ஆறு பதிவு

அ. பிடித்த கவிஞர்கள்

1. மனுஷ்ய புத்திரன்
2. மதிவண்ணன்
3. சுகிர்தராணி
4. ஆதவன் தீட்சண்யா
5. மாலதி மைதிரி
6. விக்கிரமாதித்யன்


ஆ. படைக்க வைத்த கவிஞர்கள்

1. முருக பூபதி
2. மனுஷ்ய புத்திரன்
3. ஹவி
4. மதிவண்ணன்
5. வியாகுலன்
6. பால பாரதி


இ. மறக்கமுடியாத நூல்கள்

1. ரிஷி மூலம்
2. மரப்பசு
3. வெண்ணிற இரவுகள்
4. சூதாடி
5. தோட்டியின் மகன்
6. சிவகாமியின் சபதம்


ஈ. பிடித்த உணவு

1. இடியாப்பம்
2. புட்டு
3. பழைய கருவாட்டு கொழம்பு
4. ஐஸ்கிரீம்
5. உருளைக் கிழங்கு பொடிமாஸ்
6. கோழி குருமா

உ. மறக்க முடியாத சினிமா

1. The King of Mask
2. பைசைக்கிள் தீவ்ஸ்
3. சாந்தினி பார்
4. A Beautiful Mind
5. Chicacho
6. அஞ்சலி

ஊ. பிடித்த இடங்கள்

1. லோனாவாலா - புனே
2. புத்தூர் - எங்கள் பழைய வீடு
3. கண்டாலா - ரயில் நிலையம் (பொதுவாக எல்லாமே)
4. தமிழ் யுனிவர்சிட்டி லைப்ரரி
5. கண்டாலா - கர்ஜத் மலைப்பாதை
6. ஊர்பேர் தெரியாத எந்தவொரு புது கிராமமும்

எ. பிடித்த இசையமைப்பாளர்

1. ரஹ்மான்
2. இளைய ராஜா
3. அனு மாலிக்
4. சலீம் சுலைமான்
5. யுவன் சங்கர் ராஜா
6. ஜாஸி கிப்ட்

ஏ. போக விரும்பும் இடங்கள்
1. லோனாவாலா
2. பாரிஸ்
3. இலங்கை
4. இந்தியாவின் தலைநகர்
5. அஹமதாபாத்-போத்ராஜ் மாதா கோவில்
6. நயாகரா வீழ்ச்சி

ஐ. வலையில் அடிக்கடி போகுமிடம்
1. கூகுள்
2. யாகூ
3. தமிழ்மணம்
4. ஐஏஎஸ்சி
5. கோணல் பக்கங்கள்
6. நின்னை

ஒ. பொழுது போக்கு

1. பாட்டு கேட்பது...
2. புத்தகம்...
3. கவிதை எழுதுவதாக கூறிக்கொள்வது...
4. ப்ரயாணம் பண்ணுவது...
5. அழகிய அசுரன்களை silent-ஆ ரசிப்பது...
6. பழைய காதல்களை அசைபோடுவது..

ஓ. அடிக்கடி போகும் வலைப் பதிவுகள்

1. விடுபட்டவை
2. சிறகுகள்
3. மஞ்சூர் ராஜா
4. ராம்சந்திரன் உஷா
5. ஒரு பொடிச்சி
6. மகரந்தம்

ஔ. மேலும் சில வலைப் பக்கங்கள்

1. வெப் உலகம்
2. RFLC
3. திண்ணை
4. சகோதரி
5. நோக்கரி
6. கீற்று

ஃ. நான் அழைக்க விரும்பும் ஆறு பேர்

1. ஒரு பொடிச்சி
2. நாகு
3. ஜோ
4. செந்தில்
5. நவீன் ப்ரகாஷ்
6. ராஜா

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

முத்துகுமரன் said...

//3. வெண்ணிற இரவுகள்//

எனக்கு மிகவும் பிடித்த நூல். கதையின் நாயகனைப்பற்றிய அறிமுகம், அவனது தனிமை, அவனது பார்வையில் அவன் வசிக்கும் நகரம், அவளைச் சந்தித்தல், அவர்களிடையான உரையாடல்கள் என அனைத்தும் அற்புதமான உணர்ச்சித் தெளிப்பில் அமைந்திருக்கும். பியோதர் தஸ்தோவெஸ்கியின் படைப்புகளில் இது அவ்வளவாக கவனம் பெறாத ஒன்று என்றே நினைக்கிறேன். இந்த நூலை கவிதை வடிவில் எழுதும் எண்ணம் இருக்கிறது. கவிதையாக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

**

உங்கள் தேர்வுகள் ரசிக்க வைக்கின்றன.

தொடர்ந்து எழுதுங்கள்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///பழைய காதல்களை அசைபோடுவது..///

என்னாங்க பன்மையில இருக்கு?

நீங்கள் ரசித்த அனைத்து படங்களுமே எனக்கும் பிடித்த படங்கள் Bicycle theifs, King of mask தவிர்த்து இன்னும் பார்க்கவில்லை...

கோவி.கண்ணன் said...

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதி, சாகித்திய அகாடமி பரிசு பெற்ற வாடாமல்லி பற்றி நீங்கள் படிக்கவே இல்லையா ?

லிவிங் ஸ்மைல் said...

///பழைய காதல்களை அசைபோடுவது..///

என்னாங்க பன்மையில இருக்கு?


// பழைய காதல்கள்-னா சொல்லாதா, வளராத காதல்கள், கிட்டதட்ட எல்லாமே ஊத்திக்கிச்சு... //

நான் என்ன பண்ணட்டும்...? என்ன எவன் கட்டிக்கிறான்..? அதனால ஒன்லி காதல்கள் தான்... அதான் இப்பிடி நெனச்சுப் பாத்து ஆசுவாசப்படுத்திக்கிறேன்

லிவிங் ஸ்மைல் said...

சமீபத்தில தான் நண்பர் பாலபாரதி அன்பளிப்பாக கொடுத்தார்...

படித்துக்கொண்டேயிருக்கிறேன்...

படித்தே முடிக்காதாதை.., எப்படி படித்தாகவும், பிடித்ததாகவும் சொல்லமுடியும்.

படித்தபின் சொல்கிறேன்..

G.Ragavan said...

மரப்பசு கேள்விப்பட்டிருக்கேன். யார் எழுதுனது? சிவகாமியின் சபதத்தை யார் மறக்க முடியும்?

இடியாப்பம் எனக்கும் ஓகே. எதுதான் கழிவு? இடியாப்பத்தோட தலைல தேங்காப்பூவ அள்ளிப் போட்டு..அப்படியே ஜீனியையும் போட்டுப் பிசிறினா....அடடா! இல்லையா...தேங்காப்பாலை ஊத்திப் பெரட்டினா....ஆகா!

கருவாட்டுக் கொழம்பச் சொல்லவே வேண்டாம். ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

கோழிக் குருமா....அது போல எதுவும் வருமா?

Chandini Bar ம்ம்ம்ம்ம் ரொம்ப வலிக்கும் படம். பாக்கப் பாக்க மனசு ஒரு மாதிரி இருக்கும். அதிலும் தபுவின் மகள் காரில் வந்து இறங்கும் காட்சி, தபுவின் மகன் கற்பிழக்கும் காட்சி...கடைசியில் எல்லாம் போய் பேய் மாதிரி தபு நிற்கும் காட்சி....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா!

அடடே! என்னோட வலைப்பூ கூட பட்டியல்ல இருக்குதே. நன்றி. நன்றி.

மஞ்சூர் ராசா said...

ஏன் நீங்கள் பொன்னியின் செல்வன் படிக்கவில்லையா?

என்னுடைய வலைப்பதிவிலெ எங்கெ நான் ஒழுங்கா எழுதறேன்...... ம்ம்ம் இனியாவது எழுதணும்.

சு. சமுத்திரத்தின் வாடாமல்லி நல்ல நாவல்.
மரப்பசு - தி. ஜானகிராமன்
அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்.

நீங்கள் சொல்லும் லோனவாலாவும், கண்டாலாவும் மிகவும் அழகான இடங்கள். மும்பைக்கும், பூனாவுக்கும் இடையில் குளுகுளுவென்று.

கவிதை எழுதுவதாக கூறிக்கொள்வது.. - ரசித்தேன்.

எந்த ராஜா? நிச்சயமா நான் இல்லேன்னு தெரியும்.

லிவிங் ஸ்மைல் said...
This comment has been removed by a blog administrator.
லிவிங் ஸ்மைல் said...

G.Ragavan said...
// மரப்பசு கேள்விப்பட்டிருக்கேன். யார் எழுதுனது? //

தி.ஜானகிராமன், இவரது மோகமுள் நாவல் கூட பிரபலமாக வாசிக்கப்பட்டு, ஞானராஜசேகரனால் படமாகவும் எடுக்கப்பட்டது (பாரதி படம் எடுத்தாரே அவரே தான்) யமுனாவையும், காவிரிக்கரையையும் என்னால் மறக்கவே முடியாது...

ஆனால் வெறும் ஆறுக்கு ஒரு நாவல் போதும் என்று தான் விட்டுவிட்டேன்..


/// அடடே! என்னோட வலைப்பூ கூட பட்டியல்ல இருக்குதே //

என்னங்க உங்க பூவப் போடாமலா..,

லிவிங் ஸ்மைல் said...

மஞ்சூர் ராசா said...
// ஏன் நீங்கள் பொன்னியின் செல்வன் படிக்கவில்லையா? //

இல்லை அதற்குள் என் ரசனை மாறிவிட்டது.. நேர்மையாக சொல்வதானால், சிவகாமியின் சபதம்... நான் படிக்கையில் ஒரு புது உலகத்தை திறந்தது.. ஒவ்வொரு characterக்கும் ஒவ்வொரு சமகால நடிகர்களை வைத்து பார்த்து.. இசை, ஒளிப்பதுவு, நடிப்பதாக இருந்தால் எனக்கு எந்த character பொருந்தும் என்றெல்லாம் என்னி இருந்தேன்...


பின் நாடகளில் என் ரசனை மாறிய பின் எனக்கு ஏதோ இடிப்பது போல் இருந்தது...


ஆனாலும் இன்று ஞாபகத்தில் உள்ள நாவல் என்னும் போது. என் நினைவில் இதுவும் தானாகவே வந்தது...

அதான்...


// என்னுடைய வலைப்பதிவிலெ எங்கெ நான் ஒழுங்கா எழுதறேன் //

எங்க இப்ப அவசரத்து ஞாபகம் வந்ததான் நான் எழுதினேன்.. யோசிச்சு பார்த்தா அய்யோ அதவிட்டுட்டமே, அய்யோ இத விட்டுட்டமேன்னு இருக்கு...


சரி, பின்னூட்டத்திற்கு நன்றி..

ramachandranusha(உஷா) said...

என்னுடைய பதிவை விரும்பிப்படிப்பதாய் சொன்னதற்கு நன்றி வித்யா

- யெஸ்.பாலபாரதி said...

//அழகிய அசுரன்களை silent-ஆ ரசிப்பது...//

ம்ம்.. இப்பத்தான் ஏண்டா எனக்கு வயசாகிப்போச்சுன்னு வருத்தமா இருக்கு..
:-(

//போக விரும்பும் இடங்கள்
1. லோனாவாலா
2. பாரிஸ்
3. இலங்கை
4. இந்தியாவின் தலைநகர்
5. அஹமதாபாத்-போத்ராஜ் மாதா கோவில்
6. நயாகரா வீழ்ச்சி//
இதில் 2,3,5,6 ஆகியவை மட்டும் தான் நான் போகாத இடம்..

மற்றபடி ஈ-அடிச்சான் காப்பி என்பார்களே.. அப்படி இருந்ததது. இன்னும் கூடுதலாகவே சொல்ல உங்களுக்கு செய்திகள் இருந்திருக்கும்.. சொல்லி இருக்கலாம். ஏன் விட்டீர்கள்?
அ முதல் ஃ வரை என்பது நான் எடுத்துக்கொண்ட ஒரு வடிவமே.. நீங்கள் 1முதலோ.. க - முதலோ எடுத்திருந்தால் இன்னும் விரிவாக போய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சரியா?
(தவறாக இருந்தால் மன்னிக்கவும்.)

ஒரு பொடிச்சி said...

வித்யா,
இந்த விளையாட்டிற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி.
மிக நல்ல அனுபவம்..!