ஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி

நேற்று சட்டசபையில் தமிழக கவர்னர் திரு.சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாண்டில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பும் உள்ளடங்கியிருந்தது.
இந்திய அளவில் திருநங்கைகளுக்கான சில நல்முயற்சிகள் தமிழகத்தில் அதிகபட்சம் நடைபெறுவதும், சில கதவுகள் திறப்பதும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. தமிழக அரசின் இம்முடிவுக்கு திருநங்கைகள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நல வாரியம் நிதர்சனத்தில் சாத்தியப்பட வேண்டும். கூடுமான முறையில் திருநங்கைகளே இவ்வாரியத்தில் பணியாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், இதன் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், வேலைவாய்ப்பு, குடும்ப - சமூக பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும்.


நன்றை இன்றே செய்- என்பது வள்ளுவர் வாக்கு, வள்ளுவர்க்கு சிலை வைத்த தமிழக அரசு அவர் சொல்படி இந்நற்செயலை துரிதமாகவும், துள்ளியமாகவும் செய்து முடிக்கும் என்று நம்பிக்கையோடு மீண்டும் சொல்கிறேன்...நன்றி! நன்றி! நன்றி!!

7 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

அசுரன் said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல்,

முபாரக் said...

இச்செய்தி மகிழ்ச்சியாக இருக்கிறது

வாழ்த்துக்கள்.

ஆழியூரான். said...

நிச்சயம் அரசைப் பாராட்டத்தான் வேண்டும். அறிவிப்பின் வேகத்தோடு திட்டத்தை செயல்படுத்தவும் வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரிக்கு!
ஏற்கனவே செய்தி அறிந்து மகிழ்வே!
நீங்கள் குறிப்பிட்டதுபோல் உடன் நடவடிக்கை எடுப்பார்களானால் மிக நன்று.

வெ. ஜெயகணபதி said...

நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும். இது தமிழக மக்களுக்கான அரசு....

சே.வேங்கடசுப்ரமணியன். said...

வணக்கம் ,வித்யா இடை பாலினம் பற்றிய குழப்பஙளுக்கு மருத்துவரீதியான எளிமையான விளக்கக் கட்டுரைகளை தனது வலைப்பக்கத்தில் டாக்டர்.புரூனோ அவர்கள் எழுதியுள்ளார்.
தஙளுக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.

www.payanangal.in

சே.வேங்கடசுப்ரமணியன். said...

வணக்கம் ,வித்யா இடை பாலினம் பற்றிய குழப்பஙளுக்கு மருத்துவரீதியான எளிமையான விளக்கக் கட்டுரைகளை தனது வலைப்பக்கத்தில் டாக்டர்.புரூனோ அவர்கள் எழுதியுள்ளார்.
தங்க‌ளுக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.


www.payanangal.in