Are you BASTARD (Director) Gautham..?

எனக்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்க தொடங்கிய நாளிலிருந்து திருநங்கைகள் (அலிகளை) தொடர்ந்து சினிமாவில் கேவலப்பட்டு வருவதை நான் அறிவேன். இதனை தங்களின் தார்மீக உரிமையாகவே சினிமா பொறுக்கிகள் செய்து வருகின்றனர். (அந்த விதத்தில் "பம்பாய்" இயக்குநர் மணிரத்தினம் பாராட்டப் படவேண்டியவர்). திருப்பாச்சிக்கு பிறகு அலிகளைக் கேவலப்படுத்துவதை தமிழ் சினிமா கொஞ்சம் போல நிறுத்தி வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன் வந்த "சித்திரம் பேசுதடி" படத்தில் கூட ஒரு காட்சியில் திருநங்கை ஒருவரை சற்று கண்ணியாமான முறையில் பாஸிட்டிவாக காட்டப்பட்டிருந்தார். மிக மகிழ்ந்தேன்..


சமீபத்தில் கௌதம் இயக்கத்தில், கமல், ஜோதிகா நடிப்பில் வெளிவந்து 25 நாட்களைத் தாண்டி தியேட்டரில் அடித்து உடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் "அவுத்துப் போடு ஆட்டம் போடு" என்ற படத்தை இன்று (24/09/2006) மதியம் பார்த்தேன். தமிழ் சினிமாவில் அலிகளைக் கேவலப்படுத்துவதில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் சீரிய பணியை இப்படத்தின் இயக்குநர் திரு.கௌதம் அவர்கள் செவ்வனே செய்துள்ளார்.

படத்தில் வரும் ஒரு காட்சி...

கதைப்படி அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு அலி வாரம் தவறாமல் தன் காம வெறியை அடக்கிக் கொள்ள வருவார். அவருக்கு உதவுவது, அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரின் வாராந்திரக் கடமைகளில் ஒன்று. அதன்படி, அந்த வாரம் வருகை தரும் அலிக்கு லட்டாக அமைக்கின்றனர் கைதிகளான இரண்டு கல்லூரி மாணவர்கள். அவர்கள் இருவரும் அந்த அலியைப் பார்த்து அலற, அந்த அலியோ "அய்!, இந்த பக்கம் சிகப்பு, இந்த பக்கம் கருப்பு" என்று முத்தான ஒரு வசனம் சொல்லி, இருவரையும் வண்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி காரியம் முடிக்கிறார். குளோசப்பில் இரு கைதிகளும் அலறுவதாக காட்சி முடிகிறது.


வேறொரு காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி கமலஹாசன், கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்துகொள்கிறார். (அலியைக் கூட்டிட்டு வந்து.. அந்த கசமுசா-வெல்லாம்.. மூச்! அதப்பத்தி ஒரு வார்த்தை இல்லையே!...)

நல்லது!! வேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும், பாதிக்கப்பட்ட(?!) கைதிகளில் ஒருவர் "கோத்தா, ... அந்த அலிய.. எல்லாம் கொல்லனும்னு நினைச்சேன்...." என்பதாக ஒரு வசனம் வேறு!!....


போதாதென்று படத்தில் கதாநாயகன் வீர பராக்கிரமத்தோடு அறிமுகமாகும் காட்சியில் கமல், வில்லன் ஒருவரின் ஆண்மையை கேள்விக்குள்ளாக்க ...அப்பிடில்லைனா.. நீ பொட்டை என்று சொல்லுவார். படத்தில் பெரும்பான்மை காட்சிகளில் இந்த சொல்லாடல் முக்கியாம்சாமாக கையாளப்பட்டிருக்கும். இவற்றோடு ..த்தா, fukking எல்லாமே சரளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

**************

குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு, சம் அங்கீகாரமின்றி, வாழ வழியில்லாமல் (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்ட-சொந்த நாட்டில் அகதிகளாக நிர்பந்திக்கப்பட்ட-திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்ன..? அவர்களின் பிரச்சனை என்ன..? என்பது குறித்து எந்தவொரு அக்கறையும் இன்றி, சட்டாம் பிள்ளைத்தனமாக பொதுப் புத்தியோடு இது போன்ற திமிர் பிடித்த வேலையை தமிழ் சினிமா தொடர்ந்து செய்து வருகிறது.

மாதத்திற்கு ஒரு காதலி, வேளைக்கொரு பெண் என்று வாழும் பணம் புடுங்கி, சினிமா பொருக்கிகளுக்கு, சமூகம் குறித்த அக்கறையோ, அடிப்படை மனிதாபிமானமோ தேவையில்லை. கண்ணை மூடிக் கொண்டு கலையைக் கற்றுக் கொண்டு, அக்கலையை விற்று காசு பார்க்கும் கலை-விபச்சாரகர்களை பொருத்தவரை, அலிகள் சோத்துக்கு சிங்கியடித்தே சாகவேண்டும். அதை விட்டுவிட்டு, விபச்சாரம் செய்து பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ்ந்தால், அவர்களை பொருத்தவரை அலிகள் மனம் பிரள்ந்தவர்கள்; சைக்கோ; கிரிமினல்கள்; அருவெருப்பானவர்கள் என்று தோன்றுவதில் வியப்பெதும் இல்லைதான்.

******************

இலக்கிய பரிச்சியம், உலகத் தர சினிமா என்று யோசிக்கும் கமல் போன்ற சிறந்த நடிகர்கள் கூட இத்தகைய காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்காதது தான் ஆச்சர்யம்.


இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைக் குறித்து சென்ஸார் போர்டுக்கொ, மற்ற மனித உரிமை இயக்கங்களுக்கோ எந்த புகாரும் இல்லை.. அவர்கள் மனிதர்களுக்காக மட்டும் தான் போராடுவார்களாமே அப்பிடியா!?

இப்படத்தின் மீதும் பொது நல வழக்கொன்று போட திட்டமிட்டுள்ளேன். குறைந்து அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றாவது. இது குறித்து எனக்கு சரியான guidance தரமுடிந்தவர்களை வரவேற்கத் தயார்.


***************

அடிப்படையில் சினிமாவின் மீது காதல் கொண்டு (திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்ற அளவிற்கு) முடிந்தளவு உலகத் தரமான சினிமாக்களை தீவிரமாக பார்த்து, படித்து வருபவள் நான். ஆனால், சினிமாவை நல்ல முதலீடாக கருதி, பாடம் போல படித்து ஆங்கிலப் படத்தாக்கத்தால் அதி நவீன(technology)த்தைப் புகுத்தி, கதையில் மட்டும் திட்டமிட்டு கோட்டைவிடுகின்றனர் நமது நவீன சினிமா பொறுக்கிகள். வித்தியாசம் என்ற பேரில் இது போன்ற மனிதாபமற்ற செயல்களில் கண்மூடித்தனமாக, இறங்குவது, சினிமாவை விற்று சாப்பிட்டு அதன் மீதே மலம் களிப்பதற்கு இணையாகத்தான் நான் உணர்கிறேன்.

ஆவலுடன் இந்த படத்தை, எனது ஆண்ட்டி மற்றும் தோழியொருவருடன் தியேட்டரில் பார்த்த என் நிலையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். படம் முடிந்து நான் வெளியேறிய போது நாட்டு ம(மா)க்கள் என்னைப் பார்த்த பார்வைக்கு என் பதில் என்ன..? உங்கள் பதில்தான் என்ன...?


***************

வரிசையாக தனது படத்தில் விதவிதமான கிரிமினல்களைக் காட்டி வரும் கௌதமிற்கு(அனேகமாக, இவருக்கு மனதில் தான் ஒரு next மணிரத்னம்,south ராம்கோபால் வர்மா என்ற நினைப்பு இருக்கலாம்) இம்முறை மிக வித்தியாசமான கிரிமினலாக ஒரு பாலியில் வெறிபிடித்த அலி. படத்தில் இந்த காட்சியும், கமல் "நீங்க என்ன ஹோமோசெக்சுவலா..?" என்று கேட்கும் காட்சியும் தான் காமிடியாக காட்டுப்படுகிறது, ம(மா)க்களும் இவ்விரு காட்சிகளில் தான் வாய்விட்டு சிரித்தனர். (சக்ஸஸ் தானே கௌதம்..?).

வித்தியாசம் விரும்பி கௌதம் தனது அடுத்த படத்தில் மேலும் ஒரு வித்தியாசத்தை நுழைக்கலாம்.

கதாநாயகியை பத்து அடியாட்கள் கற்பழிக்கும் காட்சி....

பத்தில் ஒன்பது பேர் கதாநாயகியை கற்பழிக்க, ஒருவர் மட்டும் நாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகனை கற்பழிக்கலாம். இதில் கதாநாயகனாக கமலும், அவரை கற்பழிக்கும் அடியாளாக கௌதமும் (இந்த படத்தில் கூட ஒரு பாடல் காட்சியில் தொன்றுகிறார்). கதாநாயகியாக கௌதமின் மனைவியும் நடிப்பது மேலும் சிறப்பு...

பொட்டைகளை கேவலப்படுத்தும் இத்தகைய நாதாரிகளை பொதுவாக, இப்படி கேட்பது தான் எங்கள் வழக்கம். அதன்படி, "அடி செருப்பால, தேவிடியா பையா!!"

****************

49 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

வந்தியத்தேவன் said...

நல்லதொரு பதிவு. திரு நங்கைகளை தமிழ் சினிமா இழிவுபடுத்துவதை நிறுத்தமுடியாது. இதனை நிறுத்தவேண்டும் என்றால் நிச்சயம் வழக்கு ஒன்று போட்டு அவர்களை சந்திக்கு இழுத்துவரவேண்டும். உங்களைமாதிரி படித்தவர்கள் செய்வீர்கள் என் நினைக்கிறேன்

Mugundan | முகுந்தன் said...

வித்யா,

ஏன் இப்படி கொதித்து போகீறீர்கள்?
பெரிய மனிதர்களிடம்,சிறு புத்தி காண்போமில்லையா,

காசுக்காக.,எதையும் காட்டுவார்கள்.மன்னித்து விடுங்கள்.
-முகு-

ஜயராமன் said...

நியாயமான கோபம். சமூகத்தின் அசிங்க உணர்வுகளுக்கு தங்களின் சாட்டையடி.

தங்கள் கோபமும், வலியும் இப்படி வசைகளாக, தரமற்று இந்த பதிவில் வார்த்தைகளாக கொட்டிவிட்டன. தங்களின் கருத்தின் நியாயம் தங்களின் பதிலடியில் இல்லை. இதை வலித்தவனின் வசை என்று ஒதுக்கவும் முடியவில்லை.

கொஞ்சம் நிதானமாக பதிவை போட்டிருக்கலாம். மற்றபடி your point is taken and justified.

பாரதி தம்பி said...

முகத்தில் வழியும் உமிழ்நீரோடு இதை எழுதுகிறேன்.திருநங்கைகளை தொடர்ந்து அவமானத்திற்கு உள்ளாக்கும் சமூகத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் நான் வெட்கப்படுகிறேன்.உங்களைப் போலவேதான் அந்த சினிமாவின் குறிப்பிட்டக் காட்சியைப் பார்க்கும்போது நானும் நினைத்தேன்.ஆனால் இத்தனை வீரியமாக அதை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.பாரம் சுமப்பவனுக்குத்தானே தெரியும் வலியும் வருத்தமும்..
நீங்கள் எழுதியை படிக்கும்போது கணிணியின் திரையைத் தாண்டி, ஒரு கரம் வெளியே வந்து கன்னத்தில் அறைந்துவிட்டதாகவே உணர்ந்தேன்.

மு. மயூரன் said...

நியாயமான கோபம்.

இந்தப்படத்துக்கெதிரான போராட்டத்தை ஒரு குறியீடாக, தொடக்கப்புள்ளியாகக்கொண்டு இத்தகைய "திமிர்" பிடித்த, ஒவ்வொரு சமூகவிரோதிக்கெதிராகவும் போராடும் முழுமையான நெஞ்சுரத்தினை கொண்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இடையறாது நிகழும் சமூக அநீதிகளுக்கெதிரான போராட்டத்தின் புதிய களமுனையை திறக்கப்போகிறீர்கள்.

கூட நின்று உதவ முடியாமையை இட்டு மிகவும் வருந்துகிறேன்.

சளைக்காத நெஞ்சுரத்தோடு போராடி வெல்ல வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு என்னுடைய முழுமையான ஆதரவு!

Barath said...

நல்லா தானே எழுதிட்டு இருந்தீங்க?? திடீர்ன்னு என்ன ஆச்சு?
நம்மூர் சினிமா
அரசியலை கேவலபடுத்தலியா?
விளையாட்டை கேவலபடுத்தலியா?
போலீசை கேவலபடுத்தலியா?
வக்கீலை கேவலபடுத்தலியா?
ஆண்களை கேவலபடுத்தலியா?
பெண்களை கேவலபடுத்தலியா?
உறவுகளை கேவலபடுத்தலியா?
இப்படி கேட்டுகிட்டே போகலாம்.

உங்கள் வழக்கப்படி நீங்கள் திட்டி விட்டீர்கள்.
சினிமா அதன் வழக்கப்படி எடுக்கப்பட்டு இருக்கிறது.
எல்லாருக்கும் ஒரு வழக்கம் இருக்கு

நண்பர்கள் பக்கம் said...

கருமம் கருமம்....

என்னத்த சொல்லறது...

யாரா திட்டுறது...

ஒண்ணும் முரியலப்பா

ஒரு பொடிச்சி said...

//இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைக் குறித்து சென்ஸார் போர்டுக்கொ, மற்ற மனித உரிமை இயக்கங்களுக்கோ எந்த புகாரும் இல்லை.. அவர்கள் மனிதர்களுக்காக மட்டும் தான் போராடுவார்களாமே அப்பிடியா!?//
நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா..
"சில்லென்று ஒரு காதல்" திரையிலும் "நகைச்சுவை" என ஒரு காட்சி திருநங்கைகளைப் பற்றியதே..
மனிதர்கள் மீது அக்கறையுள்ள இயக்குநர்கள் சிறுபான்மையினர்மீது இப்படியான வன்முறையை செய்யமாட்டார்கள். பொறுக்கிகளுள் அப்படியானவர்கள் எத்தனைபேர்?

பாருங்க, நீங்கள் எப்படி "நாகரீகமாக"க் கோபப்படவேணுமென்று பின்னூட்டத்தில் யாரேனும் வந்து சொல்லக்கூடும்!
மனிதர்கள் குறித்து "நாகரீகமாக" நடத்தத் தெரியாத உலகத்தில அதச் சொல்லப் போறவங்களை மட்டும் "திருத்தி"க் கொண்டிருக்கத் தான் பலருக்கும் விருப்பம்.

enRenRum-anbudan.BALA said...

Vidya,
உங்கள் கோபத்தில் நியாயம் உள்ளது, பதிவில் காட்டம் சற்று அதிகமோ ?

கார்திக்வேலு said...

நியாயமான கோபம்.
கண்டிப்பாக ஆட்சேபிக்கப்பட வேண்டிய பார்வைகள்.படைப்புச் சுதந்திரம் என்பதை இது போன்ற குறைபார்வை படைப்புகளுக்கு ஒரு கேடையமாகப் பயன்படுத்தக்கூடாது.

- யெஸ்.பாலபாரதி said...

நல்ல+ அவசியமான பதிவு.
வழமையான பார்வையிலிருந்து தீர்க்கமான பார்வையை முன்வைத்த தங்களின் சரியான கோபத்திற்கு நன்றி!

லக்கிலுக் said...

இப்பதிவில் கையாண்டப்பட்டிருக்கும் சில வார்த்தைகளுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் எதிர்ப்பை காட்டும் முறை இதுவா எனவும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.....

Leo Suresh said...

உங்களுடைய ஆதங்கதிற்குள்ளும் விமர்சனர்த்திற்கும் நான் போகவில்லை.ஆனால் உங்கள் வார்த்தை பிரயோகம் உங்களை தரம் தாழ்த்தவில்லையா?.

லியோ சுரேஷ்
துபாய்

Hariharan # 03985177737685368452 said...

இயக்குநரின் காட்சி அமைப்புக் கற்பனை, வசனத்தில் வரும் சொல்லாடலை விமர்சிக்கும் தங்களது இப்பதிவின் முடிவுரைப் பத்திகளின் சொல்லாடால்கள் இயக்குநர் கௌதமையும் விஞ்சுகிறது எதிர்மறையான தரத்துடன்!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்த விமர்சனம் சரி இல்லை லிவிங் ஸ்மைல். முதல்ல சொல்லிக்கிறேன் நான் கௌதம் பேனோ இல்லை கமல் பேனோ இல்லை யாரோட பேனும் இல்லை அதனால யாருக்கும் சப்போர்ட் பண்ணி பேசறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் எனக்கு இது ஒரு சரியான விமர்சனம் இல்லை என்பதால் மட்டும் இதனை சொல்கிறேன். கொஞ்சம் open mindedஆ கேளுங்க.

இந்தப் படத்தில் இரண்டு டாக்டர்களை சைக்கோ கில்லர்களாக காமித்திருக்கிறார்கள் என்று டாக்டர்கள் அனைவரும் போர் கொடி தூக்கினால் அது சரியாக இருக்குமா?

படத்தில் காண்பிக்கப் படும் திருநங்கைகளின் பாத்திரமும் அது போன்றதுதான்.
ஒரு திருநங்கையை தவறாக காண்பித்ததால் திருநங்கைகளையே அது தவறாக சித்தரிக்கப் படுகிறது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படத்தில் காண்பிக்கப் படுவது போன்ற திருநங்கைகள் உண்மையில் இல்லையா? அப்படி இருக்கும் போது அதனைக் காண்பித்தல் தவறா?

இந்த சமூகத்தின் பார்வை நிறைய மாற வேண்டி இருக்கிறது என்பது உண்மை தான்.

அதனை Bastard, தேவிடியா பையா போன்ற வார்த்தைகளால் மாற்ற முடியுமா என்பதை யோசியுங்கள்.

Porkodi (பொற்கொடி) said...

vidhya, nan padam pakkala inum.. oru padathula villain oru aanavo pennavo irukra madri yen oru thirunangaiya kamika kudadu nu nenakringa..? aan penn la epdi kettavanga irukanagalo, ade pola thirunangaigal madhilayum nallavanga kettavanga 2 perum irupanga, adhula gautham kettavarana oruthara kamichar nu vechuka kudada? (no offence at all)

matra padangal la epdi villaina hero titraro ade pola idulayum titi irunda, edum thapu iruka enna? idhu enudaya opinion than. not forcing it on u:)

ப்ரியன் said...

வித்யா,

நியாயமான கோபம் +
மிக அவசியமான பதிவு.

கெளதம் மட்டும் இல்லை அதை ரசித்துப் பார்க்கும் மக்கள் எல்லோரும் BASTARD தான்.

இளவெண்ணிலா said...

உங்கள் கண்டனம் சரிதான்..ஆனால் வார்த்தைகள்??..தேவிடியா பையா என்றால்???..கெளதமை அவமானப்படுத்த அவர் அம்மாவை வேசி,உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு கேவலமானவள் என்கிறீர்கள்..நீங்கள் யாருக்கு, எதற்காக கண்டனம் தெரிவிக்கிறீர்களோ அதற்கு நிகரான கேலிக்கூத்து இது...இதனால் உங்கள் கோபமே ஒரு அரைவேக்காட்டுத்தனமாக, போலித்தனமாகத் தெரிகிறது..

முத்துகுமரன் said...

வித்யா,

அவசியமான பதிவு. நியாயமான கோபம்.

நீங்கள் எதையும் பேசக்கூடாது. பேசினால் காது கூசுகிறது. சொல்வதை கேட்டால் அஜீரணமாகிறது. ஆகவே ஓரிருவரை குறை சொன்னால் ஒட்டு மொத்த இனத்தையும் குறை சொல்வதாக எடுத்து கொள்ளமல் நீங்கள் வாய்மூடி அமைதியின் சொருபமாய் அஹிம்சையின் வடிவமாய் இருப்பதைத்தான் விரும்புகிறது. அப்போதுதான் சமூக அமைப்பு சரியானதாக இயங்க முடியும்.

தன்னை புனிதமாக காட்டிக் கொள்ளும் இந்த சமூகம் தனது ஈனச் செயல்களை ஒருபோதும் தவறென்று ஒத்துக்கொள்ளாது. மாறாக மூளைவீங்கித்தனத்தோடு சப்பைக்கட்டு கட்டும்

//குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு, சம் அங்கீகாரமின்றி, வாழ வழியில்லாமல் (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்ட-சொந்த நாட்டில் அகதிகளாக நிர்பந்திக்கப்பட்ட-திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்ன..? அவர்களின் பிரச்சனை என்ன..? என்பது குறித்து எந்தவொரு அக்கறையும் இன்றி, சட்டாம் பிள்ளைத்தனமாக பொதுப் புத்தியோடு இது போன்ற திமிர் பிடித்த வேலையை தமிழ் சினிமா தொடர்ந்து செய்து வருகிறது.//

செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆனால் தொடர்ந்து ஊதுங்கள். செவுடாய் இருக்கும் காதுகள் நாராக கிழிந்தாவது தொங்கட்டும்.

Leenaroy said...

இப்படிப்பட்ட சம்பவங்களால் உங்களுக்கு ஏற்படும் மனவுளைச்சலை புரிந்து கொள்ள முடிகிறது. சினிமாவில் எதை வித்துக் காசாக்குகிறோம் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஓரிருவர் தவிர கூடுதலானவர் நோக்கம் காசே. இதில் எங்கே உங்கள் வலிகளைக் கவணிக்க அவர்களுக்கு நேரம்.

பகுத்தறிவுப் பிரச்சரம் செய்யும் விவேக் கூனல் முதுகுள்ள சூரியாவை பழிப்பது போல கூனல் முதுகுள்ளவர்களையும், அதே படத்தில் குள்ளமான பெண்மணியையும் நாக் கூசுமளவிற்கு கிண்டல் செய்யவில்லையா.

ஆனாலும் உங்கள் கோவத்தை சற்றே நிதானமாக தெரிவித்திருக்கலாம். உங்கள் நியாயத்தின் பக்கமும், உங்களின் பக்கமும் எங்களைப் போன்று பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கூட உங்கள் வார்த்தைப் பிரயோகம் சங்கடப் படுத்திவிடும். சிந்திப்பீர்களென நினைகிறேன்.

வார்த்தைகள்...வார்த்த்தைகள் வார்த்தைகள் எங்குமே வார்த்தைகள், இவை இப்போது சமூகத்தைத் திருத்தப் போதுமானதாக இல்லை.

உங்கள் கோவத்தை நிதானப் படுத்துங்கள் கூடவே நாங்கள் இருக்கின்றோம்

சிறில் அலெக்ஸ் said...

தேவையில்லாமல் சூடாகிவிட்டீர்களோ எனப் படுகிறது. நான் சென்னையில் ஒரு ஓட்டலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது திருநங்கைகள் காசுக்காகவும் படத்தில் கான்பிக்கப்பட்டவைகளை செய்வதற்கும் வருவதுண்டு. இன்னும் சில திருநங்கைகளின் நிலை இப்படி சீரழிந்து கிடக்கிறது என்பதைத்தான் இப்படிக் காட்டியிருக்கிரார் என நினைக்கிறேன்.

கமல் 'That's bad policing and here's a bad police'. எனக் கடிந்துகொள்வார்.

தமிழ் சினிமா திருநங்கைகளை மோசமாகக் காட்டுவதென்பது உண்மைதான் ஆனால் கௌதம் நிதர்சனத்தையே கையிலெடுத்திருக்கிரார் எனப் படுகிறது.

பெண்கள் சிலரை வேசிகளாகக் காட்டினால் அது எல்லாப் பெண்கலுக்கும் பொருந்துமா என்ன?

உங்கள் கோபம் நியாயமானதாகப் படவில்லை.

:(

RBGR said...

நேரிடையாக உங்கள் இனம்(நீங்கள் தான் அப்படிச்சொல்லி வருகிறீர்கள்)தரும் தொல்லை என்னவெலாம் என்பதை நீங்கள் அறிவீரா?
யாரோ சில காமவெறியர்கள் தாகம் தணிக்க உங்களிடம் வருகிறார்கள்.அவ்வளவே!எங்களுக்கும் புரியும் நீங்கள் எங்கள் மனித இனம் தான் என.
உங்களுக்கு தைரியம் இருந்தால் தவறு செய்யும் உங்களைப்போன்றோரிடம் சென்று காசுகேட்டு வியாபாரிகளிடம் அசிங்கமாக நடந்து கொள்வதையும் இன்னபிற நடவெடிக்கைகளையும் விட்டு உங்களுக்குப் பெண் தோற்றம் தான் பிடிக்கும் எனில் அத்தோற்றத்திலேயே உழைக்கலாமல்லவா? கண் தெரியாதவர்கள் கூட வாழும் போது உங்களுக்குயென்ன? பழைய கதைகளை விட்டுவிடுங்க...நீங்க முதலில் பரிதாபத்தை எதிர்பார்ப்பதை விட்டு வெளியில் வாருங்கள். உலகம் உங்களை அங்கீரிக்கத்துவங்கி நெடுநாளாயிற்று.

சீனு said...

// தரமற்று இந்த பதிவில் வார்த்தைகளாக கொட்டிவிட்டன. தங்களின் கருத்தின் நியாயம் தங்களின் பதிலடியில் இல்லை.//
அது சரி! அவங்க செஞ்சதையே தானே நீங்களும் செய்யுரீங்க. மத்தபடி இது toooooooo much, வித்யா. ரெண்டு பேருக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

//முதல்ல சொல்லிக்கிறேன் நான் கௌதம் பேனோ இல்லை கமல் பேனோ இல்லை யாரோட பேனும் இல்லை//
கருமம், கருமம். இந்த தமிழ்மணத்துல இப்படியெல்லாம் disclaimer போடற மாதிரி வெச்சுட்டானுங்க.

aruna said...

Whenever we remember ali, for most ppl including me, the first thing we remember is when they ask money or threaten to make some indecent exposure. The first time I realised about the hardships they face is when I read your blog. If I havent come across your blog, I might still have a bad opinion about eunuch & would still hate them for what they do. Hence not everyone including the director knows what difficulty you face.

You should spread the awareness among public about your difficulties, just like other minorities, and make people understand that you need help, you need recognition. Publishing a post like this will only spoil your name and will not make any positive efforts.

மங்கை said...

ஏன் நிதானம் இழந்து
எழுதரீங்கன்னு தெரியலை... இப்படி எழுதறது நாகரீகம் இல்லை என்று தெரிந்து இருந்தும் நீங்கள் எழுதுவது தான் வருத்தத்தை அளிக்கிறது..

சினிமாவில் திருநங்கைகளை கேலி செய்வதும் வருத்தத்தை அளிக்கக்கூடியதுதான்.ஆனால் நீங்க எதிர்ப்ப காட்ற விதம் சிலரின் மனச புண்படுத்தமட்டுமே செய்யும்..

உங்க பதிவில எத்தனை பேர் மனச நோகடிச்சிருக்கீங்கன்னு தெரியுமா..

ஒரு பெண்ணுக்குறிய உணர்வுக்ளுடன் இந்த சமுதாயத்துல அங்கீகாரம் வேணும்னு போராடற நீங்க.. ஒரு தாய தரக்குறைவா பேசியிருகீங்க.. அந்த உணர்வு இருக்கா உங்களுக்கு..
அந்த பட இயக்குனர தாக்குறுதோட நிறுத்தி இருக்கனும் உங்க எதிர்ப்ப. அந்த தாய் இந்த பதிவ படிச்சாங்கன்னா அவங்க எந்த அளவுக்கு
பாதிக்கப் படுவாங்க... கொஞ்சம் யோசிச்சுபாருங்க

sexual minorities, commercial sex workers போன்றவர்களின் நலனுக்காக பணியாற்றும் நீங்க.. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களையும் இங்க ஒரு தரக் குறைவான அர்த்ததுல தான எடுத்து சொல்லியிருக்கீங்க.. தொண்டு நிருவணத்துல இருக்கும் நாமே இவங்களை இப்படி ஒரு வார்த்தை யால குறிப்பிட்டா.. then.. விளிப்புணர்ச்சி ஏற்படுத்தறதுக்கு நமக்கு என்ன தகுதி இருக்கு..

சகோதரி தயவு செய்து கொஞ்சம் யோசிங்க

சினிமால யார தான் தரக்குறைவா காட்டுல... பெண்களை ஒரு "கவர்ச்சி பொருளா'தான இது வரைக்கும் காட்டீட்டு வராங்க...அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற விதம் இது அல்ல...

வித்யா..நிஜமாவே உங்க பதிவு படிச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

G.Ragavan said...

லிவிங் ஸ்மைல் வித்யா, இந்தப் பதிவுக்கு எப்படி பின்னூட்டமிடுவதென்றே தோன்றவில்லை.

நீங்கள் எழுதியிருக்கும் கருத்து நியாயமானதுதான். நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் உங்களுக்கு ஆத்திரம் நிறைய வந்திருப்பது இயல்பே.

சொற்களில் ஏற்றிய காட்டத்தையும் ஆத்திரத்தையும் கருத்துகளில் இன்னமும் கூட்டியிருந்தால் இன்னும் நிறையவே ஆதரவுக் கருத்துகள் கிடைத்திருக்கும் என்பது என் கருத்து.

உடல் ஊனமுற்றவர்களை வைத்து நகைச்சுவை அமைக்கக் கூடாது என்று கூட ஒரு சட்டமுள்ளது. ஆனால் இங்கு வந்து உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். கண்டுகொள்ள வேண்டாம். அடுத்த வேலையைப் பார்ப்போம்.

அதே நேரத்தில் உங்கள் பதிவில் இருக்கும் ஆத்திரத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் தெரியும் கருத்துக்கு எனது உளப்பூர்வமான ஆதரவு உண்டு.

துளசி கோபால் said...

அன்பு வித்யா,

உங்க 'கோபம்' புரியுது. ஆனா கெளதமை மட்டும் திட்டி இருக்கலாம். அவுங்க அம்மா என்ன
தப்பு செஞ்சாங்க வித்யா? அவரை பெத்ததுதான் தப்புன்னு நினைக்கமாட்டீங்கதானே?

லிவிங் ஸ்மைல் said...

நெறுப்பு என்றதுமே, வெந்து துடிக்கிறீர்கள் நீங்கள்.....


நாங்களோ இன்னமும் வெந்து கொண்டே இருக்கிறோம். எங்களுடைய கூக்குரல்/அலறல் உங்களுக்கு நாராசமாகத்தான் இருக்கும்.


கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி...

Vaa.Manikandan said...

கோபத்தை வெளிப்படுத்துங்கள். தவறில்லை. ஆதரவும் உண்டு.

கெளதமின் மனைவி தங்களுக்கு என்ன தவறிழைத்தார். ஒருவன் தவறு செய்தானெனில் அவன் தாய், சகோதரி, மனைவியெல்லாம் தகாத உறவுகளுக்கு உட்படுத்தும் பொதுப் புத்தியில் இருந்து சற்றும் விலகாமல்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

தங்களின் கோபம் நியாயமானது. எந்தளவிற்கு பாதிப்புகள் தங்கள் மனதில் இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளி வந்திருக்கும் என்று எங்களால் உணர முடிகின்றது.

நாமக்கல் சிபி said...

உங்கள் கோபம் நியாயமானதே!

ஆனால் வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை!

நாமக்கல் சிபி said...

//நெறுப்பு என்றதுமே, வெந்து துடிக்கிறீர்கள் நீங்கள்//

அவரைப் பற்றி சொல்லியதில் யாருக்கும் கவலை இல்லை.

நீங்கள் இப்படி சொல்லி தரம் தாழ்ந்துவிடலாகாது என்பதுதான் எல்லாருடைய கவலையும்.

இது உங்கள் மீதுள்ள நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. அதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ரவி said...

உங்களின் கோபம் நியாயம் என்றாலும் வார்த்தைகளை பயன்படுத்துவதில் சற்று கவனமாக இருக்கவேண்டும்...

நெருப்பு என்று சொல்லவேண்டும் நெறுப்பு அல்ல...:))) நான் இந்த வார்த்தையை மட்டும் சொல்லவில்லை...

இந்த பதிவை படிக்கும்போது தான் பலரின் நிறம் வெளிச்சத்தில் தெரிகிறது பாருங்கள்...

இயல்பாக : கோபம் வரவேண்டும்..சமூக அக்கறை இருந்தால் உங்கள் வார்த்தை பிரயோகத்தை சாட வேண்டும். அதன் அர்த்தம் அனர்த்தமாக சம்பந்தம் இல்லாதவரை சாடுவதை வண்மையாக கண்டிக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு, எதுக்கெடுத்தாலும் ஜால்ரா போட்டு ஜல்லியடிக்கும் இந்த கூட்டம் எப்போது ஒழியுமோ தெரியவில்லை...

நீங்கள் இந்த பதிவு போட்டதற்க்காக எப்போதும் வருந்த போவதில்லை..வார்த்தை பிரயோகத்தையும் மாற்றப்போவதில்லை..ஆனால், இனிவரும் நாட்களில் சற்று கவனம் கண்டிப்பாக தேவை. நீங்கள் இந்த பதிவுகளை யாருக்காக பதிவு செய்கிறீர்களோ அவர்களே வெட்கும் அளவில் ஆகிவிடும்....

தமிழ் சினிமாவை திட்ட வேண்டும் என்று ஆரம்பித்தீர் என்றால், கூவுற கோழி கூவுற வேளையில் இருந்து, தமிழ் ( சாமி டைரக்டர் ஹரி இயக்கத்தில் பிரஷாந்த் நடித்த படம்) படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக வருவாரே..

அதை என்ன சொல்லுவீர்....

மு. மயூரன் said...

//பத்தில் ஒன்பது பேர் கதாநாயகியை கற்பழிக்க, ஒருவர் மட்டும் நாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகனை கற்பழிக்கலாம். இதில் கதாநாயகனாக கமலும், அவரை கற்பழிக்கும் அடியாளாக கௌதமும் (இந்த படத்தில் கூட ஒரு பாடல் காட்சியில் தொன்றுகிறார்). கதாநாயகியாக கௌதமின் மனைவியும் நடிப்பது மேலும் சிறப்பு...

பொட்டைகளை கேவலப்படுத்தும் இத்தகைய நாதாரிகளை பொதுவாக, இப்படி கேட்பது தான் எங்கள் வழக்கம். அதன்படி, "அடி செருப்பால, தேவிடியா பையா!!"//


நானும் பதிவு முழுக்க திரும்ப திரும்ப தேடினேன். தரக்குறைவாக எங்கே பேசினீர்கள்?

மேற்படி வார்த்தைகள் தரக்குறைவாகவும் தவிர்க்கப்பட வேண்டியவையாகவும் யாருக்காவது தெரிந்தால், அவர்களுக்கு சமூகம் மீதான அக்கறையையோ, மனிதாபிமானமோ, அடுத்தவர் பற்றி சுயநலமற்று யோசிக்கும் மனப்பக்குவமோ இல்லை என்று அர்த்தம். மிக மிக உறுதியாக சொல்கிறேன்.

பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, பக்கத்திலி இருப்பவன் அலறி செத்தாலும் கண்டுகொள்ளாமல், மடிப்புக்குலையாத ஆடைகளி தட்டிவிட்டு போகும் சுயநலக்கொழுப்பேறியவர்களுக்கு தான் இதெல்லாம் "தவிர்க்கப்படவேண்டிய' வார்த்தைகளாக தெரியும்.


சற்றே ஆழமாக இந்த பின்னூட்டங்களின் உளவியல்பற்றி சிந்தித்தீர்களானால் இது மிக தெளிவாக புரியும்.

இந்த கொழுப்பேறிய பன்றிகள் சும்மா கத்தட்டும் வித்தியா,

அநீதி மிருகத்தனமாக இருக்கும்போது, அதை அடித்து துலைக்கும் எதிர்ப்பும் கட்டுக்கடங்காததாய்த்தான்போகும்.

இந்த பதிவை விடவும் நாகரிகமாக இந்த சமூக அநீதிக்கெதிராக குரல்கொடுக்க முடியாது.


//பெண்கள் சிலரை வேசிகளாகக் காட்டினால் அது எல்லாப் பெண்கலுக்கும் பொருந்துமா என்ன?//

எல்லாப்பெண்களையுமா வேசிகளாக காட்டுகிறார்கள்?

இந்துசமயத்தைப்போல பெண்கள் என்றாலே வேசிகள் என்ற கருத்தையா விதைக்கிறார்கள்? (பெண்கள் என்றாலே போகப்பொருட்கள், இயந்திரங்கள் என்ற கருத்தை விதைப்பது இன்னொருபுறமிருக்கட்டும்)

//உங்களுக்குப் பெண் தோற்றம் தான் பிடிக்கும் எனில் அத்தோற்றத்திலேயே உழைக்கலாமல்லவா? //

வித்தியாவின் வாழ்க்கைவரலாறு குறித்த அவர் பதிவுகளை படிக்கவும்.

இவ்வளவு முன்னேறியபிறகும் , இத்தனை அங்கீகாரத்துக்கு பிறகு வேலை தேடுவதிலுள்ள (அதுவும் நாகரிகமான வேலை) சிக்கல்களை, புறக்கணிப்புக்களை சொல்லியிருக்கிறார்.

//உலகம் உங்களை அங்கீரிக்கத்துவங்கி நெடுநாளாயிற்று.//

இந்த பசப்புவார்த்தைகளை வைத்துத்தான் உங்கள் அரசியலே ஓடுகிறது.

கொழுப்பேறியவர்களே,

இவ்வளவு தூரத்துக்கு மற்றவர்பற்றிய அக்கறையோ, மனிதர்கள் பற்றிய பொறுப்புணர்வோ அற்று பேச எப்படி முடிகிறது?

உங்கள் பாதுகாப்பான சொகுசான வட்டத்தை தாண்டியும் உலகம் இருக்கிறது. அதில் மனிதர்கள் வாழ்கிறார்கள்.



வித்யா,

உண்மையான சமூக விரோதிகளை தனிபிரித்துக்காட்டும் பிரிகோடு இந்த ஒற்றைப்பதிவின் பின்னூட்டங்களிலேயே தெளிவாக தெரிகிறது பார்த்தீர்களா/


உங்கள் எதிர்ப்பின் தீவிரத்தை இந்த தவளைக்கத்தல்கள் தொந்தரவு செய்யாமலிருக்கட்டும்.

தொடர்ந்து நடவுங்கள்.

மு. மயூரன் said...

வார்த்தைகளின் நாகரிகம் குறித்து பேசும் ஒவ்வொருவரது சமூக அக்கறையையும் நான் சந்தேகப்படுகிறேன்.

இவர்கள் ஆபத்தான சுயநலவாதிகள்

கோபா said...

//மாதத்திற்கு ஒரு காதலி, வேளைக்கொரு பெண் என்று வாழும் பணம் புடுங்கி, சினிமா பொருக்கிகளுக்கு, சமூகம் குறித்த அக்கறையோ, அடிப்படை மனிதாபிமானமோ தேவையில்லை. கண்ணை மூடிக் கொண்டு கலையைக் கற்றுக் கொண்டு, அக்கலையை விற்று காசு பார்க்கும் கலை-விபச்சாரகர்களை பொருத்தவரை//

//சினிமாவை நல்ல முதலீடாக கருதி, பாடம் போல படித்து ஆங்கிலப் படத்தாக்கத்தால் அதி நவீன(technology)த்தைப் புகுத்தி, கதையில் மட்டும் திட்டமிட்டு கோட்டைவிடுகின்றனர் நமது நவீன சினிமா பொறுக்கிகள். வித்தியாசம் என்ற பேரில் இது போன்ற மனிதாபமற்ற செயல்களில் கண்மூடித்தனமாக, இறங்குவது, சினிமாவை விற்று சாப்பிட்டு அதன் மீதே மலம் களிப்பதற்கு இணையாகத்தான் நான் உணர்கிறேன்//

//பத்தில் ஒன்பது பேர் கதாநாயகியை கற்பழிக்க, ஒருவர் மட்டும் நாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகனை கற்பழிக்கலாம். இதில் கதாநாயகனாக கமலும், அவரை கற்பழிக்கும் அடியாளாக கௌதமும் (இந்த படத்தில் கூட ஒரு பாடல் காட்சியில் தொன்றுகிறார்). கதாநாயகியாக கௌதமின் மனைவியும் நடிப்பது மேலும் சிறப்பு...

பொட்டைகளை கேவலப்படுத்தும் இத்தகைய நாதாரிகளை பொதுவாக, இப்படி கேட்பது தான் எங்கள் வழக்கம். அதன்படி, "அடி செருப்பால, தேவிடியா பையா!!"
//

உணர்வுபுர்வமான பதிவு, வலிமையான சொற்க்கள்.....

சமுகத்தின் பெரும்பாண்மை மக்களை ஏதும் அற்றவர்களாக , வாழ்வின் கடைசி நிலைக்கு தள்ளிய இன்றைய ஏகாதிபத்திய அடிமைகள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் தொடர்ந்து அனைத்து துறைகளும் சிரழிவு கலாசார குப்பைகள் மலிந்து விட்டது.

உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நமக்கான சமுகத்தை அமைக்க முடியும்.

உங்கள் பதிவில் சிற்றம் அதிகம் என சொல்வது இந்த கேவலமான பொறுக்கிகளின் கலை, இலக்கியம்,அரசியல் என இவற்றால் பயன் அடைபவர்கள் அல்லது அந்த சிரழிவில் ஆட்பட்டு இதனை இழக்க விரும்பாதவர்கள்.

KARMA said...

மிகக்கடுமையாக காயப்பட்ட வலியினின்று எழுந்த வார்த்தைகளாக வித்தியாவின் பதிவை புரிந்துகொள்ள முடிகிறது.

அழுதுபுலம்பி அனுதாபம் தேடும் வழக்கத்திற்கு மாறாக அடக்குமுறையை எதிர்த்து வெடித்துக்கிளம்பியிருக்கிறார். வார்த்தைகளால் தன் வலியை பிறர் புரியும்படி செய்திருக்கிறார்.

என்றாலும்...!

கௌதம் குடும்பத்தார் மற்றும் கமல் மீதான தனிமனித தாக்குதல், தெளிக்கப்பட்ட வார்த்தை வன்முறை தேவையான அளவிற்கு நியாயப்படுத்தப்படவில்லை.

எனவே....தயவு செய்து அதற்கான வருத்தம் தெரிவித்து தமிழ்மணத்தில் மீண்டும் மனிதம் மலர உதவுமாறு வேண்டுகிறேன்.

-- திருமூலன்.

அசுரன் said...

/////////
அவசியமான பதிவு. நியாயமான கோபம்.

நீங்கள் எதையும் பேசக்கூடாது. பேசினால் காது கூசுகிறது. சொல்வதை கேட்டால் அஜீரணமாகிறது. ஆகவே ஓரிருவரை குறை சொன்னால் ஒட்டு மொத்த இனத்தையும் குறை சொல்வதாக எடுத்து கொள்ளமல் நீங்கள் வாய்மூடி அமைதியின் சொருபமாய் அஹிம்சையின் வடிவமாய் இருப்பதைத்தான் விரும்புகிறது. அப்போதுதான் சமூக அமைப்பு சரியானதாக இயங்க முடியும்.

தன்னை புனிதமாக காட்டிக் கொள்ளும் இந்த சமூகம் தனது ஈனச் செயல்களை ஒருபோதும் தவறென்று ஒத்துக்கொள்ளாது. மாறாக மூளைவீங்கித்தனத்தோடு சப்பைக்கட்டு கட்டும்

//குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு, சம் அங்கீகாரமின்றி, வாழ வழியில்லாமல் (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்ட-சொந்த நாட்டில் அகதிகளாக நிர்பந்திக்கப்பட்ட-திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்ன..? அவர்களின் பிரச்சனை என்ன..? என்பது குறித்து எந்தவொரு அக்கறையும் இன்றி, சட்டாம் பிள்ளைத்தனமாக பொதுப் புத்தியோடு இது போன்ற திமிர் பிடித்த வேலையை தமிழ் சினிமா தொடர்ந்து செய்து வருகிறது.//

செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆனால் தொடர்ந்து ஊதுங்கள். செவுடாய் இருக்கும் காதுகள் நாராக கிழிந்தாவது தொங்கட்டும்.
////

முத்துக்குமரன் சரியாகவே சொல்கிறார்.

லிவிங் ஸ்மைல் தங்களது உணர்வுகள் புரிகிறது.

ஏற்கனவே ஒரு அன்பர் சரியாக சொன்னபடி, பணத்துக்காக ஆன்மாவை விற்க்கும் அற்ப ஜீவராசிகள் தான் இந்த கௌதம்(ஷங்கர் ETC) போன்ற இயக்குனர்கள்.

சிலர் கௌதம் நடைமுறையில் இருப்பதைத்தானே காட்டினார் என்று வாதாடக்கூடும். இது போன்ற வாதங்களுக்கு பதில் சொல்லும் போது கௌதம் எதை செய்துள்ளார் என்று வாதாடுவதைவிட எதை சொல்லாமால் மிக எச்சரிக்கையாக மறைத்துள்ளார் என்று வாதாடினால் அம்பலப்படுத்த்வது சுலபம்.


யாதார்தத்தை காட்டும் கௌதம்:

இவரது படத்தைப் பாருங்கள் எங்காவது யதார்த்தம் இருக்கிறதா...??(திருநங்கைகளை அவமானப்படுத்தும் இடம் தவிர்த்து)

தனது குடும்பத்தையே பலிகொடுத்த இன்ஸ்பெக்டரை இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைக்கவில்லை.

அவர் படத்தில் வருவது போன்ற ரௌடிகளோ இன்று பல் பிடுங்கப்பட்டு.... மூன்றாம் தர வேலைகளைச் செய்ய மட்டும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

அந்த ரௌடிகளின் வேலையை ஆபிசியலாக போலிசு தற்பொழுது செய்து வருகிறது.

அவரது படத்தில் உயர் குடிகளின் விரக தாபமும், காம வேகத்திற்க்கும், காதல் வேதனைக்கும் இருக்கும் இடம் ஒரு சாதாரண ஏழையின் பசிக்கு இருக்காது.

எழுத்தாளர் மதிமாறனின் காக்க காக்க விமர்சனத்தின் கடைசி வரிகள் நியாபகத்துக்கு வருகீறது....

"இவர்களுக்கான என்கௌண்டரை நடத்துவது யார்?""


சொல்லுங்கள் மக்களே, யார்?......

அசுரன்

ஸ்ரீ சரவணகுமார் said...

பாராட்டதக்க பதிவு,
உங்கள் கோபம் நியாயமானது.இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் இவர்கள் திருந்தப்போவதில்லை. இவர்கள் மேல் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

porukki said...

உங்கள் கோபம் நியாயமானதும், தேவையானதும் கூட. தமிழ்த்திரைப்படங்கள் இன்னமும் இப்படித்தான் இருக்கின்றன. சமூகமும், திரைப்படங்களும் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றன. உங்கள் வலியை எழுத்துகளில் பார்க்கிறேன்.

அடித்தவரை கண்டுகொள்ளாது அடிவாங்கியவருக்கு எப்படி அழவேண்டும் என்று ஆலோசனை வழங்க முண்டியடிப்பவரைப் பார்க்கும்போது, உங்கள் கோபம் போதவில்லைப் போலவும் இருக்கிறது.

கோபத்தில் நீங்கள் தேவடியா என்பது உங்கள் கோபத்திற்கான காரணத்திற்கே முரணாக உள்ளது என்பதையும் சொல்லவேண்டியுள்ளது.

- பொறுக்கி

நாமக்கல் சிபி said...

//கோபத்தில் நீங்கள் தேவடியா என்பது உங்கள் கோபத்திற்கான காரணத்திற்கே முரணாக உள்ளது என்பதையும் சொல்லவேண்டியுள்ளது//

உங்கள் மேல் அக்கறையுள்ள பதிவர்கள் அனைவருமே சொல்ல வந்தது இதைத்தான். புரிந்துகொள்ளுங்கள்.

தவிர உங்கள் கோபம் நியாயமற்றது என்று யாரும் சொல்லவில்லை.

பாரதி தம்பி said...

//அடித்தவரை கண்டுகொள்ளாது அடிவாங்கியவருக்கு எப்படி அழவேண்டும் என்று ஆலோசனை வழங்க முண்டியடிப்பவரைப் பார்க்கும்போது, உங்கள் கோபம் போதவில்லைப் போல தெரிகிறது..//

//தன்னை புனிதமாக காட்டிக் கொள்ளும் இந்த சமூகம் தனது ஈனச் செயல்களை ஒருபோதும் தவறென்று ஒத்துக்கொள்ளாது. மாறாக மூளைவீங்கித்தனத்தோடு சப்பைக்கட்டு கட்டும்//

எனக்கான ஆயுதத்தை என் எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர் என்றார் மா சே துங்.வார்த்தைகளும் ஆயுதம் போலதானே...? எதிர்காற்றில் எச்சில் துப்பியது கௌதமின் தப்பு..தன் மீது களங்கப்படாமல் முயற்சிப்பது காற்றின் இயல்பு.

ரிஷி (கடைசி பக்கம்) said...

ஹலோ லிவிங் ஸ்மைல்!

எனக்கும் படம் பார்க்கும் போது தெரியவில்லை! உங்கள் பதிவை பார்த்தவுடன் ........

சிந்திக்க வைத்துள்ளீர்கள்!

நன்றி!

என்னுடைய தாழ்மையான கருத்து! உங்கள் கோபத்தை கொஞ்சம் மென்மையாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
மேலும் திட்டுவதாக மேலும் ஒரு பெண்மையின் மீதே சேற்றை வாரி இறைக்காமல் இருந்திர்ருக்கலாம்

ecr said...

வித்யா!

உலகம் ஒர் கண்ணாடி! நீங்க எப்படி அதற்கு முகத்தை காண்பிக்கிறீர்களோ அப்படித்தான் அதுவும் காட்டும்!

கௌதமோட நாகரிகத்த பத்தி பேசறீங்களே! உங்களைப் போன்றவர்கள் கடைத்தெருவிலும், ரயிலிலும், மூத்திர சந்துகளிலும் செய்கிற வேலைகள் மட்டும் நாகரிகமானவை தானா? உங்க மனசுல இருக்கிற கோணலை சரி பண்ணாமல்,மனநோயாளி போல எல்லோரையும் பார்த்து ஏன் காறி துப்பறீங்க!

நாய்கள், நரிகள் கூட அதுவாகவே வாழுதே தவிர வேற மிருகமா மாற ஆசைப்படுவது இல்லை! ஆனால், பகுத்தறிவுள்ள மனிதனாக பிறந்து, ஒரு ஆண்மகனாக தலை நிமிர்ந்து வாழாமல், இப்படி ஒரு தலைகுனிவான வாழ்க்கை (உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும்)தேவைதானா?

இந்த பின்னூட்டத்தை வலையில் அனுமதிக்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியமில்லை என்று எனக்கு தெரியும்! குறைந்தபட்சம் இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதிலளித்து கொள்ளுங்கள்!

வலைஞன் said...

இங்கு மறுமொழியிட்ட பல நண்பர்களும் வார்த்தைகளின் காட்டம் பற்றி கூறியிருக்கிறார்கள். தமிழக கிராமங்களில் வாழ்ந்து மக்களைப்புரிந்த எவருக்கும் அது பெரிய அதிர்ச்சியைத் தராது. ஆனால் வலைப்பதிவுகளில் எழுதப்படும்போது ஓரளவு அதிர்ச்சி மதிப்பீடு ஏற்படலாம். நான்கூட வலைப்பதிவிற்கு வந்த புதிதில் வேறு சில நண்பர்களிடம் இம்மாதிரி வார்த்தைகளை தவிர்க்க கூறியதுண்டு.

ஆனால் இங்கே இதை வெறும் சாதாரண சிந்தனையாக எடுத்து விவாதிப்பதில் அர்த்தமில்லை.

//நெறுப்பு என்றதுமே, வெந்து துடிக்கிறீர்கள் நீங்கள்.....நாங்களோ இன்னமும் வெந்து கொண்டே இருக்கிறோம்//

இதற்கு மேலும் தேவையா விளக்கம்.

//ஒரு திருநங்கையை தவறாக காண்பித்ததால் திருநங்கைகளையே அது தவறாக சித்தரிக்கப் படுகிறது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்//

ஏனென்றால் மக்கள் தொகையில் திருநங்கைகள் மிகச்சிறு சதவீதத்தினரே. திருநங்கைகளை பரவலாக எல்லா இடத்திலும் எப்போதும் காண முடியாது. என்றாவது ஒருநாள் கண்ணில் படும்போது அவர்களைப் பற்றிய நம் கண்ணாட்டம் அன்று பார்த்த சினிமாக் காட்சியின் படிதான் இருக்கும்.

பொதுவாக மக்களின் மனநிலைப்படி திருநங்கைகள் வெறுக்கப் பட வேண்டியவர்களாக தோற்றமளிக்கிறார்கள். அவர்களோடு நட்புக் கொள்பவர்கள் மிகக் குறைவு. அதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு.

இந்நிலையில் இம்மாதிரி படக்காட்சிகள் மேலும் கடினமான சூழலையே ஏற்படுத்தும்.

படிக்காத, வாழ வழியற்ற திருநங்கைகள் வேறு வழியின்றி சில தவறான வழிகளுக்கு செல்லலாம். பின்னர் தங்களைப் பழித்த சமூகத்துக்கு ஆற்றும் எதிர்வினையாக வன்முறை சார்ந்தும் சில தவறுகளை செய்யக்கூடும்.

அதே சமயம் படித்த, வசதியானவர்களை சமூகமும் வேறுபாடின்றி ஏற்று வாழும் நிலை ஏற்பட்டு வருகிறது. அவர்களும் வேறுபாடின்றி நம்மைப்போல வாழ்கிறவர்கள் தான். சிலர் முதுகுக்குப் பின்னே கேலி பேசினாலும் கூட இது உண்மை.

சினிமாவில் காட்டப்படும் திருநங்கை காட்சிகளுக்கும் உண்மை நிலைக்குமான வேறுபாட்டை நம்மில் வெகு சிலரால் மட்டுமே உணர முடிகிறது. உணர முடியாதவர்கள் அதை உண்மை என நம்பி மேலும் வெறுப்புக்கொள்ள காரணமாகிறது.

திருநங்கையரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். நம் உணர்வுகளை உதாரணமாகக் கொண்டு அவர்களின் சொற்களை விவாதிப்பது ஆரோக்கியமானதல்ல.

மஞ்சூர் ராசா said...

உங்கள் கோபத்தை, ஆதங்கத்தை நீங்கள் சரியாக காட்டவில்லை என்று தோன்றுகிறது. இப்பொழுது உங்கள் கட்டுரை வெறும் விவாதப் பொருளாகவும் படத்திற்கான விளம்பரமாகவும் ஒரு வகையில் மாறிவிட்டது என்பதே உண்மை.

உங்கள் மீது இணைய உலகம் வைத்திருக்கும் மரியாதையை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அதை உங்களின் நலனுக்கு மிக சிறப்பாக பயன்படுத்த முடியும்.

கொஞ்சம் யோசிக்கவும்.

Doctor Bruno said...

//கதாநாயகியை பத்து அடியாட்கள் கற்பழிக்கும் காட்சி....

பத்தில் ஒன்பது பேர் கதாநாயகியை கற்பழிக்க, ஒருவர் மட்டும் நாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகனை கற்பழிக்கலாம். //
அது தான் Hey Ramல் வந்ததாமே !!!

எனது பழைய பதிவு
http://doctorbruno.blogspot.com/2006/08/vettaiyadu-kollathae.html

Unknown said...

நீங்கள் கடமையை செய்துள்ளீர்கள்.
நன்றி.மேலும் தங்கள் பணி தொடர
வாழ்த்துக்கள்.

Unknown said...

நீங்கள் கடமையை செய்துள்ளீர்கள். நன்றி.மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.