இல்லாமல் போன சகோதரித்துவம்

நீண்ண்ண்ண்...ட இடைவேளைக்குப் பிறகு இன்று என் தங்கையிடம் அலைபேசியில் சிறிது நேரம் பேசினேன்.



கடைசியாக அவளை நேரில் பார்த்த போதோ 11-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். என் மனச் சித்திரத்தில் அவள் இன்னமும் 9-ம் வகுப்பு தங்கையாகவே பதிந்திருக்கிறாள். எத்தனை வருட இடைவெளியென்று கணக்கு தெரியவில்லை இன்று அவளிடம் பேசும் போது, அவள் BCA படிப்பதாக சொல்கிறாள். ஒரு இளங்கலை மாணவியாக வளர்ந்திருக்கும் அவள் குரலும், அதிலுள்ள தெளிவும் ஆச்சர்யமாக உள்ளது. காலமும், என் கோலமும் எவ்வளவு பெரிய இழப்பை எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது.



இரண்டு அக்கா, ஒரு தங்கையென
அதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம்
சகோதிரிகளுக்குள்ளான புன்சிரிப்பும், கேளிக்கையும்
இல்லாத வறண்ட பாலையாய் பொலிவிழந்து போனது

இரண்டு அக்கா, ஒரு தங்கையென
எள்ளலும், சீண்டல்களும் கொண்டாட வேண்டிய
வளர் இளம் பருவம்
குறுகுறுப்பும்,
பின் தொடரும் ரோமியோக்கள் குறித்த பெருமிதங்களும்
அந்தரங்க அவஸ்களை பகிர்ந்து கொள்ளும் தோழமையும்
இல்லாத வறண்ட வானிலையாய்
வண்ணமிலந்து போனது வளர் இளம்பருவம்


பாழாய்போன அந்த ஆணுடலால்
பாழாய்ப்போனது என் வசந்த காலம்.

எல்லாம் இழந்து பெண்ணுடல் பேணிய போதும்
இரண்டு அக்கா, ஒரு தங்கையென
அதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம் முதல்
எப்போதும் இல்லாமல் போனது எங்களுக்குள் சகோதரித்துவம்

இரண்டு அக்கா, ஒரு தங்கையென
அதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம்
பாழாய்போனது
பாழாய்போன அந்த ஆணுடலால்

5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

கவலை வேண்டாம் சகோதரி நாம் என்ன பாவம் செய்தோமோ?? இப்படிப்பட்ட நிலை நமக்கு....

Unknown said...

kavalai kollavendiyavarakalae koocham illamal thiriyum ulagil neengal kavalai kollum kaaranam ennavo... intha nilaiyum maarum sagothariyae :)

aravintraj said...

கவிதையை படித்தவுடன் மனம் மிகவும் வலித்தது. கவலைப்படாதீர்கள் சகோதரன் நான் உள்ளேன், உங்கள் ஆற்றாமையை கேட்க

Unknown said...

intha ulagil ethuvum niranthram illai maatrangal mattumae nirantharam kavalai vendam vazhtukal thozhiyae

Unknown said...

kavalai vendam sagothariyae,maatrangal mattumae nirantharam...............