பெயரில் என்ன இருக்கிறது

இந்த உலகமும் அதன் அனைத்து மூலக்கூறும்பெயர்களால் அறிந்து கொள்ளவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரையிலும், ஏழை முதல் கோடிஸ்வரன் வரையிலும் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரவர்க்கென்று ஒரு பேராவது இருக்கும். பெயரிடல் போக (நல்ல) பேருக்கா உழைப்பவர்கள், உயர்ந்தவர்களும் உண்டு. தன் பணியை ஏதோ (கடமைக்கு) பேருக்கு செய்பவர்களும் உண்டு.

ஆனால், நானோ எந்த பேருக்கும் இன்றி சொந்த பேருக்காவே போராடி வருகிறேன். பெற்றோர்களால் இடப்பட்ட பெயரையும் மறுத்து என் தேவை, என் பாலுணர்வு, என் உரிமை, என் வலிகளுக்காய் என் அடையாளத்தை மீட்டெடுத்து, சில கைதட்டுகளோடும் பல கல்லடிகளோடும் என்னை ஸ்திரபடுத்திக் கொண்டு வந்தாலும், பெயரால், பாலின அடையாளத்தால் நான் இழந்தவை பல.

நூலக அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, சிம் கார்ட்டு என சகல விதத்திலும் அங்கீகாரமின்றியும், அறுவெறுப்புக்குள்ளாகியும். கடந்த 3 வருடங்களை தாய்நாடு ஈன்றெடுத்த அகதியாய் வலம் வருகிறேன். அடையாளமின்றி வாழ்வது துறவறத்திற்கு பொருந்தலாம். மனிதத் திரளின் மத்தியில் சக மனுஷியாய் நேர்கொண்டு நிற்க இயலாதவளாய் என் நிலை நிர்கதியற்று இருந்தது.


அக்டோபர் 2005ல் எனக்கு பணியும், தங்குமிடம் கிடைத்து ஒரு பாதுகாப்பான platform கிடைத்தபின் நான் செய்ய வேண்டிய முக்கியமான அடுத்த பணி பெயர் மற்றும் பாலின மாற்றம் பெறுவது. ஆனால், அதை எவ்வாறு செய்வது என்பதில் தெளிவிருக்கவில்லை. எனவே, முதலில் பெயரையாவது மாற்றிக் கொள்வோம் என்று பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, சென்னைக்கு விண்ணப்பப்படிவம் அனுப்பினேன். பெயர் மாற்றத்திற்கென சில காரணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. உ.ம். மதமாற்றம், Astrology, Neumorology, என்கிற ரீதியில் சில..

நானோ எனது பாலின சிக்கலை எதுவும் குறிப்பிடமால் பொதுவாக "I want my name with no regional, religious and gender identity" என்று குறிப்பிட்டிருந்தேன். சரியாக 15வது நாளில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது. அதில் நிராகரிப்பிற்கான காரணமாக கொடுக்கப்பட்ட பட்டியலில் அனைத்தையும் பேனாவால் அடித்துவிட்டு. ஒரு மூலையில் பென்சிலால் "இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று எழுதியிருந்தது.

ஆத்திரம், அழுகை எல்லாமே இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாத நிலை. நண்பர் ஒருவரின் அறிவுரையின் படி மதுரையில் உள்ள பெண்ணிய ஆர்வலரும், வழக்கறிஞருமான ரஜினி அவர்களை சந்தித்து என் பிரச்சனையை விளக்கினேன். (இவர் ஏற்கனவே 2002ல் திருநங்கைகளுக்கான வழக்கு ஒன்றில் பங்காற்றியவர்).


அவரது வழிநடத்தலின் கீழ் பிப்ரவரி 2005ல், நான் பிறந்த ஊரான திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், நாங்கள் வசித்த பகுதியை சார்ந்த தாசில்தார் அவர்களுக்கும், இவற்றோரு தலைமைச் செயலகத்திற்கும் எனது பிரச்சனையை தெளிவாகக் கூறி அனைவருக்கும் மனு ஒன்றினை அனுப்பி எனக்கு பெயர் மற்றும் பாலின மாற்றம் ஏற்படுத்தித் தர வேண்டிக்கொண்டேன்.


சில நாட்கள் கழித்து திருச்சி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. மூன்று முறை நேர்முகத் தேர்வும், சில விசாரணைகளும் முடித்தபின் எனது பெயர் மற்றும் பாலின மாற்ற விண்ணப்பத்தினை தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னைக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். எனக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் வரவேயில்லை. பிறகு நேரில் சென்ற பிறகு கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள்.


மாத இடைவெளிக்குப் பின், பால்மாற்று அறுவை சிகிச்சை மாற்று மேற்கொண்டதன் மருத்துவ சான்றிதழ் அனுப்பக் கோரி பதில் வந்தது. எனது பால்மாற்று சிகிச்சையோ அங்கீககாரமின்றி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அதற்கான அங்கீகாரமோ, புரிதலோ கூட இல்லாத சூழலில் நான் என்ன செய்வது? அதற்கும் என்னிடம் வழி இருந்தது. பால்மாற்று சிகிச்சை முடித்த சில மாதங்களில் குடல்வால் வளர்ச்சி காரணமாக எனக்கு வேறொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அச்சிகிச்சை முடிந்து நான் வெளியேறிய போது discharge குறிப்பில் எனக்கு ஏற்கனவே, பால் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆதரமாக எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பியிருந்தேன். ஏற்கனவே அனுப்பிய விண்ணப்பத்திலும் அப்பிய போதும். மீண்டும் தனியாக கடிதத்தோடு அனுப்பியிருந்தேன். ஆனால், பால்மாற்று சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தான் சான்றிதழ் தரவேண்டுமென மீண்டும் மறுத்துவிட்டனர். இதிலேயே அரையாண்டு கழிந்துவிட்டது.


அவர்கள் அனுப்பிய மறுப்புகளை அடிப்படையாக கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் வழக்கு பதிவு செய்தேன். நான்கு மாதங்கள் கழித்து எனது பெயர் மாற்றத்தினை 7 வாரங்ளுக்குள் மேற்கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோசத்தின் உச்சியில், மிகப்பெரிய வெற்றியடைந்த களிப்போடு காத்திருந்தேன். 7 வாரங்களை அதிகபட்சம் 2 மாதங்களாக கொண்டு காத்திருந்தேன். 3 மாதங்கள் ஆனது பதிலே இல்லை பொறுக்க முடியாமல் சென்னை வந்து நேரடியாக அலுவலகத்தில் விசாரத்த போது, தீர்ப்பில் பரிந்துரைக்கதான் சொன்னார்கள் நாங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என்று முடித்துக் கொண்டனர். அடக்கமுடியாத ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு என் நிலையை விளக்கி, பரிந்துரையை ஏன் ஏற்றுக் கொள்ளமுடியாது அதற்கான காரணம் வேண்டும் என சண்டையிட்ட பின் மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாற்றித்தர முடியும் என்றார்கள்.


மருத்துவ சான்று வேண்டுமெனில் அதற்கான வழியை மேற்கொள்ளுங்கள் இல்லையெனில் கோர்ட் அவமதிப்பு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று பூச்சாண்டி காட்டியின் கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள். பல நாட்களுக்குபின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையிலிருந்து மருத்துவ சான்றிதழ் பெருமாறு எனக்கும், என்னை சோதித்து சான்றழிக்குமாறு மருத்துவமனைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.


மருத்துவமனையில் சென்று சான்றிதழ் வாங்குவதற்கு 3 வாரங்கள் ஆனது. அலுவலகத்தில் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின் மருத்துவர்களால் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்டேன். அதைவிட கொடுமை அங்குள்ள சில அலுவலர்களால் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளானது. அனைத்தையும் பொருமையுடன் சகித்துக் கொண்டு ஒரு வழியாக மருத்துவசான்றிதழும் சாதாக கிடைக்க "எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மிக மிக முறையான, சரியான வகையில் காரியம் முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கையும், இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்ற பூரிப்போடு" காத்திருந்தேன்.


காத்திருப்பு, அதீத தாமதம், சென்னை விஐயம். ஆவலோடு கேட்டால், "எங்களுக்கும், காப்பி வந்துச்சு. ஆனா, அதுல Medical examination seems she can reared as Female ன்னு தான் இருக்கு. she is female அப்பிடின்கு வரல. அதனால மாத்த முடியாது". இப்போதும், பொருத்துக் கொண்டு "அதெப்பிடி பிறப்பால் நான் பெண்ணு இருந்தா அத எங்க அப்பா, அம்மா ஆரம்பத்திலேயே பாலினம்னு குறிச்சிருப்பாங்களே... இப்படி பெறக்கப்போயிதானே இந்த கஷ்டமெல்லாம். அப்ப டாக்டருங்களும் அதான சொல்ல முடியும். எப்பிடி மாத்த முடியும்னு" விவாதம் நடந்தது. பிறகு பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள். ஒருவழியாக பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள் என நிம்மதி பெருமூச்சு விட்ட போது செப்டம்பர் 2006.


பிறகு டீனிடம் பேசணும், அங்க கேக்கணும், G.O. வரலைன்னு ஏகப்பட்ட சமாளிப்புகள். பொறுத்தவரை பொறுத்து நேரடியாக ஒருநாள் அலுவலுகம், மேலதிகாரி அனைவர் முன்பாகவும் கொதித்தெளுந்து சண்டை போட்டதன் பயனாக "பேர் மட்டும் மாத்துரதுன்னா பரவால்ல பாலினம் வேற மாத்தனும்ல அதனால் எப்படின்னு பேசிட்டு இருக்கும் அதான் லேட்டு" என்று உயரதிகாரி ஒருவர் சொன்னார்.


சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் காத்திருந்தேன். இதற்கிடையில் மதுரையை விட்டு சென்னைக்கு மாறி வந்தாச்சு. சென்னைக்கு நான் வந்ததன் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. முகவரி மாற்றத்தை நேரில், போனில், கடித்தில் தெரிவித்தும் தொடர்ந்து வந்த கடிதங்களோ ஆரம்ப மதுரை முகவரிக்கே தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மீண்டும் என்னை அடைய சில நாட்கள் என எல்லாமே தாமதம்.


பிறகு பெயர் மாற்ற குறிப்பினை குறிப்பிட்டு ரூ.1,645/-னை கட்டுமாறும் கடிதம் கிடைத்தது. வழக்கமான பெயர்மாற்றத் தொகையோ வெறும் 410 தான். தொகையோ பல மடங்கு கூடுதல் மேலும், பெயர் மாற்றம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் நேரில் சண்டை போட்டும் பயனில்லை. சரி பெயராவது மாறட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டாலும் அவ்வளவு என்னிடம் இருந்ததோ 500 பிறகு அதற்கு மேல் பணம் திரட்ட முயன்று, தோற்று ஒரு வழியாக சென்னை பல்கலைகழக கன்னட துறை பேராசிரியர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் கொடுத்து உதவினார்கள். (ஒருமுறை தொலைபேசியிலும், ஒருமுறை நேரிலும் மட்டுமே அறிமுகம்)


பணம் கட்டி முடித்து ஐனவரி 2008 புது வருடம் புத்தம் புதியாய் எனக்கு தொடரும் என்று காத்திருந்தேன். ஐனவரி சோர்வாய் சென்று முடிந்தது. பிப்ரவரியும் வந்து, பெயர் மாற்றம் என் மனதை அறித்துக் கொண்டிருப்பது நின்றுவிட்ட மதுரையிலிருந்து நேற்று ஆன்ட்டி கால் செய்து என் பெயர் மாற்ற அறிவிப்பு கடிதம் கிடைத்த செய்தியை சொன்னார்.


நண்பர்களே என் வாழ்நாளின் தீர்க்க முடியாத சிக்கில் ஒரு பாதியை தீர்த்து விட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.


உபரி : பேர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்ததற்கு கின்னஸ் கிடைக்குமான்னு விசாரிச்சு சொல்லுங்கப்பா....

54 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லிவிங் ஸ்மைல் said...

முன்பை விட அதிக உறுதியோடு பாலின மாற்றத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி!

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் தங்கையே.. பெயர் மாற்றமே உனக்குக் கிடைத்த வெற்றிதான். இது எளிதாகக் கிடைத்திருந்தால் நீ தேடியதன் சக்தியும், தேவையும் மற்றவர்களுக்குப் புரிந்திருக்காது. தெரிந்திருக்காது.

இனி எண்ணம்போல் வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்..

கோவி.கண்ணன் said...

//நண்பர்களே என் வாழ்நாளின் தீர்க்க முடியாத சிக்கில் ஒரு பாதியை தீர்த்து விட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.//

வித்யா,

மிக்க மகிழ்ச்சி. விடாமல் போராடிய உங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றி. குறிக்கோள்களும் வெற்றிகளும் தொடரட்டும்.

லக்கிலுக் said...

வாழ்த்துகள்!!!

மக்கள் சட்டம் said...

பாராட்டுகள் தோழி!

தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

-சுந்தரராஜன்

கல்வெட்டு said...

//"இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று எழுதியிருந்தது.
//

:-((((

ஜடங்கள்... என்ன சொல்ல இவர்களை.

**

விடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
வாழ்த்துகள்

Kasi Arumugam said...

//இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும//

:(

இதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது! லிவிங் ஸ்மைல்,மன உறுதியோடு போராடியத்ற்குப் பாராட்டுக்கள். வெற்றியடந்ததற்கு வாழ்த்துகளும்.

(எப்படிக் கூப்பிட, லிவிங் ஸ்மைல்? வித்யா?)

ஒரு பொடிச்சி said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா...!
சரிதான்;
பெயரில் என்ன இருக்கிறது?
"பெயரில் எல்லாமும் இருக்கிறது!"

with loveeee
பொடிச்சி

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள். போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியின் மகிழ்வை வேறு எதனாலும் தரமுடியாது, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

மணியன் said...

வாழ்த்துகள்!!

கிருது said...

Congratulation. After long struggle and had fight you got your citizon right

இளங்கோ-டிசே said...

இது உங்கள் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து, நீங்கள் நினைத்த பிறவும் நடந்தேற வாழ்த்துக்கள்.

இளங்கோ-டிசே said...

இது உங்கள் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து, நீங்கள் நினைத்த பிறவும் நடந்தேற வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரியே!
தங்கள் அயரா உழைப்புக்கு மேலும் பல வெற்றிகள் குவியும்.
தங்கள் 'நான் வித்யா' ,இங்கே 'அறிவாலயத்தில்'
விற்பனைக்கிருந்தது.
படிக்கிறேன்....
வாழ்க்கையில் நீங்கள் பட்ட துயர்,கற்ற பாடம் யாவும்..
முடித்ததும் விபரமாக எழுதுகிறேன்.

குலவுசனப்பிரியன் said...

வாழ்த்துக்கள் வித்யா.

மேலும் வெற்றிகள் தொடரட்டும்.

இளைய கவி said...

முயற்ச்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பதை நிருபித்துவிட்டீர்கள். இந்த சமுகம் திருந்த பல யுகங்கள் ஆகும், எண்ணித்துணிக கருமம் என்பதிற்கிணங்க தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
இளையகவி

அசுரன் said...

வாழ்த்துக்கள் தோழி லிவிங்ஸ்மைல்,

தமிழகத்தை பாலின உரிமைக்கான அம்சத்திலும் முற்போக்கான மாநிலமாக மாற்றும் உங்களது போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

உங்களது மன உறுதியையும், அதிகார்த்துவத்தின் எள்ளளளுக்கும், அவமாரியதைக்கும் தலைவணங்காத துணிவையையும் சுவீகரிக்க விருப்பப்படுகிறேன்.

புதுப் பெயர் வித்யாவா?

அசுரன்

அசுரன் said...

சம்பிரதாயமான வார்த்தைகள் மூலம் வாழ்த்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டாலும். ஒடுக்கப்பட்டவர்களின் கேட்பாரற்ற அவல நிலை என்னுள் ஆத்திரத்தை மிக அதிகமாக மூட்டுகிறது. வார்த்தைகளில் எனது உணர்வுகளை விவரிக்க சிரமப்படுகிறேன்.

அசுரன்

அசுரன் said...

//முன்பை விட அதிக உறுதியோடு பாலின மாற்றத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி!//

இதிலும் வெற்றி பெற வேண்டும்.

அசுரன்

லிவிங் ஸ்மைல் said...

/// புதுப் பெயர் வித்யாவா?

அசுரன் ///


பெயரை சொல்ல மறந்து விட்டேன். சந்தேகமின்றி இனி சட்டப்படியும் நான் "லிவிங் ஸ்மைல் வித்யா"வே தான்.

Unknown said...

நல்ல சேதி , வாழ்த்துக்கள் வித்யா.

Unknown said...

அன்புள்ள லிவிங் ஸ்மைல்,
வாழ்த்துக்கள். உங்கள் பெயர் மாற்றத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை எனக்கு அறிமுகப்படுத்திய தோழிக்கும் இதை மின்னஞல் செய்துள்ளேன். அவரும் சந்தோசபடுவார். இதற்காக பட்ட கஷ்டங்கள்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ரொன்டு வருசம். உங்கள் பொருமைக்கும் விடாமுயற்ச்சிக்கும் இன்னொரு வாழ்த்துக்கள்.

ஆனால், குறைந்த பட்சம் இந்த ஆட்கள் இனி வரும் வின்னப்பங்களுக்காவது இந்த புத்தியை பயன்படுத்தி சீக்கிரம் செய்து தந்தாள் அது உங்களின் வெற்றியை இரட்டிப்பா....இல்லை பல நூறு மடங்காக்கும்..............பார்க்கலாம்

தோழமையுடன்

cheena (சீனா) said...

பெயர் மாற்றப் போராட்டத்தில் வெற்றி கண்ட லிவிங்ஸ்மைல் வித்யா - நல் வாழ்த்துகள்.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா

vaasu said...

ooooohoo God........

இராம்/Raam said...

//முன்பை விட அதிக உறுதியோடு பாலின மாற்றத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி!//

வாழ்த்துக்கள்... :)

லெனின் பொன்னுசாமி said...

//சம்பிரதாயமான வார்த்தைகள் மூலம் வாழ்த்துக்களை இங்கு பகிர்ந்து கொண்டாலும். ஒடுக்கப்பட்டவர்களின் கேட்பாரற்ற அவல நிலை என்னுள் ஆத்திரத்தை மிக அதிகமாக மூட்டுகிறது. வார்த்தைகளில் எனது உணர்வுகளை விவரிக்க சிரமப்படுகிறேன்.//

என் கருத்தும் இதுவே. உங்களுக்கு கிடைத்த அனுபவம் மோசமானது வித்யா.இரண்டு வருடங்களிலாவது காட்சி மாறியது கண்டு மகிழ்ச்சி.

குமரன் said...

"பெயரில் என்ன இருக்கிறது?"

- உங்களின் தொடர் போராட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

என் பெயரை அறிமுகப்படுத்தும் பொழுது, ஒருமுறைக்கு, இரண்டுமுறை அழுத்தம் திருத்தமாக சொல்வேன்.

பிறகு, அழைக்கும் பொழுது, தவறாக அழைத்தால், எனக்கு அத்தனை ஆத்திரமாக வரும். சிலரிடம் கோபமாக சண்டையும் போட்டிருக்கிறேன்.

உங்களின் உணர்வின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது.

அரசு சம்பந்தமான விசயங்களில், மாட்டிக்கொண்டால், அலைச்சல், மரியாதையின்மை, லஞ்சம் என பல அவஸ்தைகள். ஒரு ரேசன் கார்டுக்காக என்னை அலைய விட்டார்களே! மறக்க முடியுமா அரசு இயந்திரங்களை!

☼ வெயிலான் said...

வாழ்த்துகள் லிவிங் ஸ்மைல் வித்யா!
பல வெற்றிகள் தொடரட்டும்.

குகன் said...

வணக்கம் வித்யா,

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் !!

குகன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பாராட்டுகள் லிவிங் ஸ்மைல் வித்யா!

Balaji-Paari said...

அன்பின் லிவிங் ஸ்மைல் வித்யா,
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும்.

benza said...

Hello Smile Girl, Congratulations.
You have established your right and exposed utter inefficiency of Tamil Nadu administration.
But what's the use? Those stupid Tamil donkeys will be the same.
Perhaps, had you tried the proven method of approach, much publicized in novels and films, things would have been different.
In my observation, within my short life of 70 years, any person or entity that uses 'Tamil' is an example of 'short coming'.
What else, other than stupidity, can the world expect from Tamil Nadu, when it is caste oriented and dominated by bribe-taking-politicians.
It is said, 'Peoples deserve their 'politicians'.
Why not try the Valluvar method of approach, for a social change, as well, along with your courageous battle.
Young lady, as a 'man' and a 'tamil' I am ashamed of Tamil Nadu for its 'inward' thinking and 'caste' and 'bribe' system.
But am NOT ashamed of my short coming of inability to type in Tamil, as we are all born with certain minuses too.
Thank you,
ben aloysius

ganesh said...

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மிக மிக முறையான, சரியான வகையில் காரியம் முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கையும், இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்ற பூரிப்போடு" காத்திருந்தேன்.

வணக்கம் தோழி,

இவ்வளவு போராட்டதிலும் "எனது முயற்சி ஒரு முன் மாதிரியாக அனைவருக்கும் உதவும்"என்ற உங்கள் சிறந்த எண்ணமே உங்கள் வெற்றிக்கு காரணம்....வெற்றி தொடர வாழ்த்துக்கள்....

G.Ragavan said...

உனது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். நிச்சயம் சொல்லும்.

நாமே பெயர். பெயரே நாம். மாம்பழம்னு சொல்றப்பவே இனிப்பு நாக்குல தெரியுதுல்ல. அதான் பேரோட பலன். அந்தப் பலனை நீங்க பெற்றதுல பெருமகிழ்ச்சி.

லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

முபாரக் said...

மகிழ்ச்சி என்பது போராட்டம் - எனும் மாமேதை காரல் மார்க்ஸின் கூற்று இப்போதான் கொஞ்சமாவது விளங்குகிறது

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

சினேகபூர்வம், முபாரக்

பாரதிய நவீன இளவரசன் said...

Congrats!

Best wishes for success in all your coming endeavors!

தருமி said...

தொடர்ந்து போராடியமைக்குப் பாராட்டுக்கள்.
ஒரு படி மேலேறி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் சகோதரி!

+Ve Anthony Muthu said...

அன்புத் தோழி,
உங்களின் போராட்டங்கள்
பிரமிக்க்த்தக்கது.
அதில் ஒரு பாதி மட்டுமே வெற்றி பெற்றிருப்பினும்,
இதற்கே நீங்கள் எத்தனை பெரிய அவமானங்களை, வலிகளை அனுபவித்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது.

முழு வெற்றிக்கு எல்லாம் வல்ல இறையை வேண்டி,
மனதின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் வித்யா

Unknown said...

Dear Friend,
It pains to read your article. I saw your interview with 'Ippadikku Rose'. Tears rolled down my eyes to hear your story. You mentioned in your blogpost that you grew up with little ppl to encourage. Please consider me as one of those little. Good luck for your future endevours. We are all there to support you and your goals

சங்கீதா said...

தோழியே, உங்கள் நேர்காணலை தொலைகாட்சியில் கண்டேன். இந்த சமூகம் உங்களுக்கு இழைத்த கொடுமைகள் கண்ணீரை வரவழைக்கின்றன. உங்கள் அயராத
முயற்சிக்கும், மேலும் பல வெற்றிகள் பெறவும் என் வாழ்த்துக்கள்.

rvr said...

I had tears running down in my face. My best wishes to you.

Sorry for typing in english.

Regards

Aarveeyar

பாக்யா... said...

அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்... உங்கள் போராட்டங்கள் வெற்றி பெரும் காலம் வெகு அருகில் உள்ளது..

butterfly Surya said...

பாராட்டுகள் தோழி!

தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

Surya
Chennai
butterflysurya@gmail.com

Anonymous said...

அன்பான வாழ்த்துக்கள் தோழி

Kalki Subramaniam said...

சகோதரி.. இத்தனை வலிகளிலும் போராடும் உன் குணம் என்னை பெருமை கொள்ளச்செய்கிறது. - அன்புடன் கல்கி

ஜோதி said...

வணக்கம் நான் ஜோதிநரசிம்மன் விழுப்புரம் கிழக்குப்பதிப்பகம் வெளியிட்டிருந்த தங்களுடைய நான் வித்யா படித்தேன் உங்களின் வலி அவமாணம் அனைத்தையும் என்னால் உணரமுடிந்தது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி

தோழமையுடன்
ஜோதி

சுகவி said...

ஹாய் வித்யா... எப்படி இருக்கீங்க...? நான் உங்களோட நான் வித்யா படித்தேன். தோழி உங்கள் அனுபவ பதிவுகள் மிக அருமை. வாழ்த்துகள்.

SaRa said...

sister,I just love your courage.Hats off!!Love you,
(I am choked with emotions,God bless you!!).
"ingu manitharkalukey peyar maatram seiyapadum"---I was broken with that.sad that this idiotic society accepts heartless people as human........

Unknown said...

Gudos to Living smile Vidya, for ur courage and positive attitude

J J Reegan said...

//

//"இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று எழுதியிருந்தது.
//

:-((((

ஜடங்கள்... என்ன சொல்ல இவர்களை.

//

மனித நேயம் இல்லாத மாக்கள்....

surya said...

valthukkal vidhy