டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி

சமீபத்தில் நான் படித்து முடித்த புத்தகத்தின் பெயர் "டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி". மிகவும் ரசித்து படித்த புத்தகம். ஜப்பானில் முன்பு இருந்த டோமாயி என்ற வித்தியாசமானரயில் பள்ளி ஒன்றில் படித்த மாணவி தம் பள்ளி நினைவுகளை முன்னிறுத்தி எழுதிய அருமையான நாவல் இது.

நாம் அனைவருமே பள்ளியில் படித்து வந்தவர்கள் தான், நம் அனைவருக்குமே அந்த நினைவுகள் என்றென்றும் பசுமையானதும், மறக்க முடியாததும் தான். அப்படியிருக்க இதில் மட்டும் என்ன special...? special தான்.... இந்த பள்ளியே special தான்... வகுப்பு, தோட்டம், தலைமை ஆசிரியர், பாடத் திட்டம், பயிற்சிகள் என அனைத்துமே special, special என total special, totally different. சுதந்திரம், சுதந்திரம் என்றால் பாடத் திட்டத்தில், பாடம் கற்றலில், கல்வி நேரத்தில், விளையாட்டில் மேலும் சில (actually பல!!) பயிற்சித் திட்டத்திலும் என எல்லாவற்றிலும் சுதந்திரம், அவையில்லாமே சிறப்பு தான்.

குறிப்பாக, physically disabled குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் விதமான பயிற்சிகள், இயற்கையிடமிருந்து பாடம் கற்றல், குழந்தைகளின் (பேய், பிசாசு) பயத்தைப் போக்கக் கூடிய பயிற்சிகள், ஆரோக்கியம் தரக்கூடிய உணவு முறை, விவசாயியை அழைத்து வந்து நடைமுறை விவசாய பாடம் எடுக்க செய்தல், குழந்தைகளுக்கு உவகையூட்டும் வித்தியாசமான (மன ஆரோக்கியத்துக்குமான) விளையாட்டு போட்டிகள், personality developmentஐ மிக இளம் வயதிலே வளர்க்கக் கூடிய வகையில் குதூகலமான பயிற்சிகள், பாடத்தில் அவரவர்க்கு இயல்பாக ஆர்வமுள்ள துறைகளை அவர்களாக தேர்ந்தெடுக்கவும், அதில் ஆர்வம் காட்டவும் கூடிய பாடத்திட்டம், இவற்றோடு நேர்த்தியான முறையில் குழந்தைகளுக்கு நூலக அறிமுகம்,இசை, நாடக அறிமுகம் இவற்றோடு சமையற்க்கலை அறிமுகம் என எல்லாமே இப்பள்ளியின் மிக முக்கியமான சில.. மேலும் பல புத்தகத்தில்....

இத்தகைய சிறப்பான முறையில் பாடத்திட்டம் அமைத்து, பள்ளி நடத்திய அந்த தலைமை ஆசிரியர் வியக்கத்தக்க் வகையில் போற்றப்பட வேண்டிய மனிதர்..

நாவலின் முக்கிய கதாபாத்திரமாக வரும் மாணவியான நாவலாசிரியர் இதனை வெறும் அனுபவமாக மட்டும் எழுதி விடாமல், தனது இளம் பள்ளிப் பருவ நாட்களை மிக மிக நேர்த்தியாக நினைவு கூர்ந்து சுவைபட எழுதியுள்ளார்.

நூலைப் பற்றி நூலிலிருந்து...

இந்த நூலில் உள்ள இளமைக்கால அனுபவங்களின் தொகுப்பு இரண்டாம் உலக யுத்தகளத்தில் டோக்கியோவில் இருந்த ஒரு முன்ம்ஹ்திரியான பள்ளியைப் பற்றிக் கூறுகிறது. அப்பள்ளியில் கற்பதில் மகிழ்ச்சி, சுதந்திரம், அன்பு அடங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறான இப்பள்ளியில் பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. அப்பள்ளி, வித்தியாசமான ஒருவரால், அப்பள்ளியை நிறுவியவரும் தலைமை ஆசிரியருமான திரு. கோபயாஷி என்பவரால் நடத்தப்பட்டது. அவர், கருத்துக்கள் வெளியிலுவதிலும், செயல்படுத்துவதிலும் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டுமெனத் திடமாக நம்பியவர்.

இந்நூலில் வரும் சிறுமி டோட்டோ-சான், உண்மை வாழ்வில் டெட்சுகோ குரோயாநாகி, ஜப்பானின் தொலைக் காட்சியில் தொன்றும் புகழ்பெற்ற ஒருவராய் உள்ளார். இவர் தனது வெற்றிக்குக் காரணம் அற்புதமான அப்பள்ளியும் அதன் தலைமை ஆசிரியருந்தான் எனக் கூற்கிறார்.

பல்வேறுபட்ட வயதுடைய மக்களின் மனதைக் கவர்ந்த இந்நூல் ஜப்பானில் மிகச் சிறந்த விற்பனையைப் பெற்றுள்ளது. இந்நூல் வெளிவந்த முதல் ஆண்டிலேயே அதன் விற்பனை 45 மில்லியன் மார்க்குகளை எட்டியுள்ளது.


ஆசிரியரைப் பற்றி...

1975 முதல் ஜப்பான் தொலைக்காட்சியில் 'டெட்சுகோ அரங்கம்' எனும் பேசும் பகுதியை வழங்கி வருகிறார். சமீபத்தில் தொலைக்காட்சியின் உயர்ந்த பரிசைப் பெற்றவர். இப்பகுதியும், இவர் வரும் பிறகாட்சிகளும் தொலைகாட்சியில் காண்போரின் எண்ணிக்கையை அதிகம் கொண்டது. இவர் தன் வாழ்வைச் சேவைப்பணிக்கும் அர்ப்பணித்துள்ளார். அமெரிக்காவின் காதுகேளாதோர் தேசீய நாடகக்குழுவை இருமுறை ஜப்பானுக்கு வரவழைத்து அவர்களுடன் சைகை மொழியில் நடித்தவர். இவரது நூல் உரிமைத் தொகையில் நிறுவப்பெற்ற டோட்டோ-சான் அறக்கட்டளை நிதியம், காது கேளாத நடிகர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கிறது. அவர்களுடன் இவர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றுவார். 'செங்கரடிப் பூனையும் நானும்' என்ற நூலின் ஆசிரியர். பேராற்றல் வாய்ந்த செங்கரடிப் பூனைகளை, நீண்டகால ஆர்வத்தோடு பாதுகாப்பவராகவும், ஜப்பானின் உலக வனவிலங்கு நிதியத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

டோக்கியோவில் பிறந்த டெட்சுகோ குரோயாநாகி, ஜப்பானின் தொலைக்காட்சியில் தோன்றும் சிறந்த நபராகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டோக்கியோ இசைக் கல்லூரியில் இசை நாடகப் பாடகியாகப் பயின்று நடிகயானவர். சிறந்த தொலைக்காட்சிப் பணிக்கான பரிசும் பெற்றவர். படிப்பதற்காக நியூயார்க் சென்று வந்தவர்.படித்த பின் எனக்கு தோன்றியது...

# இப்படி ஒரு வகுப்பில் நமக்கு படிக்க குடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம்.

# இந்நாவலை வைத்து நிச்சயம் ஒரு அருமையான படம் யாரவாது எடுத்தால் தேவலை (ஒருவேளை எடுத்திருக்கலாம், தெரிஞ்சா சொல்லுங்கப்பா). ஏனெனில் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அச்சிறுமியின் பழைய பள்ளி நிகழ்ச்சியை படிக்கையில் மனதில் அருமையான காட்சி விரிகிறது.

அதேபோல, ஒருமுறை குழந்தைகள் அனைவரும் பாடலுக்கேற்ப எளிய நடன உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். அதன் எளிய, நுணுக்கமான வர்ணனையும், பெற்றோர்கள் அதனை கண்டு உவகை கொள்ளும் காட்சி (சே... chance-ஏ இல்லை... கண்டிப்பா இத படமா எடுக்கணும்)

யசுயாகி-சான் மரணத்தின் போது விவரம் புரியாத அந்த சிறுமி அவனது இறந்த உடலிடம் அடுத்துமுறை அவனைக் கானும் போது அவனது புத்தகத்தை திருப்பித் தருவதாகக் கூறுவதும் நூலின் நெகெழ்ச்சியான இடங்கள் (இன்னும் இருக்கு... முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள்)

நூல் பெயர் : டோட்டோ சான்,
ஆசிரியர் : டெட்சுகோ குரோயாநாகி
தமிழிலாக்கம் : சு. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்
வெளியிடு : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுதில்லி - 110016
விலை : ரூ.35/-

2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Thangamani said...

It is very nice book. I enjoyed it and recommended it to my friends.
Here you can find a post on that and you can also download the English version.

http://bhaarathi.net/ntmani/archives/date/2006/01/05/

லிவிங் ஸ்மைல் said...

நன்றி தங்கமணி, லிங் தந்ததற்கும், பின்னூட்டமிட்டதற்கும்,

தங்கள் லிங்கில் இருந்த ஆங்கில பதிப்பினையும் படித்தேன்.. எளிமையாக, அருமையாக எனக்கே புரியும் படி (ஏற்கனவே தமிழில் படித்ததாலும் இருக்கலாம்) இருந்தது..

நன்றி!!

மற்றபடி இதை சினிமாவாக எடுக்கப்பட வேண்டும்(I mean நான் இல்லை, யாராவது நல்ல இயக்குநர்கள்) என்று விரும்புகிறேன். உங்களின் கருத்தென்ன...?