தேன் கூடு போட்டி "உறவுகள்"

சிரிக்கிறது, சிரிக்கும் போது;
அழுகிறது, அழும் போது;
துடிக்கிறது, துடிக்கும் போது;

உன் உறவுகள்
வேடிக்கைப் பார்க்கும் உன் கண்ணாடியைப் போல...


வெடிக்கிறது, சிரிக்கும் போது;
மறுக்கிறது, அழும் போது;
இறுகுகிறது, துடிக்கும் போது;

எம் உறவுகள்
ரசமிழந்த ஒரு கண்ணாடியைப் போல....


கண்ணாடியைப் போல் அல்ல
உறவுகள்

உணர்வுகள் படிந்த அதனதன் உருவங்களைப் போல...

20 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

- யெஸ்.பாலபாரதி said...

அம்மா.. தாயே... பிரியவேயில்லையே...
:(

G.Ragavan said...

பாலபாரதி, அவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னா..."முகநக நட்பது நட்பல்ல நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு". பிரிஞ்சதா?

- யெஸ்.பாலபாரதி said...

//பாலபாரதி, அவங்க என்ன சொல்ல வர்ராங்கன்னா..."முகநக நட்பது நட்பல்ல நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு". பிரிஞ்சதா?//

அப்படியா..
இப்ப பிரியுது..
இது அந்த குரலோட வெளக்கம் தானே..?
:-)))

நாமக்கல் சிபி said...

//உணர்வுகள் படிந்த அதனதன் உருவங்களைப் போல//

கலக்குங்க!

மதுமிதா said...

/// ரசமிலந்த///

ரசமிழந்த என்று கொடுங்கள் வித்யா.


///
கண்ணாடியைப் போல் அல்ல
உறவுகள்
உணர்வுகள் படிந்த அதனதன் உருவங்களைப் போல...
///


வருத்தும் உண்மைம்மா
உண்மை சுடும் வித்யா
ஆனால் தவிர்க்கவே முடியாதும்மா.

அருமை.
வளர்ந்து கொண்டே இருக்கிறீர்கள்.
இந்நிலையில் மனவருத்தங்களை அண்ட விடவேண்டாம் வித்யா.

லிவிங் ஸ்மைல் said...

கவிதைப் பொருள்:

நாம் சிரித்தால் உடன் சிரிக்கும்; நாம் அழுதால் சேர்ந்தழும் உறவுகள் கண்ணாடி நம்மைப் பிரதிபலிப்பதைப் போலாகும்..

ஆனால், திருநங்கைகளுக்கு அமைந்த உறவுகளோ பாதரசமிலந்த கண்ணாடியைப் போல தேமே என்று சம்பந்தமற்று இருக்கும்... என்பதையே சொல்ல முயன்றேன்...

நன்றி...

மதுமிதா said...

என்னது ஜீரா
இப்படி சொல்லிட்டீங்க

உன் கண்ணாடி போல் உன் உறவுகள் உன் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது.

ஆனால்

ரசமிழந்த கண்ணாடியாய் என் உறவுகள்
என் உணர்வுகளை மறுதலிக்கிறது வேறு வடிவில்.

கவிதைக்கு விளக்கம் சொல்ல வச்சிட்டீங்களே:-)))))))))))))))

மனதின் ஓசை said...

லிவிங் ஸ்மைல்..

எத்தனையோ உறவுகள் கண்ணாடியை போல வெளிக்காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் உண்மை வேறு விதமாய் இருப்பதுண்டு...

கோவி.கண்ணன் said...

வித்யா ... திருநங்கைளை தாண்டி பொதுவாகவும் எழுதலாம் ! கவிதை நன்றாக இருக்கிறது !

துபாய் ராஜா said...

//வெடிக்கிறது, சிரிக்கும் போது;
மறுக்கிறது, அழும் போது;
இறுகுகிறது, துடிக்கும் போது;//

உங்களுக்கு மட்டுமல்ல.வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லோருக்குமே இவ்வரிகள் பொருந்தும்.

நன்மனம் said...

கவிதை நன்றாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொல்வதை வழி மொழிகிறேன். சற்று தள்ளியே நிற்பதாக படுகிறது. தோழியே இங்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

கவிதை நன்றாகவே உள்ளது,

//எம் உறவுகள்
ரசமிழந்த ஒரு கண்ணாடியைப் போல....//

கோவி.கண்ணன் மற்றும், நன்மனம் ஆகியோர் கூறியவற்றை பரிசீலிக்கவும்,
பொதுவான தலைப்புகளிலும் எழுதவும்,நெருங்கி வரவும்.


அன்புடன்...
சரவணன்.

லிவிங் ஸ்மைல் said...

கோவி.கண்ணன், பால பாரதி, நன்மனம், சரவணன் ஆகியோர் கூறிவதைப் போல கண்டிப்பாக பொது விசயங்களில் எழுதனும் தான்.. எழுத நிறைய உண்டுதான்.. சோம்பல், நேரமின்மை இரண்டும் தான் எழுதமுடியாமைக்கு காரணம்..

கண்டிப்பாக எழுதுகிறேன்..

பின்னூட்டமிட்ட நண்பர்கள் பாலபாரதி, ஜி.ராகவன், நாமக்கல் சிபி, மதுமிதா(என்னை அம்மா என்று விகுதி சேர்க்காமல் கூப்பிடலாமே), மனதின் ஓசை, கொவி. கண்ணன், சதயம் (அப்பாடா பேர சரியா போட்டுட்டேன்.), துபாய் ராசா, நன்மனம், சரவணன் அனைவருக்கும் நன்றி...

தருமி said...

பாதரசமிந்த கண்ணாடியைப் போல தேமே என்று // எழுத்துப் பிழையார் வருவதற்குள் திருத்திவிடுங்களேன்!

சந்திப்பு said...

உறவு என்ற கண்ணாடியை உடைக்கலாம். ஆனால், கண்ணாடி பிரதிபலிக்கும் உருவத்தை உடைக்க முடியாது. உறவு பிரதிபலிப்பதாகட்டும். வாழ்த்துக்கள்...

சிறில் அலெக்ஸ் said...

ப்ரதிபலிப்பதுதானே கண்ணாடியின் பயன்..
பாதரசமற்றக் கன்னாடிகள் பயனற்றவை. குணமிழந்த உப்பை நாம் உப்பென்பதில்லையே..

சந்திப்பு அருமையாய் சொல்லியிருக்கிறார்.. கண்ணாடியை உடைக்கலாம் பிரதிபலிக்கப்படும் பொருளுடையாதே..

நீங்களே இதற்கு எடுத்துக்காட்டு.

:)

VSK said...

"கை நீட்டும்" உறவுகள் கண்ணுக்குத் தெரியாமல்
கை "நீட்டும்" கயவர்கள் மட்டுமே பார்ப்பதால்
கண்ணாடியும் ரசமிழந்தே காணுவதை
கண்டிப்பாய்த் தவிர்க்க முடியாது உங்களால்
கண்ணாடியைச் சரியாகப் பார்க்கக்
கற்றுக்கொள்ளாத வரையில்!

பாரதி தம்பி said...

வாழ்த்துக்கள் வித்யா.செறிவான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்...

பொதுத்தளத்தில் எழுதுவதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள்.திருநங்கைகளின் துயரவாழ்க்கையை உங்களைவிட நெருக்கமான அனுபவத்தோடு வேறுயாரும் பதிவு செய்துவிட முடியாது.ஒடுக்கப்பட்டவர்களின் சமூக உயர்வுக்கு ஒடுக்கப்பட்ட ஒருவர்தான் ஆகச்சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்.சே குவேரா முதல் அம்பேத்கார் வரை வரலாறு சொல்லும் உண்மை இதுதான்.தொடர்ந்து இதே தளத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

கதிர் said...

இன்னமும் புரியலை!
//உன் உறவுகள்
வேடிக்கைப் பார்க்கும் உன் கண்ணாடியைப் போல...//

உன் உறவுகள் யார்?

//எம் உறவுகள்
ரசமிழந்த ஒரு கண்ணாடியைப் போல....//

எம் உறவுகள் யார்?

லிவிங் ஸ்மைல் said...

//// இன்னமும் புரியலை!
//உன் உறவுகள்
வேடிக்கைப் பார்க்கும் உன் கண்ணாடியைப் போல...//

உன் உறவுகள் யார்?

//எம் உறவுகள்
ரசமிழந்த ஒரு கண்ணாடியைப் போல....//

எம் உறவுகள் யார்? /////.... தம்பி

:-(

யாராச்சும் வெளக்கம் தரிங்களா.. please......
__________ _________

பின்னூட்டமிட்ட நண்பர்கள் தருமி, சந்திப்பு, சிறில் அலெக்ஸ், SK, ஆழியூரான், தம்பி அனைவருக்கும் நன்றி..