International Film Festival in Kerala 2007

வருடந்தோரும் கேரளா அரசு நடத்தும் திரைப்படவிழா (IFFK 2007)இவ்வாண்டு டிசம்பர் 7-14 எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. 9 திரையரங்குகளில் உலக சினிமா, ஆவணப்படங்கள், குறும்படங்கள், போட்டிப்படங்கள், இந்திய (இந்தி), மலையாள மற்றும் சில தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.



இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நடத்தும் திரைப்பட விழாக்களில் கேரளா திரைப்பட விழா தனி. முதல் நாளில் திரைப்படங்களின் அட்டவணை, திரையரங்குளின் பெயர், நேரம், ருட் மேப், படங்கள் குறித்து குறிப்பு மற்றும் கதைக்களன், அனைத்தும் அடங்கிய புத்தகம், சிறு கைப்பை, அடையாள அட்டை அனைத்தும் கொடுத்துவிடுகிறார்கள்.



ஒரு காட்சியில் குறைந்தது 8 படங்கள் இதில் சிறந்தது என்று ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்க்க முடிகிறது. போட்டிப்படங்களும், மலையாள மற்றும் சில உலகப்படங்களும் இரண்டு அல்லது முன்று முறை திரையிடப்படுகிறது. இருப்பினும் பல அரிய நல்ல படங்களை இழக்க நேரிடுகிறது.

மட்டுமன்றி, நஸ்ருதின் ஷா, கமல் என திரைபிரபலங்களோடு முக்கிய திரைவல்லுநர்களின் கலந்துரையாடல், கருத்தரங்குகளும் நடைபெற்றன. தினசரி இந்து, மனோரமா, இந்தியன் எக்ஸ்பிரஸ் அனைத்தும் IFFK-2007க்கு தனி பக்கம் ஒதுக்கி எழுதுகிறது. அனைத்து திரையரங்குளிலும், daily bulletin ஒன்றினை தந்துவிடுகிறார்கள்.



இந்தியா மற்றும் அயல்நாடுகள் சேர்த்து கிட்டதட்ட 8,000 பார்வையாளர்களின் வருகையால் சிலமுறை இடம் கிடைக்காமல் ஹவுஸ் புல்லாகி வெளியில் நின்ற கதையும் உண்டு. படம் முடிந்து வெளியே வந்தால் கைரளி, ஏசியாநெட், மற்றும் லோக்கல் சேனல்கள் அனைத்தும் மைக்கும் கையுமாக பேட்டி, லைவ் சோ, கவரேஜ் என வெளியே தயாராக காத்திருக்கிறார்கள். கிட்டதிட்ட திருவனந்தபுரத்திற்கே கொண்டாட்டமாக திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது.

கேரள அரசால் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்திரைவிழால் எங்கேயும் முதலமைச்சரின் படமோ, பெயரோ, பேனரோ காணமுடியவில்லை. சென்னை சில்க்ஸ், ஜோய் ஆலுக்காஸ் என எந்த விளம்பர உபாதைகளும் இல்லை.



பார்வையாளர்களுக்கான இலவச ஆட்டோக்களையும் பார்க்க முடிந்தது. ஆனால், பெரிதாக உபயோகம் இல்லை. மீராஜ், மெஸ்ஸி போன்ற முக்கியமான அரிய உலகத் திரைப்படங்களை ஒரே ஒரு முறையும், ஒரேகடல் நாலு பெண்கள் என இதர திரையரங்குளில் திரையிடப்பட்டு வரும் மலையாளப்படங்களை இரண்டு, முன்று முறை திரையிடுவது ஒரு குறையாகும். இதனால் தவிர்க்கக் கூடாத சில படங்களை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.


எட்டு நாட்களை பத்து நாட்களாகவும் பத்து நாட்கள் முழுமையாகவும் வைத்தால் இன்னும் நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பாகவே இருக்கும்.

இதர :

தமிழ்நாட்டில் அசைவ ஹோட்டலை தேடிதேடித் தேடி பிடிக்க வேண்டும். கேரளாவில் அநேகமாக எல்லாமே அசைவ ஹோட்டல்கள் தான். அதிலும் பீப் பிரியர்களுக்கு உகந்த நாடு கேரளா, அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் பீப் உறுதியாக கிடைக்கும். காரசாரமான சுவையும் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் விலையும் குறைவு.

பார்த்தில் மிகவும் என்னை கவர்ந்த படங்களின் குறிப்பை அடுத்த பதிவில் தருகிறேன்.

1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

இளங்கோ-டிசே said...

பார்த்த படங்கள் குறித்து தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பகிர்தலை வாசிக்க ஆவல்.