மகளிர் தின சிறப்பு கவிதைஒரு ஜிப்ஸியைப் போல துவங்கும் மறுபிறப்பில்


காதைப் பிளக்கும் தட்டல் ஓசை . . .


வன்மங்களின் தாக்குதலில்

காய்த்துப் போன குதங்கள்


மாரைக் கீறி ரத்தம்

கேட்கும் குரூர நயவஞ்சகங்கள்


ஆற்றாமையின் கணங்களை

அளக்கும் நிராகரிப்புகளுமாய்


சொர்க்கம் வரை தொடர்கிறது

சில துர்சொப்பனங்கள்

2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

கானகம் said...

மிக மோசமான வாழ்க்கை அனுபவம் திருநங்கைகளுக்கு .. சொர்க்கம்வரை.. கொடுமைதான்

ரமணன்... said...

அர்த்தம் பொதிந்த வரிகள் !!!