உருப்படியானவைப் பற்றி உருப்படியற்ற இன்னொருத்தியும்...

எனக்கும் உங்களுக்கும் நல்ல நண்பரான பாபா சமீபத்தில் தனது நூறு பதிவினை இட்டிருந்தார். நல்ல பத்திரிக்கையாளரும், நண்பருமான அவரின் பதிவுகள் அனைத்துமே தரமான பதிவுகள். சென்ற வாரம் என்னை தொலை பேசியில் அழைத்து தனது நூறு பதிவினில் சிறந்த பத்தினை தேர்வு செய்யக் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்டிருந்த அவகாசத்தில் என்னால் எதும் செய்ய முடியாதபடி என் அலுவலக வேலைப் பளு அமைந்து விட்டது. அதற்குள் தல முந்திகிட்டு தனது 101-வது பதிவையும் போட்டுட்டார்.


இதோ இந்த (வலைப்) பூவுலகில் என்னைப் போல சிறுமியும் கால் பதிக்க காரணமாயிருந்தவரும், முன்னணி பத்திரிக்கையாளரான நமது தடாலடி கௌதம் (ஆம், தடால் புடால்ன்னு பரிசு அறிவிக்கும் நம் கௌதம் அவர்கள் இனி தமிழ் கூறும் பதிவுலகிலகினரால் தடாலடி கௌதம் என்றே அழைக்கப்படுவர்)போன்ற தரமான எழுத்தாளர்களின் பார்வை வலைப்பூ பக்கம் படவும், அவரது அறிமுகம் நமக்கு கிடைக்கக் காரணமானமாக அமைந்தவர் நம் பாபா. அவர் ஒரு ஒப்பீனியன் கேட்டு, அதக்கூட செய்யலன்னா தப்பில்லையா?

அதை நிறைவேற்றும் படிக்கு இச்சிறுமியின் டாப் டென்...

10

சனி ரிட்டன்

Actually, இந்த பதிவுக்கு டைட்டில் செலக்ட் செய்ததே நான்தேன்.. yes, அன்னைக்கு போன் போட்டு இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் பதிவிடவுள்ளதாக தெரிவித்த போது, "சரி, அப்ப சனி ரிட்டன்னு போட்டுடுங்க" ன்னு சொன்னேன். அதக் கேட்டு அப்படியே போடுறேன்னு சொல்லிட்டு, அப்படியே பதிவும் போட்டு, அப்பவே நிருப்பிச்சாரு!!.

09

நீங்கள் இந்தியரா.. ஒரு சோதனை..

பொதுவாக நாம் என்னதான் படித்துப் பட்டம் பெற்று, சம்பாதித்து நாகரீக உலகில் சஞ்சரித்தாலும் நம்மிடையே உள்ள சிற்சில சிறுபிள்ளைத் தனங்களை பட்டியலிட்டு, நல்ல நையாண்டி பதிவொன்றினை தந்திருந்தார்.

08

கும்புடு.. சாமீயேவ்..கும்புடு !! அதுவும் வெதவெதமா...

தமிழ்நாட்டை காப்பாத்த(?!) இவங்களுக்கு ஓட்டுப் போட்டா, தங்கள காப்பாத்திக்க இவங்க போடுற கேவலமான கூலக் கும்புடுகளை சேகரித்து வரிசையாக போட்டு, காமிடியாக போட்ட பதிவு.

07

1.திருவாளர். கோயிந்து

மதிப்பிக்க நண்பர் திருவாளர். கோவிந்துவின் ப்ராதபங்களை நமக்கு அறியத்தரும் முகத்தான் போடப்பட்ட இப்பதிவிற்கு என் பார்வையில் ஏழாவது இடம்.

06

குங்குமத்தில் வலை நண்பர்கள்

நான் வலைப் பூவுலகில் அறிமுகமான சமயத்தில் தொடர்ந்து என்னை ஊக்குவித்து, வலைப்பூ மூலம் எனக்கொரு platform அமைத்துக் கொடுத்தவர் நம் பாபா. அதன் தொடர்ச்சியாக அவள் விகடன், குங்குமம் என அனைவருக்கும் தெரிய வந்ததற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தவர் பாபா. அத்தோடு மற்ற நம் நண்பர்களின் படைப்புகள் குங்குமத்தில் தொடர்ந்து வருவதற்கும் காரணமாய் அமைந்தார். அவ்வாறு வந்த பின், நண்பர்களின் படைப்புகள் குங்குமத்தில் வந்திருப்பதை மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்க போடப்பட்ட பதிவென்பதால் இது சிறந்த பத்தில் ஒன்றாகிறது.

05

ஈ.வெ.ராமசாமி- 128

பெரியார் குறித்து அபத்தமாக சில செயல்கள், விவாதங்கள் நடைபெற்ற சமயத்தில் போடப்பட்ட சரியான கவிதாஞ்சலி..

04

தண்ணீர் தேசம்

ஒன்பது வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு போய் வந்த நெகிழ்வான தருணத்தையும், இவ்விடைவெளியில் ஊரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை(?!)யும், எந்த மாற்றமும் அடிப்படை தேவையான தண்ணீர் விசயத்தில் எந்த உபயோகமுமின்றியுள்ளதை கேள்வியெழுப்பி பதிவை முடித்திருப்பார்.

03

மீள் பதிவு

அருணாவிற்கு நேர்ந்த கொடுமையை சொல்லும் பதிவிது. சமூகத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பற்ற அவல நிலை, அரசியல், அதிகார மட்டத்தின் அலட்சியம் என படிப்போரின் மனத்தில் ஆழ்ந்த இறுக்கம் அமர வைக்கும் பதிவு...

02

சாந்தியக்கா - தேன்கூடு போட்டி

பொதுப் புத்தியில் கேவலமாகப் பார்க்கப்படும் பாலியல் தொழிலாளர்களைப் பற்றிய புரிதல் ஏற்படுத்தும் வகையில் நல்ல நடையில் எழுதப்பட்ட பதிவு. இதில் சாந்தியக்காவிற்கு கிடைத்த மாற்றம் மற்ற பாலியில் தொழிலாளிகளுக்கும் ஏற்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்...

01

கூவாகம் அரவானிகள் திருவிழாவா???

திருநங்கை தான் என்றாலும் கடந்த முறைதான் முதல் முறையாக கூவாகம் சென்றிருந்தேன். அங்கே நடக்கும் கூத்தைக் கண்டு மிக வெறுத்துப் போயிருந்தேன். வலைப்பூ என்றாலே என்ன என்றே தெரியாத நிலையில், பாபா-வின் இந்த பதிவு என் மனதைப் படித்து, என் சார்பாக எழுதியிருப்பதாக இருந்தது. அதனாலேயே போட்டியின்றி இதற்கு முதல் இடம்.


பி.கு.,

நான் வலைப் பூவிற்கு வந்தபின் படிக்க ஆரம்பித்த பதிவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த சிறந்த பத்தினை பட்டியிலிட்டுள்ளேன்.வேறு நல்ல பதிவுகள் இந்த பட்டியலில் இடம்பெறாததைப் பற்றி No comments....

9 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

அருள் குமார் said...

//அவரின் பதிவுகள் அனைத்துமே தரமான பதிவுகள். //
கலாய்ப்பின் உச்சகட்டம் இது!
மதுரை பா.க.ச தலைவியே... தொடரட்டும் உங்கள் தொண்டு :)

- யெஸ்.பாலபாரதி said...

இது எல்லாம் கொஞ்சம் ஓவரு சொல்லீட்டேன். அப்புட்டுத்தான்..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
அவரின் பதிவுகள் அனைத்துமே தரமான பதிவுகள்
///

இது கொஞ்சம் ஓவர் டோஸா தெரியுதுங்க.

லிவிங் ஸ்மைல் said...

அருள் குமார் said...
// //அவரின் பதிவுகள் அனைத்துமே தரமான பதிவுகள். //
கலாய்ப்பின் உச்சகட்டம் இது!
மதுரை பா.க.ச தலைவியே... தொடரட்டும் உங்கள் தொண்டு :) //


///
அவரின் பதிவுகள் அனைத்துமே தரமான பதிவுகள்
///

இது கொஞ்சம் ஓவர் டோஸா தெரியுதுங்க.
........

பாபா பாத்துக்குங்க, இதுக்கெல்லாம் நான் பொருப்பில்ல...

பொன்ஸ்~~Poorna said...

செந்தில் குமரன், எப்போ பா.க.சவில் சேர்ந்தீங்க? :)

G.Ragavan said...

பாபாவை நான் நேரில் சந்தித்தது சென்னையில். அவர் பேசும் பொழுது எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது. அதற்குக் காரணம் அவரது வட்டார வழக்கு. தெக்கத்தி வழக்கு. அவருடைய பதிவுகளை அதற்கு முன்னால் நிறைய படித்ததில்லை. அவரைச் சந்தித்த பிறகு அவரது பதிவுகள் கண்ணில் பட்டால் கண்டிப்பாக படிப்பதுண்டு. நேரத்தைப் பொறுத்துப் பின்னூட்டமும் உண்டு. அந்தப் பதிவுகளை "ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப் படுத்திய" உங்களுக்கு நன்றி.

லிவிங் ஸ்மைல் said...

// பொன்ஸ் said...
செந்தில் குமரன், எப்போ பா.க.சவில் சேர்ந்தீங்க? :) //

அப்டியா...!! சொல்லவேயில்ல....

Unknown said...

இவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்

Unknown said...

இவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்