பாலின சிறுபான்மையினர் - 01

பாலின சிறுபான்மையினர் அதாவது Sexual Minarites எனப்படுவோரை பொதுவாக LGBT (Lesbian, Gay, Bi-sex and Tran Genders)நான்காகப் பிரிக்கின்றனர்.

இந்த நான்கு பிரிவினரில் அதிகம் கவனத்திற்குள்ளாவதும், தொல்லைக்குள்ளாவதும் நான்காவதாக குறிக்கப்படும் திருநங்கைகளாவர்.

திருநங்கையர் எனப்படுபவர்கள் தங்களது குழந்தைப் பருவத்தில் அனைத்து குழந்தைகளைப் போலவே வளர்கின்றனர். 10-13 வயதுகளில் தங்கள் விளையாட்டு பருவத்தில் சற்று பெண் தன்மையோடு உள்ளதோடு மற்ற பிற பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதில் விருப்பத்தோடும், இயல்பாகவும் உணர்கின்றனர். ஆண்களோடு சேர்ந்து விளையாடுகிற போதும் அதில் அவர்களுக்கு பிடித்தமிருப்பதில்லை. மெல்ல, மெல்ல ஆண்களிடமிருந்து விலக ஆரம்பிக்கின்றனர்.

13-16 வயதில் தங்களது பெண் தன்மை குறித்த அதிக விழிப்புணர்வில்லாமலும் ஆனால், மற்ற நண்பர்கள், சக மாணவர்களால் கிண்டலுக்குள்ளாவதை கிறோம் என்பதை மெல்ல உணர்கின்றனர்.

16, 17 வயதில் குடும்பத்தாராலும், நண்பர்கள் மற்றும் உற்வினர்களாகிய வெளியாட்களாலும், பெண் தன்மையுடைய ஆணாக வெளிப்படையாகவே அறியப்படுகின்றனர். இதனால், உண்டாகும் பல்வேறு மனச்சிக்கல்களால் படிப்பில் ஆர்வம் குறைந்து, கல்வியை பெரும்பாலும் விட்டுவிடும் சூழல் அனேக திருநங்கைகளுக்கு ஏற்படுகிறது. படிப்பை இழந்த இவர்கள் விரைவில் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலும் வந்து ஏதேனும் பணிக்கு செல்கின்றனர். பணிபுரியும் இடத்திலும் அவர்களின் பெண் தன்மை உணரப்பட்டு பாலியல் தொந்தரவிற்கு உள்ளாவதோடு, அந்த பணியையும் இழந்து விடுகின்றனர்.

சற்று குடும்ப நிலை வசதியாக உள்ள குடும்பத்தில் முடிந்தவரை பெற்றோரும் சகோதரிகளும் (எனக்கு தெரிந்து சகோதரிகள் பரிவானவர்களாகத் தான் இருக்கின்றனர்) அவரின் பெண்தன்மையை மறைக்க பார்க்கின்றனர். அடி உதையால் பலனில்லை என்று உணர்ந்த பின்னர், புரிதல் இல்லாத உதவாக்கரை மனோதத்துவ நிபுணர்களிடம் போய் ஆலோசனை பெருகின்றனர். அந்த நிபுணரோ(?!) பெண் தன்மையோடு இருப்பதை மனோவியாதியான பாவனையோடு அணுகி நோயாளிக்கு(!!) தேவையான மூளைச் சலவை/அறிவுரை தந்து குணமாக்க முயல்வார்.

அப்படியானால், இந்த மூளைச்சலவையால் அவரை சரிசெய்ய முடியுமா..? இல்லை., இங்கே அறிவுரை என்ற பெயரில் அவர் செய்வதெல்லாம், சம்மந்தப்பட்ட நோயாளியிடம், அவரது குடும்பச் சூழல், அவருடைய மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் எதிர்காலம் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி, இப்படி இருப்பவர்களை சமுதாயம் நடத்தக் கூடிய விதம், இழிவான வாழ்க்கை முறை (இதில் இந்திய சினிமாவின் பங்கு மிக முக்கியமானது) இதையெல்லாம் எடுத்துக் கூறி (பயமுறுத்தி), "நீ பிறப்பால் ஆண், அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும். இது தான் இயற்கை,

5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

G.Ragavan said...

லிவிங் ஸ்மைல் வித்யா, இங்கு ஒரு ஐயம். மருத்துவர் என்றால் அவரும் படித்தவர்தானே. அப்புறமும் அவர் எப்படி பிரச்சனை தெரியாமல் அணுகுகிறவராக இருக்கக் கூடும்? உடம்புக்கு வைத்தியம் பாக்குற டாக்டர்களே அந்த மருந்து இந்த மருந்துன்னு மாத்தி மாத்திக் குடுத்துப் பாத்துதான வைத்தியம் பாக்குறாங்க. அதுமாதிரிதான் மனசுக்கு வைத்தியம் பாக்குறவங்களும் போல.

இன்னொரு ஐயம். நீங்கள் குறிப்பிடும் திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறாவிடில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? (இவை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படும் கேள்விகள்)

மிதக்கும்வெளி said...

தொடர்ந்து எழுதுங்களேன்...

லக்கிலுக் said...

நல்ல பதிவு!

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆணாக இருந்தவர் தான் பெண்தன்மையை உணர்ந்து திருநங்கையாக மாறுகிறாரா?

பெண்ணாக இருந்தவர் யாராவது தனக்கு ஆண் தன்மை இருந்ததாக உணர மாட்டார்களா? அப்படி உணர்ந்து மாறினால் அவர் என்னவென்று அழைக்கப்படுவார்?

Pot"tea" kadai said...

மீள் வருகைக்கு நன்றி!

:-))

பதிவு தொங்குதே...சீக்கிரம் முடிக்கவும்.

விலாவாரியாக முழுசும் படிச்ச பிறகு..

சீனு said...

//இன்னொரு ஐயம். நீங்கள் குறிப்பிடும் திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறாவிடில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? //

I think it is not possible.

Vidya,

Is 'Tran Gender' the right word?