பாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா

நண்பர்களே நான் முன்னர் குறிப்பிட்டதன் படி வருகிற 22ஆம் தேதி (ஞாயிறு) மதுரையில் பாலியல் சிறுபான்மையினர் குறித்த திரைப்பட விழாவினை நடத்த உள்ளோம். அதற்கான அழைப்பிதழே கீழே இணைக்கப்பட்டுள்ளது.


(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)


(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)


(பெரியாதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

அயல் நாடுகளில் அங்காங்கே நடந்து வரும் இத்தகைய திரைப்பட விழாவினைப் போல இந்தியாவில் இத்தகைய நிகழ்வு இதுநாள்வரை இல்லை. அங்காங்கே திரையார்வளர்கள் நடத்தும் விழாக்களும் குரசோவா திரைப்படவிழா, அல்மத்தோர் திரைப்பட விழா என்பதாக சிறந்த இயக்குநர்களின் திரை வரிசை விழாக்களாகவோ அல்லது போட்டி விழாக்களாகவோ தான் நிகழ்கின்றன. அதுவும் குறிப்பிட்ட பார்வையாளர்களையே சேர்கின்றன. இதுநாள் வரை கவனிப்பாரின்றி இருந்த விளிம்புகளின் விழாவாக அதுவும் திருநங்கைகளின் விழாவாக ஒரு திரைப்பட விழாவும் இருந்ததில்லை என்னும் நிலையில் திருநங்கைகள் குறித்த சித்தனை ஓட்டத்தை திறந்து வைக்கும் விதமாக இவ்விழாவினை ஏற்பாடு செய்கிறோம்.


எனது இம்முயற்சிக்கு பொருளாதார மற்றும் செயல்பாட்டு உதவி அளித்து வந்த கீதா-இளங்கோ தம்பதியர்க்கும், அவர்களது சுடர் தன்னார்வ அமைப்பிற்கும் எனது நன்றிகள். நிகழ்வுக்கு அரங்கினை இலவசமாக தந்துதவிய தமிழ்நாடு இறையியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், இவ்விழாவிற்கான படங்கள் பெற்றுத்தர உதவிய நண்பர் சாலைச் செல்வம் அவர்களுக்கும். மேலும் சில படங்கள் தந்துதவிய நமது வலைப்பூ நண்பர்களான நரேன், பாஸ்டன் பாலா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நண்பர்கள் அனைவரும் இதனை ஒரு நேரடி அழைப்பாக ஏற்று கண்டிப்பாக நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி!!


பி.கு.


### ஏப்ரல் 22ல் வேறு எந்த மொக்கை நிகழ்வு இருந்தாலும், அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மதுரைக்கு பஸ்ஸப் புடிச்சு வாங்கப்பு!!

14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

அமிர்தா said...

திரைப்பட விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். படங்களில் Boys don't cry -மட்டும் 2000-ல் சென்னை woodlands-ல் பார்த்தேன். அதிர்வுகளை தரும் படம் தான். இன்னும் மனதில் அழுத்தமாக நிற்கிறது.

உண்மைத்தமிழன் said...

நண்பி லிவிங்ஸ்மைல் அவர்களே, தங்களது முயற்சியால் நடைபெறும் ந்தத் திரைப்பட விழா இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் மதுரை வரும்போது கண்டிப்பாக உங்களைச் சந்திப்பேன்.

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள்.

வடிவேல் said...

தோழி லிஸ்,

திரைப்பட விழா பெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வடிவேல்

லிவிங் ஸ்மைல் said...

1. TransAmerica(2005)வும் திரையிடவுள்ளது. ((((பல சிரமங்களுக்கிடையே விரைவில் அனுப்பி வைத்த நண்பர் பாஸ்டன் பாலாவிற்கு என் நன்றிகள்..)))

2. நண்பர்கள் கைவசம் வேறு ஏதேனும் ஆவணப் படங்கள், குறும்படங்கள் இருந்தால் கூட அனுப்பி வைக்கலாம்.

கூடுமானவரை திரையிடவும், அல்லது அடுத்த திரையிடலுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி..

சென்ஷி said...

வாழ்த்துக்கள் லிவிங்ஸ்மைல்..
விரைவில் உலக படவிழாவில் நீங்கள் நடிக்கும் படத்தையும் எதிர்பார்க்கும் ரசிகன்...

சென்ஷி

கிருது said...

தோழி லிவிங்ஸ்மைல் (வாழும் புன்னகை)அவர்களே,

எப்போதும் புன்னகை மட்டும் தான் உங்கள் வாழ்வில் இருக்க வேண்டும்.
திரைப்பட விழா பெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நான் மதுரை வரும்போது கண்டிப்பாக உங்களைச் சந்திப்பேன்.

மங்கை said...

வித்யா...

டெம்ப்ளேட் எல்லாம் கலக்கரீங்க

விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் வித்யா, வர முடியாத தூரத்தில் இருக்கின்றேன்..

தென்றல் said...

திரைப்பட விழா வெற்றி பெற வாழ்த்துக்கள், லிவிங்ஸ்மைல் !

தருமி said...

மதுரக்காரனின் வாழ்த்துக்கள் - சென்னையிலிருந்து...

படங்களைப் பற்றிய, விழாவைப் பற்றிய கருத்தாய்வுகளை எதிர்பார்க்கிறேன்.

அமிர்தா said...

போட்டோ போட்டு கலக்கிறீங்களே! பளிச்னு இருக்கு! டெம்பளேட் இன்னும் கொஞ்சம் பெட்டரா மாத்தலாம்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக அற்புதமான விஷயம் இத்தகைய திரைப்படங்கள் மக்களிடையே போய் சேர்வது. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..

R.Panneerselvam said...

திரைப்பட விழா வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.