
புதுவகைப் பறவையென பறப்பதாக
கனவு கண்டதுண்டு
ஆடம்பரமான அலங்காரத்தில்
மணமகள் கோலத்தில் நாணிக் கோணும்
கனவும் வருவதுண்டு
என் கரம்படும் போது மட்டும்
மலர்ந்து மணம்வீசும் வண்ண பூக்களும்
கனவில் வருவதுண்டு
குடைபிடித்து செல்லும் தமிழாசிரியையாக,
பென்சிலை தேடும் மாணவியாக,
மழைநீரில் குதூகளிக்கும் சிறுமியாக,
இன்னும் இன்னும் கனவுகள் வருவதுண்டு
எப்போதும் கண்டதில்லை கனவு
இப்போது நான் கைதட்டி பிச்சை கேட்பதைப் போல….
கனவு
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
வகைகள் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)

1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
ஸ்மைலி நாம் கண்ட கனவுகள் ஒருநாளும் பலித்ததில்லை நாம் பெண்ணான தருணம் ஒன்றை தவிர........
Post a Comment