நம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில்

அப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு.... இதோ தமிழக வரலாற்றில் மேலும் ஒரு அதிசயம் - ஆச்சரியம் கலந்த உண்மை...


அதற்குமுன் முதல் ஆச்சரியம் என்ன என்பதையும் கூறிவிடுகிறேன்..

14/10/2005 அன்று 10.40க்கு IASC (Indian Association for Savings and Credit - A Leading Micro Finance Instiution ) மதுரை கிளை மேலாளரை(திரு. ஆனந்த் குமார்) நண்பர் அசோக் ( அன்று காலை 10 மணிக்கு தான் முதன்முதலாக அவரிடம் பேசினேன், அதும் இந்த வேலை தேடும் படலம் நிமித்தமாக )உடன் சந்தித்தேன்..


நான் என்ன, எனது முன்கதை என்ன என்பதிலிருந்து துவங்கி இப்போது வேலை வேண்டி நிற்பது வரையில் சுருக்கமாக எல்லாவற்றையும் தெளிவாக கூறினேன்.. அவரும் சில விசயங்களை தெளிவாக்கி கொண்டார். அவரிடம் பேசியதிலேயே அங்கு வேலை கிடைக்கும் என்று உறுதியாகவே நம்பினேன்... ( அதற்கு முன், நாளுக்கு ஒரு NGO வென 7,8 office களுக்கு வேலை கேட்டு ஏறி இறங்கினேன். எங்கேயும் வேலை கிடைப்பதற்கான சாத்தியப்பாடு தெரியவில்லை - Actually, NGO களில் வேலை கிடைச்சிறகூடாதுன்னுதான் விரும்பினேன் )

19/10/2005 IASC மதுரை மேலாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு... அடுத்த நாளே கோவையிலுள்ள corporate office-ல் interview , IASC யின் Chief Executive Officer திரு. உதய் சங்கர், Adminstrative Manager திரு.ரவிகுமார் இருவரும் பேசினர்.. பல விசயங்களை தெளிவு செய்து கொண்டபின் என் மீது கொண்ட நம்பிக்கையின் பேரில், எனக்காகவே Electronic Data Processing Assistant (EDP Asst.,) என்ற posting ஐ ஏற்படுத்தி மதுரையில் 20/10/2005 ல் பணியமற்த்தினர். ஆறு மாதம் களித்து ஏப்ரலில் எனக்கு பணி நிரந்திர ஆணை குடுக்கப்பட்டது...


எங்களாலும் இயல்பான ஆண், பெண் போல பணிபுரிய முடியும் என்பதைப் நான் நிரூபித்து விட்டேன் என்பதை விட, எங்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டு, அதைவிட எங்களுக்கு வேலை வாய்ப்பும் குடுத்துதவ முன்வர வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக அமைந்த IASC நிறுவனம் இதே தமிழ்நாட்டில் தான் உள்ளது..


இப்படி ஒரு சாதனை சப்தமின்றி நடந்திருக்க...

கடந்த ஏழுமாதமாக எனக்கு அடைக்கலம் குடுத்து வந்த aunty ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில்... எனக்கு தங்குமிடம் கேள்விக்குறியாகி விட்டது... அப்போது தான் எனது அலுவலகத்திலிருந்து 15நிமிட நடை தொலைவில் உள்ள TTS (Tamilnadu Theological Seminary ) Ladies Hostel-ல் முயற்சி செய்யுமாறு நண்பர்களால் அறிவிருத்தப் பட்டேன்... (முன்பு நான் வேலை கேட்டு அலைந்த இடங்களில் TTS ம் ஒன்று என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன் )


பிறகு அங்கே முயற்சி செய்தேன்... முதலில் principal தயங்கினாலும் ஏற்கனவே நான் வேலை கேட்டு வந்துள்ள அறிமுகத்தின் அடிப்படையிலும், எனது கிளை மேலாளரின் சிபாரிசு கடிதத்தின் நம்பிக்கையின் பேரிலும், எனது வருமானத்தில் ( Fees ஒழுங்கா கட்டனுமில்லை ) திருத்தியுற்ற பின் ஏற்பாடு செயவதாக சொன்னார்.. இடையிடையே இரண்டு முறை நேரில் பார்த்து கொஞ்சம் போல நச்சரித்ததில் விடுதியில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.


ஆனால், முதலில் ஆய்வு அடிப்படையில் விடுதிக்கு வெளியே விடுதியை ஒட்டியுள்ள தனி அறையை (Guest room) ஒதுக்கியிருந்தனர்.. முதலில் எனக்கு இது அவமதிப்பாக பட்டாலும்.. விடுதியலுள்ள மற்ற பெண்கள் என்னை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிவதன் பொருட்டும் எனது நடவடிக்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் பொருட்டுமே இவ்வாறு செய்யப்பட்டதை உணர்ந்தேன், உண்மையில் இந்த விசயத்தில் நான் அவர்கள் மீது கோவம் கொள்ளவதில் எந்த நியாமும் கிடையாது என்றே கூறவேண்டும்... அவர்கள் அளவில் அது சரியே...


நிற்க...


நேற்று மாலை டிபன் முடித்து விடுதிக்கு திரும்பிய பின்.... வாடர்னிடமிருந்து அழைப்பு.,
சென்றேன்.. எனக்கு விடுதியிலேயே அதாவது விடுத்திக்கு உள்ளேயே அறை ஒதுக்கப்பட்டதாக கூறினார்...ஆமாம், இன்று முதல் நானும் மற்ற பெண்களைப் போலவே பாதுகாப்பான ஒரு விடுதி சூழலில் கெளரவமாக வாழப்போகிறேன்... அடுத்த மாததிலிருந்து நான் சமைக்க ஆரம்பிச்சுடுவேன்.. ரொம்ப நாளா எனக்கு மீன் வளக்கணும், கிளி வளக்கணும்னு ஆசை.. மீன் வளர்ப்பதில் ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன், Hostel-ல் அனுமதிச்சா கிளியும் வளர்ப்பேன்... என்ன Hostel க்கே உரிய சிற்சில இம்சைகள் இருந்தாலும் ஏதோ ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்து...

பின்ன சாதிச்சுடோம்ல....

இது போதும் படிப்படியாக காலம் மாறிகிட்டே வருவதை நம்புறதுக்கு....

அதனால தான் சொல்றேன் நம்புங்கள்... நான் வசிப்பது தமிழ் நாட்டில் தான்...

37 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

நல்ல மனிதர்கள் எங்கும் இருப்பார்கள்.என் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என அவ்வப்போது அறிவதில் பெருமகிழ்ச்சி.உங்களுக்கு வேலை கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

- யெஸ்.பாலபாரதி said...

ம்.. நல்ல விசயம் தான்.
உங்க மேலதிகாரிகளுக்கு இந்த பின்னூட்டம் மூலமே வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சொல்லி விடுகிறேன்.
---
பிழைகளின்றி பதிவு போட முயலுங்கள்.
வாசிப்புக்கு இடையூராக இருந்து விடப் போகிறது.
--
வாழ்த்துக்கள்...
கலக்குங்க...

dondu(#11168674346665545885) said...

"14/10/2006 அன்று 10.40க்கு IASC (Indian Association for Savings and Credit - A Leading Micro Finance Instiution )"

தேதியில் தவறு தெரிகிறதே? தமிழ்மணத்துக்கு தங்கள் வரவு நல்வரவாகுக.

மட்டுறுத்தும் முன்னால் போலி ஆசாமி (அதாவது இன்னொருவர் பெயரில் பின்னூட்டமிடுபவர்) யாரும் பின்னூட்டம் இடவில்லை என்பதை புரிந்து கொண்டு மட்டுறுத்தவும்.

என் விஷயத்தில் என் டிஸ்ப்ளே எஅர் மேல் எலிக்குட்டி வைத்தால் என் சரியான பிளாக்கர் எண்ணான 4800161 தெரிய வேண்டும், மேலும் என் போட்டோவும் வர வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

அந்த நல்ல மனிதருக்கு வணக்கங்கள்!!!

நன்மனம் said...

//பின்ன சாதிச்சுடோம்ல....//

வாழ்துக்கள் பல. பல முன்னேற்றங்கள் கான மீண்டும் வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

யாழிசை செல்வன் // பிழைகளின்றி பதிவு போட முயலுங்கள்.
வாசிப்புக்கு இடையூராக இருந்து விடப் போகிறது. //


dondu#4800161 // 14/10/2006 அன்று 10.40க்கு IASC (Indian Association for Savings and Credit - A Leading Micro Finance Instiution )"

தேதியில் தவறு தெரிகிறதே? //

பிழிகளை சுட்டி காட்டியதற்கு நன்றி...

actually நான் officeலிருந்து தான் blog-கி கொண்டிருக்கிறேன்.. எனது அலுவலக வேலைகளுக்கிடையில் இதை செய்வதால் பிழைகளை தவிர்க்க முடியவில்லை..

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்..

ramachandranusha(உஷா) said...

வித்யா, ஏன் என்று தெரியவில்லை, படிக்க படிக்க கண்கலங்கிவிட்டது. துளசி சொல்வதுப் போல, நல்லா இருங்க என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

ப்ரியன் said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல்

நல்ல உள்ளங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன என தெளிய செய்த உங்கள் நிறுவனத்தார்ருக்கும் விடுதி அன்பர்களுக்கும் வணக்கங்கள்

கோவி.கண்ணன் said...

முதன் முதலாக ஒரு இடையின வலைப்பதிவாளர். சு.சமுத்திரம் எழுதிய வாடா மல்லி ஆனந்த விகடன் தொடரை வாரம் தவறாமல் படித்தின், அதில் வரும் சுயம்பு கேரக்டரின் நினைவு வருகிறது உங்கள் பதிவை படிக்கும் போது. கீப் ஸ்மைலிங்...

ROSAVASANTH said...

பதிவிற்கு நீண்ட தலைப்பு வைக்காதீர்கள். அதனால் பதிவு ப்ளாகரால் விழுங்கப்பட்டு காணாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த பதிவு முதல் முறை காணாமல் போய் மீண்டும் இடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

உலகம் அவ்வளவு மோசமில்லைதானே?

ஆனா, ஜெயிச்சுக் காட்டுன பிறகுதான் இதைச் சொல்ல முடியுது.

எப்படியோ, இனி எல்லாம் சுபமே.
நல்லா இருங்க.

யாத்ரீகன் said...

உங்கள் தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் வணக்கம்.... தடைகளை படிகளாக மாற்றி முன்னேற்றம் காணும் உங்கள் பாதை தொடரட்டும்... அத்துடன் விழிப்புணர்வை வளர்பதிலும் உங்கள் பணி இருக்கட்டும்..... வாழ்த்துக்கள்..!!

Thangamani said...

வாழ்த்துகள்!

Mugundan | முகுந்தன் said...

மிக்க மகிழ்ச்சி.,
உங்களின் வாழ்க்கைப் பயணம் வெற்றிபெற
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
முகு

மலைநாடான் said...

உங்களுக்கும், உங்களை ஊக்குவிக்கும் நல்லிதயங்களுக்கும், பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.
நன்றி!

லிவிங் ஸ்மைல் said...

// வித்யா, ஏன் என்று தெரியவில்லை, படிக்க படிக்க கண்கலங்கிவிட்டது. துளசி சொல்வதுப் போல, நல்லா இருங்க என்று மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன். //

வாங்க எங்க ஆளையே காணோம்னு பாத்துட்டே இருந்தேன்..

வாழ்த்துக்கும் நன்றி..

லிவிங் ஸ்மைல் said...

துளசி கோபால் // உலகம் அவ்வளவு மோசமில்லைதானே?

ஆனா, ஜெயிச்சுக் காட்டுன பிறகுதான் இதைச் சொல்ல முடியுது. //

உணர்ந்து சொல்லிருக்கிங்கன்னு நினைக்கிறேன்...

லிவிங் ஸ்மைல் said...
This comment has been removed by a blog administrator.
அருண்மொழி said...

உங்களுக்கும், உங்களை ஆதரிப்போருக்கும் வாழ்த்துக்கள்.

பொதுவாக அலுவலக Mail Id வெளியிடுவது அவ்வளவு சரியான செயலாக எனக்கு தோன்றவில்லை.

It may fall into the wrong hands. Hope you can understand. You can collect the bloggers feedback & pass it on to your superiors.

G.Ragavan said...

முயற்சி திருவினையாக்கும்.

முதலில் முயற்சிப்பவர் கடினமான பாதையில் போக வேண்டியிருக்கும். நாளாக நாளாக நிறைய பேர் நடந்து பாதை செம்மையாகும்.

வாழ்க வளர்க.

மனதின் ஓசை said...

வாழ்த்துக்கள் வித்யா....
மனதுக்கு நிறைவாக இருந்தது..
இது போன்ற பதிவுகள் அவர்களை அங்கீகரிப்பதை விட இப்படியும் நிறைய பேர் இருக்கிறார்கள், நீ எங இருக்கிறாய்? என என்னை பார்த்து என கேட்பது போல உள்ளது...

குலவுசனப்பிரியன் said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல்,

மேலே படியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். உலகெங்கும் அவநம்பிக்கை தரும் செய்திகளுக்கிடையே நம்நாட்டில் உங்கள் அனுபவம் ஆறுதலாய் இருக்கிறது.

அன்புடன்
குலவுசனப்பிரியன்

லிவிங் ஸ்மைல் said...

// கிளி சுதந்திரமாகப் பறக்கட்டும் ;பார்த்து ரசிப்போம். //

பரிசீலிக்கிறேன்... பற்வையை அடைத்து வைக்கக் கூடாதுதான்... எனக்கு கிளியை அடைத்து வைக்கும் என்னமும் இல்லை... எனக்கு ஒரு தோழி போல எப்பவும் என்னுடன் சுதந்திரமாக வலைய வரெவேண்டுமென்றே விரும்புகிறேன்...

// சூழ்நிலைகள் இடம் தந்தால் ,ஓர் அனாதைக் குழந்தைக்கு ;ஆதரவு கொடுங்கள். //


ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் ஆசை எனக்கு எப்பொழுதும் உண்டு... நீங்கள் சொல்வது போல் சூழ்நிலை அந்த ப்ராப்த்தத்தை தீர்மானிக்கட்டும்...


என்னிடம் (அரவாணி) ஒரு குழந்தை வளர்வதில், சமூகம் சார்ந்து அக்குழந்தைக்கு சில அக/புற சிக்கல்கள் ஏற்படக்கூடும்... இது குறித்து நிதான்மாக யோசிக்க வேண்டியுள்ளது...

பின்னாளில் இது குறித்து ஒரு பதிவும் இட என்னியுள்ளேன்...

அப்போது விவாதிப்போம்...


நன்றி திரு. யோகன் பாரிஸ்

manasu said...

ஜெயிச்ச பிறகு கிடைக்கும் சந்தோஷத விட,

ஜெயிப்பதற்காக பட்ட வலிகளை நினைக்க இன்னும் மகிழ்வாய் இருக்கும்.

வாழ்த்துக்கள்

Dubukku said...

Hi Living Smile,
I posted a comment yesterday abt linking your post in Desipundit.

Am not sure whether you didn't prefer/like it (as I assume you have not authorised the comment).

Please do let me know if I have hurt you with that link...Sorry If I have done something to hurt you by linking that post in Desipundit. But please do let me know. Thanks

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாழ்த்துகள் லிவிங் ஸ்மைல்!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்களது முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் நல்வாழ்த்துக்கள் வித்யா.

இராம்/Raam said...

மனிதம் மரித்து விடவில்லை.சமூகம் நீர்த்து போகவில்லை என்பது கண்கூடு சகோதரி உங்கள் விசயத்தில்...

கஸ்தூரிப்பெண் said...

புன்னகையே!
உங்களது முதல் மைல்கல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
பயணம் மென்மேலும் வெற்றியுடையதாக உரித்தாகுக!

உங்கள் நண்பன்(சரா) said...

வாழ்த்துக்கள் சகோதரி...
உன்(உரிமையுடன் சகோதரன்) அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படிக்கின்றேன். உனக்கு பின்னுட்டமிடும் அனைத்து வலை பதிர்வர்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
hostel-ளிலும் உனக்கு நல்ல friends கிடைக்க வாழ்த்துக்கள்.உன் சந்தோசம், வலி அனைத்தையும் பதிவிடவும்,அனைத்திலும் பங்குபெற நாங்கள்(வலைப்பதிவர்கள்) இருக்கிறோம்.


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

இவ்வளவு சிறந்த விஷயங்கள் இனி இந்த வருடம் நடக்க வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன்.

ஒன்று - ஒரு முன்னுதாரணமாக நீங்கள் எழுதி உங்களைப்போன்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது.

இரண்டு - புரிந்த்து கொண்டு உதவும் நல்ல உள்ளங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு என்பது.

வாழ்த்துக்கள் சகோதரி. மேன்மேலும் எழுதுங்கள்.

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள் வித்யா, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எனக்கு விடுதியிலேயே அதாவது விடுத்திக்கு உள்ளேயே அறை ஒதுக்கப்பட்டதாக கூறினார்...//


மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களை புரிந்து கொள்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

FunScribbler said...

வாழ்த்துகள் வித்யா! நீங்க தங்கும் விடுதி நல்லபடியாக அமைய என் வாழ்த்துகள். நல்ல உள்ளங்கள் இருக்கும் தமிழ்நாடு வாழ்க!

VSK said...

வாழ்க! வளர்க!
அனைவரும்!!!

சேதுக்கரசி said...

உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் விடுதி மேலாளருக்கு வாழ்த்துக்கள் வித்யா.

தருமி said...

"அதோடு, நடந்தேயாகணும்

எப்படியாச்சும்.."

எப்படியாச்சும் இல்லை - இப்படித்தான்.

நடங்கள் தொடர்ந்து
பாதைகளை நீங்களே உருவாக்குங்கள்.

வாழ்த்துக்கள்