தமிழ்மணம் : இனி நான் இல்லை

ஆம் இனி எனது பதிவுகள் எதையும் நான் தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுக்கப் போவதில்லை(இது மட்டும் கடைசியாக)...

ஏன் எதற்கு என்பதை தமிழ்மணம் அறிவிப்பிற்கு அனுப்பிய எனது கடிதத்தைப் பார்த்து புரிந்துகொள்ளவும்

இதோ உங்கள் பார்வைக்கு....

//தமிழ் மணத்திற்கு,

இவ்வார இதழில் பூங்காவிற்கு சம்மந்தம் இல்லாதபடி எனது கட்டுரைக்கு எதிர்வினையாக வந்துள்ள தருமி அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது…

பூங்கா பொதுவாக, இலக்கியம், அரசியல், பெண்ணியம், தலித்தியம் சார்ந்து வெளிவருவதாகவே நான் நினைத்திருந்தேன்.

அரசி தொடர் குறித்து நான் எழுதியிருப்பது உங்கள் அளவுகோலில் மட்டமானதாகவே இருக்கலாம்.. அதற்காக அது சார்ந்து ஒரு இதழில் என்னை அவமானப்படுத்துமளவிற்கு என்னையும் நீங்கள் மட்டமாக அளவிட முடியாது.

நான் எழுதியது உங்களுக்கு உவக்காத பட்சத்தில் நீங்கள் தமிழ்மணத்தில் தடைசெய்யலாம். ஆனால், அதைவிடுத்து எனக்கு மறுப்பு(கண்ணியமாகவே இருந்தாலும்ம்) தெரிவித்து ஒருவர் எழுதிய பதிவை இலக்கியம் சார்ந்ததாக கணக்கில் கொண்டு பிரசுரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பேரா. தருமியின் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதிலளித்துள்ளேன். ஆனால் நான் கேட்ட கேள்வி எதற்கும் யாருமே பதிலளிக்க வில்லை..

எதுவாக இருப்பினும் எனக்கு அறிவுருத்தும் வண்ணம் மட்டுமே எழுதப்பட்ட ஒரு பதிவு ஒரு இதழில் வருமென்றால் அதனை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

தயவுசெய்து உடனடியாக, அக்கடிதத்தை (பதிவை) நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அல்லது இறுதியான ஒரு பதிவோடு நான் தமிழ்மணத்தை புறக்கணிக்க நேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!! ////

இதனை நான் திங்கள் (26/03/2007) அன்று பூங்கா அறிவிப்பில் பின்னூட்டமிட்டேன். பதில்லை.. செவ்வாய் (27/03/2007) தனிமடலில் அனுப்பியிருந்தேன். பதிலில்லை..

எனவே இனி என் பதிவு எதுவும் தமிழ்மணத்தில் வரப்போவதில்லை...

ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு என் வலைப்பதிவு எப்போதும் திறந்தேயுள்ளது.

பி.கு.: பிரச்சனை என்னவென்று புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

எக்காரணம் கொண்டு அறிவுரை வேண்டாம்.

தனிமடலில் எண் தருகிறேன். அறிவுரையை அதில் அள்ளி வீசலாம்...


முட்டாள் என்றைக்கும் முட்டாள்களாக மட்டுமே பார்க்கப்படட்டும். நன்றி!!

29 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

கோவி.கண்ணன் said...

வித்யா,

ஒரே நாளில் உலகம் மாறும் என்று நினைகக் முடியாது. கருத்து சுதந்திரம் என்று தான் எல்லோருமே எழுத வருகிறோம். சம்பந்தப்பட்ட கட்டுரையில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கும் போது நீங்கள் மறுமொழி இடலாம். இல்லை என்றால் உங்கள் கருத்துக்களை தனிப்பதிவாக இடலாம். இது போன்ற தடலாடி முடிவுகளால் எப்படி ஏமாற்றம் ஏற்படுவது இல்லையே அதே போல் பெரிய பெரிய மாற்றமோ, நன்மையோ ஏற்படப் போவதில்லை. உங்கள் முடிவு உங்கள் கையில். எனது எண்ணங்களை மட்டும் தெரிவித்தேன். வாழ்க்கை களம் போராட்டத்தில் தொடங்கி போராட்டத்திலேயே அடங்குகிறது அது எவராக இருந்தாலும் சரி.

தருமி said...

நல்ல நோக்கத்தோடு எழுதப்பட்ட என் பதிவின் மூலம் எழும்பியுள்ள இப்பிரச்சனையைத் தமிழ்மணம் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்.

லக்கிலுக் said...

தமிழ்மணத்தில் இருந்து விலகும் உங்கள் முடிவுக்கு எதிர்ப்போ அல்லது ஆதரவோ நான் தரப்போவதில்லை.

எனினும் உங்கள் அடைப்பலகையில் இருக்கும் தமிழ்மணம் பட்டையை உடனடியாக தூக்கிவிடுங்கள். இல்லையேல் வேறு யாராவது உங்கள் பதிவை மோசமான குறிச்சொல் கொடுத்து தமிழ்மணத்தில் சேர்த்துவிடுவார்கள். அதற்காக ஒரு கூட்டமே வேலை செய்கிறது.

நேற்று கூட நண்பர் தமிழி அவர்களின் ஆரோக்கியமான வலைப்பதிவர் போட்டி ஒன்றினை சம்பந்தமில்லாத பிரிவில் சம்பந்தமில்லாத குறிச்சொல் கொடுத்து சேர்த்திருந்தார்கள்.

பி.கு. : என்னுடைய Favouritesல் உங்கள் வலைப்பூ இருப்பதால் தமிழ்மணத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து வாசிப்பேன் :-)

குழலி / Kuzhali said...

//எனவே இனி என் பதிவு எதுவும் தமிழ்மணத்தில் வரப்போவதில்லை...
//
பொது தள கதவை சாத்துகின்றீர்...

//ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு என் வலைப்பதிவு எப்போதும் திறந்தேயுள்ளது.
//
ஆர்வம் உள்ளவர்கள் அல்லது உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை, அதே சமயம் மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்லி திருந்தப்போவதுமில்லை, நடுநிலையாளர்கள்(அல்லது குறைந்தது அப்படியாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்வது எப்படி? இன்றைக்கு இருக்கும் வாசகர்கள் உங்கள் பதிவிற்கு வருவார்கள், ஆனால் நாளை புதிதாக தமிழ்மணம் வருபவர்களுக்கு உங்கள் பதிவு எப்படி தெரியும், இப்படி ஒரு பார்வை இருப்பதே தெரியாதே அவர்களுக்கு? என்னளவில் நான் இப்படித்தான், ஒத்த கருத்துடையவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, மூர்க்கத்தனமான எதிர் கருத்திருப்பவர்கள் நான் சொல்வதை ஏற்கப்போவதில்லை, ஆனால் நடுவில் இருப்பவர்களை குறிவைத்தே என் எழுத்துகள் அமைவது, அதில் சில சிறு சிறு வெற்றிகளும் கிடைத்துள்ளது... எனவே உங்கள் பதிவிற்கு வரும் கதவை அடைக்காதீர்கள்....

லக்கிலுக் said...

என் கமெண்டு காணோம்? :-((((

Nandha said...

வணக்கம் வித்யா.

இது அறிவுரை இல்லீங்க. என்னுடைய எண்ணம். அவ்வளவுதான். சில மாதங்களுக்கு முன்னர் எங்கேயாவது கடைகளில் காசு கேட்கும் திருநங்கைகளை கண்டால் வெறுமனே கோபப்பட்ட ஒரு பாமரன் தான் நானும். ஆனால் அவர்கள் மேலிருந்த என்னுடைய பார்வையை மாற்றிய உங்களுக்கு என் நன்றிகள் பல.

நான் தமிழ் மணத்தின் நீண்ட நாள் வாசகன் என்றாலும், சமீப காலங்களில் தான் பதிவராகவும் இருக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் திருநங்கைகளின் உணர்வுகளை நான் மதிக்க ஆரம்பித்தது தமிழ் மணத்தின் வாயிலாக உங்கள் பதிவுகளைப் படித்த பின்புதான்.

உங்களது பதிவிற்கான அறிமுகம் எனக்கு தமிழ் மணம் வாயிலாகவே கிடைத்தது. அந்த பெருமை (மட்டுமே) தமிழ் மணத்தையே சாரும். என்னைப் போன்று வருபவர்கள் உங்களது எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்காகவாவது நீங்கள் தமிழ் மணத்தில் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

தமிழ்மணத்தின் சென்றடையும் திறன் உங்கள் கருத்தை சடுதியில் பலரிடம் இட்டுச்செல்லும்.

தமிழ்மணம் வாயிலாகப் பதிவுகளில் படித்த கருத்தை ஒருவர் பதிவரல்லாத நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கருத்து சமூகத்தில் சென்றடையும் வேகம், அகலம் அதிகமானது.

எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுப்பது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகுறித்த புதிய பரிமாணத்தை பர்ஸ்ட் ஹேண்ட் தகவல்களாக சமூகத்திடம் எடுத்துவைப்பதற்கு உதவுமா என்பதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவும்.

உண்மைத் தமிழன் said...

அன்பு வித்யா, ஒரு கருத்துக்கு கண்டிப்பாக மாற்றுக் கருத்து உண்டு என்பது தாங்கள் அறியாததா? லக்கிலுக் அவர்களின் கருத்தை தமிழ்மணம் வெளியிட்டுள்ளது என்றால் அது மாற்றுக் கருத்துக்கு அனுமதி தர வேண்டும் என்பதற்காக. ஆனால் அதனுள் இருக்கும் எந்தவொரு சொல்லுக்கும் தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது. முழுக்க முழுக்க அது லக்கிலுக் அவர்களின் பொறுப்புதான். நீங்கள் கோபப்படுவதில் அர்த்தம் உண்டு. இல்லை என்று மறுக்கவில்லை. அதற்காக இப்போது நீங்கள் செய்ய வேண்டியது லக்கிலுக்கின் கேள்விகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் இனிமேல் என்னுடைய வலைத்தளத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள். அது உங்களது தற்போதைய கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். இது நியாயமும்கூட. ஆனால் அதற்காக பல நூறு பேர் வித்யாவைத் தேடிப் படிக்கும் வாய்ப்புள்ள ஒரு இடத்தில் இருந்து வித்யாவே விலகுவது வித்யா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போலத்தான்.. தயவு செய்து உங்களது முடிவை பரிசீலனை செய்யுங்கள்.

G.Ragavan said...

வித்யா, உங்கள் முடிவு வருத்தமளிக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அதே நேரத்தில் நீங்கள் எடுத்த உங்கள் முடிவை மதிக்கிறேன்.

VSK said...

உங்கள் முடிவு உங்கள் உரிமை.
அதில் தலையிடவில்லை.
விருப்பமும் இல்லை.

ஆனால், உங்கள் பதிவுகளின் மூல்;அம் திருநங்கைகளைப் பற்றிய ஒரு புதிய பார்வை [விழிப்புணர்வு எனச் சொல்ல மட்டேன். அது இன்னும் வரவில்லை எனவே நம்புகிறேன்.] தமிழ்மணப் பதிவர்களிடம் வந்திருக்கிறது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்!

அது சரி, உங்கள் கோபம் பூங்க மேல்தானே!

அப்படியாயின், க்கோபத்தை அதன் மீது மட்டுமே காட்டுவதே மூறை என எண்ணுகிறேன்.
இனிமேல் பதிவிடும் போது, "பூங்காவில் வெளியிடச் சம்மதமா?" என ஒரு கேள்வி கேட்கப்படும் போது, "சம்மதம் இல்லை" எனச் சொல்லி விடுங்கள்.

தமிழ்மணத்தில் தொடரட்டும் உங்கள் கருத்துகள்!

கடந்த ஆண்டு நான் உங்களைக் குறித்து எழுதிய ஒரு பதிவி இதோ!

http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_29.html

இப்போதும் சரியாக இருக்கிறது!

ஜோ / Joe said...

லிவிங்ஸ்மைல்,
பதிவு வெளியான உடனேயே நான் இட்ட பின்னூட்டம் இன்னும் பிரசுரிக்கப்படவில்லை .பிரசுரிக்காதது உங்கள் உரிமை .ஒரு வேளை வந்து சேரவில்லையோ என்ற ஐயத்திலே தான் கேட்கிறேன்.

VSK said...

VSK said...
உங்கள் முடிவு உங்கள் உரிமை.
அதில் தலையிடவில்லை.
விருப்பமும் இல்லை.

ஆனால், உங்கள் பதிவுகளின் மூலம் திருநங்கைகளைப் பற்றிய ஒரு புதிய பார்வை [விழிப்புணர்வு எனச் சொல்ல மாட்டேன். அது இன்னும் வரவில்லை எனவே நம்புகிறேன்.] தமிழ்மணப் பதிவர்களிடம் வந்திருக்கிறது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்!

அது சரி, உங்கள் கோபம் பூங்கா மேல்தானே!

அப்படியாயின், கோபத்தை அதன் மீது மட்டுமே காட்டுவதே முறை என எண்ணுகிறேன்.
இனிமேல் பதிவிடும் போது, "பூங்காவில் வெளியிடச் சம்மதமா?" என ஒரு கேள்வி கேட்கப்படும் போது, "சம்மதம் இல்லை" எனச் சொல்லி விடுங்கள்.

தமிழ்மணத்தில் தொடரட்டும் உங்கள் கருத்துகள்!

கடந்த ஆண்டு நான் உங்களைக் குறித்து எழுதிய ஒரு பதிவு இதோ!

http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_29.html

இப்போதும் சரியாக இருக்கிறது!

//பிழை திருத்தி! முடிந்தால் இதனைப் பிரசுரித்து, முன்னதை நீக்கினால் மகிழ்வேன்.//

பங்காளி... said...

ம்ம்ம்ம்ம்....

கோவத்தில் நியாமிருப்பதை ஒத்துக்கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகம் இதுகுறித்து விளக்கமளிகுமென நம்புகிறேன். மற்றபடி உங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்வது அவசியமென கருதுகிறேன்.

லக்கிலுக் said...

//லக்கிலுக் அவர்களின் கருத்தை தமிழ்மணம் வெளியிட்டுள்ளது என்றால் அது மாற்றுக் கருத்துக்கு அனுமதி தர வேண்டும் என்பதற்காக. ஆனால் அதனுள் இருக்கும் எந்தவொரு சொல்லுக்கும் தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது. முழுக்க முழுக்க அது லக்கிலுக் அவர்களின் பொறுப்புதான். நீங்கள் கோபப்படுவதில் அர்த்தம் உண்டு. இல்லை என்று மறுக்கவில்லை. அதற்காக இப்போது நீங்கள் செய்ய வேண்டியது லக்கிலுக்கின் கேள்விகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் இனிமேல் என்னுடைய வலைத்தளத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள்.//

Mr. உண்மைத்தமிழன்!

இதில் லக்கிலுக் எங்கே இருந்து வந்து நடுவில் குதித்தார்? :-(

இருக்கிற குழப்பம் பத்தாதா? இதுலே நீங்க வேற!!!

ரவிசங்கர் said...

வித்யா - உங்கள் பதிவுகளைப் பார்த்து திருநங்கைகள் மீதான என் புரிதல் கூடியது. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். என் google readerல் உங்கள் பதிவு இருக்கிறது. எனவே, நீங்கள் தமிழ்மணத்தில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து படிப்பேன்.

கௌதம் மேனன், ராதிகா குறித்த இரு பதிவுகளிலும் மிகவும் காட்டமாக எழுதி இருக்கிறீர்கள். கோபம் நியாயம். ஆனால், அதனை இன்னும் கண்ணியமாக முன்வைத்தால் இன்னும் பலரும் உங்கள் பதிவுகளைப் படிப்பர். எடுத்துக்காட்டுக்கு, பல பெண்கள், குழந்தைகள் உங்கள் பதிவின் தீவிரத் தன்மையை எண்ணி மருளக்கூடும். அவர்களுக்கும் புரியும் வண்ணம், முறையீட்டுப் பதிவு என்பதில் இருந்து மாறி விழிப்புணர்வுப் பதிவாக நீங்கள் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நீங்கள் எழுதவும் அதற்கு பிற பதிவர்கள் மறுத்தோ அறிவுரை கூறியோ எழுதவும் உரிமை உண்டு. ஆனால், தருமியின் கடிதம் பூங்காவில் வந்தது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. அதிலும் உங்கள் பதிவையும் சேர்த்து வெளியிட்டிருந்தாலாவது நியாயம் உண்டு. இப்பொழுது புரிதல் ஒரு தரப்பாகத் தான் இருக்கும்.

லக்கிலுக் said...

//தருமியின் கடிதம் பூங்காவில் வந்தது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. //

உண்மையே. இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

அசுரன் said...

//ஆர்வம் உள்ளவர்கள் அல்லது உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்பவர்களுக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை, அதே சமயம் மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்லி திருந்தப்போவதுமில்லை, நடுநிலையாளர்கள்(அல்லது குறைந்தது அப்படியாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) உங்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்வது எப்படி? இன்றைக்கு இருக்கும் வாசகர்கள் உங்கள் பதிவிற்கு வருவார்கள், ஆனால் நாளை புதிதாக தமிழ்மணம் வருபவர்களுக்கு உங்கள் பதிவு எப்படி தெரியும், இப்படி ஒரு பார்வை இருப்பதே தெரியாதே அவர்களுக்கு? என்னளவில் நான் இப்படித்தான், ஒத்த கருத்துடையவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, மூர்க்கத்தனமான எதிர் கருத்திருப்பவர்கள் நான் சொல்வதை ஏற்கப்போவதில்லை, ஆனால் நடுவில் இருப்பவர்களை குறிவைத்தே என் எழுத்துகள் அமைவது, அதில் சில சிறு சிறு வெற்றிகளும் கிடைத்துள்ளது... எனவே உங்கள் பதிவிற்கு வரும் கதவை அடைக்காதீர்கள்....
//
குழலியின் இந்த கருத்துதான் எனதும்

தோழி வித்யா தவறான முடிவு எடுத்துள்ளார். அவர் தமிழ்மணத்தில் தொடர்ந்து எழுத வேண்டும்.

அசுரன்

bala said...

//தருமியின் கடிதம் பூங்காவில் வந்தது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. //

உண்மையே. இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

லக்கி அய்யா,

தருமி அய்யா எழுதின உருப்படியான ஒரு சமாசாரம் அந்த கடிதம் தான்.பூங்காவில் படிக்கக் கூடியது என்றால் ஓரளவுக்கு அதுமட்டும் தான்.அப்படியிருக்க இந்த வித்யா அம்மா இப்படி புலம்பியிருக்க வேண்டாம்.நீங்களும் அதற்க்கு ஜல்லி அடித்து இருக்கவேண்டாம்.இந்தம்மா தமிழ்மணத்துல எழுதலன்னா என்ன குறைந்து விடப்போகிறது?அதான் கேவலமா எழுதறத்துக்கு,நீங்க,ராவணன்,விடாதுகருப்பு,ராஜாவனஜ் போன்ற தெய்வப்பிறவிங்க எழுதறீங்களே.
Thamiz Manam will continue to stink with all your writings.

பாலா

மிதக்கும் வெளி said...

என்ன நடந்தது?

லிவிங் ஸ்மைல் said...

// மிதக்கும் வெளி said...
என்ன நடந்தது? //

அதுவா...

இனி எனது பதிவுகள் எதையும் நான் தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுக்கப் போவதில்லை(இது மட்டும் கடைசியாக)...

ஏன் எதற்கு என்பதை தமிழ்மணம் அறிவிப்பிற்கு அனுப்பிய எனது கடிதத்தைப் பார்த்து புரிந்துகொள்ளவும்

இதோ உங்கள் பார்வைக்கு....

//தமிழ் மணத்திற்கு,

இவ்வார இதழில் பூங்காவிற்கு சம்மந்தம் இல்லாதபடி எனது கட்டுரைக்கு எதிர்வினையாக வந்துள்ள தருமி அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது…

பூங்கா பொதுவாக, இலக்கியம், அரசியல், பெண்ணியம், தலித்தியம் சார்ந்து வெளிவருவதாகவே நான் நினைத்திருந்தேன்.

அரசி தொடர் குறித்து நான் எழுதியிருப்பது உங்கள் அளவுகோலில் மட்டமானதாகவே இருக்கலாம்.. அதற்காக அது சார்ந்து ஒரு இதழில் என்னை அவமானப்படுத்துமளவிற்கு என்னையும் நீங்கள் மட்டமாக அளவிட முடியாது.

நான் எழுதியது உங்களுக்கு உவக்காத பட்சத்தில் நீங்கள் தமிழ்மணத்தில் தடைசெய்யலாம். ஆனால், அதைவிடுத்து எனக்கு மறுப்பு(கண்ணியமாகவே இருந்தாலும்ம்) தெரிவித்து ஒருவர் எழுதிய பதிவை இலக்கியம் சார்ந்ததாக கணக்கில் கொண்டு பிரசுரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பேரா. தருமியின் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதிலளித்துள்ளேன். ஆனால் நான் கேட்ட கேள்வி எதற்கும் யாருமே பதிலளிக்க வில்லை..

எதுவாக இருப்பினும் எனக்கு அறிவுருத்தும் வண்ணம் மட்டுமே எழுதப்பட்ட ஒரு பதிவு ஒரு இதழில் வருமென்றால் அதனை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

தயவுசெய்து உடனடியாக, அக்கடிதத்தை (பதிவை) நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அல்லது இறுதியான ஒரு பதிவோடு நான் தமிழ்மணத்தை புறக்கணிக்க நேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!! ////

மிதக்கும் வெளி said...
என்ன நடந்தது?
இதனை நான் திங்கள் (26/03/2007) அன்று பூங்கா அறிவிப்பில் பின்னூட்டமிட்டேன். பதில்லை.. செவ்வாய் (27/03/2007) தனிமடலில் அனுப்பியிருந்தேன். பதிலில்லை..


இதுதான் நடந்தது...


எனவே இனி என் பதிவு எதுவும் தமிழ்மணத்தில் வரப்போவதில்லை...

புரிஞ்சுதா...?!!

தென்றல் said...

வணக்கம், வித்யா!

இங்கு பல நண்பர்கள் சொன்னது போல ...
/உங்கள் பதிவுகளைப் பார்த்து திருநங்கைகள் மீதான என் புரிதல் கூடியது. /

'முடிந்தால்', உங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்யுங்கள்...

நன்றி!

நளாயினி said...

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_991.html

vaalthukal.meelum veripera vaalthukal.

நளாயினி said...

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_991.html

vaalthukal

ஆழியூரான். said...

தனிப்பட்ட ஒருவருக்கு அறிவுறுத்தும் விதமாக எழுதப்பட்ட தருமியின் அந்த கடிதத்தில் எவ்விதமான தவறான நோக்கமோ, வார்த்தைகளோ இல்லை. ஆனால், அவ்விதம் தனி ஒருவருக்கு ஆலோசனை சொல்லும் கடிதத்தை, ஒரு இதழில் வெளியிடுவதற்கு- கடித வரிகளின் கண்ணியத்தையன்றி-வேறு காரணத்தை பூங்காவால் சொல்ல இயலாது. அப்படி வெளியிடும்போது குறைந்தபட்சம் தருமி எது குறித்து எதிர்வினையாற்றினாரோ, அந்த கட்டுரையையும் வெளியிட்டிருந்தால், இந்த விடயம் குறித்து, ஒரு விவாதத்தைத் தொடங்கிவைக்க பூங்கா தலைபடுகிறது என கருதலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. தருமியின் கடிதத்தை மட்டும் படிப்பவர்களால், அவரது கண்ணியமான எழுத்தை ரசிக்க முடியுமேயன்றி, வித்யாவின் வார்த்தைகளுக்குப் பின்னாலுள்ள வேதனையை புரிந்துகொள்ள முடியாது.

ஊரே சேர்ந்து திருநங்கைகளை தினந்தோறும் அவமானப்படுத்தும்போது சும்மா இருப்பதும், ஒரே ஒரு திருநங்கை ஆத்திரப்பட்டு பேசும்போது அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடிக் கொடுக்க ஓடிவருவதும் என்ன விதமான மனநிலையென்று தெரியவில்லை. இந்த பதிவில் கூட பூங்காவை அழுத்தமாகக் கண்டிக்காமல், வித்யாவிற்கு ஆலோசனை சொல்லவே நிறையபேர் தலைபடுகிறனர்.

பாதிப்புக்கு உள்ளான தனியொரு நபர் மனவேதனையோடு எடுக்கும் முடிவுகள் தவறானவையாகக் கூட இருக்கலாம். ஆனால், ஒரு இதழின் ஆசிரியர் குழுவினர் எடுக்கும் முடிவு அவ்விதமானதுதானா...?

வித்யாவின் எதிர்ப்பு மிகச்சரியானது. தனது எதிர்ப்பின் வடிவத்தைத் தீர்மானிக்கும் உரிமை(தமிழ்மணத்திலிருது விலகுவதா..? பூங்காவைப் புறக்கணிப்பதா..?), பாதிப்புக்கு உள்ளான அவருக்குதான் உண்டு.

லிவிங் ஸ்மைல் said...

கடந்த வார பூங்கா இதழில் எனது வேண்டுகோளுக்கு தாமதமாகவேணும் செவிசாய்த்தமைக்கு தமிழ்மணத்திற்கு நன்றி!!


மற்ற நண்பர்களின் அறிவுறுத்தலின் படி இனி என் பதிவுகள் தமிழ்மணத்தில் தொடரும்...

ஆதரவும், ஆறுதலும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல...

கோவி.கண்ணன் said...

//மற்ற நண்பர்களின் அறிவுறுத்தலின் படி இனி என் பதிவுகள் தமிழ்மணத்தில் தொடரும்...//

அடிக்கடி இனி மிரட்ட மாட்டீர்கள் என்று நம்புவோமாக !

உங்க படமும், நேர்காணலும் ஜூவியில் வந்திருந்தது.

தென்றல் said...

/உங்க படமும், நேர்காணலும் ஜூவியில் வந்திருந்தது.
/

தகவலுக்கு நன்றி, கோவி.கண்ணன்!
எந்த வாரம் சொன்னிங்கனா, நல்லா இருக்குமே..

கரு.மூர்த்தி said...

//உங்க படமும், நேர்காணலும் ஜூவியில் வந்திருந்தது.//

அப்ப ஜீனியர்விகடன் : இனி நான் இல்லை தான் அடுத்த பதிவா அக்கா ?

( ஜீவி பேட்டி படித்தேன் , திருநங்கைகளுக்கு கிடைத்த நிம்மதியில் எனக்கும் மகிழ்ச்சி

vadivel said...

தோழி லிஸ்,

நீங்கள் செல்லும் பாதையில் மேலும் உத்வேகத்துடன் பயணப்பட திரு.தருமி, திரு.இலவசக்கொத்தனார் போன்றவர்களின் அறியாமை பொங்கி வழியும் அறிவுரைகளும் எதிர்ப்புகளும் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் தமிழ்மணத்தில் தொடர்வது குறித்து மகிழ்ச்சி.

வடிவேல்