அதிர்ச்சிக்குள்ளாக்கிய சோமாலியா புகைப்படங்கள்


தெரிகிறதா எப்படிபட்ட பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....

சோமாலியா ஒரு வறண்ட பூமி என்று ஏதோ பாடம் போலத்தான் எனக்குத் தெரியும், இந்த இ-மெயில் படங்கள் என் வயிற்றைப் புரட்டி இதயத்தை கணமாக்கி விட்டது.. இத்தகைய வறுமைக்கு என்ன காரணம், என்ன நடந்தது, நடக்கிறது,

தெரிந்தவர்கள் சொல்லவும், லிங்க் இருந்தாலும் அனுப்பலாம்...

" சே, வெக்கமா இருக்குப்பா...."

27 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

மாசிலா said...

படு பயங்கரம். வேறு வார்த்தைகள் இல்லை!

வடுவூர் குமார் said...

ஐய்யையோ..
தயவுசெய்து இந்த மாதிரி படங்களை போடாதீர்கள்.
துக்கத்தில் வார்த்தைகள் தாறு மாறாக விழுகிறது

மாதங்கி said...

ரொம்ப கொடுமை, இவர்களுக்கு நிதி ஆதரவு திரட்ட ஏதேனும் குழுக்கள் உள்ளதா, தெரிந்தால் சொல்லுங்கள்

ஒரு பக்கம் வீணாகும் உணவு பொருட்கள்- கைத்தொலைபேசி கணிணி யுகத்தில் இப்படி ஒரு பயங்கரமா

ENNAR said...

ஐயோ பவம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை இந்த ஐநா சபை என்ன செய்கிறது தொண்டு நிருவனங்கள் செத்து விட்டதா? அது மக்கள் அல்லது பூச்சுகளா?

சின்னபுள்ள said...

தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில்.....

உலகம் அழிய இருப்பதற்க்கு முன்னெற்பாடுகள் தெரியுது இங்கே..!!!

நாம் ஒரு நாள் எவ்வளவு உணவு வேஸ்ட் செய்கிறோம்..

அவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்
பிராத்திப்பதை தவிர..

பூக்குட்டி said...

மனதை மிகவும் பாதித்த பதிவு..!

சபாபதி சரவணன் said...

ஆம் லிவிங்ஸ்மைல்,

இப்படிப்பட்ட பூமியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கான காரணங்கள் இங்கு விவரிக்கும் அளவிற்கு சுருக்கமாக இல்லை. ஒற்றை வார்த்தையில் காரணத்தை சொல்ல விழைந்தால் -- 'வல்லரசு நாடுகள்'

ஆனால் --

இதைப்போன்றதோர் வாழ்நிலை எம் நாட்டு மக்களுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லை. நாட்டை ஆண்ட--ஆண்டுகொண்டிருக்கும் ஓட்டு பொறுக்கிகளின் 'பன்னாட்டு மய' மாமா வேலையினால் இந்நிலையை நோக்கி நாம் வேகமாக உந்தப்படுகிறோம்.

'கனவு வித்தகர்' அப்துல் கலாமின் 'வல்லரசு இந்தியா 2020' நடக்குமோ இல்லையோ; ஆனால் எம்நாட்டு மக்களில் சற்றேறக்குறைய 50 சதவீதம் பேர் இங்ஙணமான ஓர் வாழ்வு நிலைக்கு தள்ளப்படுவர். அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே மராட்டியத்திலும், ஆந்திராவிலும், ஒரிசாவிலும், தமிழ்நாட்டிலும் காணக் கிடைக்கின்றன.

மாசிலா said...

தமிழ்மணத்தில் உலா வரும் அனைத்து தர மக்களும் ஒருமுறையாவது இப்பதிவிற்கு வந்து ஓரிரண்டு வார்த்தைகள் பதிப்பார்கள் என நினைத்தேன். மிகுந்த ஏமாற்றம்.

ஏ, தமிழா! நீ மனிதாபமே இல்லாத மனம் வற்றிய மிருகம் ஆகிவிட்டயா?

தமிழ்மணம் இப்பதிவை நட்சித்திர பதிவாக்க கேட்டுக்கொள்கிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//வழிந்தோடும் சாக்கடை
டீக்கடை பெஞ்சில்
வல்லரசு பெருமிதம்.//
இந்த ஹைக்கூ சில வருடங்கள் முன் நான் எழுதியது.
இது தான் நம் தேசத்தின் நிலையும்.
விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாகி வருவதை வெளிக்காட்டாமல்.. அதிகரிக்கும் மென்பொருள் நிறுவனங்கள்+ அன்னிய முதலீடுகளால் மகிழ்ச்சி கொண்டு வருகிறோம் நான்.
உரக்கச் சொல்லுவோம்...
பாரத்மாதாகீ ஜே!

deepinpeace said...

Of what avail is intelligence to a man if he does not feel as his very own the pain suffered by other human beings.

This is not God's Mistake; its because of human mistakes..

சரவணகுமார் said...

மாசிலா,

உங்கள் கேள்வியைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது

1. இது ஒரு பார்ப்பன ஆதரவு / எதிர்ப்பு பதிவல்ல

2.எந்த மதத்தையும் தாக்கவோ / ஆதரிக்கவில்லை

3.எந்த திராவிட கட்சிகளை ஆதரித்தோ/ எதிர்த்தோ போடப்பட்டதில்லை

4.தமிழ் இன மான உணர்வை தூண்டவோ தட்டிக் கேட்கவோ இதில் ஒன்றும் இல்லை

5.குறைந்தபட்சம் எந்த ஒரு வலைப்பதிவரையும் வம்புக்கிழுக்கவில்லை

6.எந்த ஒரு தேசப்பற்றை பறை சாற்றவோ/எதிர்க்கவோ இல்லை

7.குறைந்த பட்சம் அந்த மா..மு...குடிக்கும் பையன் ஒரு தாழ்ந்த சாதி ...இந்நிலைக்கு காரணம் அவன் தண்ணீர் குடிக்க உயர்ந்த சாதிக்காரன் யாரும் தம்ளர் தரவில்லை மாதிரி எந்த ஒரு திடுக்...குறிப்பும் தரவில்லை

8.இதைப் பற்றி பெரியார், கருணாநிதி ,சோனியா இன்ன பிறர் என்ன கருத்து சொன்னார்கள் என்ற குறிப்பும் இல்லை

9.Atleast...ரஜினியாவது ஏதாவது சொன்னாரா என்பதற்கும் ஒரு குறிப்பும் இல்லை

10.இதில் அந்த மக்கள் சோமாலி வாழ் தமிழ் சகோதரர்கள் என்பதற்கான குறிப்பும் இல்லை

மேற்கண்ட இந்த பத்து கட்டளைக்குட்பட்டு எழுதப் படாத இந்த பதிவுக்கு நம் தமிழ் சமுதாயம் வந்து பின்னூட்டம் தரவேண்டும் என்றால் எப்படி.....???

வலையுலகுக்கு புதுசா...இல்லை நீங்கள் கேட்டதும் உள்குத்தா ??

சரவணகுமார் said...

பதிவு பற்றி...

இந்தப் படங்களில் சிலவற்றை நான் 7/8 வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன்.(இதில் ஒரு படம் சிறந்த புகைப்படத்துக்கான உலகளாவிய பரிசு கூட பெற்றது)இன்னும் அங்கு அதே நிலைதானா தெரியவில்லை...

அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் செலவழித்ததில் ஒரு சிறு பகுதியை உண்மையாக(கண்துடைப்புக்காக இல்லாமல்) இங்கு போன்ற இடங்களில் செலவழித்தால் முன்னேற்றம் எங்கோ போய்விடும்...ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம்...சபாபதி சரவணன் சொன்னதும் கூட

மாதங்கி உண்மையானா ஆதங்கத்துக்கும் உதவி செய்ய நினைக்கும் மனித நேயத்துக்கும் பாராட்டுக்கள்

ஒருங்கிணைத்து யாரும் உதவிட முற்படின் இங்கும் ஒரு கை தோள் கொடுக்கத் தயார்.இதே பதிவில் எவ்வகை உதவி,செய்வது எவ்விதம் என தெரிவிக்கலாமே..

Shan said...

சரவணகுமார் மொழிந்தது...
//ஒருங்கிணைத்து யாரும் உதவிட முற்படின் இங்கும் ஒரு கை தோள் கொடுக்கத் தயார்.இதே பதிவில் எவ்வகை உதவி,செய்வது எவ்விதம் என தெரிவிக்கலாமே..//

சோமாலியா மட்டுமல்லாது மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நிலை உள்ளது (www.thewe.cc/contents/more/archive2006/hunger_children_dying.htm.

Unicef மூலமாக நீங்கள் உதவலாம்.

மேல் விவரங்களுக்கு www.unicef.org/support

enRenRum-anbudan.BALA said...

லிவிங் ஸ்மைல்,
மனசு ரொம்ப பாரமாய் விட்டது, இவற்றைப் பார்த்து :(
அதே நேரத்தில, நாமெல்லாம் சேர்ந்து எப்படி என்ன பண்ண முடியும்னு உடனடியா எதுவும் தோணலை.
எ.அ.பாலா

ஆழியூரான். said...

வல்லரசு,கனவு கானுவோம் என எவனாவது சொன்னால் இனிமேல் செருப்பால் அடிக்கனும்..

நாடோடி said...

இந்த படங்கள் சில வருடங்களுக்கு முன் பார்த்தது.

தாங்கள் "blockhawk down" திரைபடத்தை பார்திருக்கீர்களா?...

அந்த படம் சோமாலியா நாட்டில் நடக்கும் உள்நாட்டுச்சண்டையை பற்றியது.

அங்கு உணவை விட வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் ரொம்ப சீப்பா கிடைக்கும்.

நாடோடி said...

//வல்லரசு,கனவு கானுவோம் என எவனாவது சொன்னால் இனிமேல் செருப்பால் அடிக்கனும்..//

அங்கு எண்ணைவயலகள் கிடையாது. அதனால் வல்லரசுக்கு அங்கு ஒன்றும் லாபம் இல்லை.

உண்மையை கூற வேண்டுமானால் அங்கு மட்டும்தாம் US எந்த லாப நோக்கும் இன்றி தனது வீரர்களை இழக்கிறது.

ஆழியூரான் அவர்களே கண்ணை மூடிகொண்டு கூறாமல் அங்கு என்ன பிரச்சனை என்று அறிந்து கொண்டு கூறமுயலுங்கள்.

நெல்லி said...

ம்ம்.. இதயத்தில் வலி தோற்றுவிக்கும் இந்தப் படங்களிலொன்று சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் பரிசில்களை வென்றதாய் அறிந்துள்ளேன். அந்த சிறுவனின் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பறவைப் படம் என நினைக்கின்றேன். என்ன கொடுமை, உலகமே கைவிட்டு வேடிக்கை பார்த்தனர்... பின் நிலமை மோசமடைந்த பின்னர் சும்மா கண்துடைப்புக்காக சில உதவிகள் செய்தனர். உங்களில் யாராவது ஒருவருக்கு உதவி செய்ய எண்ணமிருந்தால் World Vision ஊடாக ஒரு குழந்தையைப் பராமரிப்பதற்கான உதவியைச் செய்யலாம். நான் அப்படி செய்து வருகின்றமையால் உங்களின் உதவி சரியான வழியில் பயன்படுத்தப் படுமென்பதை உறிதிபடக் கூறலாம்.
www.worldvision.com சென்று பாருங்கள்.

மொக்கை மோகன் said...

என்ன சொல்லுவது தெரியலை சகோதரி..
நாளை நம் நாடும் இப்படி ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது

bala said...

//என்ன சொல்லுவது தெரியலை சகோதரி..
நாளை நம் நாடும் இப்படி ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது//

ஆகலாம்..இங்கு அயோக்யர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டிருந்தால்..

பாலா

நிலவன் said...

மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம். இதைப் போல சில படங்கள் ஈழத்திலும் எடுக்கப்பட்டதுண்டு.இங்குள்ள பத்திரிகையில் அந்த படங்களை போட்டு இன்னொரு சோமாலியாவா? என செய்திகள் வந்தது உண்டு. விரைவில் அந்த புகைப்படங்களை எனது பதிவில் இடுகின்றேன்.

kadaikoditamilan said...

Kadavul Irukirtha?

மலைநாடான் said...

லிவிங் ஸ்மைல்!

உங்கள் எண்ப்பாட்டிற்கும், எழுத்திற்கும் நன்றி.

இங்கு பலரது எண்ணங்களும் பகிரப்பட்டுள்ள நிலையில், நண்பர் நெல்லியின் குறிப்புக்கள் உதவநினைக்கும் உள்ளங்களுக்குச் சரியான பாதையாக அமைகிறது என்றே கருதுகின்றேன்.

//உங்களில் யாராவது ஒருவருக்கு உதவி செய்ய எண்ணமிருந்தால் World Vision ஊடாக ஒரு குழந்தையைப் பராமரிப்பதற்கான உதவியைச் செய்யலாம். நான் அப்படி செய்து வருகின்றமையால் உங்களின் உதவி சரியான வழியில் பயன்படுத்தப் படுமென்பதை உறிதிபடக் கூறலாம்//

நெல்லி!

உங்கள் செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள். இரண்டொரு தினங்களில் தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன். நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்புடையீர்,
UNICEFக்கு NATIONALISED BANK DRAFT வாங்கி அனுப்புங்கள். அத்துடன் எழுதும் கடிதத்தில் THOSE WHO ARE SUFFERING @ SOMALIA எனக் குறிப்பிடுங்கள்.
இயன்றால் உதவுங்கள்.

கயல் said...

அச்சோ... படு பயங்கிரம்...

sara said...

Romba kodumai endru peasuvathai veda nammal enna mudiyum endru parkalamea

sara said...

Romba kodumai endru peasuvathai veda nammal enna mudiyum endru parkalamea