திருநங்கைகளின் கோரிக்கைகளை முன்னிருத்தி ஒரு பேரணி

நேற்று(09/08/2006) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மற்ற தென்மாநிலங்களாகிய ஆந்திரா மற்றும் பெங்களூரிலிருந்தும், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றாகக் கூடி அரசுக்கும், மக்களுக்கும் தங்களது கோரிக்கைகளை முன்னிருத்தி பேரணி ஒன்றினை நடத்தினர்..


THAA தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆஷா பாரதியும், சுடர் பவுண்டேசன் ஊக்குநர் ப்ரியா பாபுவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வண்ணம் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய இப்பிரம்மாண்ட பேரணிக்கு TUFIDC(Tamilnadu Urban Finance and Infrastructure Development Corporation Limited)ன் chairman மற்றும் Managing Director திரு. கிறிஸ்துதாஸ் காந்தியும், பிரபல திரைப்பட இயக்குநர் திரு.பாலுமகேந்திராவும், எழுத்தாளர் திரு.பாமரன் அவர்களும் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர்.

சுமார் 10.30 மணிக்கு துவங்கிய இப்பேரணி சென்னை மன்றோ சிலையிலிருந்து துவங்கி சேப்பாக்கம் பாலம் வரை அமைதியாகவும் கண்ணியமாகவும் நடந்தது. சமூக சிந்தனையுள்ள முக்கிய எழுத்தாளரான திரு. பாமரன் அவர்களின் எளிய உரையுடன் பேரணி 12.30மணிக்கு வெற்றிகரமாக இனிதே முடிந்தது...

பேரணியில் முன்னிறுத்தப்பட்ட எங்களின் கோரிக்கைகள்

# அடிப்படை மனித உரிமைகள்

# சட்ட ரீதியான அங்கீகாரம்

# வேலை வாய்ப்பு, கல்வி, சுயதொழில் வாய்ப்பு

# இலவச வீட்டு வசதி ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

# இ.பி.கோ. 377 சட்டப்பிரிவில் பாலியல் சிறுபான்மையினரை எதிர்க்கும் மாறுதல்கள் தேவை

# குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களில் அரவாணிகளை பெண்(மாறிய பாலினம்) எனக் குறிப்பிட வேண்டும்

# பாலின் சிறுபான்மையினர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்

# சிற்பான்மை இனமாகிய ஆங்கிலோ இந்திய சுமூகத்திற்கு அளித்த நியமன உறுப்பினர் பதவி போன்று, மேலவையில் பாலியல் சிறுபான்மையினர் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்

# அரசு மருத்துவமனைகளில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்

# குழந்தை தொழிலாளர் பெண் சிசு கொலை போன்ற சமூக பிரச்சனையாக பாலியல் சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்தல்


தமிழ்நாட்டில் இது போல் ஒரு பேரணி நடைபெற்றிருப்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும் தங்களின் உரிமைகளை திருநங்கைகள் உணரத் துவங்கியதற்கான அடையாளமாக இதைக் கருதவேண்டும். மேற்படி அரசும், மக்களும் திருநங்கைகளின் பிறப்பும் இயற்கையே என்பதை உணர்ந்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மெய்யாக நிருபீக்க வேண்டிய தருணமிது.


நன்றி...

8 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

ஒரு பொடிச்சி said...

//தமிழ்நாட்டில் இது போல் ஒரு பேரணி நடைபெற்றிருப்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும் தங்களின் உரிமைகளை திருநங்கைகள் உணரத் துவங்கியதற்கான அடையாளமாக இதைக் கருதவேண்டும். மேற்படி அரசும், மக்களும் திருநங்கைகளின் பிறப்பும் இயற்கையே என்பதை உணர்ந்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மெய்யாக நிருபீக்க வேண்டிய தருணமிது.//
yes!

Unknown said...

லிவிங் ஸ்மைல் வித்யா,
உங்கள் முயற்சிகள் வெற்றி அடையட்டும். வாழ்த்துகள்.

ஒரு கேள்வி...

திருநங்கைகள்--> ஆணாக வாழ்ந்து பின் பெண்ணாக தங்களை உணர்ந்தவர்கள்.

இந்தியாவில் இதுவரை நான் காணும் "மாறிய பாலினம்" எல்லாம் ஆண்-->பெண்ணாகவே உள்ளது.

பல நாட்களுக்கு முன் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு பெண் தன்னை ஆணாக(பதின்ம வயதில்) உணர்ந்து பின், ஆணாகவே மாறுவதற்கு முயற்சி எடுத்து அறுவை சிகிச்சைகள் செய்து, ஹார்மோன்கள் மூலம் முகத்தில் தாடி,மீசை வளரவும் செய்து ஆணாக வாழும் செய்தி கண்டேன்.


இந்தியாவில் அப்படி யாரும் இல்லையா? ஏன் திருநங்கைகள் (மாறிய பாலினம் - பெண்) பற்றியே செய்திகளே காணக்கிடைக்கிறது?

G.Ragavan said...

திருநங்கைகளின் கோரிக்கைகள் செவி கொடுக்கப்பட்டு நிறைவேறட்டும். எனது வாழ்த்துகள்.

VSK said...

"உரிமைகளைப் பெறுவதெல்லாம் புரட்சிகள் எழுவதினாலே!"

வாழ்த்துகள்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//தமிழ்நாட்டில் இது போல் ஒரு பேரணி நடைபெற்றிருப்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும் தங்களின் உரிமைகளை திருநங்கைகள் உணரத் துவங்கியதற்கான அடையாளமாக இதைக் கருதவேண்டும். மேற்படி அரசும், மக்களும் திருநங்கைகளின் பிறப்பும் இயற்கையே என்பதை உணர்ந்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மெய்யாக நிருபீக்க வேண்டிய தருணமிது.//

very true!

there was a conference here in montreal abt 10 days ago.

montreal declaration. there were ppl from mumbai who represented india.

have blogged about it here-

http://mathy.kandasamy.net/musings

நாமக்கல் சிபி said...

//தங்களின் உரிமைகளை திருநங்கைகள் உணரத் துவங்கியதற்கான அடையாளமாக இதைக் கருதவேண்டும்//

உண்மைதான் வாழும் புன்னகையே!
ஆரோக்கியமான ஆரம்பமாக இதைக் கருத வேண்டும்.

கோரிக்கைகள் செவிசாய்க்கப்படட்டும்!

உங்கள் நண்பன்(சரா) said...

லிவிங் ஸ்மைல் வித்யா,
திருநங்கைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட எனது வாழ்த்துகள்,


அன்புடன்...
சரவணன்.

Muse (# 01429798200730556938) said...

எனக்கு வேறு ஒரு கோரிக்கையும் தோன்றுகிறது:

திருநங்கைகள் மற்றவரைவிட உடல்பலம் மிக்கவர்கள். பெண்மையின் நளினமும் கொண்ட இவர்கள் மிகப் பெரிய போர் வீரர்களாக மாறுவது எளிது. மார்ஷியல் ஆர்ட்களில் ஆர்வமுடையவன் என்கிற வகையில் சொல்லுகிறேன். திருநங்கைகள் பலவிதங்களில் இந்தத் தொழிலுக்குத் தகுதியானவர்கள். அவர்கள் உடலமைப்பும் இதற்கு மிகவும் உதவக்கூடியது.

இதற்குத் தேவையான போராட்டங்களைச் செய்வதோடு,ப்ரோ ஆக்டிவான விஷயங்களையும் செய்யலாம். அதாவது, ஊரிலுள்ள காவல் நிலையங்களின் அனுமதியோடு நகர பாதுகாப்பை மேற்கொள்ளலாம்.

இயற்கை அழிவுகளின் போது தொண்டு செய்யலாம்.
தனியே வசிக்கும், இரவில் வெளியே செல்லும், பாதுகாப்புத் தேடும் பெண்களுக்கு பாதுகாவலராக வேலை பார்க்கலாம் (ஊதியத்திற்காகத்தான்).

வீட்டில் தனியே இருக்கும் முதியவர்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கலாம்.

பெருமளவில் பணத்தை எடுத்துச் செல்பவர்களை பாதுகாக்கலாம்.

இதற்கெல்லாம் தேவையான சண்டைப் பயிற்சிகள் பெற வேண்டியதும் அவசியம்.

இந்த சமூகம் பயப்படும்படி நடந்துகொள்பவர்களிடம்தான் மரியாதை செய்யும். அந்த பயத்தோடு ஒரு நல்ல அபிப்பிராயமும் ஏற்பட்டால் பிறகு முன்னேறிவிடலாம்.

வாழ்த்துக்கள் தோழி.