விடைபெறுகிறேன்

நண்பர்களே!! எனது இரண்டு வருட மதுரை வாழ்க்கையில் குறிப்பிடும்படி எதுவும் செய்துவிட முடியவில்லை. குறைந்தபட்சம் எனது பெயரை கூட சட்டரீதியாக மாற்ற முடியவில்லை. சட்ட ரீதியாகவும், சமூகரீதியாகவும் முழு அங்கீகாரம் பெற தலைநகர வாசமே சிறந்தது என்பதால் செப்டம்பர் 5 அன்று சென்னை வருகிறேன். என் முகவரியின் முதல் இரண்டு வரிகள் தீர்மானமாகாத போதும் மூன்றறாவது வரி நிச்சயம் சென்னையாக இருக்கும்.



இரண்டு வருடங்களுக்கு முன் வெறும் துணி மூட்டையுடன் கையில் ஆயிரம் ரூபாயுடன் (தொகை சரியாக ஞாபகம் இல்லை) எந்த உத்திரவாதமும் இன்றி சில ஆனால், முக்கியமான நண்பர்களை நம்பி மதுரை பேருந்தை ஒரு அதிகாலையில் பிடித்தேன். இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையோடு (தொகையில் பெரிய வித்தாயசமில்லை)சென்னை செல்கிறேன். ஆனால், நண்பர்களையும் நம்பிக்கையையும் வளர்த்துள்ளேன். இதே நம்பிக்கையோடு அடுத்த மாதம் சென்னை ரயில் ஏறுகிறேன்.


இன்றோடு என் பணி இவ்வலுகலகத்தில் முடிவடைகிறது. அநேகமாக இதுவே எனது இறுதி பதிவாகவும் இருக்கலாம். அடுத்த பணி, தங்குமிடம் எதுவும் உறுதியாகாததால். மீண்டும் எப்போது அடுத்த பதிவு போடுவேன் என்று எனக்கே தெரியாது. கணினி பயன்படுத்தக்கூடிய அலுவலுகமோ, மடிக்கணினியோ வாய்க்கும் காலத்தில் மீண்டும் நிச்சயம் எழுத்தை தொடர்வேன்.


அதுவரை நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.



நண்பர்களுக்கு நன்றி!!




அன்புடன்

லிவிங் ஸ்மைல்

40 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லக்கிலுக் said...

சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது!

பொன்ஸ்~~Poorna said...

வாங்க ஸ்மைலி, வாழ்த்துக்கள்.. தலைநகரம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது... :)

kiddy ppl said...

தோழர்

சிறந்த மனிதர்கள் தொடர்ந்து தங்களை மேன்னைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று அறிஞர் கன்பூசியஸ் சொல்வார்.

பென் பிராங்களின் முதல் மகாத்மா காந்தி வரை,
மார்டின் லூதர் கிங் முதல் இவான் லேண்டல் வரை,
நெல்சன் மண்டேலா முதல் தெரசா வரை,
பெரியாரில் இருந்து பகுத்தறியும் மனிதர்கள் வரை,
தனது இலட்சியங்களையும் கனவுகளையும் நோக்கித் தைரியமாக தினமும் முன்னேருகிறார்கள்.
உங்களிடமும் மேன்மையைப் பார்க்கின்றேன். மீண்டும் கட்டாயம் சந்திப்போம். துணிந்து செல்லுங்கள்.

Ayyanar Viswanath said...

வித்யா
வலைப்பதியாமெல்லாம் இருக்க முடியாது.தேநீர் போல எழுத்தும் பழகிவிட்ட சுகம்தான்.வசதிகள் கிடைக்கவில்லையென்றாலும் எப்படியாவது ஏற்படுத்திக்கொண்டு நம் எண்ணங்களை இறக்கி வைத்துவிட்டால்தான் மனம் இலகுவாகும்போலிருக்கிறது..அடுத்த வாரத்தில் சென்னை வாழ்வின் அவலங்கள் உங்கள் இருப்பை அசைக்க கூடும் அதன் வெளிப்பாடு ஒரு கோபமான கவிதையாயிருக்கலாம்.காக்கைகளைப் போன்றதொரு பெரும் நட்புக்கூட்டம் சென்னையில் இருக்கிறது அவர்களின் அன்பில் மனம் நெகிழ்ந்து உடனே எழுதிவிடத் தோணலாம் ஒரு கவிதையை..

சீக்கிரம் எழுதுங்கள்...

மஞ்சூர் ராசா said...

எங்கு சென்றாலும் எங்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு உண்டு்.
விரைவில் உங்கள் படைப்புகள் தொடர்ந்து வெளிவரும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

சென்னை நண்பர்களின் உதவி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். சரிதானே தோழர்களே

thiagu1973 said...

போர்குணம் சென்னையிலும் உங்களுடன் வசிக்கட்டும் ! அக்னிகுஞ்சாக வளர வாழ்த்துக்கள்

தோழமையுடன்

லக்கிலுக் said...

//காக்கைகளைப் போன்றதொரு பெரும் நட்புக்கூட்டம் சென்னையில் இருக்கிறது //

பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார் அவர்களே!

வெய்யிலோடு விளையாடி நானும், பாலபாரதியும் கொஞ்சம் கருத்துப் போனது உண்மை தான். ஆயினும் இன்னமும் காகத்தின் நிறம் அளவுக்கு கருத்துவிடவில்லை.

பூனைக்குட்டி said...

எந்தப்பக்கம் போனாலும் வெற்றி வாய்ப்பு உங்களைத் தேடிவர வாழ்த்துகிறேன்.

மோகன்தாஸ்

இளங்கோ-டிசே said...

புதிய சூழலும், பணியும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

வாங்க அம்மணி வாங்க.. சென்னை எப்போதும் வந்தாரை வாழ வைக்கும்.. காக்கை கூட்டம் போன்ற வலைப்பதிவர் சமூகம் இருக்கின்றபோது உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம்..

ப்ரியன் said...

வாங்க வித்யா,

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அபாரமான போராடும் குணம் படைத்த உங்களுக்கு வெற்றி தொலைவில் இல்லை.
அது சென்னையிலுமாக இருக்கலாம்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது எழுதுங்கள்; வெற்றிச் செய்தி சொல்லுங்கள்.

siva gnanamji(#18100882083107547329) said...

நல்வரவு!
'தரும மிகு சென்னை"
உங்களை வரவேற்கின்றது!

Ayyanar Viswanath said...

/பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார் அவர்களே!/

அன்பு லக்கி பின்நவீனத்துவம் கவிதையை மறுக்குது தலைவா! கவிதைங்கிற வடிவமே பின் நவீனத்துவத்துல சேர்த்துக்க மாட்டாங்களம்.

காக்கைன்னு சொன்னது நட்பு மற்றும் ஒற்றுமைக்காகன்னு நான் சொல்லனுமா :)

சாலிசம்பர் said...

புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் லிஸ்.
(சென்னை செல்லும் வரை உங்க கணினித் தேவைக்கு நம்ம கடை இருக்கு , மறந்துடாதீங்க)

Unknown said...

சென்னையில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
அய்யனார் கூறியதைப்போல், உங்களால் எழுத்தை விடமுடியாது என்றுதான் நம்புகிறேன்.

சீனு said...

வெல்கம் டு சென்னபட்டிணம்.

//சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது!//

ஏதேது பிரியன். 'ரன்' விவேக் மாதிரி டயலாக் சொல்றீங்க...

வடுவூர் குமார் said...

புது இடமாவது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யட்டும்.
வாழ்த்துக்கள்.

☼ வெயிலான் said...

தற்காலிகமாகத் தான் விடைபெறுகிறீர்கள்! திரும்ப சந்திப்போம்!

புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

தமிழன் said...

வாங்க வித்யா!
வருக
வருக

-/பெயரிலி. said...

வாழ்திசை உங்கள் வழிப்படடு வசப்படட்டும்.

Mugundan | முகுந்தன் said...

வித்யா,

வலைப்பதிவுலகத்தில் வெற்றிகரமாக உலாவந்த‌ நீங்கள்,புதிய பயணத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

உங்கள் மூலம் நிறைய சமூக அவலங்களை
தெரிந்துகொள்ள முடிந்தது.

இடைவெளி குறுகியதாக இருக்க விழைகிறோம்.

அன்புட‌ன்,
க‌ட‌லூர் முகு

தருமி said...

சென்று வாருங்கள். நண்பர்கள் சூழ இருக்கப் போகிறீர்கள்; என்ன கவலை இனி.

விடியும் பொழுதுகள் நல்லவைகளாகவே இருக்கட்டும்.

சும்மா அதிருதுல said...

லக்கிலுக் said...
//காக்கைகளைப் போன்றதொரு பெரும் நட்புக்கூட்டம் சென்னையில் இருக்கிறது //

பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார் அவர்களே!

வெய்யிலோடு விளையாடி நானும், பாலபாரதியும் கொஞ்சம் கருத்துப் போனது உண்மை தான். ஆயினும் இன்னமும் காகத்தின் நிறம் அளவுக்கு கருத்துவிடவில்லை.
///


ஒன்னா இருக்க கத்துகணும் உண்மையை சொன்னா ஒத்துகணும்

காக்கா கூட்டத்த பாருங்க அதுக்கு கத்து குடுத்தது யாருங்க...?

செல்வநாயகி said...

தமிழச்சியை வழிமொழிகிறேன்.

வித்யா, நீங்கள் இங்கு ஏற்படுத்திய அதிர்வுகள் பலமானவை. மீண்டும் எதிர்பார்க்கிறேன். முடிகிறபோது வந்துபோய்க்கொண்டிருங்கள். புதிய இடம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.

தமிழச்சி, உங்களை இப்போது அங்கங்கு பின்னூட்டங்களிலும் பார்க்கமுடிவது மகிழ்வைத் தருகிறது. உங்கள் பதிவின் தொடர் வாசகி நான். உங்கள் பதிவிலேயே நீண்டதொரு நல்ல பின்னூட்டம் எழுதும் முயற்சி வழமைபோல் கிடப்பில்:))

சுகுணாதிவாகர் said...

அக்கா,

நீங்கள் சென்னை வருகிறீர்களா? அப்ப மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு நான் திண்டுக்கல் போறேன்.

சுவாமி said...

வித்யா,

உங்களையோ, திருநங்கைகளையோ, அல்லது நீங்கள் கடந்து வந்த பாதையையோ என்னால் புரிந்து கொள்ள இயலாது. உங்களின் சில எழுத்துக்களில் எனக்கு ஒப்புதலும் கிடையாது. ஆனால், உங்களுடைய 'not accepting status quo' வையும், போராடும் குணத்தையும் மிகவும் மதிக்கிறேன். சென்னையில் மட்டுமல்ல, california விலயும், தேவைப்பட்டால் உங்களும் உதவ விரும்பும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அடுத்த பயணத்திற்க்கு என் வாழ்த்துக்கள்.

சுவாமி

துளசி கோபால் said...

வித்யா,

எல்லா நலனும் பெற்று சிறப்போடு உங்கள் வாழ்க்கை
அமையணுமுன்னு வாழ்த்துக்கின்றேன்.

Anonymous said...

Good Luck Smile :) Take care of yourself

rajarajan said...

Hi Smile,,

We are hearlty welcome you to chennai . You have skill to get a good job. We here for you .

Raj

பாரதிய நவீன இளவரசன் said...

Vidhya... Vanakkam, Vandanam, Suswagatham, Welcome to our city!

//லக்கிலுக் said...
சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது! //

லக்கி,

சென்னைyenna சென்னை....
வந்தாரை வாழ வைக்கும் மடிப்பாக்கம் உங்களை அன்போடு வரவேற்கிறதுன்று சொல்லுவம்!

அறிவியல் பார்வை said...

வாங்க சகோதரிவித்யா, உங்களை சென்னை அன்புடன் வரவேற்கிறது, உங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கின்றோம்.

சென்ஷி said...

// லக்கிலுக் said...
//காக்கைகளைப் போன்றதொரு பெரும் நட்புக்கூட்டம் சென்னையில் இருக்கிறது //

பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார் அவர்களே!

வெய்யிலோடு விளையாடி நானும், பாலபாரதியும் கொஞ்சம் கருத்துப் போனது உண்மை தான். ஆயினும் இன்னமும் காகத்தின் நிறம் அளவுக்கு கருத்துவிடவில்லை. //

super comment

repeatae

senshe

from sharjah

Subbu said...

Dear Vidya,

I was reading all of your posts and I appreciate your efforts to expose the evils of this society.

I was working in Delhi some years back, and whenver I travel from Delhi to Chennai, in Nagpur I used to see some of the thirunangaigal. Then, I used to afraid, but still wanted to chat with them. Though they dont compull or force any one for money, people used to tease them. In one of my travels, I was reading a book written Mythili Sivaraman about the life of transgenders. This attracted Ms. Lalitha (one among the group) and started talking with me.

My chat with her revealed the other side, which is totally new to me. I was stunned to hear the way they used to make money.

I strongly feel that freedom, renaiisance will come only because of the work like you people are doing. Please continue the efforts.

Please let me know if you need any help. I am currently working Bangalore as a programmer.

Feel free to mail to subbusos@yahoo.com

Hope to hear from you soon,

Thanks & Regards
Subbu
(Subramanian Sundaram)
subbusos@yahoo.com

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நண்பர்களை நம்பி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களின் சென்னை வாழ்க்கை உங்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையைத் தரட்டும்.

Jeevan said...

Wish you have a nice life in Chennai, all the best:) Welcome!

PRINCENRSAMA said...

சென்னைக்கும், மீண்டும் பதிவதற்கும்
வரவேற்கிறோம்!

Nilavan said...

எதாவது எழுதி இருப்பீர்கள் என பார்க்க வந்ததுக்கு இந்த அதிர்ச்சியை கொடுத்தா எப்படி ? பதிவு போடுறதுக்கு எங்கே இருந்தா என்ன..? கை சும்மா இருந்திடுமா என்ன ?
சென்னைக்கு வந்துட்டு பதிவு போடாமா இருக்க முடியுமா என்ன ? நீங்கள் செல்லும் வழிகளும், வாழ்க்கையும் இனிதாய் அமைந்து நம்ம தலைநகரம் ஓர் புதியதொரு பாதையையும், நல்ல நண்பர்களையும், மன அமைதியையும் உங்களுக்கு கொடுக்கும். உங்களின் பதிவை விரைவில் எதிர்பார்க்கும். விஜய்.

குமரன் said...

என்னாச்சு வித்யா அக்கா? ஆளையேக் காணோம்? எங்க இருக்கீங்க? என்ன செய்றீங்க? நல்லா இருக்கீங்களா?

நல்லா இருக்கேன்னு ஒரு செய்தியை சொல்லிபுட்டா, நல்லா இருக்கும்.

உங்க கவிதைகளை படிச்சுட்டு, புலம்பமா சரியா தூக்கம் கூட வரமாட்டேங்குது.

செய்தியை போடுங்க! இல்லைன்னா, காணாமல் போனவர், கண்டுபிடித்து தெரிவியுங்கள்! என ஒரு பதிவு போடுவதை தவிர்க்கமுடியாது.

பின்குறிப்பு : என்னடா அக்கான்னு கூப்பிடுறானே! பார்க்கிறீங்க. சுகுணா மட்டும் அக்கா கூப்பிடுறார். நீங்க ஒண்ணுமே சொல்லல!

Vidya said...

Bloghopping, made me land here. Wish you good luck in your new place and wish you all the very best in life.