டிஸ்கி : நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தியும், சில உதவி கோருதலும்
நற்செய்தி : இம்மாதம் 22ஆம் தேதி மதுரையில் திருநங்கைகள் திரைப்பட விழா (Transgender Film Festival) நடத்த திட்டமிட்டுள்ளேன்.
உதவி : 1 சென்ற வருடம் ஒரு படம் மட்டுமே திரையிட முடிந்தது. இம்முறை கூடுதலாக ஒரு நாள் முழுதும் அல்லது இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளேன்.
ஆனால், கைவசம் இருப்பது மூன்று தமிழ் படங்கள் மட்டுமே. எனவே, இந்தியாவிற்குள்ளாகவும், அயலிலும் வசிக்கும் நண்பர்கள் திருநங்கைகள் குறித்து, அவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசக்கூடிய படங்கள் கைவசம் இருந்தால் (இல்லாதபட்சத்தில் தேடிபிடித்தாவது) எனக்கு தனி மெயிலில் தெரிவிக்குமாறும், கூடியமட்டும் படங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். படங்கள் கிடைப்பதை பொறுத்து இரண்டு நாள் நிகழ்வாகவும் வைப்பதற்கு வாய்ப்புள்ளது.
உதவி : 2 ஏப்ரல் 22ல் மட்டுமே எனக்கு ஹால் இலவசமாக கிடைத்துள்ள நிலையில் அந்நாளே விழாவிற்கு உகந்ததாக உள்ளது. எனவே சென்னை வலைப்பதிவர் கூட்டத்திற்கு வரவுள்ள நண்பர்கள் கூடிய மட்டும் மதுரைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். (பால பாரதி மன்னிப்பாராக) நாளும் மற்ற விசயங்களும் உறுதியான நிலையில் அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
என் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நீங்கள் இதற்கு நிச்சயம் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி!!
I need some help from you people
Subscribe to:
Post Comments (Atom)
14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
படங்களை மெயிலில் அனுப்பி வைக்கணும்னா புரியலை. பெட்ரோ அல்மட்ரோர் உடைய ஆல் அஃபவுட் மை மதர். படம் கிடைக்க வாய்ப்புள்ளது, டிவிடியாக. படம் உங்களுக்கு வேண்டுமென்றால் டிவிடி ரைட் பண்ணித்தான் அனுப்ப முடியும்.
7GB ஆவது வருமென்று நினைக்கிறேன். இந்தப் படம் இல்லையென்றால் சொல்லவும்.
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்
அசுரன்
//சென்னை வலைப்பதிவர் கூட்டத்திற்கு வரவுள்ள நண்பர்கள் கூடிய மட்டும் மதுரைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். (பால பாரதி மன்னிப்பாராக) நாளும் மற்ற விசயங்களும் உறுதியான நிலையில் அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
//
இது எல்லாம் ஓவராகத் தெரியவில்லை? தடித்த வார்த்தைகள் மூலம் இன்னும் உறுதி செய்யப்படாத நிகழ்வு என்று தெளிவாகிறது. நீங்களும் எங்க சந்திப்புக்கு வாங்க! உங்களுக்கு பயணப்படிக்கு பாதியாவது ஸ்பான்ஸர் புடிச்சிடலாம்.
வாழ்த்துக்கள்...
சென்ஷி
வித்யா,
படங்களின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். இங்கிருந்து வாங்கி அனுப்ப முயல்வேன்.
/// இலவசக்கொத்தனார் said...
வித்யா,
படங்களின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். இங்கிருந்து வாங்கி அனுப்ப முயல்வேன். ///
Thank you very much...
All about my mother (Pedro Almadore); Bad Education (Pedro Almadore); Thamana (Hindi)Different for Girls (1996) dir: Richard Spence
my id : perfectvidya@gmail.com
வித்யா...
இங்க சில நிறுவணங்கள் கிட்ட கேட்டு இருக்கேன்..கிடச்சதும் அனுப்பறேன்.. உங்களுக்கு தெரிஞ்சு இங்க எங்காவது இருந்தா சொல்லுங்க வாங்கி அனுப்பறேன்..
சிறப்பா அமைய வாழ்த்துக்கள்
// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
இது எல்லாம் ஓவராகத் தெரியவில்லை? ///
தெரியவில்லை..
தடித்த வார்த்தைகள் மூலம் இன்னும் உறுதி செய்யப்படாத நிகழ்வு என்று தெளிவாகிறது.
உறுதியாக்குவொம்ல அதுக்குள்ள என்ன அவசரம்...?
// நீங்களும் எங்க சந்திப்புக்கு வாங்க! உங்களுக்கு பயணப்படிக்கு பாதியாவது ஸ்பான்ஸர் புடிச்சிடலாம். //
பயணப்படி முழுசாக்குங்க முயற்சிப்போம்...
எனக்கு தெரிந்த படங்கள் :
Boy's Dont cry,
Madame sata,
All about my mother,
Bad Education,
இது போக, வேறு படங்கள் தெரிந்தவர்களும் இங்கே வந்து தெரியபடுத்தினால் வாங்க முடிந்தவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்...
அயல்நாட்டு சூழலும், இந்திய சூழலும் வேறுவேறு.. பிரச்சனைகள், புரிதல்கள் வேறு வேறு... எனவே, முடிந்தவரை இந்திய சூழலில் எடுக்கப்பட்ட படங்களாகவும், ஆவணப் படங்களாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்..
Thamana (Hindi),
படங்கள் கைவசம் வைத்துள்ளோர் எனக்கு அனுப்ப விரும்பினால்.
எனது perfectvidya@gmail என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே..
வித்யா, நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் ஆங்கிலப் படங்கள் சில ஈ பேயில் கிடைக்கிறது. வேறு யாரிடமும் இல்லை என்றால் சொல்லுங்கள் என்னால் முடிந்தவற்றை வாங்கி அனுப்புகிறேன். வேறு யாரிடம் இருக்கும் பட்சத்தில் அதனை மீண்டும் வாங்க வேண்டாமல்லவா.
கீழ்க்கண்ட படங்கள் பொருத்தமா என்று தெரிவிக்கவும்.
Just Like a Woman (1992)
Different for Girls (1996)
The Birdcage (1996)
Todo sobre mi madre (1999)
Ma vie en rose (1997)
Southern Comfort (2001)
The Badge (2002)
Normal (2003) (TV)
Beautiful Boxer (2003)
Wild Side (2004)
Transamerica (2005)
The 2 movies I knew is already listed (TransAmerica and Boys dont cry).
Good luck with everything!
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்
இங்கு சில ஐரோப்பா டி. வி சானல்களில் திருநங்கை பற்றிய நல்ல மற்ற மொழி படங்கள் ஒளிபரப்பாகிறது. வேண்டும் என்றால் ரிக்கார்டர் செய்து அனுப்புகிறேன்.
சாரு நிவேதிதா பற்றிய பதிவு எங்கே? படிக்கலாம்னு வந்தா காணோமே?
Post a Comment