நினைவில் பால்யம் அழுத்தம்
பொழுதுகளில்
தொலைபேசியில் அழைக்கிறாள் சகோதரி
உறவுக்கூடத்தில் சூன்யமாகிவிட்ட
என் பகுதியின் இருளை
தடவிக் கொடுத்தபடியே நலம் விசாரிக்கிறாள்
அலுவல், இருப்பிடம், போக்குவரத்து,
அனைத்தும் விசாரித்து முடித்தவள்
நடக்காது என்றாலும் நப்பாசையோடு
கேட்கிறாள் ஒருமுறை வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று
அவதாரத்தை சகிக்க முடியாதவளுக்கு
ஆன்மாவையாவது சந்தித்துவிடும் பிரயாசை போலும் !!
ஆற்றாமையின் நொடியில்...
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
Hey Vidya...
Naan dhaan first...first comment pota chocolate kodukanum :P
Innum post padikala..padichittu comment podaran!!!
:)
//கேட்கிறாள் ஒருமுறை வீட்டுக்கு வந்துட்டு போயேன் என்று//
Maybe she means it...
Why dont u give it a try?
வலிகளைப் பகிரும் படைப்புக்களுக்கு அருமை நல்லது என்று எளிதாய் கூறிவிட்டு நகரமுடியுமா என்ற தயக்கம் இருந்தாலும், எளிமையான வார்த்தைகளால் கூட, ஆழ்மனதை ஊடுருவும் உணர்வுகளைச் சொல்லமுடியும் என்பது இந்தக் கவிதையும் இதற்கு முன் பதிவிலிட்ட கவிதையும் நல்ல உதாரணங்கள்.
......
மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி!
Emma Thayee Vidya...comments ellam release pannumaa :)
கூடு விட்டு போன புறா என்றேனும் ஒரு நாள் திரும்பி வரவேண்டுமென எப்போதுமே காத்திருக்கும் வீட்டு புறாக்கள் ...அதுவேம் கூட ஒரு வகை வலி தானே ...
Post a Comment