புறக்கணிக்கப்படுவதும், அவமானப்படுவதும், வறுமையும் என் வரலாற்றின் நிரந்தர அடையாளங்கள். நாசகர இந்தியாவில் திருநங்கையாக பிறந்ததைவிட கண்ணியமாக வாழ நினைத்திடும் திருநங்கையாக பேராசை கொண்டதன் பின்விளைவு இவை. அதிலும் நாடக கலைஞராக வாழ்ந்திட ஏக்கம் கொண்டதன் உச்ச தண்டனையும்.
இதுநாள் வரை இந்திய அரசாங்கத்தால் மட்டுமே பரிசளிக்கப்பட்ட புறக்கணிப்பும் இதர புண்ணாக்குகளும் இன்று பிரான்ஸ் அரசாங்கத்தாலும் வாரி வழங்கப்பட்டது.
தோழர் ஷோபா சக்தியும், இதர இலக்கிய ஆர்வலர்களும் ஆண்டுதோறும் நடத்தும் 2011 இலக்கியக்கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். France Embassy எனது VISAவை மறுத்துவிட்டது. காரணம், நான் பிரான்ஸ் சென்றபின் திரும்பி வரவேன் என்ற உத்திரவாதம் இல்லையாம். ( சொந்த ஊர்லயே சோத்துக்கு வழியில்ல. பிரான்ஸ்க்கு போயி கவர்னர் ஆயிருவேன்னு பயப்படுறாங்க!! )
அவநம்பிக்கைக்கு அவர்கள் தரும் காரணங்கள்
1. திருமணமாகதவள்
2. குடும்பப் பிண்ணனி இல்லாதவள்.
3. நிரந்தர வருமானம் மற்றும் வேலையின்மை.
4. மிகக் குறைவான வங்கிக் கணக்கு, மற்றும் என் பெயரில் குறிப்பிடும்படி சொத்து இன்மை.
திருநங்கைகளை மனுஷியாகக்கூட பார்க்காத நாட்டில் என் திருமணம் எப்படி சாத்தியம்?
எந்த குடும்பம் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளும், என்ன படித்தும், என்ன தகுதி இருந்தும் இந்த புண்ணிய பூமியில் திருநங்கைகளுக்கு வேலை என்பது பிச்சையும்/பாலியல் தொழிலும்தான் என்று France Embassy யார் எடுத்து சொல்வது. வேலையில்லாத நிலையில் சொத்துக்கு எங்கே போவது.
எத்தனை DOCUMENTS, எத்தனை RECOMMENDATION LETTERS, எத்தனை PAPER CUTTINGS, எத்தனை PHOTOS, எத்தனை அலைக்கழிப்புகள், இன்னும் எத்தனை, எத்தனை. போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை விழா குழுவினர் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும், மேற்படி காரணங்களுக்காக VISA மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேரடியாக திருநங்கைகளுக்கு VISA கிடையாது என்றே சொல்லியிருக்கலாம்.
நண்பர்களே அந்நிய தேசம் போகமுடியாததல்ல... இத்தேசம் மட்டுமன்றி அந்நிய தேசமும் என்னை புறக்கணிக்கும் நிலை, என்னை ஆற்றா கோபத்தில் இருக்குகிறது.
புரிதலுக்கு நன்றி!!
எப்பொழுதையும் விட இப்பொழுது, இந்த நொடியில் இத்தேசத்தை ஆனமட்டும் சபிக்க விரும்புகிறேன்.
எனது ஆற்றாமையில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அதே சமயம் இரண்டு விசயங்களை நீஙகள் சரியாக புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
1. சிலர் என் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள். இல்லை.
பணவரத்து என்ற ஒன்றைதவிர, நான் மீண்டும் திரும்பி வருவேன் என்பதற்கான பல சான்று கலை தந்துள்ளேன். இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து மற்றும் அவரது அடுத்த படம் சாமுராயிலும் பணிபுரிய இருப்பது என்பதற்கான சான்றுகளை அளித்துள்ளேன். அதேபோலவே இதுவரையிலான எனது நாடகப் பணிகள், இனியும் பங்காற்றவுள்ள நாடகப்பணிகள் அனைத்திற்குமான சான்றுகள். எழுத்தாளர், சமூகப் போராளி என்பதற்கான பல சான்றுகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தையும் தான் காட்டியுள்ளேன். கிட்டதட்ட 60, 70 டாகுமென்ட்ஸ் இருக்குமென நம்புகிறேன். இது போக எனது பொருட்செலவு அனைத்தையும் அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதையும் காட்டியுள்ளென்.
பணமன்றி அவர்கள் சொல்லும் மற்ற காரணங்கள், திருமணமின்மை, குடும்பமின்மை, சொத்தின்மை..
இந்திய தேசத்தில் இம்மூன்றும் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது தானே காரணம். இந்தியாவில் எனக்குள்ள பணிகளையும், பல்வேறு தகுதிகளும், நான் திரும்பி வரவேண்டிய தேவையை நிறுவிய போதும், மேற்படி மூன்றினை மட்டுமே அவர்கள் கூறும் போது வேறு எது காரணமென்று கூறமுடியும்.
2. நான் ப்ரான்ஸ் போகததில் எனக்கு வறுத்தமொன்றுமில்லை. அதேசமயம் , என் பாலின அடையாளம் காரணமாக நிகழும் எந்த புறக்கணிப்பையும் சகித்துக்கொள்ளும் பக்குவமின்மை மட்டுமே என்னை நிலைகொள்ளச் செய்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும். உங்கள் பார்வைக்கு இந்த அவலத்தை முன்வைப்பது மட்டுமே என் நோக்கம்.
FUCK OFF INDIAIN BUREAUCRACY
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் அனுபவம், திருநங்கை, வயித்தெரிச்சல்
Subscribe to:
Post Comments (Atom)
27 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
விதயா, இது திருநங்கைக்கான பிரச்சினைன்னு சொல்ல முடியாது. இந்த மாதிரி விசாக்களுக்கு முதலில் உங்க வங்கி கணக்கில் சரியான அளவில் பணம் இருக்கான்னு பார்ப்பாங்க. அது இல்லாட்டி கண்டிப்பா கிடைக்காதுதான். இது உங்களுக்கு மட்டுமே, அதாவது திருநங்கை என்ற காரணத்துக்காக மட்டுமே நடந்த விசயம்னு எடுத்துக்க வேணாம். பொதுவா நடக்கிற சமாச்சாரம்தான். விசாவுக்கு காகிதங்களை அள்ளி கொட்ட வேண்டித்தான் இருக்கு. ஒவ்வொரு 3 வருசத்துக்கும் அமெரிக்காவுல விசாவுல இருக்கிறவங்களுக்கு நடக்கிற பிரச்சினைதான். பிரான்ஸ் இந்த விசயத்துல பரவாயில்லைன்னே சொல்லலாம். கவலைப்படாதீங்க
வருத்தப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்
விரைவில் விசா கிடைக்கும், தளர வேண்டாம்
மற்ற இ.யூ கண்ட்ரிக்கு சென்று அங்கிருந்து லோக்கல் ப்ளைட்டில் போய்விடலாமா ? நார்வே முயற்சி செய்யலாமா?
It is such a shame Smile.
I thoroughly understand your agony but also feel very sad about the situation.
Why cant you take this as a challenge?
We shall meetup sometime and discuss about how to work on this further and rectify the shortcomings from our side!
Cheerup, This is not an end.
Let us learn and stand up.
France is not an end. U will have to travel a lot!
உங்களுடைய வருத்தத்தில் இணைந்து கொள்கிறேன். ஆனால் அதே வேளையில் இது போன்ற நடைமுறைகளில் உங்களை அழைப்பவர்கள் வங்கி பண உத்திரவாதத்துடன் அழைத்துச்செல்ல இயலும் என நினைக்கிறேன்.
//இதற்கு நேரடியாக திருநங்கைகளுக்கு VISA கிடையாது என்றே சொல்லியிருக்கலாம்//
பொதுவாக பெரிய நிறுவனம் நடத்துபவர்கள், அதில் வேலை செய்பவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு விசா கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. திருநங்கை என்கிற தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இந்தியா / இலங்கையில் இருந்து டுரிஸ்ட் விசாவில் செல்லும் பலர் அங்கேயே தங்கிவிடுகிறார்கள்.
உங்கள் கோபம் சரியானதே!!ஆனால் இதை மாற்ற நாம் வெகுதூரம் போகவேண்டும்...நம்பிக்கை இழக்கவேண்டாம் நண்பரே!!
mmmmmmmmmm
உங்கள் வேதனை; தார்மீக ஆவேசம் புரிகிறது. ஆனால் நமது நாடுகளைச் சேர்ந்தோருக்கு இதுவே நிலை. நீங்கள் குறிப்பிட்ட அவ்வளவும் இருந்தாலும் சிலசமயம் நிராகரிக்க புதுப் புது புதுமைகள் தேடுவார்கள்.
இதை சாரு படிக்கவேண்டும். அவர் தான் மனிதனை மதிப்பதில் பிரான்சு முதன்மையான நாடு என்பது போல் எழுதுபவர்.அவர் எழுதுவதைப் படித்தால் பிரான்சியரே நமட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள்.
Hello Sister, Dont wory, and France always Rejected all Visa so you dont feel they rejected you only and they dont mind about who you are.? so dont wory anything.. you wil go oneday.. all the best
Don't curse this nation Vidhya...this nation already is burdened with infinite curses, ....be compassionate to your future children of this land, as they are ones who will carry this burden
என்ன வித்யா,
இப்படியெல்லாமா செய்றாங்க? ச்சே....வெறுத்துப்போகுது :(
வருத்தமாகத்தான் இருக்கிறது சகோ:((
உங்கள் ஏமாற்றமும் வலியும் புரிகிறது. மனதை தளரவிடாதீர்கள், மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்யுங்கள்.
:)
இந்த எழுத்தேணும்... கதவை திறக்க உதவுகிறதா என்று பார்ப்போம் தோழி.
வித்யா
என்ன சொல்றது தெரியலை, மனபாரம் மட்டும் மிச்சம்.
\இந்த நொடியில் இத்தேசத்தை ஆனமட்டும் சபிக்க விரும்புகிறேன்.\
வேண்டாம் தாயே. உன்னை போன்று மனது வெறுத்து இடப்படும் சாபத்திற்கு வலிமை அதிகம்.
தோழி வித்யாவுக்கு... இந்த உலகம் பெருமைப்படும்படியாக செயலை ஒரு நாள் நிச்சியம் நீங்கள் செய்வீர்கள்.. அப்பொழுது உங்கள் வேதனை ஒரு ஆவணமாக இருக்கும். கலங்கி சோர்வுறாமல் நிமிர்ந்து எழுங்கள். இந்த உலகில் உள்ள எல்ல திருநங்கைகளுக்கும் முன்னோடியாக ஒரு கௌரவமான வாழ்க்கையை உங்கள் சிந்தனை பெற்றுத்தரும். பொழுதுபோக்காகவோ.. போலிநம்பிக்கையோ என் வார்த்தைகள் அல்ல.. உங்களை உள ரீதியாக பாதிக்கபட்ட ஒரு சக நண்பணின் கைகோர்த்தல் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
உங்கள் வருத்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில்
உண்மை இதுதான்.
visa - approve செய்யும் அதிகாரிகளுக்கென்று சில நடைமுறைகள் உள்ளன, அவை பொருந்திவரும் பட்சத்தில் visa அங்கீகரிக்கவோ அல்லது மறுக்கபடவோ செய்யலாம். நீங்கள் குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தும் அனைத்து visa -மனுதாரர்களுக்கும் பொதுவானவை. நீங்கள் திருநங்கை என்பதாலோ அல்லது வேலை/சொத்துக்கள் இல்லாத ஆதரவற்றவர் என்பதாலோ அல்ல. இந்தியா, பிரான்ஸ் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த விதிமுறைகளை வைத்துள்ளன.
உங்களுக்கு நடந்தது மற்ற பிறர்க்கும் நடைபெறும் ஒரு சராசரியான நிகழ்வே, உங்கள் நிலையில் இருந்து பார்க்கும்போது அதன் தாக்கத்தையும், வெறுப்பையும் புரிந்துகொள்ள முடிகிறது.
visa - நடைமுறைகளில் மாற்றம் செய்து உண்மையான காரணக்களுக்காக பயணம் செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும்
It is unfortunate that you did not get the Visa to participate. But for this visa rejection issue, for this issue alone, India is not responsible. It is France which seems to have an open policy!
You Did... ஸ்மைல் பண்றவங்க சாபம் கொடுக்கலாம், யார் தப்பு சொல்ல இயலும்? ஆதிக்க அரசியல் தலைவர்கள் தலை உருளட்டுமே...
எனது ஆற்றாமையில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அதே சமயம் இரண்டு விசயங்களை நீஙகள் சரியாக புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
1. சிலர் என் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள். இல்லை.
பணவரத்து என்ற ஒன்றைதவிர, நான் மீண்டும் திரும்பி வருவேன் என்பதற்கான பல சான்று கலை தந்துள்ளேன். இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து மற்றும் அவரது அடுத்த படம் சாமுராயிலும் பணிபுரிய இருப்பது என்பதற்கான சான்றுகளை அளித்துள்ளேன். அதேபோலவே இதுவரையிலான எனது நாடகப் பணிகள், இனியும் பங்காற்றவுள்ள நாடகப்பணிகள் அனைத்திற்குமான சான்றுகள். எழுத்தாளர், சமூகப் போராளி என்பதற்கான பல சான்றுகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தையும் தான் காட்டியுள்ளேன். கிட்டதட்ட 60, 70 டாகுமென்ட்ஸ் இருக்குமென நம்புகிறேன். இது போக எனது பொருட்செலவு அனைத்தையும் அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதையும் காட்டியுள்ளென்.
பணமன்றி அவர்கள் சொல்லும் மற்ற காரணங்கள், திருமணமின்மை, குடும்பமின்மை, சொத்தின்மை..
இந்திய தேசத்தில் இம்மூன்றும் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது தானே காரணம். இந்தியாவில் எனக்குள்ள பணிகளையும், பல்வேறு தகுதிகளும், நான் திரும்பி வரவேண்டிய தேவையை நிறுவிய போதும், மேற்படி மூன்றினை மட்டுமே அவர்கள் கூறும் போது வேறு எது காரணமென்று கூறமுடியும்.
2. நான் ப்ரான்ஸ் போகததில் எனக்கு வறுத்தமொன்றுமில்லை. அதேசமயம் , என் பாலின அடையாளம் காரணமாக நிகழும் எந்த புறக்கணிப்பையும் சகித்துக்கொள்ளும் பக்குவமின்மை மட்டுமே என்னை நிலைகொள்ளச் செய்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும். உங்கள் பார்வைக்கு இந்த அவலத்தை முன்வைப்பது மட்டுமே என் நோக்கம்.
மிகவும் வருந்த வைத்த செய்தி வித்யா
சகோதரி,
நீங்கள் ஏன் ஃப்ரான்ஸ் போக வேண்டும்?ஏன் கல்ஃப் போன்ற நாடுகளுக்கு வரக்கூடாது? அங்கே இது போலெல்லாம் வங்கி வைப்பு, உறுதிப்பத்திரம் கேட்பதில்லை நேர்முகத்தேர்வுகளும் இல்லை . எல்லாவற்றுக்கும் மேலே அரபி மொழி தெரிந்திருக்க தேவையில்லை.இங்கு வேலை செய்யும் பெரும்பாலானோருக்கு ஒரு வார்த்தை கூட அரபியில் பேசவோ எழுத படிக்கவோ தெரியாது.தவிர இங்கே பிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து நிறைய திருநங்கைகள் வேலை செய்வதால் விசா எதுவும் பிரச்சனையிருக்காது என நம்புகிறேன்.இதில் சென்று உங்கள் விருப்பமான துறைக்கான வேலைய தேட துவங்கலாம்.
http://www.gnads4u.com/jobs
hi vidhya,
it was heartbreaking to read your comments. ofcourse these kind of injustice is ubearable. but i feel that within this dicriminated country, you have grown much broader and bigger. compare with the our trans sisters, who have been denied even a normal dignified survival.. my heart always bleeds when i see my fellow trans sister begs or waiting for a client to provide sexual pleasure. same way i have seen you in much bigger platform with so much empowerment. lots of my friends in social work field mention about the good sign you left behind in your existance. so be brave and bold. going abraod or attending seminar overseas alone is not an achievement. you are doing much better things here and have good reputation. keep fight and move forward. leap over borders, least concerned. regards...olga.
Hi Vidya,
I read your auto-biography last week which brought tears in my eyes. My heart was heavy after reading the book. I don't know the problems that transgenders undergo till I read your book. Now I completely understand how poor the transgenders are in the society and why they select begging as the profession. I value them. Thanks for making us understand the problems of transgenders.

Post a Comment