விரும்புவதெல்லாம் ஒன்றே

விரும்புவ்தெல்லாம் ஒன்றே


விரும்புவதெல்லாம்

இந்த மரத்தைப் போலவும்

இந்த பறவையை போலவும்

இந்த மிதிவண்டியைப் போலவும்

இவ்வுலகில் வாழத்

தகுதி பெற்றிருத்தல்

ஒன்றே!!

எனது வலைப்பூவிலிருந்து இக் கவிதையைப் படிக்க நேரும் யாரும் இந்த கவிதை எனது (எங்களது) ஆதங்கத்தைச் சொல்ல வரும் கவிதையாகவே உணரலாம். இருந்தாலும், உண்மையில் இது கவிஞர் தேவதேவனின் கவிதையாகும்.

சமீபத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்த சிபிச் செல்வன் தொகுப்பில் வெளிவந்த காலச்சுவடு கவிதைகள் (1994-2003) என்ற கவிதை நூலிலிருந்து இந்த கவிதை என் கண்ணில் பட்டது.

யுவன் தொடங்கி லஷ்மி மணிவண்ணன், கருணாகரன், மனுஷ்ய புத்ரன், சுகிர்தராணி, வியாகுலன், யவனிகா ஸ்ரீராம், ஹவி, சல்மா, விக்ரமாதித்யன் என 100 கவிஞ்சர்களின் 200 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. அவற்றில் சில மட்டுமே படிக்க நேர்ந்தது. படித்த அனைத்து கவிதைகளும் என்னைக் கவர்ந்த போதும், எளிமையான, ஆனால் கூர்மையான கேள்வியை உள்ளடக்கிய இக்கவிதை மட்டும் என் நெஞ்சில் நின்று விட்டது. வெகுகாலமாக எங்களுக்குள் ஊடாடி வரும் அடிப்படைக் கேள்வியை இது முன்னிருத்துவாதாக நான் உணர்கிறேன்.


ஏனென்று உங்களுக்கு புரிகிறதா...??

1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நாமக்கல் சிபி said...

//இவ்வுலகில் வாழத்

தகுதி பெற்றிருத்தல்

ஒன்றே!!
//

பெறவேண்டும். பெற்று விடுவீர்கள். பெற்றிருக்கிறீர்கள்.