கண்டனம் : அசத்த போவது யாரு?

டிஸ்கி : பதிவின் சாரத்தோடு ஒப்பவில்லையெனில் தமிழ்மணம் இப்பதிவை தாரளமாக நீக்கலாம்.


விஜய் டி.வி. யிலிருந்து காப்பியடிக்கப்பட்டு தற்போது வெக்கமில்லாமல் சன்.டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டு வரும், அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் சமீப எபிசோட் ஒன்றில் அரிப்பெடுத்த சொரிநாயொன்று காமெடி என்ற பெயரில் திருநங்கைகளை அவமானப் படுத்தியுள்ளது.


அந்த நாதாறி அடித்த ஜோக்(?):

ஒன்போதுக்கு (9 என்று விரல்களைக் கொண்டு சைகை வேறு,) கொழந்த பொறந்தா என்ன பாட்டு பாடும்..?

விடை : அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே...


(படத்திற்கும், மேற்படி ஜோக்(?) அடித்த நாதாரிக்கும் தொடர்புண்டு)


Father fucker ஆன அந்த நாதிரி மீதும், அதை சிறந்த நகைச்சுவையாக காண்பிக்கும் சன் டி.வி. என்னும் ப்ரோக்கர் நிறுவனத்தின் மீதும் திருநங்கைகள் சார்பாக என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.


பி.கு. : விசயம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. இத்தகைய ஊடக அத்து மீறல்கள் தங்களின் கவனத்திற்கு தெரியவந்தால் உடனடியாக எனக்கு ஒரு மெயில் தட்டலாமே. இதனால், வெறும் பதிவுமட்டுமன்றி வேறு ஆக்கபூர்வமாக செயல்பட எனக்கு உதவும். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி (உபயம் தமிழ்மணம்).

26 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

மா சிவகுமார் said...

வித்யா,

உங்கள் கண்டனத்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

திரு said...

எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் லிவிங் ஸ்மைல்.

உங்கள் வலைப்பதிவின் கீழ் பாகத்தில் காணும் பாடல் பாப் மார்லியின் வீரம் செறிந்த வரிகள். எனக்கும் பிடித்த ஒன்று. :)

நாமக்கல் சிபி said...

எனது கண்டனத்தையும் இங்கே பதிவு செய்கிறேன். உங்களுடன் சேர்ந்து!

உண்மைத் தமிழன் said...

எவ்வளவுதான் 'நாகரிகம் வளர்ந்திருக்கிறது' என்று அனைவரும் சத்தியம் செய்து சொன்னாலும், அது 'எந்த வகை நாகரிகம்' என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. இதை யாரிடம் போய் சொல்வது. வெளிப்பூச்சுக்கு தவறுதான் என்பார்கள். அடுத்த நாள் வேறொரு ரூபத்தில் கிண்டலையும், வெறுப்பையும் கொட்டுகிறார்கள்.

வெறுப்போடு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

முத்துகுமரன் said...

வித்யா உங்கள் கண்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.

மங்கை said...

எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Anonymous said...

ppl need 2 growup..
smile we are there for u..

G.Ragavan said...

உள்ளேன் அம்மா. என்னுடைய கண்டனத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

அந்த நிகழ்ச்சியே ஒரு திருட்டு நிகழ்ச்சி. அடுத்தவனப் பாத்துக் காப்பி. அதுவுமில்லாம அதுல ஆண்கள் பெண்கள் வேடம் போட்டுக்கிட்டு அடிக்கிற கூத்து இருக்கே. கொடுமையோ கொடுமை. அதை நகைச்சுவைங்குற பேர்ல....சகிக்க முடியலை.

OSAI Chella said...

இது ஒரு அருவறுக்க தக்க சாடிசம்.என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன் ஸ்மைல்.

Boston Bala said...

:(

கண்டனங்கள்

Dreamzz said...

@வித்யா
உங்கள் வலி எனற்கு புரிகையில், எனற்கு சிறு உறுத்தல்.

நீங்கள் அவர்களை அப்படி திட்ட வேண்டுமா? அவர்கள் பிழைப்புற்காக - மக்களை சிரிக்க வைக்க - அப்படி சொல்பவர்கள். முதலில் திருந்த வேண்டியது நமது சமூகம் அல்லவா?
சிரிக்கும் மக்கள் சிந்திக்க தொடங்கினால் அல்லவா மாற்றம் வரும்?

தன்னுயிர்க்கின்னாமை என தானரிவான்.. என்கோலோ மன்னுயிர்கு இன்னா செயல் - அனும் குறள் போல, இது போன்ற மனிதர்கள் மூடர்கள். அறியாதவர்கள். அறியாமையின் நிவர்த்தி கோபம் அல்ல.. விழிப்புணர்வு. நீங்கள் அவர்கள் மேல் சேர் தெளிக்க தேவையில்லை.

தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.

ஜோ / Joe said...

எனது கண்டனங்கள்!

ஆழியூரான். said...

இப்போதெல்லாம் உங்கள் எழுத்துக்களில், எதிர்ப்புகளை எள்ளி நகையாடி, 'போடா ங்கொய்யா' என்று முகத்தில் உமிழும் ஒரு தொணி தென்படுகிறது. அது அவசியமானது .
என் கண்டனமும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

லக்கிலுக் said...

என் கண்டனத்தையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்!

மாசிலா said...

உங்கள் மனக்கஷ்டம் புரிந்து வருந்துகிறேன். எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன். வரவர எதைஎதையெல்லாம் வைத்து கிண்டல் செய்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அடிப்படை நாகரீகம், மனப்பக்குவம் போதிய அளவு பெறாததின் சிறிபிள்ளைத்தன போக்கின் காரணமே இது.

உங்கள் நண்பன் said...

சகோதரி வித்யா!

உங்கள் கண்டனத்தில் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்!

அன்புடன்...
சரவணன்.

சென்ஷி said...

கண்டனம் அதற்கு வழிமொழிதல்கள் மட்டுமே நாம் இந்த பதிவில் காண இயல்கிறது. இவ்விதம் நிகழாமல் தடுக்க தாங்கள் எம்முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு என் ஆதரவை கொடுக்கின்றேன்.

ஜெஸிலா said...

இந்த மாதிரியான நகைச்சுவைகளுக்கு சிரிக்கும் மக்களுக்கு என் கண்டனங்கள். மற்றவர்களை சிரிக்க வைத்து பிழைக்கும் அவர்கள் உங்கள் வருத்தம் தெரிந்தால் நிச்சயமாக மாற்றிக் கொள்வார்கள் அவர்களை.

அசுரன் said...

எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் Thozi லிவிங் ஸ்மைல்.

raj said...

Enathu kandanagalum,sun tv kku azhntha anuthabangalum saraku theernthu ponathukkum serthu.
anbudan
raj

|||Romeo Boy||| said...

Hi Smile .

Add me with this peoples. God only know when the gender matter come to END .

Murali said...

எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் .

ILA(a)இளா said...

எனது கண்டனத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

சீனு said...

//வித்யா உங்கள் கண்டத்தில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.//

Me 2.

ஆனா, இது தவறு என்று தெரியாமல் செய்கிறார்கள். திருந்த கொஞ்ச நாள் ஆகும். நாளைக்கே அவர்களை திருத்திவிட முடியாது.

அதற்காக அவர்களை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது என்பது தான் இடிக்கிறது.

Jahe said...

அடுத்தவன் புறத்தை நக்கியே பிழைப்பதை (விஜய் டிவி யின் எல்லா நிகழ்சிகளையும் கோப்பி அடிப்பது)...சன் டிவி தொழிலாக கொண்டுள்ளது...அழகிரியிடம் அடி பட்டும் திருந்தவில்லை....

இதை நடத்துபவர்கள் காமெடி ஜாம்பவான்கள் என்று சப்பைக்கட்டு வேறு...

பாரத் ராஜ் குணசேகரன் said...

வன்மையான கண்டனங்கள்... மிக தாமதமாக சொல்வதற்கு மன்னியுங்கள்...