விழித்தெழு; எழுந்து போராடு உரிமைக்காய்

ஆகஸ்ட் மாத உயிர்மை இதழின் அட்டைப்படத்தில் ஒரு சுருள் முடிக்காரனின் அட்டைப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.., எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்கையில் நண்பரொருவரின் T-Shirt ல் பார்த்த ஞாபகம் வந்தது.



அந்த நண்பர் மேற்கத்திய இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். நல்ல கிடார் ஆர்டிஸ்ட்டும்.. அவரிடம் பல இசைத் தட்டுகள் இருப்பது எனக்கு தெரியும், ஏதாவது குடுங்களேன் கேட்டுப் பார்ப்போம், என்றால் அதெல்லாம் உனக்கு புரியது, வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுவார்... நான் சும்மா விடுவேனா.. "ஹலோ இசை ஒன்னும் கணக்கு இல்ல புரியாம போறதுக்கு., அது ஒரு உணர்வு. உணர்வுள்ள எல்லாருக்கும் அது புரியும்"னு Dialouge கூட அடிச்சுப் பார்த்தேன்.. ம்ஹும்.. ஒன்னும் கதைக்கு ஆகல....

அவரது டீ-சர்ட்டில் தான் இவரைப் பார்த்திருந்தேன்... அவரிடம் சே குவேரா உருவம் ஒட்டப்பட்ட டீ-சர்ட் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது...

ஆக, உயிர்மையில் அந்த அட்டைப் படத்தைப் பார்த்து, யூகிச்ச உடனே அடிச்சேன் ஒரு மிஸ்ட் கால்(பின்ன நாங்கல்லாம் எந்த காலத்துல Outgoing call பண்ணோம்). அப்புறம் அவர் Call பண்ணதும்.. விசயத்தைச் சொன்னேன்...

"ஹே... உங்க டீ-சர்ட் ஒன்னுல ஸ்மோக் பண்ணுற மாதிரி ஒரு ஆளோட இமேஜ் இருக்குமே.. அவரப் பத்தி ஒரு ஆர்ட்டிக்கிள் உயிர்மையில் வந்திருக்கு"ன்னு, சொன்னேன்..
"பேர் என்ன போட்டுருக்கு" ன்னு கேட்டார்.

"பாப் மார்லி"

"அப்பிடியா! எனக்கு அந்த புத்தகம் வேணுமே..."

நாங்க போன்ல பேசிட்டு இருந்த சமயம் அவர் பெரியார்ல தான் இருந்தார்.

"பலிக்குப் பலி, ரத்தத்துக்கு ரத்தம் நான் எத்தன தடவ CD கேட்டுருப்பேன்.. தரவே இல்லல்ல.. போ... இப்ப புக் தரமாட்டேன் போ... வேணும்னா பெரியார்லயே college house(அங்க தான் நாங்க ice cream சாப்பிட போவோம்ல கிடைக்கும் போய் வாங்கிக்கொங்க..."ன்னு சொல்லிட்டேன்.

*********


மேலே சொன்ன என் நண்பர் தனது கல்லூரி நாட்களில் பார்களில் கிதார் வாசிப்பவராக இருந்தவர்... அப்போதெல்லாம் கஞ்சா எடுத்துக்காமல் தன்னால் கிதார் வாசிக்க முடியாது என்பதையும், நாட்பட சற்று மோசமான அளவில் கிதாருக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டதையும்(நல்ல வேளை இப்போது இரண்டையும் விட்டு விட்டார்) ஏற்கனவே எனக்கு சொல்லியிருக்கிறார்.


இப்ப இந்த ஆர்டிக்கில் படிச்சதுக்கப்புறம், மார்லி (Stuff மேலயும் தான்) மேல எனக்கும் ஒரு கிரேஸ் வந்துடுச்சு..,

*********

சென்ற வாரம் பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்க்காக (இதைக் குறித்து தான் முந்தைய பதிவு போட்டிருந்தேன்)சென்னைக்கு சென்றிருந்த போது நண்பர் ஒருவர் நுங்கம்பாக்கம் LAND MARK BOOK STALLக்கு என்னை அழைத்து சென்றிருந்தார்.. உள்ளே, எங்கே திரும்பினாலும் இங்கிலிபீஸ், இங்கிலிபீஸ், ஒன்லி இங்கிலிபீஸ்... ம்யூசிக் செக்சனில் மட்டும் தான் கொஞ்சம் தமிழ், ஹிந்திகளின் வாடையே அடித்தது...

என்னிடம் இருப்பது ஒரு டப்பா வாக்மேன் அதுவும், கேசட் ப்ளேயர்.. அதனால் CD பக்கமெல்லாம் போகாமல், cassettee இருக்குற பக்கமா வந்தேன்..ஆஹா, கண்டேன் மார்லியை... ஆமாம், பாப் மார்லி கேசட் ரெண்டு அங்கே விற்பனைக்கு இருக்கக் கண்டேன்.. ஒன்றின் விலை ரூ.125/- இன்னொன்னு ரூ.135/- ரெண்டுமே பட்ஜெட்டுக்கு அடங்காதுதான் இருந்தாலும், யோசித்து இரண்டில் 10 ரூபாய் குறைவாயுள்ள, LEGEND - BOB MARLY, (Universal, Rs.125/-) ரூபாய் கேசட்டை வாங்கினேன்.

இங்கிலீஸ் அவ்வளவா வராதுன்னாலும், music தான் universal language ஆச்சே கேப்போமுன்னு வாங்கிட்டேன்... நிஜமா நான் முதல் தடவையா காசு போட்டு வாங்கின இங்கிலீஸ் கேசட் இதுதான் (அதும் 125 ரூபாய்!!)...

*************

சும்மா சொல்லக் கூடாது.. ஒவ்வொரு பாட்டுமே அருமை. முழுசா, தெளிவா புரியாட்டியும், பாடலின் அடி நாதத்தை ஓரளவு புரிஞ்சி ரசிக்க முடிஞ்சது...



புரியணும் என்ற அவசியமே இல்லாதபடி அனைத்துமே அருமையா இருந்தது...

Is This Luv.. Is This Luv.. Is This Luv... என்ற முதல் பாட்டே அசத்தல் பாட்டாக இருந்தது...

தொடர்ந்து, No woman ; No Cry... ( இந்த வரியில் மார்லி என்ன சொல்ல வருகிறார் என்பதில் எனக்கு ஒரு குழப்பம்.. பெண்கள் இல்லையேல் அழுகை இல்லை என்றா.. அல்லது, பெண்களே அழாதீர்கள் என்றா.., தெரிந்தவர்கள் சொல்லவும்) நல்ல இசைக் கோர்வை...

அமெரிக்காவின் ஏமாத்து வேலைகளை பகடி பண்ணும் சூப்பர் பாட்டு ஒன்று...

Buffalo soldier in the heart of America,
Stolen from Africa, Brought to America...

நன்றாக இருந்தது...

ஒன் லவ் என்னும் அற்புதமான பாடல் இங்கே..




மேலும், இந்த தொகுப்பிலே என்னை வெகுவாக கவர்ந்த பாடல் போருக்கு அழைக்கும் போராளி ஒருவனின் குரலாய் கேட்பவரை உத்வேகத்துடன் எழ வைக்கும்

Get up, Stand up ; Stand up Fight your Rights;

அதான் திரைஇசை மாயையிலிருந்து விழித்து விட்டேன். எழுந்தும் விட்டேன்....?

11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

thiru said...

வித்யா,

பாப் மார்லியின் பாடல்களின் விடுதலைக் குரல்களை கேட்கையில் அனது முழுமையும் கட்டுண்டு கிடக்கும். இணையத்தளங்களின் அவரது பாடல்கள் பலவற்றை காணலாம்.

உங்கள் பதிவு அருமை!

தோழமையுடன்,
திரு

மலைநாடான் said...

லிவிங் ஸ்மைல்!

என்னை மிகவும பாதித்த ஒரு இசைக்கலைஞன் மார்லி. நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று பாடல்களும் அவனது முக்கிய பாடல்வரிசைக்குள் அடங்கும்.தொடர்ந்து கேளுங்கள் அந்த இசையும் அவனது குரவலும் உங்களுக்குள் பல உணர்வலைகளைத் தோற்றுவிக்கும்
நன்றி!

நாமக்கல் சிபி said...

//நானும் விழித்து விட்டேன். எழுந்தும் விட்டேன்....?//

அதுதான் நல்லது. வாழ்த்துக்கள்!

thiru said...

//தொடர்ந்து, No woman ; No Cry... ( இந்த வரியில் மார்லி என்ன சொல்ல வருகிறார் என்பதில் எனக்கு ஒரு குழப்பம்.. பெண்கள் இல்லையேல் அழுகை இல்லை என்றா.. அல்லது, பெண்களே அழாதீர்கள் என்றா.., தெரிந்தவர்கள் சொல்லவும்) நல்ல இசைக் கோர்வை...//

மார்லி பெண்களே அழாதீர்கள் என்கிறார். முழுப்பாடல் வரிகளும் ஆங்கிலத்தில் இங்கே..

No woman, no cry (Repeat 4 times)

'Cause I remember when we used to sit
In the government yard in Trenchtown
Oba, ob-serving the hypocrites
As they would mingle with the good people we meet
Good friends we have had, oh good friends we've lost along the way
In this bright future you can't forget your past
So dry your tears I say

No woman, no cry
No woman, no cry
oh my Little sister, don't shed no tears
No woman, no cry

Said, said, said I remember when we used to sit
In the government yard in Trenchtown
And then Georgie would make the fire light
Log wood burnin' through the night
Then we would cook corn meal porridge
Of which I'll share with you

My feet is my only carriage
So I've got to push on through
But while I'm gone...

Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright
Ev'rything's gonna be alright

no woman, no cry
No, no woman, no woman, no cry
Oh, little sister, don't shed no tears
No woman, no cry

No woman, no woman, no woman, no cry
No woman, no cry
Oh, my little darlyn no shed no tears
No woman, no cry, yeah
any sister no shed no tears, no women no cry


No woman no cry, no woman no cry
No woman no cry, no woman no cry

Say, say, said I remember when we used to sit
In a government yard in Trenchtown
Obba, obba, serving the hypocrites
As the would mingle with the good people we meet
Good friends we have, oh, good friends we've lost
Along the way
In this great future,
You can't forget your past
So dry your tears, I say

No woman no cry, no woman no cry
Little darling, don't shed no tears, no woman no cry
Say, say, said I remember when we used to sit
In the government yard in Trenchtown
And then Georgie would make the fire light
As it was, love would burn on through the night
Then we would cook cornmeal porridge
Of which I'll share with you
My fear is my only courage
So I've got to push on thru
Oh, while I'm gone

Everything 's gonna be alright, everything 's gonna be alright
Everything 's gonna be alright, everything 's gonna be alright
Everything 's gonna be alright, everything 's gonna be alright
Everything 's gonna be alright, everything 's gonna be alright
So woman no cry, no, no woman no cry
Oh, my little sister
Don't shed no tears
No woman no cry
I remember when we use to sit
In the government yard in Trenchtown
And then Georgie would make the fire lights
As it was, log would burnin' through the nights
Then we would cook cornmeal porridge
Of which I'll share with you
My fear is my only courage
So I've got to push on thru
Oh, while I'm gone
No woman no cry, no, no woman no cry
Oh, my little darlin'
Don't shed no tears
No woman no cry, No woman no cry

Oh my Little darlin', don't shed no tears
No woman no cry
Little sister, don't shed no tears
No woman no cry

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆஹா! நீங்களும் பாப் மார்லியின் விசிறியாகிவிட்டீர்களா? நல்லது நல்லது. எனக்கும் பாப் மார்லியின் இசை ரொம்பவும் பிடிக்கும். அவரது அரசியற்பார்வையும் ரொம்பப் பிடித்த விதயம்.

இந்த மாத உயிர்மையைத் தேடிப்பிடிக்கும் ஆர்வத்தைக் கிளறி விட்டீர்கள். நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா.

-மதி

G.Ragavan said...

பாப் மார்லியா? என்னவோ பேரு சொல்றீங்க. எனக்கும் இங்கிலீசு பாட்டுக்கும் தூரம் எக்கச் சக்கம். ஆனா புத்தகம் படிப்பேன்.

பாட்டெல்லாம் ரசிச்சுக் கேட்டதுல சந்தோசம்.

அருண்மொழி said...

//நானும் விழித்து விட்டேன். எழுந்தும் விட்டேன்....?//

எழுந்து விட்டதோடு இல்லாமல் நடை பயிலுங்கள். பிறரையும் உடன் அழைத்து செல்லுங்கள்.

Anu said...

wow nice wordings..really impressive.

Clown said...

"Buffalo soldier" கேட்டு விட்டு நம்ம "அகிலா..அகிலா" பாட்டை கேட்டீர்களானால் நம்ம மக்களோட தெறம தெரிய வரும்.:)

துபாய் ராஜா said...

//"விழித்து விட்டேன். எழுந்தும் விட்டேன்....?"//

நல்ல பாதையில் நடக்கவும் ஆரம்பித்து
விட்டீர்கள்.எழுத்துநடையை சொன்னேன்.இதுபோன்ற பல்நோக்கு பதிவுகள் இனியும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

ஆஹா!! முழுப் பாடலையுமே தந்த நண்பர் திருவிற்கு எப்படி நன்றி சொல்லவென்றே தெரியலை..

முடிந்தால் நம்மில் ஆங்கிலம், தமிழ் கவிதை இவற்றில் புலமை உள்ளவர்கள் இத்தகைய இசைக் கோவைகளை மொழி பெயர்த்து தனி வலைப்பூ கூட போடலாம் தானே...

// பாப் மார்லியா? என்னவோ பேரு சொல்றீங்க. எனக்கும் இங்கிலீசு பாட்டுக்கும் தூரம் எக்கச் சக்கம். //

ராகவன் பேர்லயே ராகத்த வச்சுட்டு அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.. கேட்டுப் பாருங்க. அப்புறம் நீங்களே ஒரு பதிவு கண்டிப்பா போடுவிங்க..

clown said ...

// "Buffalo soldier" கேட்டு விட்டு நம்ம "அகிலா..அகிலா" பாட்டை கேட்டீர்களானால் நம்ம மக்களோட தெறம தெரிய வரும்.:) //

உண்மைதான் ஆனால்,
எவ்விசை யார்யார் இசைஅமைத்திருப்பினும் அவ்விசையிற்
மெய்யிசை காண்பதறிவு என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப..

ஏதோ என்னைய மாதிரி பாமரர்களுக்கும் (அது திருட்டாகவே இருப்பினும்) ஒரு தமிழ்ப் பதிப்பாக (இசையை மட்டும் சொல்கிறேன்.) இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும், பின்னூட்டமிட்ட நண்பர்கள், திரு, மலைநாடன், நாமக்கல் சிபி, மதி கந்தசாமி, ராகவன், அருண்மொழி, அனிதா பவன்குமார், clown, (துபாய்)ராசா.. அனைவருக்கும் நன்றி...