தொந்தரவும்.., தொந்தரவும்....,




கூடவே பிறந்ததுதான்

ரொம்ப பிசுபிசுப்பானதும்,

தொந்தரவு அதிகமானதும்,

நேரங்கெட்ட சமயத்தில் அரிப்பதும்,

விழிப்பில் இருக்கையில் மட்டும் பிய்த்துப் புடுங்குவதுமாக



வீண் தொந்தரவுதானே

உரித்தேன்... எரித்தேன்...



நிம்மதியாக பச்சையானால்

கல்லடி பயங்கரம்

18 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Jayaprakash Sampath said...

வித்யா, வருக..

தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு வரவேற்கிறோம்.

G.Ragavan said...

புரிந்தது போல இருக்கிறது. வேண்டாததை விட்டு விட்ட திருப்தி எழுத்தில் தெரிகிறது.

உங்களது பிரச்சனைகளையும் பொதுவான விஷயங்களையும் கலந்து எழுதுங்கள்.

Geetha Sambasivam said...

வித்யா,
வாழ்த்துக்கள். ஒரு கவிதையிலேயே உங்களை உணர்த்த முடிகிறது. இயல்பாய் வருகிறது. தொடரட்டும்.பாராட்டுக்கள்.

Vaa.Manikandan said...

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!!

டிபிஆர்.ஜோசப் said...

நிம்மதியாக பச்சையானால்

கல்லடி பயங்கரம் //

இவ்வளவு நாள் எங்கருந்தீங்க வித்யா?

நல்லாவே எழுதறீங்க. இடையில பின்னூட்டம் வரலையேன்னு நிறுத்திராதீங்க..

Unknown said...

வித்யா வருக . வாழ்த்துகள்.

லிவிங் ஸ்மைல் said...

icarus prakash, g. ragavan, vaa.manikandan அனைவருக்கும் என் நன்றிகள்..

மனதின் ஓசை said...

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதவும்..இது உங்கள் உலகம்..நல்லொர் பலர் உள்ளனர்... உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் பலர் உள்ளனர், என்னையும் சேர்த்து..
கவிதைகளும் படித்தேன்.. முழுதும் புரிய வில்லை..:-)

துபாய் ராஜா said...

வலி புரிகிறது.விடுங்கள் வித்யா.இனி
வாழ்வெல்லாம் வசந்தம்தான்.

- யெஸ்.பாலபாரதி said...

இன்னும்கூட ஆழமாக சொல்லி இருக்கலாமோன்னு தோனுது..
விடுங்க நல்லவங்களும் இருக்காங்க வித்யா.. நம்பிக்கை கொள்ளுங்கள்...

லிவிங் ஸ்மைல் said...

யாழிசை-யின் நேர்மையான விமர்சன்த்திற்கு நன்றி...

ஆதரவோடு கூடிய நல்ல விமர்சனம் என்னை செம்மைபடுத்த கூடுதல் தேவையாய் உள்ளது...

ஆக, மேலும் சிறப்பான படைப்பை தர முயற்சி செய்கிறேன்...

ROSAVASANTH said...

அறிமுகம், மற்றும் இரண்டு கவிதைகளை படித்தேன். வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கச்சிதமாய் சொல்ல வந்ததை முன் வைத்திருக்கிறீர்கள். எழுதியதை விட, சொல்லாமல் விட்டது தாக்குகிறது.

பல வகை வாழ்வனுபவங்கள் தமிழில் பதிவாக வேண்டியுள்ளது. நம் சமூகத்தின் பார்வையில் சகிப்புதன்மையும் பரந்த மனபான்மையும் கொள்ள இவை தேவைப்படுகின்றன. முன்புடன் ஒப்பிடும்போது இன்று நம் சூழலும் முன்னேறிவிட்டதாகாவும் தோன்றுகிறது.சிறுகதை, நாவல் அல்லது தன் வறலாறு என்ற அளவில் நீங்கள் விரிவாய் எழுத வேண்டும். இது வேண்டுகோள் மட்டுமே.

- யெஸ்.பாலபாரதி said...

//யாழிசை-யின் நேர்மையான விமர்சன்த்திற்கு நன்றி...//

நன்றிக்கு நன்றி..
நம்ம வாய் கொஞ்சம் ஓட்டை.. தவறாக நினைக்காதமைக்கும் நன்றி..
:-)

//ஆதரவோடு கூடிய நல்ல விமர்சனம் என்னை செம்மைபடுத்த கூடுதல் தேவையாய் உள்ளது...//

நிறைய பேர் இருக்கோம்.. கவலையை விடுங்க..


// மேலும் சிறப்பான படைப்பை தர முயற்சி செய்கிறேன்...//

இது போதும்ங்க... நீங்க நல்ல படைப்பை தருவீங்க..

மஞ்சூர் ராசா said...

கவிதைகளில் ஆழம் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

தருமி said...

எழுத்துக்களின் நேர்மையில் நிமிர்ந்த பார்வை தெரிகிறது.
வளர வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் தெரிந்த என் நண்பர், காந்தி நினைவுமண்டபத்தில் நாடகவிழாவில் உங்களைக் காண்பித்தார். நாடக முடிவில் உங்களைக் காண்பதாக இருந்தோம். கூட்டத்தில் முடியாது போயிற்று. சந்திப்போம்.

லிவிங் ஸ்மைல் said...

// உங்களுக்கும் தெரிந்த என் நண்பர், காந்தி நினைவுமண்டபத்தில் நாடகவிழாவில் உங்களைக் காண்பித்தார்.//

எந்த நண்பர்,

// நாடக முடிவில் உங்களைக் காண்பதாக இருந்தோம். கூட்டத்தில் முடியாது போயிற்று. சந்திப்போம் //

நிச்சயம் சந்திப்போம்

லிவிங் ஸ்மைல் said...

Mr. Ahmeed க்கு நன்றி.,

// NAN ORU PATHIRIKAIYALAAN,KADANTHA 2 AANDUKALUKKU MUN ARAVAANIKALIN VALKAI KURITHHU KALA AAYVU SEYTHU VIRIVAANA PALA THAGAVALKALI ARINTHULLEN! DHARMATHIN KURAL ENTRA MAATAH ITHALIL ARAVAANIKAL KURITHU ELUTHIYULLEN....//

தயவு செய்து, எனக்கு அது எந்தா மாதம், தேதி என்பதை தெளிவாக தரவும்.... நண்பர்களே, அரவாணிகள் குறித்த பல தகவல்களை நான் திரட்டி வருகிறேன். ஆகவே தங்கள் கவனத்திற்கு வரும் எந்த செய்தியையும் எனது கவனத்திற்கும் கொண்டு வருமாறு வேண்டிக் கொள்கிறேன்...

// ENATHU KATTURAYIL ARAVAANIKALIL PALAR ILAKKIYAM AARVAM MIKKAVARKALAKAVUM....EZUTUVATARKKU AERALAMAANA SEYTHIKALUDAN ULLATHAIYUM KURIPPTTIRUNTHAN //

மிகவும் நன்றி...

உங்கள் நண்பன்(சரா) said...

உங்கள் பதிவு படித்ததும் மனதிற்க்குள் இனம்புரியாத வேதனை...
முக்மூடி அணியாமல் உண்மை சொன்ன நல்ல உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள்.

அதிகமாக எழுதுங்கள்...
நல்ல உள்ளங்கள் அதிகம் உண்டு..


அன்புடன்...
சரவணன்.