மதியம் வெள்ளி, டிசம்பர் 15, 2006

INTERNATIONAL FILM FESTIVAL OF KERALA 2006

கேரள நாட்டில் டிசம்பர் 8 முதல் 15 வரை 8 நாட்கள் உலக திரைப்படத் திருவிழா நடந்துவருவது நாம் அறிந்ததே....

அதில் கலந்துகொண்ட வகையில் எனது சில கருத்துக்கள் இங்கே....

கடந்த ஐந்து வருடங்களாக கேரளவில் இது போன்ற திரைப்பட விழா நடந்து வருவதை அறிந்து வருவேன். அப்போதெல்லாம் ஆர்வம் உள்ள அளவிற்கு வாய்ப்பு இருக்கவில்லை. இந்த வருடம், பொருளாதாரம், தங்கும் வசதி (சுமாரான, நல்ல ஹோட்டல் - இனி வரும் வருடங்களிலும் அங்கு தான் தங்க திட்டமிட்டுள்ளேன்), போக்குவரத்து என எல்லாமே குறிப்பாக, 5 நாட்கள் தொடர்ந்தார் போல் விடுமுறை (மூன்று நாட்கள் தான் எடுக்க முடியும், இரண்டு நாட்கள் சனி ஞாயிறு )என எல்லாம் தயார் செய்து நிறைவாக முன்னேற்பாட்டுடன் சென்றிருந்தேன்..

அந்தோ!! திரைப்படம் காண சலசித்திர அக்காடமிக்கு பதிவு செய்வதில் கவனம் தவறிவிட்டேன். வழக்கமாக, விழா நடக்கும் முதல் மூன்று நாட்களுக்கு கலாபவனிலேயே பதிவு செய்து பாஸ் வாங்கி கொள்ளலாம் என்று நண்பர்கள் கூறியிருந்ததாலும், உள்ளூர் திரைப்பட விழாவிற்கு வரும் கூட்டத்தை கணக்கில் கொண்டும் நான் மெத்தனமாக இருந்தது எத்தனை முட்டாள்தனம்....

எனக்கு விழாவின் இரண்டாவது நாள் (09, டிசம்பர்) தான் செல்ல முடிந்தது. நான் சென்ற போது அங்கே எனக்கு முன் பாஸ் நூற்றுக்கணக்கான பேர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தனர். சென்று விசாரித்ததில் அனுமதிக்கப்பட்ட 5000 விண்ணப்ப படிவமும் தீர்ந்து விட்டதாக அலுவலர் சொன்னார். கிட்டதட்ட ஒன்றரை மாதமாக இதுகுறித்து யோசித்து, திட்டமிட்டு, லீவும் போட்டு, சே!! இப்போது எல்லாம் வீண்.... அந்த இடத்திலேயே அழுகை அடக்கமாட்டமல் கண்ணில் முட்டிக் கொண்டுவந்தது. என்னை போலவே எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனும் (அவர்தான் சுப்ரபாரதி மணியன் என்பது எனக்கு பின்னர் தான் தெரிய வந்தது) எட்டு வருடங்களாக இந்த விழாவிற்கு வருவதாகவும், தான் ஒரு பிலிம் சொசைட்டி நடத்துவதை சொல்லியும் விளக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார்கள்

ஒன்னரை மணிநேர காத்திருப்பிற்கு விடிவு பிறந்தது... விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டது, முதற்கட்ட formalities எல்லாம் முடிந்து, அனுமதி உறுதியான பின் தான் மனம் ஓரளவு லேசானது.

ok over to films,,,,,

படங்கள், எட்டு தியேட்டர்களில் ஐந்து காட்சிகளாக, திரையிடப்பட்டன... உலக திரைப்படம், போட்டித் திரைப்படம், இந்திய சினிமா, மலையாள சினிமா, டாக்குமண்டரி சினிமா, குறும்படம், அனிமேசன் என எல்லா திரையிடப்பட்டது.

அவற்றில் நான் தேர்வு செய்து காண முடிந்தவை உலக சினிமாவும், போட்டி திரைப்படங்களும் தான் அவற்றில் என்னால் மறக்கமுடியாத, எனக்கு மிகவும் பிடித்திருந்த திரைப்படங்கள்

SOUNDS OF SAND (Dir. Marion Hansel),

நீர் பற்றாக்குறையால் தன் கிராமத்தை விட்டு, சொந்த வீட்டை விட்டு குடும்பம் குடும்பமாக கால்நடைகளுடன் வெளியேறுகின்றனர். மொட்டை வெயிலில் வனாந்திரங்களை கடந்து தண்ணீரைத் தேடும் கிராமத்து 10 வயது சிறுமி சாசா, சாசாவின் பெற்றோர், சகோதரர்களின் பயணமும் தான் sounds of sand, பயணத்தில் கால்நடைகள் இறந்து போவதையும், புரட்சியாளர்களாலால் ராஹில் (சாசாவின் 15 வயது மூத்த சகோதரன் ) எடுத்துச்செல்லப்படுவதையும், இன்னோரு சகோதரன் வேறொரு கூட்டத்தினரால் கொல்லப்படுவதும், மாதவிலக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் பாதி பயணத்திலேயே ஓய்ந்து விடும் சாசாவின் அம்மா மோனா...

.... என எல்லா பாடுகளையும் மௌனசாட்சியாக மண், வறண்ட பாலை மண் பார்த்துக் கொண்டிருக்கிறது.... (மிக சுருக்கமாக தந்துள்ளேன். என் நிம்மதியை எடுத்துக் கொண்ட இப்படத்தில் பல சிறப்புகள் உள்ளன...)


THE VIOLIN (Dir. Francisco Vargas):

உள்நாட்டு கலவரச் சூழலில், உராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட ஒரு கிராமத்தின் வயதான கிராமத்து முதியவர் (வயலின் வாசிப்பவர்), அவரது மகன் (கிடார் வாசிப்பவர்-புரட்சிக்காரன்), பேரன் மூவரின் வழியாக சொல்லப்பட்ட மனதை பிசயவைக்கக்கூடிய 90 நிமிட கவிதை வயலின். படத்தின் இறுதிக் காட்சிகளும், வசனங்களும் வார்த்தைகளும் வர்ணிக்கமுடியாத சோகங்கள்...


SCREAM OF THE ANTS (Dir. Mohsen Makhmalbaf)

புதுமணத் தம்பதியர் இரண்டு பேர் சுற்றுலாவாக, இந்தியாவிற்கு வருகின்றனர். கணவன் (நாத்திகன்), மனைவி ( ஆத்திகவாதி). தனது யோகா ஆசிரியரின் அறிவுரைப்படி சிறந்த மனிதராகிய ஆன்மீகவாதி ஒருவரைக் காண இந்தியாவிற்கு வரும் இவர்களின் வழியாக, மதம் குறித்தும், மனிதம் குறித்துமான விமர்சனத்தை முன்னிருத்தும் இப்படம் கண்டிப்பாக காண வேண்டிய உலகத் திரைப்படமாகும்.

I DON'T WAND TO SELLEP ALONE (Dir. Tsai Ming Liang)

தைவான் திரைப்படம். வீடற்ற ஒருவன். அவனுக்கு அடைக்கலமும், உதவியும் செய்யும் ஒரு இந்தியன்(தமிழன்). மிக நெரிசலான ஒரு அடுக்குமாடி சேரியொன்றில் தங்கிவரும் அவர்களது உறவு நட்பு கடந்து தனிமையின் பகிர்வாக நெருங்குகிறது. பார்வையாளர்கள் மீது அவர்களின் உறவின் குறித்த குழப்பத்தைத் தருகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியின் கீழ் வாழும் ஹோட்டல் ஒன்றின் முதலாளியான ஒல்லிப் பெண், அங்கேயே தங்கி பணிபுரியும் சிறுமி என நான்கு கதாபாத்திரம் மூலம், உடலுறவு சிக்கல், தனிமை குறித்த மௌனவாசிப்பாக படம் அமைகிறது.


WISPERING OF THE GODS (Dir. Tatsusi Omori)

சீனத் திரைப்படம், பனிபடர்ந்த, ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் கதைநகர்கிறது. மதம் என்ற நிறுவனம் அமைத்துள்ள அவசியம் மீறிய கட்டுப்பாடுகளும். அவற்றின் போலித்தனங்களும், உடலுறவு கட்டுப்பாடு ஏற்படுத்தும் அதிர்ச்சியூட்டும் சிக்கல்கள் என பல விமர்சனங்களை முன்னிறுத்தும் முக்கியமானப் படம்.

VOLVER (Dir. Pedro Almodovar)

ஸ்பைன் மொழிப்படம். மூன்று தலைமுறை பெண்கள். பெண் கதாப்பாத்திரம் அதிகமுள்ள படம். அமைதியாக ஆணாதிக்கத்தை எதிர்த்து/தகர்த்து செல்லும் பெண்களை, அவர்களின் தலைமுறை வேறுபாட்டைக் கடந்து தாய்ப்பாசத்தில் இணைக்கும் மெல்லிய திரைக்கதை. கென்ஸ் வென்ற படம் என்பது கூடுதல் செய்தி.


உலகப் புகழ் பெற்ற லத்தின் - அமெரிக்க விவரணப் பட இயக்குநர் Glaubar Rocha குறித்து சிறந்த காமிரா மேனும், இயக்குநருமாகிய Eryc Rocha இயக்கிய ROCK THAT FLIES, THE BOW (Ki-duk kim), FULL OR EMPTY (Dir. Abolfazi Jalili), FIREWORKDS WEDNESDAY (Dir. Ashar Farhadi), PARADISE NOW (Dir. Hany Abu-Assad) என பல சிறந்த படங்கள் குறித்தும் எழுதலாம். நேரமின்மையால் தொடர்ந்து எழுதமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



*** வழக்கம் போல் பிழைகளை மன்னிக்கவும்.

2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

|||RomeoBoy||| said...

Hi Smile ..

How are you , Hope you too Fine there . Am looking your new blog on the previous days. Now only i got it . I think to watch out the world cinema but there is no time and some times no tickets. Hope you enjoy the festival. You gave some trailor about the movies . Its help me to watch out in DVD. I have to search this movies in Video librarys. And your main topic about Thirunagai also very Super. Some of the ancient storys are really amazing to know. Thanks for the sharing. Happy New Year Wishes..

Coming 31st is my Birthday I need your wishes to live in this world happy .

Bye bye

Tc

Raj

சா . ஜெயப்பிரகாஷ் said...

smili... blog nalla iruku...

thodarinthu padikiren...

nandri

jayaprakash-jaypee