உலக எயிட்ஸ் தினம்

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார்

"மேடம் நான், இன்ன பத்தரிக்கையில இருந்து பேசுறேன்"

"ம் சொல்லுங்க சார்"

"உங்களப் பத்தி ஒரு கவர் ஸ்டோரி எழுதலாம்னு இருக்கேன்"

"ம்., ஓ.கே. சார்..."

"நீங்க எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்திருக்கிங்களா?"

"...?!" , "இல்ல.. ஏன் கேக்குறிங்க?"

"இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல உலக எய்ட்ஸ் தினம் வரப்போகுதில்லையா.. அதான் நீங்க அது தொடர்பா ஒர்க் பண்ணிறிப்பிங்கள்ளயா... அதான் .."

"ம், இல்லை சார், எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அது தொடர்பா ஒர்க் பண்ற திருநங்கைகள் இருக்காங்க அவங்க நம்பர் தரேன் வேணும்னா நோட் பண்ணிக்கோங்க..."

"சொல்லுங்க மேடம்..."

()

பொதுவாக, என்னை குறித்து கட்டுரையோ, பேட்டியோ பெற விரும்பும் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் என் பணி நிமித்தம் அவர்களாக யூகித்து கொண்டிருப்பது நான் எயிட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பணிபுரிகிறேன் என்பது தான். இது நான் அவர்கள் மீது வைக்கும் குறையோ, குற்றமோ கிடையாது.


அவர்கள் அப்படி யூகிப்பதற்கும் காரணம் உண்டு. பெரும்பாலான திருநங்கையர் தோழிகள் எயிட்ஸ் விழிப்புணர்வு என்னும் சமூக சேவையிலேயே தங்களை முழுமையாக வைத்திருப்பது தான். வெகு சமீபமாக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றிருந்த போது கூட அவர்கள் நாளைந்து குறும்படங்கள் எடுத்து வைத்திருப்பதை பார்த்தேன். எனது டாக்குமெண்டேசனக்கு உதவுமே என்று சாம்பிளுக்கு பார்க்கலாமென்று பார்க்கையில் படத்தின் அடிநாதம் முழுதும் எயிட்ஸ் விழிப்புணர்வு என்னும் பெயரில் திருநங்கைகள் தங்களைத் தாங்களே பாலியல் தொழிலாளிகளாகவும், கண் துடைப்பிற்கு சிறு வியாபாரிகளாகவும் காண்பிக்கிறார்கள்.


ஒருமுறை திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்தும் முதலாளி ஒருவர் தனது பத்திரிக்கை செய்தி ஒன்றில், எயிட்ஸ் விழிப்புணர்விற்காக களம் இறங்கிய போதுதான் திருநங்கைகள் இருப்பதையும், இதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்றும் அறிகிறேன் என்றார். அவர்களுக்கு உதவுவதற்கா இத்தொண்டு நிறுவனம் செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.


வெகு சில திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு சுயதொழில் வாய்ப்பளிப்பதாக கூறுவதும் கூட அந்த தொண்டு நிறுவனத்திற்குள்ளேயே ஒரு ப்யூட்டி பார்லர், கரகாட்டம் என்ற அளவிலேயே உள்ளது. குறைந்த பட்சம் இத்தகைய மாற்றுத் தொழிலாவது செய்ய வாய்ப்பளிக்கபடுகிறார்கள். அவர்களும் அதனை பயன்படுத்துகின்றார்களே என்றும் சந்தோசப்படவும் முடியவில்லை. ஏனெனில் இந்த சுயதொழில் ஒரு கண்துடைப்பாகவும், மற்ற நங்கைகளைப் போன்ற பாலியல் தொழிலையுமே அவர்கள் செய்கிறார்கள் என்பதே வறுத்தத்திற்குரிய செய்தி.


செக்ஸ், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் எதற்கும் நான் எப்போதும் எதிரி அல்ல. இது சரி, இது தவறு என்பதை விட அது அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் (உரிமை)என்பதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், திருநங்கைகளை எயிட்ஸிற்கான ஐகனாக பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களின் இந்த ஆபத்தான அரசியலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததன் ஆதங்கமே இப்பதிவு.


இதை உணர வேண்டுமெனில் தமிழ்நாடு முழுவதும் திருநங்கைகளுக்காக, திருநங்கைகளோ (அ) மற்றவர்களோ நடத்தும் அத்தனை தொண்டு நிறுவனங்களின் ப்ராஐக்ட் எயிட்ஸ், எயிட்ஸ் விழிப்புணர்வு. திருநங்கைகளின் தொழிலாக கருதத்தக்கது பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல். ஆனால், பிச்சை எடுப்பதில் பாதுகாப்பு, முன்எச்சரிக்கை, தொழில் நுட்பம் அல்லது பிச்சை எடுப்பதை முற்றிலும் அழித்தல் என்ற ரீதியில் இவற்றை மையமாக கொண்டு எந்த நிறவனமும் செயலாற்றுவதில்லை. (இங்கே கண்துடைப்புகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை).

சரி பாலியில் தொழிலுக்காகத்தான் செயல்படுகிறார்கள் என்றால், அதுவும் பாலியல் தொழிலிருந்து மீள்வதற்காக இல்லை. நீ அதையே செய்.., ஆனா பாதுகாப்பா செய், எனக்கு கொஞ்சம் ப்ராஐக்ட் கிடைக்கும் என்பது தான் தொண்டு நிறவனங்களின் தெளிவுநிலை.


அட... ஒரு நிமிடம், நீங்கள் எண்ண நினைக்கிறீர்கள். ஆனால், திருநங்கைகளை திட்டிக்கொண்டிருக்கிறேன் என்றா... இல்லை. இல்லவே இல்லை.. ஏனெனில், நானும் இளவயதில் இதைப் போலவே அலங்காரப்படுத்திக் கொள்வது, அதை ரசிப்பது, மற்றவர் என்னை பார்க்கும் படி நடந்து கொள்ள வேண்டும் என்று மிகையாக நடித்துக் கொள்வது என எல்லாமே உண்டு. ஆனால், அது ஒரு பருவம், ஒரு கட்டம் அவ்வளவே.

ஆனால் பெரும்பாலும் திருநங்கைகள் அதோடு நின்றுவிடுகிறார்கள். எது பெண்மை, எப்படி பெண்மையை நிருபிப்பது என்ற தெளிவின்றி அழகியியல் என்னும் பெயரில் கவர்ச்சியில் மதிமயங்கி கிடக்கின்றனர். இதையே அவர்களை வைத்து தொண்டாற்றிவரும் நிறுவனங்களும் வாகாக பயன்படுத்தி கொளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக மிஸ். கூவாகம் என்னும் ஓப்பன் செக்ஸ் வல்காரிட்டியை சொல்லலாம். மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் தொண்டு நிறுவனங்களின் அடுத்தகட்ட முற்போக்கு முயற்சி தான் இந்த மிஸ்.கூவாகம் என்னும் கூத்து. அழகி போட்டி என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை வருவதும், அறிவுச் சுற்று என்பதில் "எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி?" என்ற கேள்வி, அதற்கு "பாதுகாப்பான உடலுறவு" என்ற பதில். பலத்த கைத்தட்டல் முதல் பரிசு இத்யாதி.


இந்த கூத்தைத்தான் "நவரசா" என்னும் படத்திலும் சந்தோஷ் சிவன் என்னும் அரைவேக்காடு கலைபித்தன் இடைவேளைக்குப் பின் தேர்ந்த கலைப்படைப்பாய் காண்பித்திக் கொண்டிருப்போர். ஒவ்வொரு கூவாகம் திருவிழாவிற்கும் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாடு என்னும் அரசுசார் நிறுவனம் காண்டம் வடிவ வேன் ஒன்றை நிறுத்தி அதில் எயிட்ஸ் விழிப்பணர்வோடு, இலவச ஆணுறை விநியோகமும் செய்து கொண்டிருக்கும். சுற்றியுள்ள காட்டில் .. சீ!..


மேற்கத்திய நாடுகளில் கூட இந்தளவிற்கு அரசே காமிடி பண்ணுமா என்பது தெரியாது. எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம். நாட்டில், இதய நோய், கிட்னி பெயிலியர், புற்று நோய், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வியாதிகள் இருக்க எயிட்ஸின் மீது மட்டும் இத்தனை கரிசனம், விளக்குகள் ஏன்..?!


ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பது என்று சொல்லலாமா அல்லது, கலாச்சார போர்வைக்குள் பெருமூச்சுவிட்டு காத்திருக்கும் நம் மனோ விகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?


வாங்க.. உங்க கருத்த பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க....

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Baby Pavan said...

அக்கா குட் மார்னிங்

Unknown said...

செக்ஸ், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் எதற்கும் நான் எப்போதும் எதிரி அல்ல. இது சரி, இது தவறு என்பதை விட அது அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் (உரிமை)என்பதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நானும் சில காலமாக , உங்களது வலைப்பூவை , படித்து வருகின்றேன் , தங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துகள், பொதுவாக திரு நங்கைகளை , சமுதாயம் , ஒதுகுகின்றதது , புரந்தள்ளுகின்றது , என்பதோடு அவர்களை ஒரு கருவியாக , மாற்றாக , நினைக்கிறது , இதற்கு திரு நங்கைகளும் , அவர்களது தொழிலும் , காரணம் , முதலில் அவர்கள் வேறு பணிகளில் தம்மை ஈடு படுத்தி உலகில் சராசரி , நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டாள் ஒழிய , சமூகத்தின் பார்வை மாறுவது சற்று கடினம்...

அன்புடன்

இரா. செந்தில் நாதன்
http;//anputan.blogspot.com

ச.மனோகர் said...

'ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பது என்று சொல்லலாமா அல்லது, கலாச்சார போர்வைக்குள் பெருமூச்சுவிட்டு காத்திருக்கும் நம் மனோ விகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?'


அருமை! யோசிக்க வேண்டிய விசயம்.

Kalai said...

Hi,

Government is concentrating more on AIDS.
Because if a person is affected by Cancer, Kidney failure, that ends with him. But AIDS affect his whole family. He is passing the disease to other family members even to his baby. It affects the person who is sexually active. ( From 20 years - 45 years ). That is the age where one goes to job and earn money. If he dies, his family's economic condition goes very low and affects the future of his family. But unlike cancer, AIDS is preventable.
It is the duty of the givernment to make the people alert about AIDS

Jayaprakash Sampath said...

திருநங்கைகள் என்ற உடனே அவர்களை by default, எயிட்ஸ் உடன் தொடர்பு படுத்துவதில் உங்களுக்கு ஏற்படும் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன். உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். ஆனால்,

// எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம். நாட்டில், இதய நோய், கிட்னி பெயிலியர், புற்று நோய், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வியாதிகள் இருக்க எயிட்ஸின் மீது மட்டும் இத்தனை கரிசனம், விளக்குகள் ஏன்..?!


ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பது என்று சொல்லலாமா அல்லது, கலாச்சார போர்வைக்குள் பெருமூச்சுவிட்டு காத்திருக்கும் நம் மனோ விகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாமா //


என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன் என்றால்.

* எய்ட்ஸ் வராமல் தடுக்க வழிகள் இருக்கிறதே தவிர , வந்து விட்டால் குணப்படுத்த மருந்துகள் இல்லை, பிற நோய்களைப் போல....

* பிற காரணங்கள் இருந்தாலும், எய்ட்ஸ் பரவுவதற்கு , உடலுறவுதான் பிரதானமான காரணம். பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானோர், தங்களுக்கே தெரியாமல் ஏற்றுக் கொண்டு விட்டவர்கள் தான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன், அதை மறைத்து, பாதுகாப்பில்லாமல் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு என்ன காரணம்? தெரிந்தால் அவனை யாரும் கிட்டே சேர்க்க மாட்டர்கள் என்றுதானே? இப்படிப்ப் பட்ட சூழ்நிலையில், இங்கே நடந்து கொண்டிருக்கும் வலுவான பிரச்சாரம், எய்ட்ஸ் நோயாளிகள் மீதான அசூயையைக் குறைத்து, அதன் காரணமாக பாதுகாப்பான உடலுறவும் அதிகரித்தால், எய்ட்ஸ் நோயால் பாதிகப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்பது ஒரு ஸ்ட்ராடஜி.

* சிவப்பு விளக்கு அழகியின் பரிதாபக் கதை என்று கட்டுரை வந்தால், அதைக் கிளர்ச்சிக்காக படிப்பார்கள் என்று எண்ண வாய்ப்பு உண்டு. ஆனால், பத்திருபது ரூபாய்களுக்குப் பாலியல் தொழில் செய்து நோயைப் பெற்று சமூகத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டவர்களையும், எய்ட்ஸை மறைத்து மணம் செய்து, மனைவிக்கு நோயைக் கொடுத்து, முடிவில் எய்ட்ஸுக்குக் காரணம் அந்தப் பெண்தான் என்று பழி சுமத்தி அடித்துத் துரத்தப்ப்பட்ட புதுமணப்ப்பெண்ணையும் பற்றிய செய்திகள் சமூகத்தில் இருப்பவர்களில் மனவிகாரத்துக்கு வடிகாலாக அமையும் என்றா நினைக்கிறீர்கள்? அப்படியே வக்கிரம் பிடித்தவர்கள் இருந்தால் தான் என்ன? விழிப்புணர்வு வந்தால் சரிதானே?

|||RomeoBoy||| said...

Last 2 para's really good. I appriciate your writing . I agree with your commands. Keep rocking Smile ..

சிவக்குமார் said...

உங்களின் ஆதங்கம் நியாயமானது. அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் தெளிவற்ற புரிதல்களும், திருநங்கையர்களை வைத்து நடைபெறும் அரசியலும் களையப்பட்டால் ஒழிய, கவர்ச்சி நோயுடன் மாத்திரமே திருநங்கைகள் தொடர்புபடுத்தப்படும் தன்மை மாறாது.சாதரண மனிதன் ஒரு திருநங்கையை எள்ளி நகையாடுவதற்கும், இந்த நிறுவனங்களின் போக்குக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப் போனால் பெரிய கேவலத்தைச் சமூகப் பொறுப்புணர்வு என்கிற போர்வையில் செய்து கொண்டிருக்கிறது இந்த நிறுவனங்கள்.

மக்கள் சட்டம் said...

சற்று தாமதமான மறுமொழி்க்கு மன்னிக்கவும்.

தன்னார்வ தொண்டு ஃபண்டு நிறுவனங்களின் போக்கை மிகச்சரியாக இனம் கண்டுள்ளீர்கள்.

திருநங்கைகள் குறித்த தங்கள் பார்வை மிகவும் சரியானது. அதை சற்று உரத்து, பரந்த தளங்களில் கூற முயற்சி செய்யுங்கள்.

தோழமையுடன்,
சுந்தரராஜன்

கீர்த்தனா said...

அன்புள்ள தோழி வித்யா..
உங்கள் பதிவுகளை நீண்ட காலமாகவே வாசித்து வருகிறேன்.
பதிவுகள் முழுதும் விரவியிருக்கும் உங்களது
வலியை அறிகிறேன்.சமூகத்தின் ஒவ்வொரு விடயங்களுக்கும் நின்று நிதானித்து சிந்திக்கும் உங்கள் ஆற்றல் அபாரமானது.
பாராட்டுக்கள்.

இந்த கட்டுரையில் தொண்டு நிறுவனங்கள் மீதான உங்கள் பார்வை சரியானதே..
நானும் அது பற்றி யோசித்ததுண்டு.

எயிட்ஸ் பற்றிய உங்கள் கேள்விக்கு ..
கலையரசி மற்றும் பிரகாசும் சொல்லும் பதில்களோடு உடன்படுகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி.

குலவுசனப்பிரியன் said...

உங்கள் பதிவை பார்த்து பல நாட்கள் ஆகின்றன.நீங்கள் புது இடத்தில் நலமாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொண்டாற்ற நினைக்கும் பலர் பிறருக்கு உதவி செய்வது போல் தோன்றினாலும், அடிப்படையில் சுய நலம்தான் முன் நிற்கிறது என்று J.கிருஷ்ணமூர்த்தி சுட்டுவார்.

தொடர்புடைய சுட்டி அவருடைய Commentaries on living புத்தகத்திலிருந்து:
http://www.freeweb.hu/tchl/commentaries_on_living_series_3/1960-00-00_commentaries_on_living_series_iii_chapter_07_'won't_you_join_our_animal-welfare_society'.html

அவருடைய மற்ற புத்தகங்கள் அதே தளத்தில் காணக்கிடைக்கின்றன.http://tchl.freeweb.hu/

Man said...

//எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம். நாட்டில், இதய நோய், கிட்னி பெயிலியர், புற்று நோய், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வியாதிகள் இருக்க எயிட்ஸின் மீது மட்டும் இத்தனை கரிசனம், விளக்குகள் ஏன்..?!//

Good Question.....

If some one (in India) get Heart Attack or Kidney failure, he dies. Finished. These are NON-INFECTIOUS Diseases

But if some one in India get MDR TB / CMV / Crypto meningisti (that is a common complication of AIDS), those dreaded INFECTIONS can spread to America (Developed conditions).

It is only for this reason that they (America based Organisations) are spending a lot of money on AIDS.

Bitter, but true !!!
----

கானகம் said...

Good Article. Insulting "ThiruNagai's" are not new to this society. They will kep doing.. They have to respect themselves first.. Then they have to expect from the society. Do you believe that Govt. will insult ThiruNagai's purposefully?? Could you say that Thirunangai's are not involved in prostitution?? When they are the main source of Aids, Govt educate the Public through the right medium..

Mis.Koovagam is an Insult to the human society and culture.. Thirunanga's themselves should know that they have ben insulted by the Groups..

Anyway interesting and infrmative writeup. this is my first vist to your Blog.. Will come regularly.. Jayakumar

James Rajendran said...

Dear Friend ,

Your Thinking is Very Great

Continued yours all

With regards / Rajendran /
jamesincbe@gmail.com

(அறிவுச் சுற்று என்பதில் "எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி?" என்ற கேள்வி, அதற்கு "பாதுகாப்பான உடலுறவு" என்ற பதில். பலத்த கைத்தட்டல் முதல் பரிசு இத்யாதி.)