நான் கடவுள்

பாலா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!



ஆண்மைத் திரட்சி கொண்ட கல்லூரி வாலிபனின் அடாவடிக்காதல், அராஜகமான சகோதர பாசம் என ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய சேது திரைப்படம், மனநிலை காப்பக இறுதி காட்சிகளால் என்னை கவர்ந்தது. அதேபோல், ஆண்மைத் திரட்சி கொண்ட சிறுவனுக்கு தாய் மீதான வெறுப்பு, தாய்க்கு மகன் மீதான வெறுப்பு என்ற மைய புள்ளி கொண்டு, கோபம்/வீரம்/பராக்கிரமம் கொண்ட ஆணை மையமாகப் பேசியது நந்தா. ஈழத்தமிழ் அகதிகளின் பகுதியையும் தொட்டுச் சென்றதில் என் மனதையும் தொட்டுச் சென்றது. மூன்றாவது பிதாமகனில் அதே ஆண், அதே கோபம், அதே வீரம், அதே பராக்கிரமம், அதே பித்து நிலை என அயர்ச்சி தட்டியபோதும். லோக்கல் களவானியின் களவானித்தனம், திருட்டுத்தனம், வெள்ளந்தி பாசம், நட்பு என சிறுக அன்பையும் சூர்யா பாத்திரம் மூலம் கொண்டு சென்றது.


இவ்வாறு பாலாவின் மூன்று படங்களும் பராக்கிரம, ஆண்மைத் திமிர் திரண்ட கட்டழகன்களை மையமாக கொண்ட ஆணாதிக்க படமாக, பார்வையாளர்களின் பைத்தியநிலையை, மிருகத்தை தூண்டிவிடும் வேலையையே செய்தது. இது போக வேறுசில விமர்சனங்களும் அப்படங்கள் மீது உண்டு. ஆனாலும், சராசரி திரைக்கழிவுகளுக்கு மத்தியில் மாற்று முயற்சி என்ற அளவில் பாலாமீதும், அவரது படங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு.




வருடக்கணக்காய் காத்திருந்து, காந்திருந்து நான் கடவுள் பார்த்தவர்கள் அனைவருமே கதை குறித்து, தங்கள் விமர்சனங்களை வைத்து தீர்த்தாயிற்று. எனவே, இதுவரை, பொதுவாக அனைவரும் வைத்த விமர்சனங்கள் போக சில கருந்துகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.




நான் கடவுளின் அகோரி வழக்கமான அதே ஆண்மைத் திரட்சியின் நான்காவது பதிப்பாக இருந்த போதும், அதைக் கடந்து வேறெந்த நாயகத்தனமும் ருத்ரனுக்கு இல்லை. உண்மையில் படத்தில் நாயகன் ருத்ரனில்லை. பிச்சை எடுக்கும் விளிம்புகளின் பிரதிநிதியாக, படத்தின் மையப்பாத்திரமாக கதையை நகர்த்துவது அம்சவள்ளி பாத்திரமே.


ருத்ரன் பாத்திரம் மூலமாக, அகோரிகளின் சடலம் சூழ்ந்த அமானுஷ்ய வாழ்க்கையை மட்டும் தொட்டுச் செல்லாமல் "நானே கடவுள்" என்ற தத்துவத்தை (கண்டிப்பாக ஆன்மீகம் அல்ல), நமக்குள் நாமே கடவுள், கடவுள் என்று தனித்து வெளியில் எதுவும் இல்லை என்பதையே இயக்குநர் பாலா முன்னிறுத்துவதாக நான் உணர்கிறேன்.



திருநங்கைகளை கேவலமாக தொடர்ந்து முன்னிறுத்தி வரும் திரைக்கோமாளித்தனங்களுக்கு மத்தியில் திருநங்கை கீர்த்தனாவின் பாத்திரம் ஆறுதலானது. திருநங்கைகள் குறித்த செயற்கை பிம்பங்கள் எதுவுமன்றி, இயல்பான நீரோட்டமாக பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றிகள். நன்றியைக் கடந்து இரு நெருடலகள். விளிம்புகள் அதிலும், பிச்சை எடுப்பவர்கள் என்று ஆனபின் ஒரு திருநங்கையையும் சேர்த்துக் கொள்வோமே என்று யோசித்து சேர்த்த பாத்திரமாகமே இத்திருநங்கை பாத்திரம் தோன்றுகிறது.

கீர்த்தனாவின் உடை சேது-ஈஸ்வரி ராவ் பாத்திரத்தின் உடையைப் போல (ஆண்சட்டை, பாவாடை) இருப்பது ஆரம்பத்தில் நெருடலாக இருந்தாலும், பிச்சைத் தொழில் முதலாளியிடம் பணிபுரியும் திருநங்கையாக வரும் இப்பாத்திரத்திற்கு இவ்வுடை பொருத்தமாகவே உள்ளது. (புடவை/சுடிதார் கட்டி முழு பெண்நிலையில் வாழும் பெண்கள் இத்தகைய சூழலில் வாழும் வாய்ப்பில்லை என்பது நிதர்சனம்) வாய்ப்பை பயன்படுத்தி, கூட்டாமல் குறையாமல் இயல்பாக தன் பணியை செய்து முடித்த திருநங்கை தோழி கீர்த்தனாவிற்கு வாழ்த்துக்கள்.


சரி, இப்படி திருநங்கையை கண்ணியமாக காட்ட இப்பாத்திரம் தேவை என்று சந்தோசப்படும் வேலையில், நயந்தாரா வேடம் கடுப்பேற்றுகிறது. அப்பாத்திரம் திருநங்கை அல்ல என்ற போதும், குறிப்பாக எண்விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் விதமாக நயந்தாரா என்ற பாத்திரப் பெயரும், சுருக்கமாக நயன் என்று அலைக்கப்படுவதும் தேவையற்ற குழப்பதை, அதன் மூலம் அருவெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.


எல்லாவற்றையும் விட என்னை மேலும் குழப்பமடையச் செய்யும் மிகப்பெரிய கேள்வியொன்று உள்ளது. இத்திரைப்படத்தின் அடிநாதமே விளிம்புகளை சுற்றி அமையும் நிலையில், அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்? தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்? நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது? பொற்காலம் படத்தில் இறுதிக்காட்சியில் வடிவேல் "கறுப்பான எனக்கெல்லாம் உன் தங்கச்சியக் குடுக்கக்கூடாதுன்னுதான நினெச்ச?" என்று கேட்பது நினைவிற்கு வருகிறது.



இப்படத்தின் முடிவு மிகவும் ஆபத்தான அரசியலை முன்வைக்கிறது. அகோரி ஆங்காரம் கொண்டு தீயவர்களை அழிக்க, தீயவை அழிய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்ட பின்பும் வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம். எத்தனை காரணங்கள் சொன்னாலும், ஆன்மிகத்தளத்தில் விளக்கமளித்தாலும் திரைப்படத்தின் முடிவும், தீர்வும் மிகவும் கண்டனத்திற்குரியது. இதை இயக்குநர் பாலா உணர்ந்துதான் செய்துள்ளாரா என்பதை பேட்டியெடுக்கும் நிருபர்கள் கேட்டு சொன்னால் கொஞ்சம் உதவியா இருக்கும்.


இறுதியாக, தனது வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு மிருகமல்லாத, மானுடம் பேசும் மாற்றுப் படமொன்று தரவேண்டுமென்று இயக்குநர் பாலாவின் சராசரி ரசிகையாக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

36 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

gulf-tamilan said...

//வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம்//
அநியாயம்தான். அவருடைய எல்லா படங்களிலும் முடிவில் யாராவது சாவார்கள்.:(((

உண்மைத்தமிழன் said...

மிக, மிக வித்தியாசமான பார்வை வித்யா..

ஆனால் ஒரு திரைப்படம் என்கிறபோது இதுதான் கதை என்று முடிவு செய்துதான் எடுக்கத் துவங்குகிறார்கள்.

கதையே இப்படித்தான் என்கிறபோது நாம் அதற்குள் நுழைந்து குற்றம் கண்டுபிடிப்பது என்பது வீண்.

King... said...

பாலா சாதாரணர்களோடு கதை சொல்ல வேண்டும் என்பது என் விருப்பமும்...

Unknown said...

Good thought. Most of the points are realised to me also.
karthik
karthikeyan.terapad.com

நட்புடன் ஜமால் said...

அட நீங்களுமா விமர்சனம்

இப்பதான் உங்க புத்தகம் படித்து கொண்டு இருக்கின்றேன் ...

கோவி.கண்ணன் said...

//வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம். எத்தனை காரணங்கள் சொன்னாலும், ஆன்மிகத்தளத்தில் விளக்கமளித்தாலும் திரைப்படத்தின் முடிவும், தீர்வும் மிகவும் கண்டனத்திற்குரியது. //

வித்யா,
எனது விமர்சனங்களிலும் இதே கருத்தையும், கண்டனத்தையும் வைத்திருக்கிறேன்.

உங்களது முழு விமர்சனமும் மிகச் சரியாகவே இருக்கிறது.

YUVA said...

Hi, Your comments are in a different perspective. I realised now about the truthfulness of that guy who tries to marry Amsavalli. Except for that point - killing Amsavalli, portrayal of Rudran are all not to be considered as message out the film. Thats how Aghori's live their life. Please read more about them. Personally, i believe that, any film must be seen as a film and thats it. Period. Cinema dont have any effect on the Society, its the vice-versa. Also see my comments on this movie @ http://srinimirrors.blogspot.com/

Jeevanandam. S. said...

To Thirunangai Vidhya,

I read ur views on the movie Naan Kadavul. I accept ur views regarding the movie except one point wt u stress. Bala portrayed the character Akori through Arya. U said its not hav any religious identity. But I'm not take it as right. If u saw the court scenes it clearly sugesst that a person can do anything against law and people in the name of RELIGION. I need ur sugessions....

FunScribbler said...

good review.:)a very true unbiased thoughts. good post:)

KARTHIK said...

// அகோரி ஆங்காரம் கொண்டு தீயவர்களை அழிக்க, தீயவை அழிய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்ட பின்பும் வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம்.//

எனக்கு அது சரின்னுதான்படுதுங்க.

வாழமுடியாதவங்கலுக்கு இவர் தரும் வரம் மரணம்.இவர் அவளுக்கு மரணம் அழிக்குற பட்சத்துல அவள் அடுத்த பிறவி மறுக்கப்படுரதா சொல்லிருப்பாரு.அதனால அந்த பெண் கேக்குற வரத்த குடுக்குறாரு.
அதுவே துஸ்டனுக்கு அழிக்குரது வரமல்ல சாபம்.

இந்த கதைப்படி வர்ரது சரிதாங்க.

G.Ragavan said...

நல்ல விமர்சனம்.

// படத்தில் நாயகன் ருத்ரனில்லை. பிச்சை எடுக்கும் விளிம்புகளின் பிரதிநிதியாக, படத்தின் மையப்பாத்திரமாக கதையை நகர்த்துவது அம்சவள்ளி பாத்திரமே.//

முழுக்க முழுக்க ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. அம்சவல்லி பாத்திரம்தான் உண்மையிலேயே கதை. அந்த அம்சவல்லிக்கு என்ன தேவையோ அதைக் குடுக்கத்தான் அகோரியாரே வர்ராரு.

ஆனா எனக்கு ஒன்னு புரியலை. கடைசீல அகோரியார் பண்றது கருணைக்கொலை. ஆனா அதப் போய் அந்தப் பொண்ணுக்குக் கொடுத்த வரம்னு உயர்த்திச் சொல்றது சரியில்லைன்னு தோணுது. அத விட நல்லது அந்தப் பொண்ணு பண்ணுச்சு. அம்மா கூட நல்லபடியாப் பழகுன்னு உபதேசம் பண்ணுச்சு. அம்மா கூட இருந்து... அந்தச் சோத்தைச் சாப்பிட்டா என்ன தப்பு? உண்மையிலேயே சாமியாரா இருந்தா... தேங்காச் சில்லையும் பாவக்காப் பத்தையையும் ஒன்னா நெனச்சித்தானே திங்கனும்? அத விட்டுட்டு மனுசக்கறிதான் திம்பேன்னா என்ன அர்த்தம்? இப்ப ரயில்ல போறோம். எல்லாரும் பேசிட்டுதான் வருவாங்க. ஆனாலும் நம்ம அமைதியா புத்தகம் படிச்சிட்டுத்தானே வர்ரோம். அல்லது.. அந்தச் சத்தத்துலயும் கூட வந்தவங்க கிட்ட பேசிட்டுத்தானே வர்ரோம். எல்லாரும் பேசுற இடத்துல இருந்தா குணம் மாறும்னா... அது நிலையில்லாத குணமாச்சே! அப்படி உறுதியில்லாத அகோரித்தனமான மனநிலையை.. அல்லது சாமியார்த்தனமான மனநிலையை.. மனநோய்னுதான் பாக்கத் தோணுது. இதுல கஞ்சா வேற...

ஏதோ.. அந்தப் பொண்ணக் காப்பாத்த ரெண்டு கொலை செஞ்சதத் தவிர மித்ததெல்லாம் வெத்துக் கூச்சல்.

மேல சொன்னது.. அந்தப் பாத்திரத்தின் மீதான விமர்சனம்.

ரெண்டாவது... அவலட்சணமா இருக்குறவரைத் திருமணம் செய்துக்கிறதுக்கோ மறுக்குறதுக்கோ அம்சவல்லிக்கு உரிமையிருக்கு. ஆனா அவளுக்கு அதுதான் உண்மையிலேயே பாதுகாப்பானது. நல்லது. வளமான பாதுகாப்பான எதிர்காலத்துக்குகந்தது. அதைத் தேர்ந்தெடுக்காம... வாழ வழியில்லைன்னு பொலம்புறது எவ்ளோ தூரம் சரியானது?

ஜோதி கார்த்திக் said...

மிக, மிக வித்தியாசமான பார்வை வித்யா..

ஊர்சுத்தி... said...

hi vidya hw r u? happened to visit your blog today...very nice and vaazhththukkal thozhi...

hope you remember me. I am saravanan frm madurai (railways)...

-saravanan

பொன் சுதா said...

சரியான விமர்சனம் வித்யா...

M.Rishan Shareef said...

அன்பின் வித்யா,

//எல்லாவற்றையும் விட என்னை மேலும் குழப்பமடையச் செய்யும் மிகப்பெரிய கேள்வியொன்று உள்ளது. இத்திரைப்படத்தின் அடிநாதமே விளிம்புகளை சுற்றி அமையும் நிலையில், அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்? தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்? நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது?//

இந்தக் கேள்வியை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை தோழி.

அம்சவள்ளி முன்னர் வாழ்ந்துவந்த இடத்திலிருந்து புது இடத்துக்கு அழைத்து வரப்படுகிறாள். இரு நாட்கள் அழுகை. பிறகு 'தற்போது சார்ந்திருக்கும் இடமும் பாதுகாப்பானது, ஒரு குடும்பம் போன்றது' என்று உணரும்போது அவ் வாழ்வியலோடு ஒத்துப் போகிறாள். அவ் வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கப் பழகிக் கொள்கிறாள். ஒரு கேள்வியில் பதில் சொல்கிறாள் 'எல்லாம் பழகிடுச்சு' என்று. அந்தப் பதிலொன்றே அவளது பழைய காலங்களைச் சொல்கிறது.

இவ்வாறிருக்க புது இடத்தில் திடீரெனத் தோன்றுமொருவன் பண்டமாற்றைப் போல, பணத்துக்காக சக ஜீவன்களை அள்ளிச் செல்லும் ஒருவன், உயிரை விலை பேசும் ஒருவன் வந்ததாலேயே கீர்த்தனாவும், முருகனும் ஓடி அவளைக் காக்கவேண்டியதாயிற்று.

ஏனெனில் அம்சவள்ளியின் அழுகையினை,அன்பினை அருகிலிருந்து நேரில் கண்டவர்கள் முருகனும்,கீர்த்தனாவும் சக யாசகர்களும். அம்சவள்ளியை அழைத்துச் செல்ல வந்தவன் உண்மையாகவே திருமணத்திற்காகத்தான் அழைக்கிறானா என்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. இப்படியிருக்க, தன்னுடன் வாழும் ஒரு அப்பாவி ஜீவனை யார்தான் அறியாத ஒருவனோடு அனுப்ப விரும்புவர்?

அந்த அகோர முகமுடையவரும் கெட்டவனான பிச்சைக்கார ஏஜன்டைத் தன் திருமணத் தரகராக அனுப்பாமல், நல்லதொரு மனிதரைத் தரகராக அனுப்பியிருந்தால் அம்சவள்ளியை எல்லோருமே சேர்ந்து அன்பாக அவருடன் வாழ அனுப்பி வைத்திருப்பார்கள் தானே ?

//இறுதியாக, தனது வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு மிருகமல்லாத, மானுடம் பேசும் மாற்றுப் படமொன்று தரவேண்டுமென்று இயக்குநர் பாலாவின் சராசரி ரசிகையாக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.//

வேண்டாம் தோழி. அவரை இன்னொரு சராசரித் தமிழ் இயக்குனராக்க வேண்டாம். மனிதனுக்குள் இருக்கும் மிருகங்களை அவராவது வெளிக்கொணர்ந்து, முகத்திலறைவது போலக் காட்டட்டும். அப்படிக் காட்டியதால் தானே நீங்கள் முதல் வரிகளில் சொன்னது போல "பாலா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!"

பாலா பாலாவாகவே இருக்கட்டும்...!

M.Rishan Shareef said...

//அவலட்சணமா இருக்குறவரைத் திருமணம் செய்துக்கிறதுக்கோ மறுக்குறதுக்கோ அம்சவல்லிக்கு உரிமையிருக்கு. ஆனா அவளுக்கு அதுதான் உண்மையிலேயே பாதுகாப்பானது. நல்லது. வளமான பாதுகாப்பான எதிர்காலத்துக்குகந்தது. அதைத் தேர்ந்தெடுக்காம... வாழ வழியில்லைன்னு பொலம்புறது எவ்ளோ தூரம் சரியானது?//

படத்தில் எந்தக் கட்டத்திலும் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை அம்சவள்ளிக்கு வழங்கப்படவில்லை. அவள், சக யாசகர்களது தோழமைக் கண்களாலேயே உலகினைப் பார்க்கிறாள். அவர்கள் தீயது, தீயவனெனச் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்கிறாள், நம்புகிறாள். ஆகவே அந்தப் புலம்பல் சாத்தியமானதே !

butterfly Surya said...

வித்தியாசமான வித்யா. வாழ்த்துகள்.

ஆனால் சினிமாவை ரசியுங்கள். ஆராய்ச்சி செய்தால் எதுவுமே நன்றாக இருக்காது என்பது எனது கருத்து.

பாலாவின் ரசிகன் அல்ல நான்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என எத்தனை பேட்டிகளை நம்பி ஏமாந்தது போதும்.

இன்று பாடல் பதிவுடன் ஆரம்பம் என்று பாண்டிபஜார், கோடம்ப்பாக்கம் சுவரெல்லாம் ஒட்டிய பல போஸ்டர்களை பார்ந்து பார்க்க வேண்டும் என எண்ணி நிறைய செலவு செய்துவிட்டு படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ஆனால் பாலா ..??? அப்படி செய்யவில்லை என்றுதான் கூற முடியும். எதையும் எதிர்பார்த்து செல்லவில்லை.

பாலாவின் மற்ற மூன்று படங்களை விட இதில் அழுத்தம் அதிகம். ஒருவேளை ஜெயமோகனின் வசனமும் ராஜாவின் இசையும் ஆர்த்தரின் கைவண்ணமும் நன்றாக இருந்ததால் இருக்கலாம்.

சிறப்பு சப்தம் ராஜீ ..வாவ்.. Xlent performance. உலக படங்களுக்கு டெக்னீஷியன்கள் பலர் சென்னைகாரர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

Ganesh Kumar has won an award for his soundtrack for the Hollywood flick “9 Lives of Mara” இதில் என்ன சிறப்பு இவர் சென்னையை சேர்ந்தவர் மட்டுமல்ல. மேற்கு மாம்பலத்தில் உட்கார்ந்து கொண்டே இந்த திரைப்ப்டத்திற்கு சவுண்ட் மிக்சிங் செய்தவர். விருது வாங்க மட்டுமே அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

இது போல பலர் இருக்கிறார்கள். நாம் கண்டு கொள்ளாத பலரை ஹாலிவுட் அணைத்து அவார்டு வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள்.

ஒரு தேசிய விருது கூட கொடுக்காத கண்ணதாசனையும் நாகேஷ் அவர்களையும் பெருமை படுத்தியவர்கள் இந்தியர்கள்..

வித்யாசமாகவும் யதார்த்தமாகவும் இருக்கவேண்டும் என நினைக்கும் மிகச்சிலரையும் நாம் கண்டுகொள்ளாவிட்டால் சுந்தர்.சி யின் 100வது படம் வெகுதூரத்தில் இல்லை. { Minimum Gurantee }அதை டைரக்ட் செய்ய போவது பேரரசுவாக இருந்துவிட்டு போகட்டும். அதில் தமிழ் ரசிக பெருமக்கள் திளைக்கட்டும்.

வாழ்க தமிழ் சினிமா…

ram said...

dear vidhya, your review is very much reasonable and based on simple basic values.

ram said...

your review is very reasonable and based on simple healthy values,but tamil films portray mainly super ego charactors.

MK said...

ந‌ல்ல‌ விம‌ர்சன‌ம்.. இந்த‌ திரைப்ப‌ட‌ம் அகோரிக‌ளை த‌வ‌றா சித்த‌ரிச்ச‌தாவே தான் ப‌டுது..

ஒரு சின்ன‌ திருத்த‌ம்.. சேதுல‌ ம‌ன‌ந‌ல‌ம் குன்றிய‌ பாத்திர‌மா வ‌ர்ற‌து ஈஸ்வ‌ரி ராவ் இல்ல‌... ராஜ‌ஸ்ரீ (க‌ருத்த‌ம்மா புக‌ழ்)

கையேடு said...

//நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது?//

உங்களது விமர்சனத்தில் இப்பகுதியில் மட்டும் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இது எவ்விதத்தில் நியாயம்? தனக்கு கண்தெரியாது என்பதாலும், பிச்சை எடுப்பதாலும், ஒருவருக்கு மணமுடிக்கக் கட்டாயப்படுத்தப்படும்போது அதை ஏன் அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்?
அங்கே எவ்வித முன்னறிமுகமில்லாத ஒருவரோடு உறவு கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார், அதிலும் அவருக்கு கண்தெரியாது என்ற உடல் குறைபாட்டினால்..

சீர்மையற்ற முகவமைப்பு கொண்டவருக்கான உணர்வுகள் குறித்து உங்கள் கருத்தில் உடன்படுகிறேன், மாற்றுக்கருத்தில்லை.

புலிகேசி said...

// அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்? தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்? நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது? // very good

raja said...

acutually the lady with same costume in the fil "sethu" is "Karuthamma" Rajasree... its not Easwari rao... its my small correction to LIVING SMILE.....

Amousia Team said...

//வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம். எத்தனை காரணங்கள் சொன்னாலும், ஆன்மிகத்தளத்தில் விளக்கமளித்தாலும் திரைப்படத்தின் முடிவும், தீர்வும் மிகவும் கண்டனத்திற்குரியது. //

Hello Vidhya,

Your article was very nice. But i can't accept your above mentioned words. See the "Aghori" they have the rights to give freedom from this birth. This is the believing system, like how we all are having the beliving concept about GOD... we all are never seen before how god is.

But we all can realise about god and his power, help, advice, way of living life, etc...etc... like that "Amsavallai" never seen before, thats what she had decided that she can't live this (sin full) life. So, she requested to take her soul, and she don't want to live like this kind of life again between all of the sin full people.

We all are having the both good or bad activities. But now a days i have seen many people they all are don't have such kindness on any human. its really painful.

Bala has explained everything through "Aghori". What he done his job as really good.

And your job also really good. your critic also nice.

I Welcome to you to give your honest opinion about anybody and anything.

All the very best.

Regards
Senthilvel S.P

RSV said...

I completely accept what Mr. Reeshan sherif said... And to add one thing... Arya did justice to his character... Summa Muga Unarchigalai vidham vidhamaaga Sivaji pool Kattuvathu mattum illai nadippu... Aghori enbavaen Unarchigalukku apparpattavan.. Thats wat Arya did... When compared to Oscar winner Slumdog this is a breath taking effort...

இராவணன் said...

//எல்லாவற்றையும் விட என்னை மேலும் குழப்பமடையச் செய்யும் மிகப்பெரிய கேள்வியொன்று உள்ளது. இத்திரைப்படத்தின் அடிநாதமே விளிம்புகளை சுற்றி அமையும் நிலையில், அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்? தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்? நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது? பொற்காலம் படத்தில் இறுதிக்காட்சியில் வடிவேல் "கறுப்பான எனக்கெல்லாம் உன் தங்கச்சியக் குடுக்கக்கூடாதுன்னுதான நினெச்ச?" என்று கேட்பது நினைவிற்கு வருகிறது. // மிக உண்மை. பார்க்கும் பொழுதே இந்த நெருடல் இருந்தது. ஆகச்சிறந்த சில காட்சி மயக்கத்தில் இதை தானாகவே மண்ணித்துவிட்டேன்.

sankarkumar said...

hi..vidhya..
i am new to blogger.unga biography book padichi kan kalingitan.

unga valipakkam romba arumai.
regards
sankarkumar
http://sankarkumarpakkam.blogspot.com/

Romeoboy said...

Where can i buy your book..

Tech Shankar said...

அவருடைய படங்களின் முடிவு சோகமாகவே இருக்கின்றது.

அதுதான் யதார்த்தம். எல்லாப்படங்களையும் போல இறுதியில் சுபம் போடும் தைரியம் (@#$@#$) பாலாவுக்கு இருந்ததில்லை.

சோகம் தான் முடிவு என்று தெரிந்திருந்தும் இறுதிவரை படம் பார்க்க வைக்கும் வித்தை தெரிந்தவர் அவர்.

Unknown said...

உங்களுடைய நான் கடவுள் திரை விமர்சனம் அருமை வித்யா. வித்யாசமான நடுநிலையான பார்வை. தொடர வாழ்த்துக்கள்.

Bharathi said...

அன்புள்ள வித்யா,

நல்ல விமர்சனம், வாழ்த்துக்கள் !

பாரதி

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

hai i saw ur book.why u r write in this blog?
anything pls start write...

வால்பையன் said...

கதையும், கதஒசொல்லியும் பல பரிணாமங்களில் இருக்க வேண்டுமென்பது எனது எண்ணம்.

செக்ஸின் பெருமையை படமாக எடுக்கும் வேளையில், எய்ட்சின் கொடுமையையும் சொல்லித்தானே ஆகவேண்டும்.

அகோரி நல்லவனா, கெட்டவனா என்று பாலா வாதிட வேண்டியதில்லை, அவனை நல்லவனா கெட்டவனா என்று நாம் தான் வாதம் செய்து கொண்டிருக்கிறோம்!

நான் கடவுளும் ஒரு கதைக்களம் அவ்வளவே!

coolzkarthi said...

நல்ல வித்தியாச விமர்சனம்......

இளங்கோ கிருஷ்ணன் said...

வித்யா,

உங்கள் விமர்சனம் படித்தேன் நன்று.

Dugi said...

Vidya
Come back.