டிஸ்கி : பதினெட்டு வயதுக்குமேற்பட்டவர்கள் மட்டும்
பால்மாற்று சிகிச்சை அங்கீகரிக்கப்படும் நாட்டில், ஒரு நபர் பால்மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் அவர் பல்வேறு மருத்துவ, உளவியல், சூழலியல், RLT(Real Life Test) உடற்கூற்று ஆய்வுக்க்குட்படுத்தப்படுவார். இப்பரிசோதனைக் காலம் சுமார் 6 மாதம் முதல் 18 மாதம் வரையாகும். பரிசோதனையின் அடிப்படையில், சைக்கியாட்ரிஸ்ட் ஒருவரும், கைனாகாலஜிஸ்ட் ஒருவரும் பரிந்துரை செய்ய அந்நபர் பால்மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டாலும் அதற்கான செலவு பெருந்தொகையாகும். சிகிச்சைக்குப் பிறகும் பூரண குணமடைய 3 மாதங்கள் வரை ஆகும். கற்பனைக்கு எட்டாத வலியையும் அதுவரை பொறுத்தே ஆகவேண்டும்.
SRS என்பது Facial Feminisation, Speech Theraphy, Breast Augumentation, Plastic Vigina என்பவற்றை உள்ளடக்கியது. சிகிச்சைக்குப் பின் அனைத்து கல்வி மற்ற இதர சான்றிதழ்களில் பெயரும், பாலினம் என்னும் இடத்தில் மாறிய பாலினம் என்றும் மாற்றித் தரப்படுகிறது. இதனால் அந்நபர் பழையபடி படிக்கவோ, பணிபுரியவோ முடியும்.
ஆனால், நம் இந்தியாவிலோ வெறும் Casteration (ஆணுறுப்பு லோக்கல் அனஸ்தீசியா மூலமாக நீக்கப்படுதல்) மட்டுமே செய்யப்படுகிறது. அதுவும் அரசு அங்கீகாரமின்மையால் முறையான மருத்துவ சிகிச்சை இன்றி இல்லீகலாக மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் பாலின அடையாளமின்றி அதைத் தொடர்ந்து அகதியாக வாழும் நிலை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களே இந்திய திருநங்கைகள்.
இந்நிலையில், சமீபத்தில் நண்பர் வடிவேல் எனக்கனுப்பிய மெயிலில் 1970ல் ஆசியா நாட்டொன்றில் மேற்கொள்ளப்பட்ட பால்மாற்று அறுவை சிகிச்சையின் (SRS-Sex Assignment Surgery) வீடியோ லிங்க் ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார். உங்களுடைய பார்வைக்காக இங்கே.
பால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் திருநங்கைகள், பால்மாற்று சிகிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
17 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
///டிஸ்கி : பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும்///
டிஸ்கியை '18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்" என்று மாற்றவும்.
Abul said...
///டிஸ்கி : பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும்///
டிஸ்கியை '18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்" என்று மாற்றவும்.
மாத்தியாச்சி, பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
அன்பு வித்யா..
தயவு செய்து இந்தக் காட்சிப் பதிவிற்கான Link-ஐ எடுத்து விடுங்கள்.. பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.
இது ஒரு தகவல் செய்திதானே.. இந்த மாதிரியான ஆபரேஷன்களைப் பற்றி பல புத்தகங்களில் படித்திருக்கிறோம். பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் அதையே நேரில் பார்க்கும்போது கொடுமையாக உள்ளது. நேற்று இரவே பார்த்தேன். சாப்பிட முடியவில்லை.
அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் தான் சுய விருப்பப்பட்டுத்தானே இதற்குச் சம்மதித்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக என்ன உள்ளது சொல்லுங்கள்..?
நீங்கள் சமீபத்திய பாலபாரதியின் ஒரு பதிவில் ஒரு குறிப்பிட்ட link-ஐ நீக்கும்படி சொன்னீர்களே.. ஞாபகமிருக்கிறதா? அதுவும் இதுவும் ஒன்றுதான்..
இதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்லிவிட்டேன்.
அதற்காக அவசரப்பட்டு உங்களை கண்டிப்பதாகவோ, மாற்றுக் கருத்து கொண்டு விமர்சிப்பதாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்..
உறைய வைக்கும் பதிவு, படம் மற்றும் தகவல்கள். என்னால் முழுதும் பார்க்கா முடியவில்லை என்றாலும், இதன் பரிமானத்தை உணர முடிகிறது. அந்த உணர்ச்சிதான் இந்த பின்னூட்டம்.
இங்கு முக்கியமாக ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் இந்த பதிவு வாயிலாக மிகப் பெரும் விழிப்புணர்வை படிக்கின்றவர்களின் மனதில் ஏற்படுத்துகிறீர்கள்.
தொய்வில்லாமல் தொடருங்கள் உங்களது பணியை. வாழ்த்துக்கள் பல!
//// உண்மைத் தமிழன் said...
அன்பு வித்யா..
தயவு செய்து இந்தக் காட்சிப் பதிவிற்கான Link-ஐ எடுத்து விடுங்கள்.. பார்க்கவே கொடூரமாக இருக்கிறது....
....
....
.......அதற்காக அவசரப்பட்டு உங்களை கண்டிப்பதாகவோ, மாற்றுக் கருத்து கொண்டு விமர்சிப்பதாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.. ////
உண்மை தான் என்னால் கூட இதனை பார்க்க முடியவில்லை தான்.
ஒரு விசயம் கவனிக்க வேண்டும். இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான சிகிச்சை முறை தான். ஆனால், இங்கு இந்தியாவிலோ அங்கீகாரமின்றி, அதனால் முறையான பாதுகாப்பும் இன்றி நடக்கிறது கேஸ்ட்ரேசன். அது இதையும் விட பல மடங்கு கொடுமையானது
அதன் பயங்கரத்தை அறிந்தும் ஒரு நபர் பால்மாற்றுக்கு தீவிரப்படுவது ஏன்? எது அந்த நிலைக்கு கொண்டு செல்கிறது? இந்த கேள்வியை அனைவரிருடைய மனதிலும் எழுப்ப வேண்டும் என்பதே என் நோக்கம்...
எனவே, இதனால் மனபாரம் அடையும் அனைவரிடம் மன்னிப்பு மட்டுமே கேட்கக்கூடிய சூழ்நிலையில் நான் நிற்கிறேன்.
வித்யா,
பார்த்ததும் குலை நடுங்கி விட்டது.. ஆனால் சாதரணமாக ரயில்களிலும் மற்றவிடங்களிலும் சிரித்துக் கொண்டே கடந்து செல்லும் திருநங்கைகளில் வாழ்வின் மற்றொரு பக்கத்தை, வலியைக் இது காட்டுவதாகவே உள்ளது.
இத்தனை வலியையும் வேதனையையும் கடந்து நீங்கள் சிரிப்பது தான் உணமையாகவே சிரிப்புக்கு ஒரு அர்த்தம் சேர்க்கிறது..
லிவிங் ஸ்மைல்! சரியானதொரு பெயர்த் தேர்வு
வித்யா,
ஒரு கேள்வி
உள்ளதை உள்ளவாறு திருநங்கைகளை பெற்றோர்களும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த பாலின மாற்று அறுவை சிகிச்சை எதற்கு ? உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்ள முடியாதா ? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை விளக்குங்களே ! உளவியல் காரணமாக உடலியல் மாற்றம் தேவைப்படுகிறதா ?
லிவிங் ஸ்மைல் said...
//// கோவி.கண்ணன் said...
வித்யா,
ஒரு கேள்வி
உள்ளதை உள்ளவாறு திருநங்கைகளை பெற்றோர்களும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.///
யாரு? எங்கே? ஏற்றுக் கொள்கிறார்கள்..?!
/// இந்த பாலின மாற்று அறுவை சிகிச்சை எதற்கு ? உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்ள முடியாதா ? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை விளக்குங்களே ! உளவியல் காரணமாக உடலியல் மாற்றம் தேவைப்படுகிறதா ? ///
பதில் : தேவைப்படுகிறது (விடையோடு கேள்வியும் கேட்கிறீர்கள்) அல்லது இந்தக் கேள்வியை இயற்கை அன்னையிடமோ, இன்னும் கண்டறியக் கூடாமல் தவிக்கும் அறிவியலாளரிடம் தான் கேட்க வேண்டும்.
என்னலளவில் சொல்வதென்றால், அது என் சுயத்திற்கு பெரும் தொந்தரவாகவே இருந்தது. பெண்ணுடையில், பெண்ணாக வாழும் என்னை என் உடலே கேலிக்குள்ளாக்கும் அவஸ்தையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பிரசவ வேதனையை போல விரும்பி ஏற்றுக் கொண்டேன். அரைமயக்கத்தில் என் கண்முன் துண்டிக்கப்பட்ட போதும், மயக்கம் தெளிந்து துடித்துக் கொண்டிருந்த போதும் கூட, நீங்கள் கேட்டதைப் போல என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மாறாக, பிரசவத்தை வெற்றிக்கரமாக எதிர்கொண்ட ஒரு தாயின் ஆசுவாசத்தையும், நிம்மதியையும் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுவே மற்ற திருநங்கைகளுக்கும் பொருந்துமென்று எண்ணுகிறேன். கேள்வி கேட்டதற்கும், அதன் மூலம் மேலும் சில விளக்கத்தை முன்வைக்கவும் உதவிய கோவியாருக்கு என் நன்றிகள்!!
அரை மயக்கத்தில் தான் பார்த்து முடித்தேன். நினைவிற்கு திரும்ப அரை மணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று.
முறையாக செய்யக்கூடிய அறுவை சிகிச்சையிலேயே இங்கு பலவிதமான தொந்தரவுகள் தொடர்கின்றன. முறையில்லாத அறுவை சிகிச்சையென்றால்...ஒரு வகையில் வாழ்வா.. சாவா போராட்டம்தான்.
//என்னை என் உடலே கேலிக்குள்ளாக்கும் அவஸ்தையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.//
உங்கள் உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது வித்யா.
மற்றவர்கள் கவனிக்க : 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமல்ல. இளகிய மனதுகாரர்கள், ரத்தம் பார்த்தால் மயக்கமாகிறவர்கள் பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். நான் கொஞ்சம் தைரியசாலி. தப்பிச்சுட்டேன்.
தோழி லிஸ்,
"அதன் பயங்கரத்தை அறிந்தும் ஒரு நபர் பால்மாற்றுக்கு தீவிரப்படுவது ஏன்? எது அந்த நிலைக்கு கொண்டு செல்கிறது?"
அருமையான கேள்விகள். இந்த கேள்விகள் மட்டும் எல்லார் மனதிலும் தோன்றிவிட்டால் உங்கள் பணி வெற்றி பெற்றுவிட்டதாக அர்த்தம்.
நான் முதல் முறையாக இந்த விடியோவைப் பார்த்தபோது கூட அறுவைசிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும், இந்த வசதிகள் எதுவும் இல்லாமல் இந்திய திருநங்கைகள் எந்தளவிற்கு துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்ற கவலையும் மட்டுமே ஏற்பட்டது, ஆனால்
" அரைமயக்கத்தில் என் கண்முன் துண்டிக்கப்பட்ட போதும், மயக்கம் தெளிந்து துடித்துக் கொண்டிருந்த போதும்....."
இந்த வரிகளைப் படித்த பின்தான் மனம் கனத்துப் போனது.
வடிவேல்
முருகா! சத்தியாமாக என்னால் பார்க்க முடியவில்லை. தெய்வமே...அறுவை சிகிச்சை என்றால் எவ்வளவு வலி..எவ்வளவு ரத்தம். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு ஒரு உறுப்பை அறுத்துப் போடச் சம்மதிக்கின்ற மனநிலையின் உறுதியை என்னவென்று சொல்வது. இனி எந்தத் திருநங்கையைப் பார்த்தாலும் அவர்கள் பட்ட வலி கண்ணில் வந்து போகுமே!
உங்களுடன் எத்தனையோ தடவை உரையாடியிருந்தபோதும் இதற்கு முன்பு இத்தனை வீரியமாய் உணர்ந்ததில்லை. நடுங்க வைக்கிறது. மிரள வைக்கிறது.
//இதற்கு முன்பு இத்தனை வீரியமாய் உணர்ந்ததில்லை. நடுங்க வைக்கிறது. மிரள வைக்கிறது//
வித்யா!
இந்தப் பதிவை தாங்கள் இட்டதும் முதலில் பார்த்த பத்துபேருக்குள் நானும் இருப்பேன். மேலே ஆழியூரான் சொன்னதைப்போலவே நானும் உணர்ந்தேன் மெளனித்துவிட்டேன். சிந்திய இரத்தமும், சிதறிய சதையும், யுத்தம் காரணமாய் நிறையவே பாத்திருக்கோம். ஆனால் விரும்பிய ஏற்பு என்பது அசரவைத்தது.
//அதன் பயங்கரத்தை அறிந்தும் ஒரு நபர் பால்மாற்றுக்கு தீவிரப்படுவது ஏன்? எது அந்த நிலைக்கு கொண்டு செல்கிறது? இந்த கேள்வியை அனைவரிருடைய மனதிலும் எழுப்ப வேண்டும் என்பதே என் நோக்கம்//
உங்கள் நோக்கம், காட்சி ஊடகத்துக்கேயுரிய வலுவினால் நன்றாகவே உணர்த்தப்பட்டுள்ளது.
அதற்கு உதவிய நண்பருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
//லிவிங் ஸ்மைல்! சரியானதொரு பெயர்த் தேர்வு //
திரும்பவும் சொல்வேன். நன்றி.
Hai Vidya,
Really your service is great.
ஒருமுறை தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருஃதேன். பக்கத்து பிளாக்கில் மூன்று திருநங்கைகள் அடைக்கபட்டு இருந்த்தனர். கொலை கேசு. பால்மாற்று சிகிச்சையின் போது ஒருவர் இறந்த்து விட்டார். பல ஆண்டுகள் ஆனாலும், அதை அவர்களிடம் உரையாடியது இன்றும் குலைநடுங்க செய்கிறது. இன்று விடீயோ பார்க்க்க்ய்ம் மனதிடம் என்னிடம் இல்லை
உங்களின் சமூக ( பாலின சிறுபான்மையினர் ) அக்கறைக்கு நிச்சயம் ஒரு நாள் நல்ல விடியல் கிடைக்கும் .
உங்களின் சமூக ( பாலின சிறுபான்மையினர் ) அக்கறைக்கு நிச்சயம் ஒரு நாள் நல்ல விடியல் கிடைக்கும் .
Post a Comment