மிருக விதூஷகம் - நாடக அழைப்பிதழ்

ணல் மகுடி வழங்கும்






மிருக விதூஷகம்


நாள் - இடம் - நேரம்


ஜீன் 10 (வியாழன்) குருமலை – கோவில் பட்டி மாலை 6 மணி
ஜீன் 12 (சனி) காந்தி ம்யூசியம் – மதுரை மாலை 6 மணி
ஜீன் 13 (ஞாயிறு) திருவண்ணாமலை மாலை 6 மணி
ஜீன் 14 (செவ்வாய்) ஸ்பேசஸ் – சென்னை மாலை 6 மணி




நாங்கள் இப்பூமியின் கோமாளிகள். உறவுகளற்ற தாய்மார்கள். எங்களுக்கு உடல்கள் இல்லை. நிலமில்லை, திசைகளுமில்லை. வனப்பறவைகளாக மிதந்தலைகிறோம். எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன. பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம். கோமாளி எனும் அன்னை நாங்கள். வசை மொழியினையும் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமைகளையும் கருத்துருவமான பழி வாங்குதல்களையும் கலையாக உருமாற்றுகிறோம்.


மிருகங்களிடமிருந்தும் ஜந்துக்களிடமிருந்தும் கோமாளி மொழியைக் கற்று வந்துள்ளோம். துயரக்கண்களில் அரவணைப்பைக் காண்கிறோம். துன்பத்திலிருந்து விடுபட நினைத்து மறுதுன்பத்தால் அரவணைக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்திலுள்ள பார்வையாளர்கள் தம் கண்ணீரால் இந்த விதூஷகர்களைக் காப்பாற்றுவார்கள். கலையின் மொழி கண்ணீருக்குள் அலைவுறுகிறது.





நமக்கே தெரியாமல் நமக்குள் ஊடுருவிய கேமராவின் ஜெராக்ஸ் புத்தியை சுவிங்கம் போல் கண்களால் மெல்கிறோம். குருடாக்கப்படும் முழிகண்களுடன் குழந்தைமை. எல்லோருக்கும் கட்டாயப் பரிசுகளாக்கப்பட்ட மீடியாவின் தூக்குக்கயிறுகள்.

எங்களுக்கு பூமியுருண்டையொத்த தலை, கரிசல் காடுகளின் நிலப்பரப்பைப் போன்ற அகன்ற நெற்றி, பட்சிகளைப்போல புருவங்கள். வேடிக்கை, அடிவாங்குதல், வசை சுமத்தல் இவை எங்கள் உதிரத்தில் கலந்து விட்ட விதிகள். தனியே நாங்கள் ஒருபோதும் சிரித்ததில்லை. நிலத்தில் முகமுரசி பனை விருட்சங்களில் இமைபதித்துச் சொல்கிறோம். மிருகவிதூஷக நிலையெடுத்து நாடக நிலத்திற்கு வருகிறோம்.

6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

சென்னையில் கலந்து கொள்கிறேன்

துளசி கோபால் said...

நாடகம் வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகின்றேன்.

வரமுடியாத நிலை. சண்டிகர் நகரில் இருக்கிறேன்.

ச.தமிழ்ச்செல்வன் said...

குருமலையில் நாடகம் பார்க்க வந்தபோது உங்களைச் சந்திக்க நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.மதுரையில் ஏற்கனவே நாம் சந்தித்த போதும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை-குருமலையில் போலவே.உங்கள் புத்தகம் வாசித்திருக்கிறேன்.

மிருக விதூஷகம் மிக முக்கியமான கலாபூர்வமான அரசியல் நாடகமாக வந்திருக்கிறது.அத்தனை கலைஞர்களும் (நீங்கள் உட்பட) என்ன அற்புதமான கலையைத் தங்கள் உடலின் வழியே வெளிப்படுத்தினார்கள்!அதிலும் அந்த நாய்கள் குரைக்கும் காட்சியும் கண் பார்வையற்றவர்கள் வரும் காட்சியும் சிலிர்க்க வைத்தன.

said...

தோழி வித்யா,

சென்னையில் நாடகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது, இதில் நடித்த நண்பர்கள் மிகக் கடுமையான உழைப்பை செலுத்தியிருந்தனர், நாடகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் அவற்றை கச்சிதமாக பயன்படுத்திய விதமும் அற்புதமாக இருந்தது. நாடகம் அது பேசிய பிரச்சணைகளை உணர்வு பூர்வமாக நம் முன் வைத்தது நண்பர்களின் நடிப்பு. இந்த நாடகத்திற்கான உழைப்பு உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்தது. நாடகம் முடிந்த பின்பு விழுந்து புரண்டு நடித்த ஒரு நண்பருடைய தோளில் இரத்தம் படிந்த துண்டு ஒன்றை பார்த்தேன்.

தோழமையுடன்
வல்லவன்

positron said...

I had got a chance to see the play "Mirugavidhusham" in pondicherry (1 Aug 10). I am appreciating all the actors.. their performance is jus mindblowing.. but the thing I wanna tell abt the play is...
I felt obscure about the scene makings and dialogs. I felt very hard to understand the play.. am not sure whether the play was created purposefully in such way or the director expects only some sort of the viewers who can understand the play.. but am respecting all role player's dedication and performance..

சென்ஷி said...

நாடகம் வெற்றிகரமாய் நிகழ வாழ்த்துகள் ஸ்மைல்..