சாரு நிவேதிதா : இலக்கிய மொகிந்தர் சிங்

சமீப காலங்களாக வெளிவரும் இலக்கிய இதழ்கள் (உயிர்மை, காலச்சுவடு) அசத்தல் தலைப்புகளோடு ஏதேனும் ஒரு சமீபத்திய தமிழ்பட விமர்சனத்தோடே வெளிவருகின்றன. இந்நிலையில் மார்ச் மாத உயிர்மையில் பி.ந.த்துவ எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய புதிய அழகியலை நோக்கி தமிழ் சினிமா என்ற கட்டுரை வாசித்தேன்.



இதைப் படிக்க முதன்மையான காரணம், இக்கட்டுரைக்கு அவர் எடுத்துக் கொண்ட படங்களான மொழி, ப.கி.மு.ச., பருத்தி வீரன்., குறிப்பாக பருத்தி வீரனில் திருநங்கைகளின் காட்சிப்படுத்தலை எப்படி விமர்சிக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான். மொத்தத்தில் அவர் மூன்று படங்களையுமே தமிழ் சினிமாவின் முக்கிய சிறந்த படங்களாகவே பார்க்கிறார். எப்படி என்பதையும், அதில் எனக்கு எழும் கேள்விகளும் இனி...


### பச்சைக்கிளி முத்துச்சரம் ###

கௌதம் மேனனின் படங்கள் கமர்ஷியல் படங்கள்தான் என்றாலும், அவருடைய படங்களில் எள்ளளவும் அசட்டுத்தனம் இருக்காது என்பதால் அவர் பெயரும் என்னுடைய 'பிடித்த இயக்குநர்' பட்டியலில் உண்டு. 'காக்க காக்க'வில் வரும் ஜீவனை மிகவும் ரசித்திருக்கிறேன். கௌதமின் 'வேட்டையாடு விளையாடு' பார்த்துவிட்டு நண்பர் பார்த்திபனிடம் "ஹாலிவுட் ரேஞ்ஜில் இருக்கிறது" என்று சொன்னபோது, அவர் தன்க்கேயுரிய குறும்புடன் "ஆமாம், நான்கூட நினைத்தேன், என்னடா இது, ஹாடிவுட் படத்தில் கூட அடிக்கடி தமிழ் வசனம் வருகிறதே என்று!" என்றார். ஆம். இதெல்லாம் கௌதம் மேனனை வித்தியாசப்படுத்திக் காட்டியவை.

இதில் அவர் கொண்டாடும் வே.வே.ல் இரண்டு தமிழ் மாணவர்கள் இந்தியாவிற்கு பழைய எம்.ஜி.ஆர். வேசம் போட்டுக் கொண்டு தப்பித்து வருவதிலாகட்டும், கடத்தி வந்த எல்லா பெண்களையும் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கொல்ல முடிந்தவர்கள் பாவம் கதாநாயகியை மட்டும் அவரின் உதையை மீறி எதையும் செய்யமுடியாமையில் இயக்குநரின் அசட்டுத்தனம் தெரியவில்லையா..? அல்லது எங்கோ ஒரு மூலையில் மண்ணில் புதைபட்டிருக்க, வில்லன்களை வீழ்த்தி, நிதானமாகத் தேடி கண்டுபிடித்து நாயகியை உயிரோடு எழுப்புவது இதெல்லாம் துளி அபத்தம் கூட எழுத்தாளருக்கு தெரியவில்லையா...?

இதெயெல்லாம் விட வே.வேயில் ஜோதிகாவின் கதாபாத்திரம் விவாகாரத்தானவள்- மறுமணம் என்பதான காட்சிகள் தமிழ்சினிமாவின் அரிய அற்புத காட்சிப்படுத்தலாக பேசுகிறார். இந்த புதுமைக்கு முன்பு ரிதம் மீனாவையும், மஜாவில் பசுபதியின் ஜோடியாக வரும் நாயகியையும் நினைவில் கொள்ளவேண்டும். அதோடு இதில் எவ்வகை புதுமை உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

ரிதம், படத்தில் அர்ஜீந்-ஜோதிகா தம்பதிகளின் அந்நியோன்யம் காட்டப்பட்ட அளவில் மீனா-ரமேஷ் அரவிந்த் காட்சி இருக்காது. ஒரேயொரு டூயட்(!) பாடலிலும், அதிகபட்சம் ரமேஷ் மீனாவின் தோள்பட்டையில் கைவைப்பதோடும், திருமணமாகி காரில் போகும் போது கையை பிடிப்பதோடும் சரி. அதன் அடுத்த பதிப்பான, வே.வே.யில் கண்ட நாள் காதலும், அடுத்த நாள் கல்யாணம் கொண்ட கமல்-கமலினி தம்பதியரின் அந்நியோன்யம் காட்டப்படுவதைப் போல, ஜோதிகா-ஜோதிகாவின் கணவன் பாத்திரத்தில் (ரிதம் அளவிற்குகூட )அந்நியோன்யம் கிடையாது, கிட்டதட்ட வில்லன் போலவே ஜோதிகாவின் கணவர் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது.

இவர்களைப் பொருத்தவரையில், ஆண் மறுமணம் என்பது, மனைவின் மரணம் என்ற அளவில் சரி.. பெண்மறுமணம், திருமணம் ஆனாலும், கற்பு, உடலுறவே ஏற்பட்டாலும், மனதளவில் கன்னியாய் இருக்க வேண்டும். அப்படியொரு புதுமையே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும், வே.வே.யில் கமல், புரட்சிப் பெண் ஜோதிகாகவை மணந்து கொள்ள வேண்டிய தேவைக்காகவே கமலினி கொல்லப்படும் காட்சி(இத்தகைய காட்சிகள் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தான் வரும் சாருவே அப்படித்தான் சொல்றார்), ஜோதிகாவும் தனது மறுமணம் குறித்து பலத்த யோசனை நியாயம்/அநியாயம் யோசித்தே குறிப்பாக, குழந்தைக்கு ஒரு நல்ல பாதுகாப்பு என்ற காரணத்துக்காவே கமலை ஏற்றுக் கொள்கிறார். இதில் எங்கே இருக்கிறது மண்ணாங்கட்டி புரட்சி..?!


இதன் தொடர்ச்சியாக, ப.கி.மு.ச.வில் ஜோதிகாவின் கதாப்பாத்திரத்தை குறிக்கும் போது, ஜோதிகா-மிலிந் சோமன் ஜோடியை சிலாகிக்கிறார். " உன் மனைவியையும் குழந்தையையும் கொண்டுபோய் விடுவாய்; ஆனால் என் லாரன்ஸை உன்னால திருப்பித் தர முடியுமா..?" என்கிறார். அதாவது, இத்தகைய கிரிமினல்களிடமும் உண்மை காதல் உண்டென்கிறார்.

ஒன்று கேட்கிறேன், இதே காதாப்பாத்திரம் ஒரு துணைநடிகை ஏற்றிருந்தால் என்னவாக இருக்கும், அவள் எல்லா ஆண்களுடம் தவறான உறவு வைத்திருக்ககூடிய அறைகுறை ஆடைகளுடன் திரியும் பஜாரி பாத்திரமாக இருக்கும். ஆனால், ஜோதிகா என்பதால், தனது காதலனால் மட்டும் கற்பழிக்கப்படுகிறாள். அதாவது கற்பழிப்பு நாடகம் என்றாலும் அது, காதலனால் மட்டுமே நடக்கிறது, கிரிமினல் என்றாலும், அவள் கொண்டவன் மீது கொள்ளைக் காதல் கொண்டவள் என்ற அதே பழைய கற்புக்கரசிகளில் வில்லி வடிவமாகத்தான் ஜோதிகா பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. மரணத்தருவாயில் கூட நாயகனை (அதுவும் ரஜினியை) எதிர்த்து நிற்கும் நீலாம்பரியை விட இதில் என்ன தான் வில்லத்தனத்தை, நடிப்பை, புதுமையை கண்டார் எழுத்தாளர்...?


ஆக, படத்தின் காமிரா, ஒளிப்பதிவு, வசனம், ரிச்னஸ் இதுமட்டுமே ஒரு படத்தின் தரத்தை (ஹாலிவுட் தரம்) நிர்ணயிக்கிறது. கதை, எதார்த்தம் என்பது தேவையற்றது. என்று சொல்கிறார். டேரக்ட் நாட்டு சரக்குன்னா மட்டம், அதையே ஸ்காட்ச் பாட்டிலில் ஊத்திக் கொடுத்தா சூப்பர்.. நல்லா இருக்கு உங்க நவீனத்துவம்.

******

### மொழி ###

மொழியை சிலாகிக்கையில், "உடல் குறைபாடு கொண்ட ஒரு பெண்னை வைத்து, அவளுடைய குறைபாட்டைப் பற்றிய எந்தக் கிண்டலும் இல்லாமல் ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தை மேன்மையான ஒரு கலா சிருஷ்டியாக உருவாக்கியிருப்பது ஆச்சரியமான ஒன்று தான்"

உண்மைதான், ஆனால் இப்படத்தில் மிக நுண்ணியதாய் பார்க்கும் போது உள்ள இரண்டு பேத்தாஸ்கள் நம்முகத்தில் அறைவதாகவே உள்ளது...

1. ஜோதிகாவின் ஊனம் காரணமாக, அவருடைய தந்தை ஜோதிகாவையும், ஜோதிகாவின் தாயையும் வெறுக்கிறாராம். அந்த பாதிப்பால், ஜோதிகா ஆண்களையே வெறுக்கிறாராம். எத்தனை பணக்கார தகப்பன்கள் இந்த அளவிற்கு கொடுமையா ஊனமுற்ற பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள்..? (அநாதை பிள்ளைகளை உதாரணம் காட்ட வேண்டாமே. ஏனெனில், அவர்கள் ஊனம் காரணமாக மட்டுமே அநாதைகளாக்கப்படுவதில்லை.)


2. ஜோதிகா, தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் கூட தனக்கு பிறக்கும் குழந்தை தன்னைபோல் பிறக்கும் என்ற அச்சம் (கண்ணீர் மல்க) சொர்ணமால்யாவிடம் சொல்கிறார்..(போதுமே இந்த சக்ஸஸிவ் பேத்தாஸ் பார்முலா)

ஒரு காட்சியில் கதாநாயகனிடம், தன்னை, தன் ஊனத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நட்பே தனக்கு வேண்டும் என்று சொல்கிறார். ஆனால், கிளைமேக்ஸின் போது அவரே அப்பிடி ஒரு ஊனமுள்ள குழந்தையை கற்பனை செய்யவும் அஞ்சுகிற முரண்நகை படத்தில் பேத்தாஸ்காக திணிக்கப்படுகிறது.


ஒருவேளை மேற்படி இரண்டு பேத்தாஸும் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால், நல்ல கண்ணியமான படம் என்ற வகையில் "மொழி"யை எடுத்துக் கொள்ளலாம். அந்தோ, இவ்விரு பேத்தாஸ் தான் படத்தின் அடிநாதமாகிற நிலையில் இது சாத்தியம் இல்லை.


இது போக, உடல் ஊனத்தை மலினப்படுத்தாத படமாக சிருஷ்டிக்கப்பட்ட படத்தில் ஓரினச்சேர்க்கை குறித்த மட்டமான நகைச்சுவை காட்சி மட்டும் எப்படிப் பொருந்தும்..? எப்படி பொருந்தும் என்பதை விட எழுத்தாளர் இதை எப்படி ரசிக்கிறார்..? ஒரு ஆங்கில பாடலுக்கு குளித்துவிட்டு இடுப்புத் துண்டுடன் நடனம் ஆடும்போது துண்டு கீழே விழுந்துவிட அதை எதிர் வீட்டு ஆடிட்டர் அனந்தகிருஷ்ணன் (தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம்) பார்த்து அதிர்ச்சியுறுவது, (என்னவொரு கண்ணியமான கற்பனை பாருங்கள்!!) ஒருமுறை பாலாவின் பிதாமகனுக்கு உயிர்மையில் சாரு எழுதும் விமர்சனத்தில் சொல்கிறார், 'உன் பாவாடையை இழுத்திருந்தால் என்னவாயிருக்கும் என்று சூர்யா கேட்க, அதன் பிறகு லைலா சூர்யா காதல் வயப்படுகிறார். அக்காட்சியில் தெரியும் அருவெறுப்பு, இங்கே நகைச்சுவையாக தெரிகிறது.

ஒரு 20 வயது பெண்ணிடம் அனந்தகிருஷ்ணன் கூறிய காதல் வசனத்தைத் தற்செயலாகக் கேட்க நேரும் விஜி அதை அவர் தன்னிடம்தான் கூறுகிறார் என்று எண்ணி அவரை ஒரு 'ஹோமோ'வாக நினைத்து பயந்து ஓடுவது, (அப்போது விஜி முணுமுணுக்கும் குரலில் "ச்சே.. என்னை நீங்கள் பப்பி ஷேமா பார்த்ததிலேர்ந்து ரொம்பக் கெட்டுப் போய்ட்டீங்க.." என்கிறான்), குடியிருப்பிலுள்ள மற்றொரு பெண் கார்த்திக் மேல் காதல் வசப்படுவது என்று படம் முழுவதுமே ஒரு கொண்டாட்டமாகத்தான் உள்ளது.

வே.வே.வைப் பொல இங்கே ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த உரையாடல் நல்ல, கண்ணியமான நகைச்சுவையாக காட்டப்படுகிறது. ஊடல் ஊனத்தை பரிதாபத்திற்குரியதாக/ஏற்றுக் கொள்ளக்கூடியதாக பேசும் ஒரு படம், பாலியில் சிறுபான்மைனயினர் மீது கொண்டுள்ள மட்டமான மதிப்பீடு அது சொல்லவரும் அன்பு, கரிசனம் மீதான நேர்மையை சந்தேகிக்கும் படியாகவே உள்ளது.

ஆக, அழகிய தீயே, நாம், மொழி போன்ற படங்கள் வெறும் கண்ணியமான காட்சிகள், நல்ல வசனங்கள் என்ற காரணத்திற்காகவே சிறந்த படங்கள் என்ற படத்தைப் பெற போதுமானது என்கிறார் இலக்கியப் போலி எழுத்தாளர்.


### பருத்தி வீரன் ###

வேறு எதையுமே சொல்ல வேண்டியதில்லை என்ற அளவிற்கு என்னை கண்களில் ரத்தம் கொப்பளிக்கும் படி எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

ஒரு டஜன் அரவாணிகளையும் பத்து இருபது வாத்தியக்காரர்களையும் ஒரு வெட்டவெளிக்கு வரவழைத்து ஆடச் சொல்லும்போதும் அந்த ethnic இசையும் நடனமும் தொடர்கிறது. சொல்லப் போனால் படம் நெடுகிலுமே இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டே போகிறது.

அரவாணிகளைத் தமிழ் சினிமா இதுவரை எப்படிப் பயன்படுத்தி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் பருத்தி வீரனில் அவர்கள் இப்படத்தின் ethnic தன்மைக்கு உயிர்நாடியாக விளங்கும் கலைஞசர்களாகப் பங்கேற்கிறார்கள். மேற்கூறிய இரண்டு இடங்களிலும் வரும் பாடலிலேயே அந்த கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி வாழ்க்கை அற்புதமாகப் பதிவாகிறது.


ஆம், பாடலில் வரும் இரு திருநங்கைகள் மற்றும், நான்கு அலி வேடதாரிகள் அரை டஜனன்றி, ஒரு டஜனாம், ஒருவேளை கரகாட்டம் ஆடுவோரையும் அலி லிஸ்டில் சேர்த்துட்டாரோ என்னவோ..?! அப்ப இருபது வாத்தியக்காரர்கள்...? நான் படம் பார்க்கும் போது 20 நாத்தியக்காரர்கள் காணலையே..!! (இந்த லெட்சணத்துல படத்தை ரொம்ப பெரிய தியேட்டர்ல, இரண்டு தடவ பாத்தேங்கிறாரு எழுத்தாளரய்யா.. நல்லா படம் பாத்திங்களாய்யா..?!)

அரவாணிகளை தமிழ் சினிமா இதுவரை எப்படி பயன்படுத்தியது என்று நாம் அறிவோம். ஆம், விவேக் போன்ற வெகுஜன நடிகர்கள் அலிகளை கிண்டல் செய்யும் போது கூட, 'எங்களுக்கு தனி கழிப்பறை உண்டா..? எங்களுக்கு தனி இருக்கை உண்டா..?ன்னு கேட்டுக் கொண்டிருக்க, நான் அறிந்து, "நைட்டெல்லாம் மைக் புடிச்சுட்டு இருந்தோம்னும், நாயணத்தை வாய்ல வச்சு ஊதுங்க, நீங்க ஊதுறிங்களா..? நான் ஊதவாண்ணு...? ஏற்ற எறக்கமாக கேட்டதில்லைதான்.

சமூக அக்கறை பெரிதாக இல்லாத என் விடுதித் தோழிகூட மேற்படி பாடலைக் கண்டு விசனப்பட்டிருக்க விளிம்புகளின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளரின் பார்வை தமிழ் சினிமாவின் தரத்தை மேன்மேலும் உயர்த்து மென்று நம்புவோம்.

இங்கே., சாருநிவேதிதா என்ற டவுண்லோடு, விக்கிபீடியா எழுத்தாளரின் விளிம்புகள் மீதான அறிவையும் இங்கே சற்று தெரிந்து கொள்வோம்..

ஒரு முறை தனது கோணல் பக்கங்களில் எழுதுகிறார்.

டெல்லியில் தான் வாழ்ந்த காலங்களில் தான் கண்ட அலிகளைப் பற்றி எழுதும் பி.ந.த்துவ எழுத்தாளர் சொல்கிறார். அலிகள் வாழ்க்கையை கொண்டாடுபவர்கள், பொது இடத்தில் விரும்பிய ஆணுக்கு முத்தம் கொடுக்கலாம். ஒரு freek out வாழ்க்கை என்பதாக கூறுகிறார். அதன் தொடர்ச்சியாக தானும் இத்தகைய சுதந்திர(?!) வாழ்க்கை வாழ வேண்டி அலியாக மாற எண்ணம் கொண்டாராம். (ஒருவேளை தானும் தனக்கு பிடித்த பெண்களுக்கு முத்தம் கொடுக்க அலி வேசம் பயன்படும் என்று நினைத்தார் போல) ஆனால், பிறப்புறுப்பை அறுத்தெரியும் அந்த பயங்கர வலியை நேரடியாக கண்டதினால் தனது முடிவை மாற்றிக் கொள்கிறாராம். முதலில் இத்தகைய ஆண்களை திருநங்கைகள் தங்கள் குழுவில் சேர்க்க மாட்டர்கள், அப்படியே சேர்த்தாலும், நிர்வானத்தை (பிறப்புறுப்பை நீக்கும் அறுவை சிகிச்சை) எளிதாக ஒரு (பி.ந.த்துவ)எழுத்தாள, முட்டாள்கள் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படாது.

எங்கோ கண்டதையும், கேட்டதையும் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக தன் சொந்த அனுபவமாக எழுதி கிளிக்கும் எழுத்தாளரின் அறிவு முதிர்ச்சியை அறிய அதே கோணல் பக்கங்களில் தொடர்ந்து கூவாகம் திருவிழா குறித்து எழுதியதுள்ளதில் காணலாம். அங்கே நடக்கும் அழகி போட்டியில் வரும் அலிகள் திரை நட்சத்திரங்களை விடவும் அழகானவர்களாக இருக்கிறார்களாம்.

திருநங்கைகளின் அடிப்படை, வாழ்வாதார பிரச்சனை இதையெல்லாம் விட அவர்களிடம் உள்ள அழகியல், கொண்டாட்டம் (அதுவும் பாலியல் freek out) தான் ஒரு எழுத்தாளனுக்கு முக்கிய கலை அம்சமாகப்படுகிறது.

மட்டுமன்றி, தனது அலுவலகம் தொடர்பான கதையாடலில் தனக்கு மாறுதலாக வழங்கப்பட்ட ஒரு அலுவலகத்தில் ஓரினச்சேர்க்கையாளராகிய அதிகாரி ஒருவருக்காகவே அவ்வலுவலகத்தை விலக்கியதாக எள்ளல் நடையுடன் எழுதியுள்ளார். அதனால் தான், "மொழி" படத்தில் விஜி கதாப்பாத்திரம் தான் கே-கிளப் ஒன்றும் நடத்தவில்லை என்று கூறுவதை நல்ல


இதோ இதே உயிர்மை கட்டுரையில் கூட ரஜினியைக் கேட்கிறார்.. படம் முழுக்கவும் ரஜினி ஒரு அரவாணியாக நடிக்க முடியுமா? என்று. ஆமாம், அவர் அப்படித்தான் கேட்பார்.. ஏனென்றால் ஒரு எழுத்தாளனைப் பொருத்தவரையில் அலிகள் அழகியல் அம்சம் கொண்ட கருப் பொருள், ஒரு நடிகனுக்கு, வித்தியாசமான, அதிர்ச்சிகரமான(அவமானம் ஏற்படுத்தக் கூடிய) கதாப் பாத்திரம். அவ்வளவு தான். மற்றபடி, சக மனிதர்களாவது, மண்ணாவது.

பருத்தி வீரன் படத்தில் பம் செட்டுக்கு வரும் பாலியியல் தொழிலாளியை அழைத்து வரும் லாரி டிரைவரிடம் நாயகன் கேட்கிறான் "ஏண்டா! இவளுக்கு போய் இரண்டு பேரும் சேர்ந்து 100 ரூபாய் தரிங்கலே..? ஓவரா தெரியல..." என்று கூறி மிரட்டியபடி, பின்னர் ஓசியிலேயே .. முடிக்கிறார்".

பின்னர் முத்தழகுவால் மனம் திருந்தும் இவரை ஒரு பாலியல் தொழிலாளி "யோ! காசு கூட வேணாம் சும்மாவே செய்யியா" ன்னு சொல்லும்படியான மன்மதனாக மாறுகிறார் நாயகன் எதில் எங்கே இருக்கிறது எதார்த்தம்.

அழகிய கிராமம், வெள்ளந்தி மக்கள் இது, இதுமட்டும் தான் திரை வித்தகர்களின் ஆதிக்கம் தோய்ந்த எதார்த்தம் அங்கே, விளிம்புகள் கேவலப்படுவதும், அவர்கள் வாழ்க்கையிலான புறக்கணிப்பும், துயரமும் எதுவும் வனப்பும், சௌந்தரமும் நிரம்பி வழியும் கிராமத்தின் இயல்பு மனிதர்களுக்கு தேவையில்லாதது, சம்பந்தம் இல்லாதது. விளிம்புகளின் சவங்களின் மேல் நின்று எதார்த்தத்தையும், அழகியலையும் கட்டமைக்கிறார்கள். அதனையே எழுத்தாளனாக தனது பங்கிற்கு வழிமொழிந்து கொண்டே பாதிக்கப்பட்ட ஜனநாயகத்தின் பிரஜையாக புழம்பித் தீர்கிறார்.

டிஸ்கி : மற்றபடி தலைப்பு அணங்கு (டிசம்பர்-பிப்ரவரி 2007)இதழில் பெண் படைப்பாளிகள் அறிவித்த சிறப்புப் பட்டம். எங்களால் (திருநங்கைகளால்) முடிந்தது அதை வழிமொழிவது மட்டுமே..

34 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

rajavanaj said...

இதில் ஒரு விஷயம் புரிந்தது வித்யா, வாழ்வின் வலியைப் பத்தி அதை உணர்ந்தவர்களால் மட்டுமே நேர்மையாய்ப் பேச முடியும்.. பார்த்தவர் எப்பேர்ப்பட்ட 'திறமையான' எழுத்தாளனாய் இருந்தாலும் அவன் இலக்கியத்தில் வெளிப்படுத்த முடியாது. அப்படியும் முயற்சித்தால் செயற்கையாக இருப்பதோடு அவனுடைய சொந்தக் கருத்தும் வெளிப்பட்டு அம்பலமாகி விடும்..

மிக நுணுக்கமாய் அவருடைய எழுத்தைப் படித்து மறைந்து கிடக்கும் மன வக்கிரங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள..

தொடர்ந்து இது போல் எழுதுங்கள்..

பங்காளி... said...

தமிழ் சினிமா கதாநாயகி இப்படியெல்லாம் யோசிக்கலாமா...எழுதலாமா....இலக்கணத்தை மீறுகிறீர்களே அம்மனி...:-))))

மற்றபடி உங்க்ளின் கோணத்தை மட்டுமே வைத்து எழுதப்பட்ட நல்ல விமர்சமாகவே இந்த பதிவினை பார்க்கிறேன்....நியாயமான ஆதங்கங்கள்....ஒரு கை மட்டுமே ஓசையெழுப்ப முடியாது, ஒரு வேளை கண்ணத்தில் அறைந்தால் ஓசை வருமென நிணைக்கிறீர்கள் போலும்.

said...

சிறப்பான கட்டுரை வித்யா, வாழ்த்துக்கள், இந்த மாத தீராநதி நேர்காணலில், சாரு நிவேதிதா எனும் காரிய கிறுக்கு சொல்கிறது, பிரான்ஸ் போய்விட்டு இந்தியாவிற்குள் நுழையும் போது ஒரு பைத்தியாக்கார விடுதியில் நுழைவது போன்று தோன்றியதாம் அதுக்கு.

இந்தியாவில் ஜனநாயகமே இல்லையாம்.. சரிதான் ஆனால் அதற்கு சாரு சொல்லும் காரணம்தான் படுசுவாரசியமானது, அவர் பிரான்ஸ் செல்ல விசா வாங்க சென்றிருந்த போது அங்கிருந்த அதிகாரி விசாரணை என்ற பெயரில் தாமதாமாக்கிவிட்டானாம். தான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லியும் விடவில்லையாம். அதனால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லையாம். இந்த போலி ஜனநாயகத்தில் சிக்கி பெரும்பாண்மையான உழைக்கும் மக்கள் இங்கு சொல்லொனாத துயரங்களை அனுபவித்து கொண்டிருக்கும் போது இந்த அற்பவாதி கூறும் அருவெறுப்பான காரணத்தை நம்மால் சகிக்கவே முடியவில்லை. மக்களை பற்றி சிந்திக்காத இந்த சமூக ஒட்டுன்னி திருநங்கைகளை வேறு எந்த கோணத்தில் பார்க்கும்

தோழமையுடன்
ஸ்டாலின்

சென்ஷி said...

அருமையான கட்டுரை.

என்னில் சில புரிதல்களுக்கும், தேடல்களூக்கும் இடைப்பட்ட வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்..

சென்ஷி

முத்துகுமரன் said...

துல்லியமான பார்வை, அதை எழுத்தாகவும் கொண்டு வந்து இருக்கின்றீர்கள். இது மாதிரியான பார்வைகளே போலியாக கட்டமைக்கப்படும் பிம்பங்களை உடைக்கும். உண்மையான படைப்பாளிக்கு உங்கள் பார்வையின் நேர்மையும், விமர்சனத்தின் தன்மையும் புரியும்.
தான் கொடுப்பவன் இடத்தில் இருப்பதாக எண்ணுவது இலக்கியவாதிகளுக்கு அடிப்படைத் தகுதியாகி வருவது சோகம்.

லிவிங் ஸ்மைல் said...

Comment for ur blog; unable to publish it do to my invalid blogger username...

ஒரு பொடிச்சியின்.. கருத்து

//தொடர்ந்து கூவாகம் திருவிழா குறித்து எழுதியதைக் காணலாம். அங்கே நடக்கும் அழகி போட்டியில் வரும் அலிகள் திரை நட்சத்திரங்களை விடவும் அழகாம். திருநங்கைகளின் அடிப்படை, வாழ்வாதார பிரச்சனை இதையெல்லாம் விட அவர்களிடம் உள்ள அழகியல் தான் ஒரு எழுத்தாளனுக்கு முக்கிய கலை அம்சமாகப்படுகிறது..//

நன்றி வித்யா. ராஜ்வனஜ் சொன்னதுதான்.
'மொழி' பார்க்கும்போது அந்த முரண் தோன்றியது. "மென்மையான" இயக்குநரின் அந்த முரண்பாடுகூட சமூகத்தின் sexuality தொடர்பான 'அருவருப்புணர்விலிருந்து' ஒட்டிக்கொண்டதோ என்று நினைத்தேன். மொழி - படத்தில பிருத்விராஜில் காதலுடன் திரிகிற அந்த சின்னப் பெண்ணச் சித்தரித்த விதம் கூட ஒரு மட்டமான தொனியிலதானே? (சாரு மெச்சிற அந்த தெருங்கு நடிகர், அந்தப் பெண்ணப் பாக்கிற விதமெல்லாம் etc 80களின் தமிழ் படங்களது சாயல்)... 'அழகிய தீயே'-இல் வரும் 'விபச்சார விடுதி'யில் திருநங்கை வருவார் என நினைக்கிறேன்... அப்போது போடப்படுகிற 'இசை'. அதில எல்லாம் -விளிம்புகளாக இருக்கிற - மனுச உணர்வுகள புரிந்துகொள்கிற மென்மை எல்லாம் கிடையாது...

சாரு போன்ற எழுத்தாளர்களைப் பொறுத்தவரை விளிம்புகள் குறித்து வியப்பிற்கும் விருப்பிற்கும் உரியது அவர்கள் 'கொண்டாடும் செக்ஸ்' மட்டுமாகவே இருக்கும்...

உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து இடையீடு செய்தால்தான் உண்டு. அல்லாதவரை அவர்கள் 'விளிம்புகளைப் பற்றி' எழுதுகிறோம் பேர்வழி என்று இப்படி எழுதி (எங்களை)க் கிழித்துக் கொண்டிருப்பார்கள்.

அன்புடன்
பொடிச்சி

மலைநாடான் said...

//இதில் ஒரு விஷயம் புரிந்தது வித்யா, வாழ்வின் வலியைப் பத்தி அதை உணர்ந்தவர்களால் மட்டுமே நேர்மையாய்ப் பேச முடியும்.. பார்த்தவர்எப்பேர்ப்பட்ட 'திறமையான' எழுத்தாளனாய் இருந்தாலும் அவன் இலக்கியத்தில் வெளிப்படுத்த முடியாது//

இதுதான் உண்மை என எண்ணுகின்றேன்.

மலைநாடான் said...
This comment has been removed by the author.
குழலி / Kuzhali said...

இணைய தாசில்தார்களின் நாகரிக கையேட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டு பதிவு எழுதியிருக்கின்றீர் போல....ம்ம்ம் நாகரிகமாக எழுதியதற்கு வாழ்த்துகள் :-) உ.கு. புரியுதுங்களா?

சாருநிவேதிதாவை வேறெந்த எழுத்தாளனையும் விட கொண்டாடியதற்கு அவர் எழுத்துகளில் உண்மை இருக்கிறது என்று நம்பியதால் தான், கடந்த சில காலங்களாகவே அந்த நம்பிக்கை போய்விட்டது....

குழலி / Kuzhali said...

//இதில் ஒரு விஷயம் புரிந்தது வித்யா, வாழ்வின் வலியைப் பத்தி அதை உணர்ந்தவர்களால் மட்டுமே நேர்மையாய்ப் பேச முடியும்.. பார்த்தவர்எப்பேர்ப்பட்ட 'திறமையான' எழுத்தாளனாய் இருந்தாலும் அவன் இலக்கியத்தில் வெளிப்படுத்த முடியாது//
வழி மொழிகிறேன், அதே சமயம் மற்றவர்கள் பேசக்கூடாது என்பதல்ல, அவர்களும் பேசலாம் உண்மையை மட்டுமே....

G.Ragavan said...

லிவிங் ஸ்மைல் வித்யா, நான் ஒரு பதிவு போட வேண்டுமென்று இருந்தேன். ஆனால் எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதற்கான எழுதாமல் இருக்கிறேன். ஆனாலும் இந்தப் பதிவு அதை ஒட்டியே இருப்பதால் பின்னூட்டமாகச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

ரஜினி திருநங்கையாக நடிப்பாரா? நிச்சயமாக நடிக்க மாட்டார். அதை அவர் ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். ரஜினி மட்டுமல்ல எல்லா தமிழ்க் கதாநாயகர்களும் அதை விரும்ப மாட்டார்கள். ஆனால் தெலுங்கில் ஒரு முன்னணி கதாநாயகர் செய்திருக்கிறார். அதும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில்.

சமீபத்தில் ஐதராபாத் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு கடையில் தெலுங்கு விசீடிக்களைப் பார்க்கையில் அந்தப் படம் மட்டும் பளிச்சென்று தென்பட்டது. கருப்பு வெள்ளைப்படம். என்.டி.ராமராவ் நடித்தது. படத்தின் பெயர் நர்த்தனஷாலா. சாவித்திரி அதில் நடித்த மற்றோரு பிரபலம்.

கதை எல்லாருக்கும் தெரிந்த மாபாரத அஞ்ஞாதவாசக் கதை. அதில் பிருஹன்னளை என்ற திருநங்கையாக அர்ச்சுனன் மறைந்திருப்பான். அந்தப் பாத்திரந்தான் என்.டி.ராமாராவ் நடித்தது. அப்பொழுது அவர் கிருஷ்ணராகவே மக்களால் கொண்டாடப்பட்டவர் என்பதை உணர்ந்துகொண்டு அந்தப் பாத்திரத்தை அவர் தேர்ந்தெடுத்தற்கான துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

சரி. அர்ச்சுனன்..அது இது என்று வியாக்கியானம் பேசலாம். ஆனால் படத்தில் முக்கால் பொழுது நளினமாக பெண்ணியலுடைகளோடு அவர் நடித்திருப்பது நிச்சயம் துணிச்சல்தான். பாராட்டுக்குரியதுதான்.

தமிழியக்குனர்கள் எல்லாரும் சாராய வியாபாரிகள். சில வெற்றி வியாபாரிகள் பிரியாணிக்கடையும் வைத்திருக்கிறார்கள். மற்றபடி தமிழ்சினிமா மிகவும் கீழ்த்தரமாகப் போய்க்கொண்டேயிருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்தும். கதாநாயக புகழ்ச்சிப் பாடல்களும்.....நீங்க ஊதுறீங்களா..நான் ஊதட்டுமா பாடல்களும்தான் மலிந்து கிடக்கின்றன. உங்களுடைய விமர்சனத்தின் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன்.

அசுரன் said...

பி ந சாரு நிவேதிதா கொண்டாடும் கௌதமினிடம் எந்தளவுக்கு சமூக அக்கறை வெளிப்படுகிறதோ அதே அளவுக்குத்தான் சாருவிடமும் இருக்குமோ?

பி. ந வின் கட்டுடைப்பு சித்தாந்தத்தின் தேவைக்காக மட்டுமே அவர ஆளும வ்ர்க்க கருத்தியல்களை கட்டுடைக்கிறாரோ?

உண்மையில் உழைக்கும் மக்களின்(பெருங்கதையாடல் - பி. ந பாணியில்) விடுதலை குறித்து எதுவும் பெரிதாக அக்கறை இருக்காதோ?

விளிம்புகளின் கொண்டாட்டம்....

தூ... தேறி......


அவர்களின் திண்டாட்டம் குறித்து படங்கள்தானடா இப்போதைய தேவை.....

அது போன்ற படங்களை கொண்டாடுங்கள்.....

அசுரன்

இலவசக்கொத்தனார் said...

வித்யா, மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் படிக்கும் பெரும்பான்மையினரைச் சென்றடைய வேண்டும் என நிதானித்து எழுதிய உங்கள் பாங்குக்கு என் பாராட்டுக்கள். இந்தப் பதிவை அனேகம் பேர் படித்து நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களைப் புரிந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்.

மீண்டும் சொல்கிறேன். பாராட்டுக்கள் வித்யா.

மயிலாடுதுறை சிவா said...

வித்யா

உங்கள் உணர்வுகளை உங்கள் எழுத்துகள் மூலம் மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.

திருநங்கை நர்த்தகி மூலம் அவர்கள் படம் துயரம், வேதனைகள் கேட்டு அறிந்து இருக்கிறேன்.

காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வரும் என்று நம்புவோம்.

மயிலாடுதுறை சிவா...

Sridhar Narayanan said...

வித்யா அவர்களே,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சென்ஷி சொன்னது போல பல புதிய புரிதல்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

லிவிங் ஸ்மைல் said...

/// சமீபத்தில் ஐதராபாத் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு கடையில் தெலுங்கு விசீடிக்களைப் பார்க்கையில் அந்தப் படம் மட்டும் பளிச்சென்று தென்பட்டது. கருப்பு வெள்ளைப்படம். என்.டி.ராமராவ் நடித்தது. படத்தின் பெயர் நர்த்தனஷாலா. சாவித்திரி அதில் நடித்த மற்றோரு பிரபலம்.

கதை எல்லாருக்கும் தெரிந்த மாபாரத அஞ்ஞாதவாசக் கதை. அதில் பிருஹன்னளை என்ற திருநங்கையாக அர்ச்சுனன் மறைந்திருப்பான். அந்தப் பாத்திரந்தான் என்.டி.ராமாராவ் நடித்தது. அப்பொழுது அவர் கிருஷ்ணராகவே மக்களால் கொண்டாடப்பட்டவர் என்பதை உணர்ந்துகொண்டு அந்தப் பாத்திரத்தை அவர் தேர்ந்தெடுத்தற்கான துணிச்சலைப் பாராட்ட வேண்டும். ///

கண்டிப்பாக, எனக்கு அந்தப் படத்தை அனுப்பி வைத்து உதவலாமே. எனது ஆவண காப்பகத்துக்கு உதவும். மேலும், முழுக்க, முழுக்க பிரகந்நளை கதையாக இருக்கும் பட்சத்தில் அதை திரையிடவும் வாய்ப்புள்ளது.

யோசிக்கவும்!! தகவலுக்கு நன்றி!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாழும் புன்னகை வித்யா!
சாருவுக்கு நல்ல சாத்து; இதை அப்படியே பிரதி பண்ணி அவர் மின்னஞ்சலிடவும்.
இவர் இப்போ லத்தீனமெரிக்க புல்லரிப்பிலிருந்து; தமிழ்ச்சினிமாப்பக்கம் வந்துவிட்டார்.
அவர்கள் வண்டவாளம் தானே!! பம்பரம் விடுது..இது தெரியாமல் மெய்சிலிற்கிறார்.

G.Ragavan said...

// லிவிங் ஸ்மைல் said...
கண்டிப்பாக, எனக்கு அந்தப் படத்தை அனுப்பி வைத்து உதவலாமே. எனது ஆவண காப்பகத்துக்கு உதவும். மேலும், முழுக்க, முழுக்க பிரகந்நளை கதையாக இருக்கும் பட்சத்தில் அதை திரையிடவும் வாய்ப்புள்ளது.

யோசிக்கவும்!! தகவலுக்கு நன்றி!! //

கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் லிவிங் ஸ்மைல் வித்யா. gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணையும் அனுப்புங்கள். அனுப்பி வைக்கிறேன்.

முழுக்க முழுக்க ப்ருஹன்னளையைப் பற்றிப் பேசாது படம். ஆனால் ப்ருஹன்னளையாக முன்னணி நடிகர் விரசமில்லாமல் நடித்து வெளிவந்த படம். அந்தப் படத்தில் ப்ருஹன்னளைக்கு அரண்மனையில் இருந்த செல்வாக்கு சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஒரு முன்னணி நடிகர் நடித்த துணிச்சலுக்காகவாவது அந்தப் படத்தைப் பாராட்டலாம். அத்தோடு இந்தப் படம் 1960களில் வந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சுந்தரவடிவேல் said...

//இலக்கிய இதழ்கள் (உயிர்மை, காலச்சுவடு)//

இது அங்கதம்:))

கிருது said...

//இதில் ஒரு விஷயம் புரிந்தது வித்யா, வாழ்வின் வலியைப் பத்தி அதை உணர்ந்தவர்களால் மட்டுமே நேர்மையாய்ப் பேச முடியும்.. பார்த்தவர்எப்பேர்ப்பட்ட 'திறமையான' எழுத்தாளனாய் இருந்தாலும் அவன் இலக்கியத்தில் வெளிப்படுத்த முடியாது//

மன வக்கிரங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள..உங்களுடைய விமர்சனத்தின் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன்.

அருமையான கட்டுரை..தொடர்ந்து எழுதுங்கள்.. பாராட்டுக்கள் வித்யா.

வடிவேல் said...

தோழி லிஸ்,
'பருத்தி வீரன்' திரைப்படம் யதார்த்த போர்வையில் வந்த ஒரு பக்கா வியாபாரத் திரைப்படம் என்பதே என் கருத்து. என் நண்பர்களிடம் இதை விளக்க முற்பட்டுத் தோற்றுப் போனேன். உங்கள் பதிப்பைப் பார்த்தபின் சிறிது ஆறுதல் அடைந்தேன். நான் நினைத்தவற்றையும் அதற்கு மேலும் சில கருத்துக்களையும் நல்ல பதிவாக வழங்கியுள்ளீர்கள். திருநங்கைகளைக் கேவலமாகச் சித்தரிப்பதில் பருத்தி வீரனில் இடம் பெற்ற பாடலுக்கும் மற்ற தமிழ்ப் படங்களில் (உம்: 'ஜெயம்' திரைப்படத்தில் வரும் 'திருவிழான்னு வந்தா....' பாடல்) இடம் பெறுகிற பாடல்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

வடிவேல்.

பாண்டித்துரை said...

\\சாருநிவேதிதாவை வேறெந்த எழுத்தாளனையும் விட கொண்டாடியதற்கு அவர் எழுத்துகளில் உண்மை இருக்கிறது என்று நம்பியதால் தான், கடந்த சில காலங்களாகவே அந்த நம்பிக்கை போய்விட்டது....\\


குழலி வலைதளபக்கத்தை பார்த்து விட்டு குழலியின் புகைப்படம் சாருவை ஞாபகபடுத்துகிறதே என்று நினைத்ததுண்டு. குழலியை போன்று தான் நானும் தீவிர சாரு வாசகன். அதே நேரத்தில் மேலே குழலி கூறியதே எனது கருத்தும். ஆனாலும் இந்த மனுச பய மனசு சாரு சாருனுதான் அடம்பிடிக்குது. உங்களின் கருத்துகளை எத்ததைபேர் பேர் ஏற்றுக்கொள்ளக் கூடும் என்பதைவிட கேட்டுக்கொள்ளகூடும்(அதான் தாயீ படிக்ககூடும்) குழலி போன்று என்போன்று பிம்பங்களை அவதானிக்க முடியும். பதியுங்கள் தொடர்ந்து. நானும் தவறவிட்ட தங்களின் (திருநங்கைகளின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை) மீண்டும் தேடி எடுத்து இயன்றவரை எனது கருத்தினையும் பதிவுசெய்கிறேன் எனது வலை பக்கத்தில்.

பாண்டித்துரை said...

சாருவின் எதிர் தீவிர இலக்கியம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது சாரு போன்ற ஆள் தேவைதான் என்று தோன்றியது. ஆனா பாபாவுக்கு எழுதி அதுல வாங்கினதால சிவாஜிக்கு அடக்கி வாசிச்சிருப்பாரு (இல்லனா தாங்காதுல்ல) . சாருபற்றிய தங்களின் பார்வை மற்றும் பகிர்தலுக்கு ஒரு சல்யூட்

முரளிகண்ணன் said...

nice post

Nakkiran said...

கோபமாக.. கெட்ட கெட்ட வார்த்தைகளில் போட்ட பதிவுகளைவிட, அதைவிட கோபமாக முகத்தில் அறைவது போல் நாகரீகமான வார்த்தைகளால் பலமாக அடித்துவிட்டீர்.

உண்மையாக சொல்கிறேன்.. உங்கள் பதிவுகளை படித்த பிறகுதான் திருநங்கைகளை ஒழுங்காக பார்க்க ஆரம்பித்தேன்... அதற்கு முன்னால் எனக்கும் அவர்கள் ஒம்போது தான்...

தொடரட்டும் உங்கள் சீரிய பணி

K.R.அதியமான் said...

Good Post on a most sensitive subject. i run a small unit and occasionally trans-genders harass us for money. i have tried to reason with them. the problem is no one is ready to employ them anywhere. we too could not due to various reason like other workers attitude and partners reluctance.

it is a tragedy that they cannot even do job-works from 'home' for textiles, etc. only when they are allowed and encouraged to earn on their own thru self-employment or otherwise, will their status improve.

குட்டிபிசாசு said...

ஸ்மைல்,

நானும் படிச்சேன், எனக்கு தோன்றிய கருத்துக்கள் தான் உங்களுடையதும். ஆதலால் வழிமொழிகிறேன்.

(கொஞ்சம் சொல்ல மறந்துட்டீங்க! மொழி படத்தில் ஜோதிகா போல இல்லாம கொஞ்சம் சுமாராக இருக்கும் பெண் ஊமையாக இருந்தால், கதாநாயகன் விரும்புவாரா என்பது சந்தேகமே? அந்த விடயத்தில் இதுவும் மசாலா தான், ஆனால் என்ன! அரைச்சமாவு இல்லாம வித்தியாசமானது.)

வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை!!

J J Reegan said...

முதல்ல உங்களோட எழுத்துக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வித்யா...

J J Reegan said...

// rajavanaj said...

இதில் ஒரு விஷயம் புரிந்தது வித்யா, வாழ்வின் வலியைப் பத்தி அதை உணர்ந்தவர்களால் மட்டுமே நேர்மையாய்ப் பேச முடியும்.. பார்த்தவர் எப்பேர்ப்பட்ட 'திறமையான' எழுத்தாளனாய் இருந்தாலும் அவன் இலக்கியத்தில் வெளிப்படுத்த முடியாது. அப்படியும் முயற்சித்தால் செயற்கையாக இருப்பதோடு அவனுடைய சொந்தக் கருத்தும் வெளிப்பட்டு அம்பலமாகி விடும்..

மிக நுணுக்கமாய் அவருடைய எழுத்தைப் படித்து மறைந்து கிடக்கும் மன வக்கிரங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள..

தொடர்ந்து இது போல் எழுதுங்கள்.. //

ரொம்ப சரியாச் சொல்லியிருக்கீங்க ...
போராடுபவர்கள் மட்டுமே போராட்டத்தை பற்றி எழுத வேண்டும்...
இங்கதான் சும்மா அறிக்கை விடுத்தலே பெரிய பில்டப் கொடுக்குறான்களே...

J J Reegan said...

வித்யா சினிமாங்கிறது அவங்களோட பார்வையில அது தொழில்.

அதுல அவங்களுக்கு லாபம் கிடைச்சு ஒரு இருபத்தஞ்சு நாள் ஓடிட்டா போதும் actully, incase - னு இங்கிலீஷ்ல இலக்கியம் பேசுவாங்க.

அப்படியே திருநங்கைகள் பத்தி காட்டினாலும் காமெடி, சினிமாத்தனமான வில்லனா காட்டுவாங்க...

எவ்வளவோ சினிமா பாத்துட்டேன் ஒரு நல்ல விதமா ஒரு கேரக்டரா காட்டமாட்டங்க..

என்ன காரணம்னா அது அவங்களோட தொழில்... லாபம் மட்டும்தான் அவங்க கண்ணுக்கு தெரியும்...

இது உங்களுக்கு தெரியாதது இல்ல

iamgk said...

நுணுக்கமாய் படித்து மறைந்து கிடக்கும் மன வக்கிரங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள..உங்களுடைய கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன். நிதானித்து எழுதிய உங்கள் பாங்குக்கு என் பாராட்டுக்கள். thanks vidya

YUVA said...

Absolutely true, Your perception has changed my thought. Its very difficult to change a persons mind about society or social view. You are doing it, write a lot, write a blog a day.

geethappriyan said...

தோழி வித்யா அருமையாக எழுதுகிறீர்கள்.நியாயமான உள்ளக்குமுறல்கள்.எதற்கும் வருந்த வேண்டாம்,காலம் தான் சிறந்த மருந்து..
கல்வி ஒன்று தான் பல உயர்ந்த நிலைகளை திறக்கும் சாவி.
தங்கள் பிழையாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்கிறேன்,
தமிழ் வார்த்தைகளில் வரும் எழுத்துப் பிழைகளை மட்டும் போக்கிக்கொள்ளுங்கள்,ஏனென்றால் சில அற்ப எழுத்தாளர்கள் பதிலுரைக்கையில் முதலில் உன் எழுத்தை திருத்து எனக்கூடும்..
தங்கள் எழுத்துக்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.நன்றாக எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
நண்பன்
கார்த்திக்கேயன்
அமீரகம்

தீபு நடராஜ் said...

setha killikku kooondu ethukku enbathu poondra thathuvangalai uthirkum arputhamaana manitharidam neengal ethaithan ethir paarkireerkal.vitudungappa avar sarakku avlidhan