இவ்விதமாக.....


.
.
.
புது மஞ்சளைக் கண்ட நீலம்

மங்கலம் அதற்கு பொருந்துவதாய்
ஆர்ப்பரித்தது
.
.
மனமகிழ்ந்த பச்சை தன் பசுமை விரித்து
வழிமொழிந்தது

சாந்தமாய் தன் இருப்பை ஒரு புன்னகையில்
தந்தது வெண்மை
.
.
ஊடே புகுந்த கறுப்பு...
.
.
பற்கள் முழுக்க வெறுப்பாய் இளித்தது

ரத்தம் முழுக்க புகைந்தது ஒரு சிவப்பும்
.
.
.

16 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

வேந்தன் said...

படிக்க நல்லா இருக்குங்க. ஆனா என் சிற்றறிவுக்கு அர்த்தம் தான் விளங்கலே

லிவிங் ஸ்மைல் said...

// படிக்க நல்லா இருக்குங்க. ....அர்த்தம் தான் விளங்கலே //

any body...??

கார்திக்வேலு said...

சூரியனைக் கண்ட வானம் ....

பொற்கொடி said...

அதானே.. என்னவோ இனிமையா ஆரம்பிச்சு ஒரு மாதிரி முடிச்சிருக்கீங்கனு மட்டும் தாங்க விளங்குது.. :(

செந்தில் குமரன் said...

எனக்கும் புரியலைங்க அன்னிக்கே சொல்லலாமுன்னு நினைச்சேன் இன்னைக்கு வேந்தனும் சொல்லிருக்கறதுனால சொல்லுறேன்.

சதயம் said...

நல்ல முயற்சி...
நல்லா வந்திருக்கு...
நல் வாழ்த்துக்கள்.

அருண்மொழி said...

வலைபதிவாளர்கள் பற்றியது என தெரிகிறது. பச்சை, வெண்மை, கறுப்பு, சிவப்பு - ok. யாருங்க மஞ்சள் & நீலம்.

நிலவு நண்பன் said...

தப்பா நினைக்காதீங்க


கவிதை எழுதிவிட்டு அதற்கு கோனார் உரைவைக்கும் அளவிற்கு இருக்க கூடாது.

வாசிப்பவர்களுக்கு உடனே புரிந்துவிடவேண்டும் என்பது என் கருத்து

லிவிங் ஸ்மைல் said...

oorkodi said....
// என்னவோ இனிமையா ஆரம்பிச்சு ஒரு மாதிரி முடிச்சிருக்கீங்கனு மட்டும் தாங்க விளங்குது.. :( //

அதே தான்.... :-)

குமரன் எண்ணம் said....
// எனக்கும் புரியலைங்க அன்னிக்கே சொல்லலாமுன்னு நினைச்சேன் இன்னைக்கு வேந்தனும் சொல்லிருக்கறதுனால சொல்லுறேன். //

:-((

அருண்மொழி said....
// வலைபதிவாளர்கள் பற்றியது என தெரிகிறது. பச்சை, வெண்மை, கறுப்பு, சிவப்பு - ok.//

k.., great!!!

அருண்மொழி said....
// யாருங்க மஞ்சள் & நீலம். //

வேறயாரு!!!..... :-)

சதயம் said...
// நல்ல முயற்சி...
நல்லா வந்திருக்கு...
நல் வாழ்த்துக்கள். //

நன்றி.. சதயம்( ஹப்பா!! இன்னைக்காவது உங்க பேர சரியா போட்டுட்டேனா...)

நிலவு நண்பன் said...

// கவிதை எழுதிவிட்டு அதற்கு கோனார் உரைவைக்கும் அளவிற்கு இருக்க கூடாது.

வாசிப்பவர்களுக்கு உடனே புரிந்துவிடவேண்டும்//

:-((((


பின்னூட்டமிட்ட வேந்தன், கார்த்திக் வேலு, சதயம், பொற்கொடி, குமரண், அருண்மொழி, நிலவு நண்பன் அனைவருக்கும் என் நன்றி!!!

Mouls said...

அம்மா தாயெ, என்ன சொல்ல வரீங்க...ஒன்னும் புரியல.

லிவிங் ஸ்மைல் said...

Mouls said...
// அம்மா தாயெ, என்ன சொல்ல வரீங்க...ஒன்னும் புரியல. //

:-((

மகனே.. அதற்கு நான் செய்யவது!!

Mouls said...

புரியும்படி சொல்லுவது வெர ஒன்னும் வெண்டாம்

clown said...

அட நல்லாப் பாருங்க..அவுங்க ஊடால நிறைய வரிய விட்டுட்டு ப்ளாகிருக்காங்க....ஹிஹி...

லிவிங் ஸ்மைல் said...

//clown said...
அட நல்லாப் பாருங்க..அவுங்க ஊடால நிறைய வரிய விட்டுட்டு ப்ளாகிருக்காங்க//

:-)

ஆழியூரான். said...

நற்சிந்தனை கொண்ட புதியவர்களை எல்லோரும் வரவேற்றாலும் யாராவது ஒருவர் எதிர்ப்பார் என்பதை சொல்ல வருவதாக நினைக்கிறேன்.அப்படியே வைத்துக்கொண்டாலும் 'ரத்தம் முழுக்க புகைந்தது ஒரு சிவப்பும்' என்ற கடைசி வரி எதற்கென்று விளங்கயில்லயே..

rajavanaj said...

லிவிங் ஸ்மைல்,

சுத்தமா புரியலைங்க. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியும்ங்களா?