கவிதை03

காயும் வெய்யில் சாலையில்

குடை பிடிக்கும் அபத்தமில்லாமல்

பாதையின் நிழல் வெளிக்கு

அனிச்சையாய் வழிநடத்தும்

காதலன் நீயாய் இருக்க.,

சூரியன்-பிள்ளை உன்னை

சந்திக்கவும் கூடுமோ

என் காதலையும் மீறி...

8 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை பாராட்டுக்கள்.

செந்தில் குமரன் said...

///
காயும் வெய்யில் சாலையில்
குடை பிடிக்கும் அபத்தமில்லாமல்
பாதையின் நிழல் வெளிக்கு
அனிச்சையாய் வழிநடத்தும்
காதலன் நீயாய் இருக்க
///

ரொம்ப நல்லா இருக்குங்க...

paarvai said...

காதல் ;குளிர்ச்சி என்குறீங்க!
நல்லா இருக்கு!
யோகன் பாரிஸ்

பட்டணத்து ராசா said...

//காயும் வெய்யில் சாலையில்
குடை பிடிக்கும் அபத்தமில்லாமல்
பாதையின் நிழல் வெளிக்கு
அனிச்சையாய் வழிநடத்தும்
காதலன் நீயாய் இருக்க.,//

இது வரைக்கும் ok

//சூரியன்-பிள்ளை உன்னை
சந்திக்கவும் கூடுமோ
என் காதலையும் மீறி...//

இது புரியலயே வித்யா.

goyyalu said...

கலாய்ச்சிட்ட போ, லண்டன் விசிட் அப்ப நான் நர்த்தகி நட்ராஜை சந்தித்தேன், உங்களையும் ஒரு நாள் சந்திப்பான் இந்த கொய்யாலு.
அருமையான மேட்டரு

இராம் said...

//சூரியன்-பிள்ளை உன்னை

சந்திக்கவும் கூடுமோ

என் காதலையும் மீறி...//

என்னாம்மா ஒன்னுமே புரியலே.எதை உணர்த்துகின்றன இந்த வரிகள்....

குழப்பத்துடன்,
ராம்

steelboy28 said...

Greets to the webmaster of this wonderful site! Keep up the good work. Thanks.
»

G.Ragavan said...

கவிதையின் இரண்டாம் பாகம் சற்றுப் புரியவில்லை.

இன்னாருடைய குழந்தையைச் சுமக்க வேண்டும் என்று எழும் ஆசையா!

அல்லது வெயில் பிடித்திருப்பதால் சூரியனை அணைப்பதாகக் கருதுவதா!

கொஞ்சம் விளக்குங்கள் லிவிங் ஸ்மைல் வித்யா!