந்திருக்கிறேன், இப்போதில்லை :-( //

:-((

// மற்றபடி கவிதைக்கு உள்ளர்த்தம் ஏதாவது இருந்தால் விளக்கிச் சொல்லவும், எனக்குப் புரியவில்லை //

You are right rasu, என்னைப் போல் தாய் நாட்டில் அகதியாக வாழ விதிக்கப்பட்டவர்கள். சொந்தமாக வீடு வாங்க முடியாமையை, அதிலுள்ள சிக்கல்களை, நினைவு கூர்ந்து பார்த்தால் கவிதையின் உள்ளர்த்தம் புரிபடும் என்றே நம்புகிறேன்...

G.Ragavan said...

லிவிங் ஸ்மைல் வித்யா, உங்கள் கவிதையின் உள்ளடக்கம் புரிந்தது.

ஒரு திருநங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பதாகச் சொன்னார்களே. அவர் எப்படிப் பெற்றார்? எந்தப் பாலினம் என்று குறிப்பிட்டுப் பெற்றார்?? ஏதேனும் தகவல் அதுபற்றி உண்டா?

rajavanaj said...

வாழும் புன்னகை,

//அப்படி ஒரு வீட்டில் வாடகை புகுந்தாவது
என்னை வரவேற்பீர்களா..?!//

நிச்சயமாக..!!

த.அகிலன் said...

நல்லா இருக்கு கவிதை உங்க வீட்டுக்கு நானும் வருவேன்
அன்புடன்
த.அகிலன்

none said...

ரொம்ப நல்லா எழுதி இருகீங்க. வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இணையத்தின் பயணத்தில்
வீதிகளைப் போல வலைப்பதிவுகள்

எல்லா வலை வீடுகளிலும்
நண்பர்களும் உறவினர்களுமாய் குடியிருக்கின்றார்கள்


எழுதியவுடன் விமர்சிப்பதற்கு
தவறென்றால் உரிமையாய் கண்டிப்பதற்கு

எத்தனை மனிதர்கள்
உரிமையாய் உறவுகளாய் இருக்கின்றார்கள்.

எதிரி என்று சொல்வதற்கு
எவருமில்லாமல்...
வயிற்றில் பிறந்தவர்களே
உதறிவிட்ட நிலையில்..
வலையில் பிறந்த நீங்கள்
என்றும் எனக்கு நட்பாய் இருங்கள்..

- ரசிகவ் ஞானியார்

ஒரு பொடிச்சி said...

அழகிய வரிகள்..

Kalki Subramaniam said...

Gurubhai,

This is Kalki and this is the first time I write to you on your blog.

I am proud of you, my loving sister Vidya. Well, I am right now learning to write in Tamil and so I've also signed up with Blogspot. You do know that I write in English for my website www.Sahodari.com and my blog http://kalki.tblog.com

Well honey, I shall write to you a private mail regarding Sahodari. I am bringing it as 'our website' for which your Tamil contributuions are most welcome. Lots of discussions later...

Take care and Jeeyo! :)

Kalki

G.Ragavan said...

வித்யா, இந்தப் பின்னூட்டம் பிரசுரத்திற்கல்ல. விடுதலைச் சிறுகதைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு பதில். உங்கள் கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். காத்திருக்கிறேன்.

// லிவிங் ஸ்மைல் said...

கொஞ்சம் லேட்டா படிச்சிட்டேனோ...?! //

ம்ம்ம்...இருக்கலாம். ஆனாலும் இப்பொழுதும் உங்கள் கருத்துகளைக் கூறலாம். ஏனென்றால் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று ஊகித்து எழுதுவது உண்மைக்கு எவ்வளவு அருகில் இருக்குமென்று தெரியவில்லை.

இந்தக் கதையைப் பற்றிய உங்கள் கருத்துகளை உள்ளதுள்ளபடி சொன்னால் மகிழ்ச்சி அடைவோம்.

suppaandi said...

லிவிங் ஸ்மைல் வித்யா,
நல்லா இருக்கு கவிதை
http://naanengiranaan.blogspot.com