கவிதை 02
நானும் யாரும்

உமது எண்ணங்களை தடுப்பதற்கில்லை


அதனை கேள்வியாக்குகையில்

எமது ஆட்சேபனை எதுவும் இல்லை


பழகிய அறுவெறுப்புகள்

சுணக்கத்திற்கில்லை


பதிலை எதிர்பார்ப்பதை விடவும்

முன்முடிவோடு ஒப்ப எதிர்பார்க்கையில்


தடுமாற்றம் உடலில்

எரிச்சல் அதற்குள் எங்கும்.

3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

வவ்வால் said...

நல்ல கவிதை ,மேலும் பல கவிதைகளை படையுங்கள்!

மிதக்கும் வெளி said...

இன்னும் கொஞ்சம் செறிவுபடுத்தி எழுதுங்கள்.

SK said...

கவிதைக்கு அழகு சொல்ல நினைத்ததை சுணக்கமாய்ச் சொல்வ்து!
அதன் பிறகு, புரிவதும், புரியாததும் அவரவர் விதிப்பயன்!

இந்தக் கவிதையில், முழுமையை உணர முடியவில்லை!

ஒருவேளை, என் விதிப்பயன் சரியில்லை போலும்!!