நம்புங்கள் நான் வசிப்பது தமிழ்நாட்டில் பதிவிற்கு நண்பர் துபாய் வாசி பின்வருமாறு ஒரு பின்னூட்டம் அளித்திருந்தார்...
// புரிந்து கொண்டு உதவும் நல்ல உள்ளங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு என்பது //
முதலில் இதற்கு பதில்-பின்னூட்டம் தான் தரவே எண்ணியிருந்தேன்... ஆனால், பலருக்கும் இந்த விஷயத்தில் இறுமாப்பு இருக்கலாம் என்று கருதியே அந்த தவறான பிம்பத்தை உடைக்கும் பொருட்டே இந்த பதிவு.....
**** ***** ****
நல்ல உள்ளங்கள் தமிழகம் தாண்டியும் உண்டு... தமிழ்நாட்டில் மட்டும் என்பதும் இன்னும் எனக்கு புகையை கிளப்புகிறது.
அதற்கான காரணத்தையும் இங்கே தருகிறேன்...
முன்பு நான் புனே-யில் வாழ்ந்த, train (Covai to Kurla, Mumbai to Nagercoil, Nagercoil to mumbai)ல் பிச்சை எடுத்த காலத்தில், அங்கே உள்ள ரோஜ் வாலா(trainல் தினமும் வருபவர்கள் - daily comers )க்களில் ஒருவர் அவரது கம்பெனியில் எனக்கு டைப்பிஸ்ட் வேலை தருவதாக அப்போதே கூறினார்...
ஆனால் அன்று எனது certificates எதும் கைவசம் இல்லாத நிலையிலும், புனே போன்ற ஊரில் வேலைக்கு சென்றால் மற்ற அரவாணிகளால் தொந்தரவுக்கு உள்ளாக நேரும் என்பதாலும் அந்த நல்ல வாய்ப்பை பயண்படுத்தவியலாமல் போனது...
இது அப்படியே இருக்கட்டும்.
உங்களால் எதிர்கொள்ள முடியுமா...?
ஒரு ரயில் பிரயாணத்தின் போது அரவாணிகள் இரண்டு பேர்(நானும், ப்ரதிக்ஷாவும்) mobile cover, mobile less, key chain, torch light போன்றவற்றை விற்பனை செய்வதை..?! Atleast, நினைச்சு பார்க்க முடிகிறதா...? வேண்டாம், பதில் சொல்ல வேண்டாம்.. உங்களால் எதிர்கொள்ள முடியுமாவென்று தெரியவில்லை... ஆனால் அனைத்து (ஆமாம், அனைத்து) தமிழ் ப்ரயாணிகளாலும் இதை எதிர்கொள்ளவே முடியவில்லை...
ரூ.1,500/-க்கு நாங்கள் வாங்கிய சாமான்களில் ஒன்றுமே தமிழர்கள் பிரயாணம் செய்யும் (Covai to Kurla, Mumbai to Nagercoil, Nagercoil to Mumbai) வண்டிகளில் விற்பனை ஆகவேயில்லை... இரண்டு நாளாக ஒரு பைசா கூட விற்பனையாகவில்லை...
அய்யா சாமி வியாபாரம் பண்ணாட்டியும் போகுது. (என்னிடம் வியாபாரம் செய்யவில்லை என்று யாரையும் குறை கூறும் உரிமை எனக்கில்லை.. அது அவரவர் விருப்பம் மட்டுமே...) விற்பனையாகாட்டியும் பரவாயில்லை.. ஒவ்வொருத்தரும் முதுகுக்கு பின்னால் சிரித்த சிரிப்பிருக்கிறதே...
யப்பா.... பிச்சை எடுத்தப்பக் கூட யாரும் இவ்வளவு கேவலப்படுத்திடவில்லை...
இன்னொன்றையும் கூறி விடுகிறேன்.. வழக்கமாக பிச்சை எடுக்கையில் பெரிதும் அலட்டிக் கொள்ளாத டிக்கெட் பரிசோதகர் கூட, வண்டியில் வியாபாரம் செய்யவதற்கு கடுமையாக கோபம் கொண்டார் எனக்கு இன்றும் இது குழ்ப்பமாகவே உள்ளது... நியாயமாக இதனை தடுத்திருக்கக கூடிய உள்ளூர் பேஜ்னேவாலா (train-ல் இது போல் வியாபாரம் செய்பவர்கள்) அனைவருமே ஊக்கமும், ஆதரவுமே அளித்தனர்... (அவர்கள் அனைவருக்கும் குறிப்பாக குமார், அபு பக்கர் அனைவருக்கும் - இரண்டு பேரும் கர்நாடகாவில் பிறந்து மும்பையில் settle ஆனவர்கள்)
தெரியுமா.. இவ்வாறு வியாபாரத்தில் நான் இருங்குவதால் எங்கள் ஆட்கள் பலரின் பயங்கர எதிர்ப்புக்குள்ளானேன்... அதுவும் பின்னர், utter flop ஆனதில் எங்கள் சமூகத்திலேயே கேலிக்கும் ஆளாகி தவறான முன்னுதாரணமாகிப் போனேன்...
அப்புறம்., லோகல் வண்டியில் தான் ஒரளவிற்கு விற்க முடிந்தது.. அதையும் இரண்டே நாட்களில் பல காரணங்களால் விடவேண்டியதாகி விட்டது...
**** ***** ****
அன்று வரை பிச்சை எடுப்பது குறித்து எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச குற்றவுணர்வும் துப்புரவாக நீங்கிவிட்டது.. பின் நாட்களில் பிந்தாஸ்-ஆக பிச்சை எடுத்தேன்...
காலங்காலமாக நம்மிடம் உள்ள வேடிக்கை பார்க்கிற - வெட்டி விமர்சனம் செய்கிற - மனமுவந்து ஒரு துரும்பையேனும் அசைக்கிற பக்குவம் வரை எங்களால் செய்ய முடிவதெல்லாம் சாதனையாக இருக்குமேயன்றி... சாதாரணமாகாது...
எனக்கோ நாங்கள் சாதனையாளர்களாக பார்க்கப் படுவதைவிட அனைத்து ஆண்/பெண்களைப் போல சாதாரணமாக பார்க்கப்படத்தான் விருப்பம்...
சாதனையா தேவை...?
புன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்
வகைகள் திருநங்கைகள்
Subscribe to:
Post Comments (Atom)
20 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
வித்யா,
மனசே பாரமாகி விட்டது. உங்கள் கஷ்டத்திற்கு முன்னால் மற்ற எதுவும் தூசு மாத்திரம். இனிமேல் எல்லாம் நன்மைக்கே. வாழ்க, வளர்க.
நல்லது. நீங்கள் நல்ல சில மனிதர்களின் ஆதரவுடன் நீங்கள் இலக்கு நோக்கி பயணப் படத்தொடங்கி விட்டீர்கள்... ஆனால்.. ப்ரதிக்ஷா என்ன ஆணார் என்பது பற்றி சொல்லவே இல்லையே..
சொல்லுங்கள் வித்யா..
வித்யா, துபாய்வாசியின் "தமிழர்கள்" என்ற வரிகள் என்னையும் கேள்வி கேட்க வைத்தது. துபாய்வாசி தவறாய் நினைக்க மாட்டார் என்றும் தெரியும். எவ்வளவு நாட்களுக்கு மனிதம் என்ற ஒற்றை வார்த்தையை குறுகிய வட்டத்தில் அடைப்பது?
உலகில் எல்லாரிடமும் நல்ல குணங்களும் உண்டு, மோசமானவையும் உண்டு.
வித்யா
உங்அளுடைய பதிவுகள் சில இன்றுதான் படித்தேன். நல்லதும் அல்லதும் எல்லா மனிதரிடத்தும் உண்டு. மனிதத்தன்மை உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொது அதேபோல வன்முறைகளும்.
//காலங்காலமாக நம்மிடம் உள்ள வேடிக்கை பார்க்கிற - வெட்டி விமர்சனம் செய்கிற - மனமுவந்து ஒரு துரும்பையேனும் அசைக்கிற//
ம்..ம்..அதெல்லாம் இருக்கா என்ன? பேச்சுப் பேசுவதிலேயே காலம் போயிருது.
//(அது) வரை எங்களால் செய்ய முடிவதெல்லாம் சாதனையாக இருக்குமேயன்றி... சாதாரணமாகாது...//
சத்தியமாக சாதனைதான்.
வடக்குடன் பார்க்கும் போது அரவாணிகள் தமிழகத்தில்தான் அதிகமாக கேலிக்குள்ளாகின்றனர்.
என்னை மிகவும் வருத்தப்பட வைத்த பதிவு!
இதையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல், கோழைத்தனமாக பின்னின்று சிரிப்பவர்களையும், அல்லது இவர்களை எப்போதுமே தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்பவர்களையும் திருத்திவிட்டு, பிறகு பேசலாம் மற்ற எரியும் பிரச்சினைகளைப் பற்றி .
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது...மென் மேலும் எழுத வாழ்த்துக்கள்....
அன்புடன்...ச.சங்கர்
வித்யா,
துபாய்வாசி உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அதை சொல்லி இருப்பார் என எண்ணுகின்றேன்.தவறாக பொருள் கொள்ளப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது. அவர் கூறியதில் மட்டுமே என்ற வார்த்தைக்கு பதில் அதிகம் என்று மாற்றிக் கொள்ளலாம். அதற்கு பல உதாரணங்கள் கூற முடியும். அதை பற்றி விவாதிப்பது நமது நோக்கம் இல்லை.
இதுவரை மற்ற சமூகம் உங்களை எப்படி நடத்தியது என்பதை விடுத்து, இந்த வலைப்பதிவர்க்கள் சமூகம் உங்களை சாதனையாளராக பார்க்கவில்லை. எங்களின் சக உறவாக தான் காண்கின்றோம் என்பதை மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் விருப்பம் இங்கு நிறைவேறும்.
வித்யா, பாலபாரதி அவர்களின் மூலம் உங்கள் சாதனைகளையும் வருங்காலத்துக்கான முயற்சிகளையும் அறிந்துகொண்டேன். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
வணக்கம் லிவிங் ஸ்மைல்!
எனது பின்னுட்டங்கள் உங்கள் பதிவில் ஏனோ வருவதில்லை. மட்டுறுத்தலில் தவறாக நீக்கப்படுகிறதா எனப்புரியவில்லை! எனினும் தொடர்ந்து படித்து வருகிறேன்(வவ்வால் என்ற பெயர் உள்ளவர்கள் பின்னூட்டம் வெளிவர ஏதேனும் தடை உள்ளதா :-)) )
நிதரிசனமான பதிவுகள், நம் சமூகத்தின் அவலத்தை நாசுக்காக சொல்லியுள்ளீர்கள். மேலும் பல பதிவுகள் இட்டு மகிழ்வுடன் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.மானுடம் வெல்லும்!
இப்பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன் - என் பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு 'அர்த்தமும்' அதற்குப் பின்னால் இருக்கும் 'கசப்பான' அனுபவங்களும் எனக்குச் "சத்தியாமகத்" தெரியாது. தெரிந்திருந்தால் பின்னூட்டமே இட்டிருக்க மாட்டேன்!
புரிந்து கொண்டு உதவும் நல்ல உள்ளங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு/ என்பதை //தமிழ்நாட்டிலும் உண்டு// என மாற்றி எழுதியிருப்பேன் - உங்களுக்குக் வாய்ப்பளித்த புனே நண்பரைப்பற்றி அறிந்திருந்தால். அறியாமைக்கு மன்னிக்கவும்.
நாகை சிவா சொல்லியது போல, உங்களை ஊக்கப்படுத்தும் எண்ணத்தில் 'மட்டுமே' சொல்லப்பட்டது எனது கூற்று. அது உங்கள் வடுக்களை மேலும் காயப்படுத்தி, கிளறி விட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்!
பாதிக்கப்பட்டிருப்பவருக்கு மட்டுமே வலியின் கொடுமை தெரியும், மற்றவர்களுக்கு அது ஒரு 'வலி' மட்டுமே! எனினும், அதற்கு மன்னிப்பு கேட்பது எனது கடமை.
// எனது பின்னுட்டங்கள் உங்கள் பதிவில் ஏனோ வருவதில்லை. மட்டுறுத்தலில் தவறாக நீக்கப்படுகிறதா எனப்புரியவில்லை //
தோழரே..,
வவ்வால் என்ற பெயரில் எந்த செய்தி வந்ததாக எனக்கு தெரியவில்லை...
பரிசோதிக்கவும் அல்லது... அவற்றை திரும்ப அனுப்பவும்...
நன்றி...
// துபாய்வாசிஉங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அதை சொல்லி இருப்பார் என எண்ணுகின்றேன்.தவறாக பொருள் கொள்ளப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது. அவர் கூறியதில் மட்டுமே என்ற வார்த்தைக்கு பதில் அதிகம் என்று மாற்றிக் கொள்ளலாம். //
இல்லை நண்பா, அவர் கூறியது நீங்கள் சொன்னதைப் போல என்னை ஊக்குவிப்பதே... அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...
ஆனால், தமிழ் நாட்டில் எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கும் பட்சத்திலும் மற்ற யாரையும் விட என் சொந்த தமிழர்களால் நான் பட்டதே மிக மிக அதிகம்... அந்த consious அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை வலியுருத்தியே அப்பதிவு...
// அதை பற்றி விவாதிப்பது நமது நோக்கம் இல்லை. //
இதுவே எனது எண்ணமும் என்றொ எழுதவிருந்ததை அன்றே எழுதிட இது ஒரு காரணம் அவ்வளவே...
// இதுவரை மற்ற சமூகம் உங்களை எப்படி நடத்தியது என்பதை விடுத்து, இந்த வலைப்பதிவர்க்கள் சமூகம் உங்களை சாதனையாளராக பார்க்கவில்லை. எங்களின் சக உறவாக தான் காண்கின்றோம் என்பதை மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் விருப்பம் இங்கு நிறைவேறும். //
நன்றி தொழரே....
வித்யா,
மனதை பிசைகின்ற எழுத்துக்கள் .அனைத்து வகையிலும் உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
// ஆனால்.. ப்ரதிக்ஷா என்ன ஆணார் என்பது பற்றி சொல்லவே இல்லையே.. //
சும்மா இருந்த அவளையும் எனக்கு துணைக்கு சேர்க்கப் போய்... பின்னர் தொழிலும் நஷ்டத்தில் ஓட கேவலப்பட்டது மட்டுமே மிஞ்சியது.. எனவே உன்னால நான் கெட்டேன்., என்னால நீ கெட்டன்னு இருவருக்கும் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டதில் இருவரும் பிரிந்து போனோம்.. குறைந்த நாளில் நான் அங்கிருந்து escape ஆகிவிட்டேன்..
தற்போது ப்ரதிக்ஷா டெல்லி-யில் இருப்பதாக கேள்வி பட்டேன், அவளையும் நான் வரும்போது தமிழ் நாட்டிற்கு அழைத்தேன். ஏற்கனவே அடிபட்டதில் நொந்திருந்த அவள் "ஒழுங்கா இங்கேயே இருந்து பிச்சை எடுத்து பொழக்கிற வழியப் பாரு-ன்னு" எனக்கு Advise செய்தால்
நான் மட்டுமே வந்தேன்.. (ஹும், அவள் மட்டும் வந்திருந்தால், எனக்கும் போராட தோதான நல்ல தொழியாகவும் இருந்திருப்பால்.. )
சொல்ல மறந்ததற்கு மன்னிக்கவும்..., நினைவூட்டிய தோழ்ர் யாழிசைக்கு நன்றி
//இப்பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன் - என் பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு 'அர்த்தமும்' அதற்குப் பின்னால் இருக்கும் 'கசப்பான' அனுபவங்களும் எனக்குச் "சத்தியாமகத்" தெரியாது. தெரிந்திருந்தால் பின்னூட்டமே இட்டிருக்க மாட்டேன்!//
//பாதிக்கப்பட்டிருப்பவருக்கு மட்டுமே வலியின் கொடுமை தெரியும், மற்றவர்களுக்கு அது ஒரு 'வலி' மட்டுமே! எனினும், அதற்கு மன்னிப்பு கேட்பது எனது கடமை.//
நீங்கள் என்னை காயப்படுத்தவே இல்லை... நான் அப்படி எடுத்துக் கொள்ளவும் இல்லை... எனது நோக்கமும் அது இல்லை ... உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...
விசயமென்னவென்றால், 100 வலிகளுக்கிடையே 1 மருத்துவம் கிடைக்கிறதல்லவா...
நல்லது கெட்டது ரெண்டையும் சொல்லணுமே... அதுதான் என் நோக்கம்.... அவ்வளவ்வே..
உங்களை முன்னிறுத்தி அந்த பதிவின் உண்மையை வெளி கொண்டு வர முடிந்தது.. அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..
//எனக்கோ நாங்கள் சாதனையாளர்களாக பார்க்கப் படுவதைவிட அனைத்து ஆண்/பெண்களைப் போல சாதாரணமாக பார்க்கப்படத்தான் விருப்பம்...//
நிதர்சனமான உண்மை சுடுகிறது... முதலில் உங்கள் பதிவை படிக்கும் பொழுது என்னடா எந்த ஒரு செயலிலும் ஒரு விரக்தி இருக்கிறதே என்று எண்ணினேன்... வாழ்ந்து பார்த்தால் தான் அதில் இருக்கும் கஷ்டம் புரியும் என்று கண்டுகொண்டேன்.. இருந்தாலும் BE POSITIVE..
சந்தோஷ்:- // வாழ்ந்து பார்த்தால் தான் அதில் இருக்கும் கஷ்டம் புரியும் என்று கண்டுகொண்டேன்.. இருந்தாலும் BE POSITIVE.. //
நான் +ve ஆக இருந்ததால் தான் என்னால் மேற்படி அனைத்தையும் செய்யமுடிந்தது...
மேலும், நான் +veஆகவே இருக்க வேண்டும் என்பது எனக்கு விதிக்கப்பட்டது.. +veஆக இருப்பது மட்டுமே நான் உயிர் வாழ்வதை சாத்தியப்படுத்தும்..
But remember however i'm also human being unfortunately !! so என்னால் முழு நேர +veவாளியாகவே வாழ்வதற்கு கடினமாகவே உள்ளது...
இருந்தாலும் முயற்சி செய்து கொண்டு வருகிறேன்...
பின்னூட்டத்திற்கு நன்றி...
//But remember however i'm also human being unfortunately !! so என்னால் முழு நேர +veவாளியாகவே வாழ்வதற்கு கடினமாகவே உள்ளது...//
புரிகிறது... என் பிராத்தனைகள் உங்களுடன் என்றும் இருக்கும்.
Post a Comment