நானே நானா..? ஐந்தே தானா?!

எனது பதிவுகளில் வத்தலும் சொத்தலும் போக பதிவு என்றவகையில் ஒரு 60 தேரும் என்று வைத்துக் கொள்ளலாம். அதில் கவிதைகள் ஒரு பத்து போக 50 பதிவுகள் தேரலாம். தேரலாம் என்பது என்னளவில் தான். கட்டற்ற சுதந்திரந்திரத்தின் உச்சம் நம் வலைப்பூ எனவே யார் மறுக்க முடியும்? ஆனால் நம்மை நாமே தேர்விற்குள்ளாக்கி 5 பதிவுகளை தேர்வு செய்யும் போதுதான் தெரிகிறது இந்த ஐம்பது கூட தேறாது என்பது.

இருந்தாலும் வலையுலக தாதாவே வரவேற்கும் போது மறுக்க முடியுமா? எனவே, கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சு ஐந்து பட்டியலிட்டுள்ளேன்.

***

பொதுவான ஒரு சொலவடை ஒன்று உண்டு. இன்னார் ஒரு பேருக்கு ஆசைப்படுபவர். வெறும் பேருக்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்ற ரீதியில்... நான் நிஐமாகவே பேருக்காக (பாலினத்திற்காகவும்) கிட்டதட்ட ரெண்டு வருடமா போராடிக்கொண்டிருக்கிறேன். இது குறித்து தனி பதிவு விரைவில் தனி பதிவும் வரும். இப்படியிருக்க ஏன் லிவிங் ஸ்மைலுன்னு கேக்காத புண்ணியவான்/வதி இல்ல. இதற்கான விடையாய், மீள்பதிவாய், என் முதல் பதிவு.


1. ஏன் லிவிங் ஸ்மைல்?
நானறிந்து பெயர் மாற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண்மணி நானாகத்தான் இருக்க முடியும் (கின்னஸ்க்கு விண்ணப்பிக்கும் அய்டியாவும் உள்ளது)என்று நினைக்கிறேன். குறிப்பாக பெயர் மாற்றத்திற்கான முயற்சிக்காகவே புலம் பெயர்ந்த உலகின் முதல் பெண்ணும் நானாகத்தான் இருக்கமுடியும். தலைநகர் தேடி அடைந்து நான்கு மாதங்காக தனியார் (அ) அரசு பணிக்காகவும், தங்குமிடத்திற்ககாகவும் முயற்சித்துக் கொண்டிருக்கும் இநந்நிலையில் இப்பதிவை படிக்கும் போது எனக்கே ஏக்கமாகத்தான் உள்ளது.

2. நம்புங்கள் நாம் வசிப்பது தமிழ்நாட்டில் தான்வெகுஐன திரைஇசை ரசனையிலிருந்து ராக் இசைக்கு என்னை வழிநடத்திய ஆசான் பாப் மார்லி. இசையினூடாக தனிமைக்கான சிறந்த மாற்றையும் ஏற்படத்தியவை ராக் இசை சமீபகாலமாக எனது வலைப்பக்கத்தில் சில பாடல்கள் வருவதும் தாங்கள் அறிந்ததே.

அந்த கலைஞன் குறித்த எனது குட்டி அறிமுகம் விழித்தெழு எழந்து போராடு உன் உரிமைக்காய் என்னும் இந்த பதிவில்


எனக்குரிய இளமையில் நான் நானாக கொண்டாட முடியாததன் தொடர்ச்சி அல்லது முற்றப் பெறாமையின் காரணமாகவே என்னிடம் குழந்தைத்தனம் ஓங்கி இருப்பதுண்டு. அதன் இன்னொரு வடிவம் குழந்தைகளின் மீதான தீராக் காதலும். எங்கேயும், எப்போதும் சுட்டிக் குழந்தைகளை கொஞ்சுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் மீது ஆசை, கொஞ்சல், ஏக்கம், மகிழ்ச்சி, மழலை உலகம் எல்லாமே என் குணங்களில் ஒன்று. குழந்தைகளில் உலகை அழகாக விவரித்து வந்த நாவலை குறித்த என் வாசிப்பு அனுபவமாக இந்த பதிவும் -டோட்டோ சான் ஐன்னலில் ஒரு சிறுமி- எனக்கு நிறைவான பதிவுகளில் ஒன்று. நாவலில் வரும் ரயில் பள்ளி போன்ற பள்ளியில் படிக்கவி்ல்லை என்றாலும், கிட்டதட்ட இதைப் போலவே, பாடத் திட்டம் கொண்ட சிறக மாண்டசோரி பள்ளியில் பணிபுரிவதும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.மதுரையில், புதிய காற்று இதழ் சார்பாக தமிழ் சினிமா அகமம் புறமும் என்றொரு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றிற்காக தயார் செய்த கட்டுரை. எனது மற்ற பதிவுகளோடு ஒப்பிடுகையில் கட்டுரை என்னும் வடிவத்தற்கு சற்று நெருங்கி வந்துள்ள பதிவாக இது அமைந்துள்ளது மற்றும் அவசியமானதும் கூட என்பதால் என் தேரிவிலிருந்து விலக்க முடியாததாகி விட்டது.

5. தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைளின் நிர்வானம்

சில மாதங்களாக தமிழ்மணம் பக்கம் அடிக்கடி தலைகாட்ட முடியவில்லை. எனவே யாரெல்லாம் எழுதியுள்ளார்கள், யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற வரலாறும் எனக்கு தெரியாது. எனவே, இப்பதிவை படிக்கும் பதிவர்களில் இன்னும் எழுதாதோர் இதனை எனது நேரடி அழைப்பாக ஏற்று தொடரை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

PAISAPOWER said...

....வலையுலக தாதாவே வரவேற்கும் போது மறுக்க....

ஏனிந்த கொலைவெறி....பாவம் அவர்!

SurveySan said...

recorded here
2007ல் எழுதியதில் பிடித்தது

நான் பிடிச்ச பதிவு ஒண்ணே ஒண்ணு தான் போட சொன்னேன், அஞ்சு போட சொல்லி யாரோ நடுவுல திரிச்சு விட்டுட்டாங்க :)

நன்றி!

SurveySan said...

'2007ல எழுதியதில் பிடித்தது' - இதுதான் தொடர் விளையாட்டு.
நீங்க 2006லேரூந்தெல்லாம் போட்டுட்டீங்க.

2007ல பெஸ்ட் எது?

nsoundar said...

I wish you continue your noble work to get recognizance to all persons like you to live a respectful life in the society.